
நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை
சோடசக்கலை நேரம் 27.07.2018 வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு 1.23 முதல் 3.23 வரை
எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும்செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமேஅன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம்செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்டவாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில்நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.
( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம்செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமிபெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டுதிதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சுமஉடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில்பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால்கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான்சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடிவாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான்இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாகஇருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,எனவாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமேபொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம்மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.திருமூர்த்தியைகிறிஸ்தவர்கள்
Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,
முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும்பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படிகணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதிஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில்அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள்சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப்பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும்
( நாம் வாழும் மில்கிவே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் (பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல்பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,
பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை, காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாகஅதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும்செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம்செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்குஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்.இது அவரவர் உடல்பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனைசெய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும்நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது.வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையைஉருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்துஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியைநோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம்மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சிஉள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,
பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள்விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்குவெற்றி எதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம்கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம்பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்துமனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.
இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங்
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்