நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 31 December 2014

யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

யாருமற்ற பேருக்கு ஆதாரமாக வரும் முருகன்

ஆதாரமிலேன் அருளைப் பெறவே

நீதான் ஒரு சற்று நினைந்திலையே

வேதாகம ஞான வினோத மனா

தீதா சுரலோக சிகாமணியே .......கந்தரனுபூதி




உலகத்தின் அனைத்து பற்றுக்களையும் இழந்தவர்க்கு ஆதாரமாக இருந்து அருள் புரிவவன் முருகன் ---அருணகிரிநாதர்




 

Tuesday, 30 December 2014

கஷ்ட நிவர்த்தி மாமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

கஷ்ட நிவர்த்தி மாமருந்து
மஹா பாரதத்தில் வன பர்வத்தில் மார்கண்டேய மகரிஷியால்
தர்மபுத்திரர்க்கு உபதேசிக்கபட்ட கார்த்திகேய ப்ரபாவம் எனும் ஷண்முக மந்திரம் ---

அன்புடன் உலக மக்கள் அனைவரும் படித்துப் பயன் பெற
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயில் சுவாமிஜி அவர்கள் ஆசியுடன்

பாராயணம் செய்து பயன் பெருக வளம் பெருக .
ஓம் குரு குஹாய நமஹா
ஓம் ஆக்நேயா நமஹா
ஓம் ஸ்கந்தாய நமஹா
ஓம் தீப்த கீர்த்தையே நமஹா
ஓம் அனாமையாய நமஹா
ஓம் மயூர கேதவே நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பூதேசாய நமஹா
ஓம் மகிஷா ர்த்தனாய நமஹா
ஓம் காமஜிதே நமஹா
ஓம் காமதாய நமஹா
ஓம் காந்தாய நமஹா
ஓம் சத்யவாஹே நமஹா
ஓம் புவநேஸ்வராய நமஹா
ஓம் சிசுவே நமஹா
ஓம் சீக்ராய நமஹா
ஓம் சசயே நமஹா
ஓம் சண்டாயயே ------------------------------18
ஓம் தீப்தவர்நாயே நமஹா
ஓம் அமோகாயே நமஹா
ஓம் அனகாயே நமஹா
ஓம் ரவுத்ராயே நமஹா
ஓம் ப்ரியாய நமஹா
ஓம் சன்றானநாய நமஹா
ஓம் தீப்தசக்தையே நமஹா
ஓம் பிரசாந்தாத்மனே நமஹா
ஓம் பத்ரக்ருதே நமஹா
ஓம் கூடமோ ஹணாய நமஹா
ஓம் சஷ்டி ப் ரியாய நமஹா
ஓம் தர்மாத்மனே நமஹா
ஓம் பவித்ராய நமஹா
ஓம் மாத்ருவத்சலாய நமஹா
ஓம் கன்யா பர்தாய நமஹா
ஓம் விபக்தாய நமஹா
ஓம் ச்வா ஹெய்யாய நமஹா
ஓம் ரேவதி சுதாய நமஹா --------------------36
ஓம் பிரபவே நமஹா
ஓம் நேதாய நமஹா
ஓம் விசாகாய நமஹா
ஓம் நைக மேயாய நமஹா
ஓம் சுச்சராய நமஹா
ஓம் சீவ்ரதாய நமஹா
ஓம் லலிதாய நமஹா
ஓம் பால க் ரீட னக ப்ரியாய நமஹா
ஓம் கசாரீ ணே நமஹா
ஓம் ப் ரம சாரிணே நமஹா
ஓம் சூராய நமஹா
ஓம் சரவநோத்பவாய நமஹா
ஓம் விஷ்வாமித்திர ப்ரியாய நமஹா
ஓம் தேவசேனா ப்ரியாய நமஹா
ஓம் வாசுதேவ ப்ரியாய நமஹா
ஓம் பிரியாய நமஹா
ஓம் பிரியக்ருதே நமஹா
ஓம் கார்த்திகேயாய நமஹா ---------------54

தினமும் காலையில் இரு முறை படித்து வர நன்று .
கார்த்திகேய ப்ரபாவம் முற்றியது

எந் தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுல மானவை தீர்த் தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமார மறை நாயகனே .---கந்தரனுபூதி


பல் ஈறு பலப்பட /அழுகல் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பல் ஈறு பலப்பட /அழுகல் நீங்க


மிளகுசோற் றுப்பு மிகாதொன்றாய்க் கூட்டின்
அளவு பல் தீநீர் தவிர்ப்பு ......................குறள்

விளக்கம் :
மிளகு , சோற்று உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவுஎடுத்து காலை ,மாலை பல் துலக்கி அழுகிய பக்கம் தலை சாய்த்து படுத்திருந்தால் கெட்ட நீர் முற்றும் வெளியாகும் ,நோய் குணமாகும்

