நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 6 September 2014

செல்வவளம் தரும் நவகிரக தூப பொடி ;

லட்சுமி வசியம்
 

அரசு,மருதாணி,கஸ்தூரி,சாம்பிரணி,செந்நாயுருவி,இலுப்பை,புனுகு,புங்கன்,முந்திரி,குங்கிலியம்,வெள்ளெரகு,ஏலக்காய்,வெண்கடுகு,கோராசனை,கோஷ்டம்,நொச்சி,ரோஜா இதழ்,ஆலமரம்,சந்தனம்,அகில்,தேவதாரு, மெற்கண்ட 23 மூலிகைகளையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கவும்,இந்த பொடியை தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும்...செல்வவளம் உண்டாகும் தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் வ்சியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம் எப்போதும் இருக்கும்...
இது நவகிரக தோசத்தை போக்கும்...செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும் நினைத்தை அடைய செய்யும்..வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும்.கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோய் கிருமிகளை விரட்டி நோயாளிகளை குணப்படுத்தும்..குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர,கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் அரசு ,ஆலம் துகள்கள் இருப்பதால் குருவருள் உண்டாகும் குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும்.தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும்.. இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.

No comments:

Post a Comment