நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 28 November 2017

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட
லக்ஷ்மி கலசம்.

-----------------------------------------------------------------------------

நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை

ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ
இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற
வாழ்த்துக்கள.

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி




பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர்.
ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.


ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.


சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,


சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு


என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.



முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)

காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.




அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர்.

சக்திவாய்ந்த ஜீவசமாதி மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பாம்புக்கோவில் சந்தை

சக்திவாய்ந்த ஜீவசமாதி மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி பாம்புக்கோவில் சந்தை





நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது இந்த பாம்புக்கோவில் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, காலை 11 மணி, மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது. சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது. மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்,சங்கரன்கோவில், பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.





பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக (செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.



பயணித்ததும், ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும். அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும். இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம்ஜபிப்போம்; அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.





இரு ருத்ராட்சங்களுடன் வருவோம் இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும், அன்னதான வசதியும் இருக்கின்றன. யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ, அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது: இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து .... ஜபிக்க வேண்டியது மட்டுமே!! தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

மேலும் தகவல்கள்களுக்கு : 98420 78733

Monday, 27 November 2017

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஐந்தாம் ஆண்டு குருபூஜை


கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் ஐந்தாம் ஆண்டு குருபூஜை




.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


ஹேவிளம்பி வருடம் கார்த்திகை 14 மாதம் 30-11-2017 வியாழக்கிழமை ரேவதி நட்சத்திர தினத்தன்று
காலை 8.15 மணிக்கு மேல்--அனுக்னஞ,விக்னேஷ்வர பூஜை
கணபதி ஹோமம்
நவகிரக ஹோமம்
ஏகாதச ஸ்தாபன அபிசேகம்
பகல் 11.00 மணிக்கு ----குரு பூஜை ,மகேஷ்வர பூஜை,
பகல் 1.00 மணிக்கு--------------தமிழ் இசை கச்சேரி , திருவாசகம் முற்றொதல்


மாலை 6.00மணிக்கு
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் திருமேனி திரு உருவம் திருவீதி உலா சித்தரின் இல்லத்தில்புறப்பாடு கரூர் டவுன்
கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
நான்காம் ஆண்டு குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள்
ஆசிர்வாதம் மற்றும் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
பஸ் ஸ்டாப்
கரூர் --வெள்ளகோவில் வழியில்
ரூட் பஸ்ஸ்டாப் ----பவுத்திரம்
டவுன் பஸ்ஸ்டாப் --டிவிஎஸ் ஸ்டாப்
9944460066-9443228716

Monday, 20 November 2017

நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா..? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

நீங்கள் கோடீஸ்வரராக வேண்டுமா..? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?



1;ஒவ்வொரு தமிழ்மாதத்திலும் ஏதாவது ஒரு திங்கள் கிழமையன்று திருப்பதி சென்று ஸ்ரீவெங்கடாஜலபதியை தரிசிக்க வேண்டும்.அங்கு எப்போதும் கூட்டமாக இருக்கும் இல்லையா? நீங்கள் திங்கட்கிழமையன்று பெருமாளை தரிசித்துவிட வேண்டும்.இப்படி 12 திங்கட்கிழமைகள் அதாவது ஒருவருடம் வரை ஸ்ரீபாலாஜியை தரிசிக்க வேண்டும்.இப்படி செய்தால் நீங்கள் கோடீஸ்வரராவது உறுதி.


2.அமிதிஸ்டு என்ற ரத்தினம் அதாங்க ஜெம் நகைக்கடைகளில் கிடைக்கிறது.இந்த ரத்தினத்தின் பூர்வீகம் அமெரிக்கா.இந்தக்கல் இருக்கும் இடத்தில் வீண் செலவுகள் குறையும்.பணம் சேமிக்கும் காந்த அலைகளை இது வெளியிடுகிறது. இது ஒரு காரட் ரூ.100 அல்லது அதைவிடக் குறைவாகத்தான் இருக்கும்.குறைந்தது 10 காரட் வாங்கி பணம் வைக்குமிடத்தில் வைக்கவும்.உங்களது மணிபர்ஸிலும் வைக்கலாம்.நிறைய பணம் மிச்சமாகும்





ஒவ்வொரு வருடமும் கார்த்திகைமாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று மாலை 4.30 மணிக்கு திருஅண்ணாமலையில் உள்ள குபேரலிங்கம் சன்னதிக்கு வருக!!! அங்கு நடக்கும் நித்ய பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு , கிரிவலம் செல்ல வேண்டும். குபேர லிங்கத்தில் தொடங்கி , குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து , பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும்.
வீட்டில் மாதம் தோறும் குபேரபூஜை அல்லது மகாலட்சுமி பூஜை செய்து வருக!

