நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 29 September 2015

எலுமிச்சம்பழ மாலை


எலுமிச்சம்பழ மாலை



எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன்அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானதுஅவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்துபயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும்அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில்ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர்,பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் எனமிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சிலஅனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத்தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும்மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள்ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும்எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தைவெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது.எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில்எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப்பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமதுகாரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம்நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவேதங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோபழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள்.முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோமாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்

ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்



ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்


இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. அவற்றில் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மலர்களால் மாலை சூட்டி வழிபடுவார்கள். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.


உலகில் முதன் முதலில் தோன்றியது இந்த அருகம்புல்தான் என்ற கூற்று உள்ளது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய அனலாசுரன் என்ற அசுரனுடன் விநாயகப்பெருமான் போர் புரிந்தார். அப்போது அனலாசுரனை, தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டார். உள்ளே சென்றதும் அசுரனின் அனல் காரணமாக, விநாயகரால் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் முனிவர்கள், சித்தர்கள் பலரும் பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டி அதனை விநாயகரின் உடல் முழுவதும் வைத்து தடவிவிட்டார்கள். அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அது முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிப்பது வழிபாடாக மாறியது.

தாண்டீஸ்வரம் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் அன்னதானம்

தாண்டீஸ்வரம் ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிர வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக புதுக்கோட்டை , இலுப்பலூரில் அமைந்துள்ள தாண்டீஸ்வரத்தில் அமைந்துள்ள 
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் கோவிலில்
01.10.2015 வியாழன் கிழமை புரட்டாசி மாதம் மஹா பரணி குருபூஜை முன்னிட்டு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 

மானாமதுரை ஸ்ரீமஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு: cell :98428 58236

ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 77-வது குரு பூஜை திருச்செந்தூர்


ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 77-வது குரு பூஜை    திருச்செந்தூர் 
  01.10.2015 வியாழன் கிழமை








திருச்செந்தூர் கடல்கரையோரம் அமைந்துள்ள
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 76-வது குரு பூஜை  01.10.2015 வியாழன் கிழமை புரட்டாசி மாதம் மஹா பரணி நட்சத்திர தினத்தன்று 
நடை பெறுகிறது காலை 8.00 மணிக்கு ஹோமம், 9.00மணிக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் இந்த குரு பூஜை கலந்து கொண்டு 
ஸ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லவும்



மேலும் தகவல்கள்களுக்கு
கிட்டு cell :97872 51116
செந்தில் குமார் cell :98420 78733

Monday, 28 September 2015

ஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 77 வது குருபூஜை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஸ்ரீ ஸத்குரு சங்கார முர்த்தி சாமிகள் 77 வது குருபூஜை


*புதுக்கோட்டை , இலுப்பலூரில் அமைந்துள்ள தன்றிஸ்வரத்தில்

அன்று 01-10-2015 புரட்டாசி மாத வியாழ கிழமை மகா பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ சத்ருசம்கார முர்த்தி சாமிகள்




.திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842858236


திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷி பரணி நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 01-10-2015 புரட்டாசி மாத வியாழ கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல்குருபூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237

தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவரை வழிபாடு ,

தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவரை வழிபாடு ,
தேய்பிறை அஷ்டமியை(05.10.2015) 







ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ண பைரவரை நாம் வழிபட,நமது முன் ஜன்ம கர்மவினைகளும்,நமது முன்னோர்கள் செய்த கர்மவினைகளும் கரையத்துவங்கும்.
கலியுகமாக இருப்பதால்,மனிதனாகப்பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மப்பிரச்னைகள் இருக்கவே செய்கிறது.பணம் நிறைய சம்பாதித்துவிட்டால்,எந்தப்பிரச்னையையும் தீர்த்துவிடலாம் என நம்மில் பெரும்பாலானவர்கள் நினைக்கிறோம்.இது ஓரளவுக்கே உண்மை.நிஜத்தில் ,நமக்கும்,நமது குழந்தைகளுக்கும் சொத்தையும்,புண்ணியத்தையும் நிறைய சேர்க்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகத்தின்படி,தற்போது நிகழும் திசையைப் பொறுத்து ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட வேண்டும்.அப்படிப்பார்த்தால்,ஒரு குடும்பத்தில் நான்குபேர்கள் இருந்தால்,நான்கு கோவில்களுக்குச் செல்ல வேண்டும்.இது இன்றைய வேகமான வாழ்க்கையில் சாத்தியப்படாது.இதற்குத் தீர்வுதான் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு!
சிவபெருமானின் முதல் அவதாரம் பைரவர் அவதாரம்.பைரவர்களில் 8 வித அவதாரங்கள் இருக்கின்றன.இந்த 8 பைரவர்களும் 64 வித பைரவர்களாகப் பிரிந்து இந்த பூமியையும்,நமது பிரபஞ்சத்தையும் ஆட்சிபுரிந்துவருகின்றனர்.இந்த 64 பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவரே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் !!
ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் இராகு காலத்தில் நமக்குச் செல்வ வளத்தை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதிக்குச் சென்று வழிபடுகின்றனர்.இந்த சமயத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதன் மூலமாக இரண்டு மகத்தான நன்மைகள் உடனடியாக நமக்குக் கிட்டுகின்றன.ஒன்று நமது முன் ஜன்ம வினைகளும்,நமது முன்னோர்கள் செய்த வினைகளும் தீரத்துவங்குகின்றன.இரண்டு அப்படி தீரும்போதே நமது பொருளாதாரப் பிரச்னைகள் தீரத்துவங்குகின்றன.(வேலைபார்ப்பவர்களுக்கு சம்பளம் உயரத்துவங்குகிறது.தொழில் பார்ப்பவர்களுக்கு பணச்சுழற்சி வேகம் அதிகரிக்கிறது.போதுமான செல்வச் செழிப்புடன் இருப்பவர்களுக்கு என்னவிதமான கஷ்டங்கள் இருக்கின்றனவோ அவை நீங்கத்துவங்குகின்றன)அல்லது நமது குடும்பத்தில் இருக்கும் குறைகள் தீரத்துவங்குகின்றன.


நவக்கிரகங்களை இயக்குபவர் பைரவரே!! சனியின் குருவாக இருப்பவரும் பைரவரே!!!   பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக சனியின் தாக்கத்தை நிறுத்த முடியும்.ஏனெனில்,தன்னை வழிபடுபவர்களை எந்தவித தொந்தரவும் தரக்கூடாது என சனிபகவானிடம் பைரவர் சத்தியம் வாங்கியிருக்கிறார்.

(திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு,தேவக்கோட்டை அருகில் இருக்கும் தபசுமலை,திருச்சி மலைக்கோட்டை அருகில்,சிதம்பரம்,காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி,படப்பையில் இருக்கும் ஜெயதுர்காபீடம்)ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை மூலமந்திரத்தை 330 தடவை ஜபிப்பதன் மூலமாக அவரின் அருளைப் பெறமுடியும்.




திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் 10 வது கிலோமீட்டரில் அமைந்திருக்கும் கிராமம் தாடிக்கொம்பு.இங்கிருக்கும் அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் எழுந்தருளிவருகிறார்.தாடிக்கொம்பைப் பொருத்தவரையிலும் எந்த நாளில் தேய்பிறைஅஷ்டமி ஆரம்பிக்குமோ,அன்றைக்கு ஐந்து முறை அபிஷேக ஆராதனை செய்துவருகின்றனர்.காலை 9 மணி,காலை 11 மணி,மதியம் 1 மணி,மாலை 4 மணி,மாலை 5 மணி என்று குறிப்பிட்ட நேரத்தை ஒட்டி பாலாபிஷேகம் செய்துவருகின்றனர்.

,இங்கிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தன்னை வழிபடுவோருக்கு செல்வ வளத்தை அள்ளிவீசுகிறார்.

தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு




தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
 05-10-2015திங்கள் கிழமைதேய்பிறை அஷ்டமி






 


-திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில்
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! 
இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்து நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை

உடல்நிலை பாடாய் படுத்துகிறதா?


உடல்நிலை பாடாய் படுத்துகிறதா?





சிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை. அடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம். செலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.
ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்' என்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

அகத்தியர்அறிவுரை:-

அகத்தியர்அறிவுரை:-











"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா.
பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.
சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.
ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்.
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்."

குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?


குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?



கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா

நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா

ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!

ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.

ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.

மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.

ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்

அன்னதானம் செய்வது ஏன்?

அன்னதானம் செய்வது ஏன்?
அன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும்,வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும்.பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.நோய்களில் கடுமையானது பசி ஆகும்.பசி வந்தால் ஒருவன் தன்னிலை இழப்பான்.

மனித மனமே எதிலும் முழுமையாக திருப்தியடையாது.மனமானது ஒன்றை பெற்றுவிட்டால் அடுத்ததிற்கு ஏங்கும்.பசித்த ஒருவன் சாப்பிடும்பொழுது மட்டும்தான் வயிறு நிறைந்தவுடன் மனமும் நிறைகிறது.



உலகத்தில் சிறந்த பரிகாரங்களுள் ஒன்று மனித மனத்தை குளிர்விப்பது ஆகும்.ஒருவருக்கு பொன்னாலும்,பணத்திலானாலும் திருப்தி படுத்த முடியாவிட்டாலும் நாம் உணவு அளிக்கும்போது அவர் மனதை திருப்திபடுத்திவிடலாம்.அதனால்தான் அன்னதானம் செய்வது மிகப்பெரிய தர்மம் ஆகும்
.

பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்


பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்



பைரவர் வழிபாட்டுக்கு ஏற்ற நாட்கள்


ஞாயிற்றுக்கிழமை:

(சிம்ம ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

தள்ளிப்போகும் திருமணங்களுக்குப் பரிகாரம் காண மணமகனோ, மணமகளோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இராகு காலத்தில் (4.30-6.00) பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் தடைகள் நீங்கித் திருமணம் கைகூடும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் இராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.

திங்கட்கிழமை:

(கடக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

செவ்வாய்க்கிழமை:

(மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளைத் திரும்பப் பெறலாம். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை. குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோயிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான்.

புதன்கிழமை:

(மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.

வியாழக்கிழமை:

(தனுசு, மீனம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி சூன்யம் விலகும்.

வெள்ளிக்கிழமை:

(ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

மாலையில் வில்வ இலைகளாலும், வாசனை மலர்களாலும் சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தால் வறுமை நீங்கி, செல்வப் பேறு கிட்டும்.

சனிக்கிழமை:

(மகரம், கும்ப ராசிக்காரர்கள் இந்த கிழமையில் வழிபடுவது சிறப்பு)

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே சனிக்கிழமை அன்று இவரை பிரத்யேகமாக வழிபடுவதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகி நல்லவை நடக்கும்.



கால பைரவர் உடலில் பூமியைத் தாங்கும் எட்டு நாகங்களும் மாலையாக இருந்து அலங்கரிப்பதால் இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்களும் நீங்கும்.

சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து அவரவர் வசதிக்கேற்ப தேங்காய், தேன், தயிர் அன்னம் படைத்து வழிபட்டு பிரசாதமாகப் பக்தர்களுக்கு விநியோகிக்க வழக்குகளில் வெற்றி, வியாபாரத்தில் லாபம் கிட்டும்.

எதிரிகளால் ஏற்படும் தொல்லை மற்றும் பில்லி, சூனியம் போன்ற மந்திரத் தொல்லைகளும் அடியோடு அகலும்.

அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும்.

தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.

இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.


இழந்த பொருட்களை மீண்டும் பெற:

பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

குழந்தைச் செல்வம் பெற:

திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:

சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.


தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:

ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.

ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்:

துவாதச ஆதித்தியர்கள் அதாவது பன்னிரண்டு ஆதித்தியர்கள் ஒருங்கிணைந்து சூரியனாகி செயல்படுவதாகவும், சூரியனே பன்னிரண்டு வித தன்மைகளுடன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தன்மை உடையவராக செயல்படுவதாகவும் கூறுவார்கள். துவாதச ஆதித்யர்களை வழிபட்டு நலம் பெறலாம். காலத்தின் நாயகனும் சூரியனைத் தனக்குள் கொண்டவருமான சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

மாதங்கள் துவாதச ஆதித்தியர்கள் ஆதித்தியர்களின் பிராண தேவதை:

சித்திரை அம்சுமான் --- சண்ட பைரவர்
வைகாசி தாதா ---- ருரு பைரவர்
ஆனி ஸவிதா ---- உன்மத்த பைரவர்
ஆடி அரியமான் ----கபால பைரவர்
ஆவணி விஸ்வான் --ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் ---- வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன் ---- க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா --- பீஷண பைரவர்
மார்கழி மித்திரன் ----அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு ---- குரோதன பைரவர்
மாசி வருணன் ----- ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா -----சட்டநாத பைரவர்.

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்யகாலம்

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்யகாலம்







புண்யகாலம் என்பதை
1 . விஷு புண்ய காலம்
2 . உத்தராயண புண்ய காலம்
3 . தக்ஷிணாயன புண்ய காலம்
என பலவராகக் கூறுவோம். இதைப் போலவே விஷ்ணுபதி புண்ய காலம்என்பதுவும் மிகவும் சிறப்பானது.


பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் , அனுஷ்டிக்கும் விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர்.



ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.


ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள் வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது.

கர வருடத்தில் ஏற்கனவே இரண்டு விஷ்ணுபதி புண்ய காலங்கள் முடிவடைந்து விட்டன. மூன்றாவது காலம் வரும் நவம்பர் 17 அன்று வருகிறது.அன்றுதான் கார்த்திகை மாத பிறப்பு. அன்று சூரியன் துலா ராசியில் இருந்து விருசிக ராசிக்கு பயணிக்கிறார். அன்றைய தினத்தில் அதிகாலை 1 :30 மணி முதல் காலை 10 :30 மணி வரை இந்த புண்ய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ய காலம் அமைகிறது.

இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும், மஹாலக்ஷ்மியையும் மனதார வழிபாட்டு நமது எல்லா தேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடைய துதிகளை கூறி நமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம். முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் . அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப் ப்ரீத்தியைத் தரக்கூடிய காரியங்களை எல்லாம் சக்திக்குத் தகுந்தவாறு செய்யலாம்.


அதே போன்று அன்றைய தினத்திலே, செய்யக் கூடாத செயல்களைத் தவிர்ப்பதுவும் நன்று.


இந்த புண்ய காலத்தைப் பற்றி தெரியாதவர்களுக்கு இதனைத் தெரியப் படுத்தி அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்வதுவும் மிகச் சிறந்த வழிபாடு ஆகும்.


ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தை அனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ய காலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாதீர்கள். இந்த விஷ்ணுபதி புண்ய காலம்"சௌபாக்ய ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலம் " என அழைக்கப் படுகிறது.


இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்பு மிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் . ஆன்மிக முன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லது இந்த புண்ய காலம் ஆகும்.


எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்து ஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பெருமை



ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
 பெருமை



ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்
 பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.

கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:

இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.




பண பிரச்சனைகளுக்கு 48 முறை

உடல் நலம் பெற 58 முறை

வம்பு, வழக்கு சரியாக 78 முறை

நல்ல வேலை கிடைக்க 80 முறை

கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை

குழந்தையின்மை 52 முறை

மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்

திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?


திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?
***********************************
திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.



குழந்தை திருஷ்டி;...
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று.நெற்றியிலும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந்தையின் திருஷ்டியை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.


வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடிகிட்டு இளைஞனையோ/வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணுதடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும்சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.


பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டியை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங்கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கைகால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும் . பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
சில திருஷ்டி பரிகாரங்கள் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு செய்யமுடியாது அவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத்துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊருகண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக்கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண்ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்துவலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி போடுவார்கள்.இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்?


பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? 
அதற்கான 10 அம்சங்கள் வருமாறு:-

1. நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது ஒன்றும் பேசாதீர்கள். கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.

2. பிறகு இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.

3. பஸ்சில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும், கடவுள் உங்கள் எதிரே உட்கார்ந்திருப்பதாகப் பாவனை செய்து கொண்டு, குட்டிப் பிரார்த்தனைகளை அடிக்கடி செய்யுங்கள்.

4. எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயிராதீர்கள். கடவுள் ஏற்கனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

5. உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்குக் கடவுளின் அன்பையும், பாதுகாப்பையும்சம் பாதித்துக் தரும் என்று நம்புங்கள்.

6. பிரார்த்தனையின் போது கசப்புணர்ச்சியும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

7. கடவுளிடம் கேட்க வேண்டியதைத் கேளுங்கள். ஆனால், அவர் கொடுப்பதைப்பெற்றுக் கொள்ளத் தயராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளைவிட அவர் கொடுத்தும், கொடுப்பதும் சிறந்ததாகவே இருக்கும்.

8. ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும், தராததும் அவர் விருப்பம்.

9. உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள். ஆன்மிக சக்தியின் முதல் விரோதி வெறுப்புணர்ச்சி, என்பதை உணருங்கள்.

10. யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். எவ்வளவு அதிகமான பேருக்கு, குறிப்பாக சம்பந்தப்படாதவர்களுக்கும் பிரார்த்தனை செய்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக உங்களுக்கு பலன் கிடைக்கும்.

Follow Facebook on:

Follow Facebook on:
https://www.facebook.com/srishiragiri.velavan





செல்வம் பெருக வழிமுறைகள்


செல்வம் பெருக வழிமுறைகள்





1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்

2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை துடைக்கவேண்டும். குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான் லட்சுமி வருவாள்.

3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும் லுங்கிகள் அணியக்கூடாது.

4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும். வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.


5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது. அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.

6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம். அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம் இருக்கும். இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.


7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும். இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.



8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம் வைக்கவேண்டும்.

9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.

10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு கொடுக்கவேண்டும்.

11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க வேண்டும்.



12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.

13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர், முருகர் படங்களை மாட்டவும். அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும். அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.

14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.

இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது மகான் அரங்கமகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம் முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம்.
ஓம் அகத்தீசாய நம!
ஓம் கரூவூர்தேவாய நம!
ஓம் போகதேவாய நம!
ஓம் கோரக்கதேவாய நம!

தயவு செய்து இதை மற்றவர்களுக்கும் தெரிய படுத்தவும்

Friday, 25 September 2015

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்

பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்றுகூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம்.
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது

இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது.

இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாடு


திதி சூன்யப் பரிகார தேவதை வழிபாட







ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு திதியிலும் ஜாதகத்தில் இரண்டு வீடுகள் சூன்யம் அடையும் அந்த வீட்டிற்கான பலன்கள் திருப்திகரமாக சரிவர அமையாது.உதாரணமாக 7ஆம் வீடு திதி சூன்யம் அடைந்தால் ,நல்ல படிப்பு,வீடு,அழகு எல்லாம் இருந்தாலும் திருமணம் தாமதமாகும் அல்லது நல்ல கணவன் மனைவி அமையாது கஷ்டம் ஏற்படும்.தொழில் சார்ந்த பார்ட்னர்கள் சரிவர அமையாமல் ஏமாற்றப்படலாம். இப்படி,எந்த வீடு நம் ஜாதகத்தில் சூன்யம் அடைகிறதோ அதன் பலன் நமக்குப் பூரணமாகக் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவர் பிறந்த திதியில் சூன்யம் அடையும் கிரகங்களால் உண்டாகும் தீமைகளில் இருந்து திதி சூன்ய பரிகாரம் என்று சொல்லப்படும் அந்தந்தத் திதிகளுக்குண்டான திதி நித்யா தேவதைகளை வழிபட்டு வருவதன் மூலம் அந்தக் குறிப்பிட்ட பாவத்திற்கான கிரகங்கள் செயல்படத் தொடங்கி நலம் தரும்.