Monday, 29 December 2014

அத்திரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்திரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்திரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 08-01-2015 வியாழ கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்திரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் காலை 8.30மணிக்குகடனா நதி அனையில் இருக்க வேண்டும்

மேலும் தகவல்கள்களுக்கு

cell :+ 91 9994990167

919842078733

919171122091


திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர் மகரிஷிக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை
ஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள்.கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு 31-12-2014 புதன் கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல்அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :+91 909510237


நீரிழிவு நோய்க்குமருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

நீரிழிவு நோய்க்குமருந்து

நீரிழிவில் பொற்சீந்தில் நாவல்,கடுக்காய்த்த்தோல்,
ஈர்நெல்லி கோரைகறி வேம்பு..----குறள்.

விளக்கம் :
சீந்தில்கொடி,நாவல் பட்டை,கடுக்காய்த் தோல்,அறுனெல்லி,கீழானெல்லி,கோரைகிழஙுகு,கருவேப்பிலை இவற்றின் தூள் சம எடை சேர்த்து இரண்டு கிராம் எடுத்து
நாளைக்கு இருவேளை உணவுக்கு முன்பசும்பாலில் உட்கொள்ள இருபத்திஒரு நாள் உட்கொள்ள் நீரிழிவு நோய் தீரும்.

Saturday, 27 December 2014

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை

ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,
மானாமதுரை ஸ்ரீ மஹாபஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து சித்தர்கள் வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில் ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .அங்கும் வழிபட பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம் நடக்கும் .
முதற்கட்டமாக அகத்தியர் நிர்மானித்த கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர் வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .
ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்
கோயிலுக்கு வழி :
உங்களது தொலை பேசி எண்
கோயில் தொலைபேசி /குருக்கள் எண்
இந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
தொடர்புக்கு :
சுந்தர்: 98659 93238,98428 58236
அண்ணாமலை -94425 59844
Email: prathyangiradevi33@gmail.com
annamalaitpr@gmail.com
srisandi2013@gmail.com



கருவுற (மகப்பேரியல்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கருவுற (மகப்பேரியல்

தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- ------குறள் 


விளக்கம் :

சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்



Friday, 26 December 2014

முகப்பரு நீங்க Get rid of Pimples

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு நீங்க Get rid of Pimples


துத்தி இலைபாலில் தோய்த்தரைத்துப் பூசுவதால் ,

குத்தும் பருக்களிலை கூறு . ....................குறள்

விளக்கம்

துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டு காய விட்டு பின்பு கழுவிட்டால் பருக்கள் மறையும் ,காலை மாலை இருமுறை தொடர்ந்து செய்யவும் நல்ல பலன் கிடைக்கும் .




Thursday, 25 December 2014

உடனடியாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் 

உடனடியாக சர்க்கரையின் அளவு ரத்தத்தில் குறைய


நூல்கோல் சாறு எடுத்து 150 மில்லி உடன் ஆவாரம் பூ ஒரு ஸ்பூன் சாறு
சேர்த்து காலையில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனே குறையும் .
சாப்பிடும் முன்பு சர்க்கரை அளவு பரிசோதனை செய்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கவும் .

15 நாளுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் போதும் ,பரிசோதனையில் முடிவை பொறுத்து மறுமுறை சாப்பிடஉ ம் 

Tuesday, 23 December 2014

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பால் விணை நோய் (HIV-Aids)மருந்து


எல்லையை மீறும் எவர்க்கும் முடிவாகத்
தொல்லைதொடர் பால்நோய் பெருக்கு .......குறள்

எண்ணான்கு காலை இளமதென்னம் பூக்கொதிநீர்
கொண்மின்முன் பால்விணை நோய்க்கு ......குறள்

விளக்கம் ;
மனித வாழ்வில் ஒழுக்க விதிகளை மீறுவோர் எவராயினும் முடிவாக துன்பங்கள் தொடர்ந்து வரும் ,குறிப்பாக ஒருமையில் மணமக்கள் மாறு படுவதால் பால்விணை நோய் உயிர் கொல்லி நோயாக உண்டாகிறது .(HIV-Aids)

32 நாள் காலை வேளை மட்டும் இளம் தென்னம் பாளையை இடித்து கொதிநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பதமுடன் அருந்திவர
பால்விணை நோய் தீரும் .


ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி . ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
24-12-2014 புதன் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844


Thursday, 18 December 2014

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
அமாவாசை யாகம் 21.12.2014ஞாயிற்று கிழமை மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் ஞாயிற்று கிழமை 21-12-2014அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து
புனித சேஷ்திரமகிமை
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .
.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் விஜயாபதி அமைந்து உள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 20.12.2014 அன்று சனி கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீவிஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733
91711 22091





சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் நீங்க :


நன்மதுரம் சந்தனமும் நன்னாரி வேர்மிளகும்
மன்னுநீர்த் தாரைநோய் மாற்று . ..............குறள்


விளக்கம் :
அதிமதுரம் ,நன்னாரி வேர்,சந்தனம் ,மிளகும் , இவற்றின் தூளை கொதிக்க
வைத்து அருந்திவர நீர்த்தாரையில் ஏற்படும் நோய் தீரும்
இதை நோய் அதிகம் இருந்தால் குடி நிராகவும் அருந்தலாம் ,


Wednesday, 17 December 2014

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட sugar patients wounds relief oil

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட
sugar patients wounds relief oil

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது
இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்



Tuesday, 16 December 2014

யானைக்கால் நோய் தீர மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

யானைக்கால் நோய் தீர மருந்து


பப்பாளிச் சாறு படுவெயிலில் பற்றிடுவார்
எப்பாரும் யானைக்கால் நோய்க்கு .........................குறள்


விளக்கம்:
யானைக்கால் நோய் கண்ட காலில் பப்பாளி பழத்தில் சாறு எடுத்து
தடவி வைத்து காலை வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன் மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர நோய் குணமாகும் .



ஸ்ரீகாரைக்கால்அம்மையார்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி* *காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகாரைக்கால்அம்மையார்க்கு 18.12.2014 வியாழ கிழமை சுவாதி நட்சத்திர தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762


Saturday, 13 December 2014

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க
***********************************************


வல்லாரைப் பாகு வழங்கும் நினைவாற்றல்
நல்லாவின் பால் பின் அருந்து ...............................குறள்

விளக்கம்

வல்லாரைக் கீரையை காய வைத்து தூள் செய்து கொண்டு அதனுடன்
சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,மாசிக்காய் ,வால் மிளகு இவற்றின் தூளை

50 கிராம் வல்லாரை தூள் மற்ற 4கின் தூள் 20 கிராம் சேர்த்து பனங்கல்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகாக வைத்துக்கொண்டு தினமும் காலை உணவுக்கு முன் 5 கிராம் எடுத்துகொடுத்து சாப்பிட வைக்கவும் .பின் பசுவின் பால் அருந்தக் கொடுக்கவும்

நினைவாற்றல் அதிகரிக்கும் ,இதயம் வலுப்பெறும்

அல்லது இவற்றின் தூள் சேர்த்து வைத்து அதில் 5 கிராம் எடுத்து தேனில் குழைத்து உண்ண கொடுக்கலாம் ,பின் பசும் பால் கொடுக்கவும்


ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 14-12-2014 ஞாயிற்று கிழமை
மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி
அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

cell : +91 98428 58236



கடன் நிவர்த்தி முறை













கடன் நிவர்த்தி முறை

கடன் பெற்றான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதை போல கடன் என்பது கொடிய விஷமே தவிர வேறில்லை. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள். நாம் கண்ட பலருக்கு கொடுத்து பயன் பெற்ற கடன் நிவர்த்தி முறைகளை கீழே கொடுத்துள்ளேன். பயன்படுத்தி பலன் பெறுவீர்களேயானால் மகிழ்ச்சியுருவேன்.


(1) புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும்

இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.




(2) வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும்.

(3) தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்


(4) வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.


(5) கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் குறைந்து இருப்பதை அனுபவத்தில் காணலாம். (கோதுமையாக வாங்கி செய்யவும்)


(6) தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை மாலை சாற்றி வழிபடவும்.


நன்றி Sesshadri Vaamanan

சென்னிமலை ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திரம் அபிஷகம், ஆராதனை அன்னதானம்








அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு 15.12.2014 திங்கட் கிழமை கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844

Friday, 12 December 2014

கண் பார்வை வலுப்பெற Eye sight improvement for all age

 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

கண் பார்வை வலுப்பெற
Eye sight improvement for all age


நீலியொடு மஞ்சள் கரிசலை வல்லாரை
மூலிநுண்தூள் கண்பார்வைக் குண் -------குறள்

விளக்கம்
அவுரி எனும் நீலி ,மஞ்சள் கரிசலாங்கண்ணி ,வல்லாரை இம் மூன்ரையும்
சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி நன்கு காய்ந்த பிறகு இடித்து தூளாக்கி
தினமும் காலையில் 2 கிராம் அளவு தக்க அனுபானத்தில் அருந்திவர கண் பார்வை
தெளிவாகும் .
அனுபானம் : பசும் பால்,தேன் ,நீர் 


ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

 ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு 12.12.2014
வெள்ளி  கிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை

அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
 மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479