செல்வம்-தைரியம் தரும் அபிஜித் முகூர்த்த வழிபாடு


செல்வம்-தைரியம் தரும் அபிஜித் முகூர்த்த வழிபாடு





கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? அஸ்வதி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.

ஆனால் முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி- வாரம்- நட்சத்திரம்-யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும். ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.

அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.

அபிஜித் உருவம் என்ன? - 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும்.

இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில் முதல் பகுதி - ஜ, புகழைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி- ஜி வெற்றியைக் குறிக்கிறது. மூன்றாம் பகுதி -ஜீ. இறையருளைக் குறிப்பது. 4-ம் பகுதி-ஐ-ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டு விட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும். நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.

இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்- இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.

அதற்கு மறு மாங்கல்ய பூஜை செய்து திருமணப் பதிகம் ஓதி உமை ஒருபாகனை வழிபட்டால் அடுத்து அமையும் திருமணம் நல்லபடியாக நடந்து வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். துணி நீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீல கண்டனம் உடையாய் மருகல் அகணி நீலவண்டார் குழுவாள் சிவந்தன் அணி நீலஒண்கண் அயர்வாக்கினயே என்று சிவன் முன் கூறுக.

இழந்த பொருள் மீட்க- நிலம், வீடு சொந்தங்கள், இழப்பு நண்பர்கள் எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டால் `எம் நமக் கார்த்த வீர்யாய ஹீம்பட்' என்ற மூல மந்திரத்தை ஒரு வட்டமிட்டு எழுதி தீபம் ஏற்றி

ஓம் கார்த்த வீர்யா போற்றி!
ஓம் இழந்ததை மீட்பாய் போற்றி!
ஓம் பராக்கிரம சாலியே போற்றி!
ஓம் இரக்க குணம் உடையோய் போற்றி!
ஓம் சக்கர வாசனே போற்றி

என்று கூறி வழிபடுக.

அபிஜித் காலத்தில் பார்லி அரிசி கருங்காலிக் குச்சியால் யாக முறை செய்திட பலன் கிடைக்கும்.

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி


ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி




ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள்,
தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு
சனிக்கிழமையன்று காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த
பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச்
சுற்றிப்போட வேண்டும் ,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும்.
அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள்
தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.
எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.
இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.
இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.
இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன்இழந்துபோய்விடும்.
இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

நவதிருப்பதி தரிசனம்

நவதிருப்பதி தரிசனம்








தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களுமே நவதிருப்பதி என்று அழைக்கப்படுகின்றன.

திருவைகுண்டம், திருவரகுணமங்கை (நத்தம்), திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்போரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகியவை அந்தத் திருப்பதிகள்.

திருவைகுண்டம்:
திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் ஆற்றின் வடகரையில் உள்ளது திருவைகுண்டம். மூலவரின் திருநாமம் வைகுந்தநாதன். நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். கிழக்கு பார்த்த திருமுக மண்டலம். மூலவருடன் தாயார் கிடையாது. உற்ஸவர் திருநாமம் கள்ளபிரான். தாயாரின் திருநாமம் வைகுண்டவல்லி, பூதேவி தனி சந்நிதியில் அருள்புரிகிறார்.

திருவரகுணமங்கை (நத்தம்):
 ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் கிழக்கே உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் விஜயாசன பெருமாள். ஆதிசேஷன் குடைபிடிக்க வீற்றிருந்த கோலத்தில் அருள்கிறார். தாயார் வரகுணவல்லி, வரகுண மங்கை ஆகிய திருநாமங்களில் அழைக்கப்படுகிறார்.

திருப்புளிங்குடி: 
திருவரகுணமங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே அரை கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். மூலவரின் திருநாமம் காய்சினவேந்தன். உற்ஸவர் திருநாமம் எம்இடர்களைவான். தாயார் மலர்மகள், திருமகள் என்று அழைக்கப்படுகிறார். உற்ஸவத் தாயாரின் திருநாமம் புளிங்குடிவல்லி.

பெருங்குளம்: 
திருப்புளிங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் இந்தத் தலம் உள்ளது. மூலவரின் திருநாமம் வேங்கடவானன். உற்ஸவர் மாயக்கூத்தன். தாயார் அலர்மேலு மங்கை, குளந்தை வல்லி என்று திருநாமங்களோடு அழைக்கப்படுகிறார்.

திருத்தொலைவில்லி மங்கலம் (இரட்டைத் திருப்பதி):
பெருங்குளத்திலிருந்து கிழக்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்கலக்குறிச்சி வந்து வடகால் என்ற வாய்க்கால் கரை வழியாக மேற்கு நோக்கி 4 கி.மீ. தொலைவு பாதையில் வந்தால் இத்திருத்தலத்தை அடையலாம். இருகோயில்களும் அருகருகே அமைந்துள்ளன. இத்திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன்கோயில் உள்ளது.

தெற்கு கோயில்: 
மூலவர் திருநாமம் தேவர்பிரான். தாயார் - உபதாயார்களுக்கு தனி சந்நிதி இல்லை.

வடக்கு கோயில்: மூலவர் திருநாமம் அரவிந்தலோசனன். உற்சவர் செந்தாமரைக் கண்ணன். தாயாரின் திருநாமம் கருத்தடங்கண்ணி.

தென்திருப்பேரை: 
தாமிரபரணிக்கரையின் தென்கரையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது. மூலவர் திருநாமம் மகரநெடுங்குழைக்காதன். உற்ஸவர் நிகரில் முகில் வண்ணன். தாயாரின் திருநாமம் குழைக்காத நாச்சியார் மற்றும் திருப்பேரை நாச்சியார்.

திருக்கோளூர்: 
தென்திருப்பேரையிலிருந்து ஆழ்வார்திருநகரி வரும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் ஒரு கிளைப்பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம். மதுரகவி ஆழ்வாரின் அவதார தலம் இது. மூலவரின் திருநாமம் வைத்தமாநிதிப் பெருமாள். தாயாரின் திருநாமம் குமுதவல்லி.

ஆழ்வார்திருநகரி : 
திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் உள்ளது ஆழ்வார்திருநகரி. மூலவரின் திருநாமம் ஆதிநாதன். பொலிந்து நின்ற பிரான். தாயாரின் திருநாமம் ஆதிநாதவல்லி, குருகூர் வல்லி. இந்தத் திருப்பதிகள் அனைத்தும் நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தவை.

Thursday, 24 September 2015

கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி


கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்





கர்ப்பம் கலைந்து சிரமப்படுவர்களுக்கு கரு நிலைக்க வழி

கருப்பங் கலைந்தால் கனிமா துளம்தோல்
பெருமரப் பட்டைய சோகு .-------------------குறள்

விளக்கம் :
தாய் கருவுற்ரும் ,பின்னர் கலைந்துவிட்டால் ,அதற்கு மாதுளம் பழ தோல் உடன் அசோகமரப் பட்டையும் சம அளவு எடுத்து கொதி நீரிட்டுப் பதமுடன் 45 நாள் காலையில்அருந்தி வர உடல் நலம் தேறி ,நலம் பெற்று மீண்டும் கரு உண்டாகி நிலைத்துப் பிறக்கும் .

பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்


பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்

பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்
(
 25.09.2015 வெள்ளி கிழமை பிரதோஷம்)





பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க


சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :



நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்
மன்னுநீர்த் தாரைநோய் மாற்று . ..............குறள்


விளக்கம் :
அதிமதுரம் ,நன்னாரி வேர்,சந்தனம் ,மிளகும் , இவற்றின் தூளை கொதிக்க
வைத்து அருந்திவர நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்
இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும் அருந்தலாம் ,