உங்களது பிறந்த ஜாதகத்தில் கோடீஸ்வரயோகம் இல்லாவிட்டாலும் கோடீஸ்வரர் ஆவது நிச்சயம் உண்மை.நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்

Saturday, 18 November 2017

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!


சந்திரனுக்கு தட்சன் தனது 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்;அவர்களில் ரோகிணி,கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார் சந்திரன்;இதனால் மனம் வருந்திய மற்ற மனைவிகள் தனது தந்தையிடம் புகார் செய்தனர்;

தட்சன் தனது மருமகன் சந்திரனைச் சந்தித்து, “நீ அழகாக இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறாய்;உன் முகத்தின் பிரகாசம் மறையட்டும்” என்று சாபம் இட்டார்;

இதனால் சந்திரனின் கலைகள் தேயத் துவங்கின;இதுவே வளர்பிறை,தேய்பிறை என்று உருவாகக் காரணமாகவும் அமைந்தது;
ரோகிணியும்,கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்;தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்ததால்,சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை;

உடனே ரோகிணியும்,கார்த்திகையும் சிவனை நினைத்து தவம் செய்யத் துவங்கினர்;அவர்களது நீண்ட கடும் தவத்தினால் சிவன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்தார்;

கார்த்திகை,ரோகிணி இருவரின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் கணவன் சந்திரனின் சாபம் தீர,சந்திரன் தனது தலை மீது அமரும் பாக்கியத்தை அருளினார்;

ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசைக்கு மூன்றாவது நாளன்று வரும் திதி த்ரிதியை ஆகும்;மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால்,சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்;தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வற்றாத செல்வ வளத்தைப் பெறுவார்கள்

Friday, 17 November 2017

எதிர்கால கலியுகம் எப்படி இருக்கும், மக்களின் நிலை என்ன?

எதிர்கால கலியுகம் எப்படி இருக்கும், மக்களின் நிலை என்ன?


இந்த பதிவு கொஞ்சம் நீளமானதுதான் அனால் முக்கியமான பதிவு.


500 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் பரிபூர்ண ஆச்சார்ய ப்ரக்நதாம்பா என்ற பொற்கொல்லர் தம்பதியர்க்கு ஒரு சிறு கிராமத்திற்கு அருகில் அடர்ந்த காட்டில் மகனாய் பிறந்தார்.
அவர் பிறந்த வருடம் (கி.பி. 1604-1693) உலகத்தில் மகான்கள் அவதரிக்கும் போது வானில் புதிய பிரம்மாண்டமான ஜோதியுள்ள நட்சத்திரம் தோன்றும் என்பது ஐதீகம்.அதே போல,வீரபிரம்மம் அவதரித்தபோது வானில் ஒரு பிரம்மாண்டமான ஜோதி நட்சத்திரம் தோன்றியது.இவர் குழந்தையாக இருக்கும்போதே இவர் தாய் தந்தையை இழந்தார்.இவரை மானசீகமாக இறைவன் ஞானப்பால் வார்த்து வளர்த்து வந்தார்.தமது இளம்வயதில் இருந்தே தெய்வீக சக்திகளை உடையவராகத் திகழ்ந்தார்.
இவர் வாழ்ந்திருந்த காலத்தில் ஆந்திர மாநிலத்தில் நவாப்புகளின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.குறிப்பாக கர்நூல் நவாபு,செகந்திராபாத் நவாபு,ஹைதாராபாத் நிஜாம்,சித்தூர் ராஜா ஆகியோர் இவரை தம் அரண்மனையில் போற்றி வந்தனர்.இவரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தனர்.
இவர் பொற்கொல்லர் இனத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்க்கையின் இளமைப்பருவத்தை இடையனாகவே தொடங்கினார். வீரபொட்லைய்யா,பாப்பம்மாள் இவரது வளர்ப்புப் பெற்றோராக இருந்தனர்.சில வருடங்களுக்கு இவர்களின் பராமரிப்பில் இருந்து விட்டு,பிறகு அவர்களின் ஆசியோடும், சம்மதத்தோடும் காவி,கமண்டலம் எடுத்துக் கொண்டு தன் மேனி முழுவதும் விபூதி பூசிக் கொண்டார்.
கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து கொண்டு ஸ்ரீசைலம், பிரயாகை, காசி, பிரம்மகபாலம், காஞ்சி, திருவானைக்கா, காளஸ்திரி, திருப்பதி, திருஅண்ணாமலை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்துவிட்டு இறுதியாக அரிஹரபுரம் என்னும் ஊருக்கு வந்து தங்கினார்.அங்கே சிறிது காலம் இருந்துவிட்டு,மீண்டும் அங்கிருந்து பனகானப்பள்ளிக்குச் சென்றார்.அங்கே அச்சம்மா என்ற பதிவிரதையின் வீட்டின் திண்ணையில் படுத்துறங்கினார்.மறுநாள் அச்சம்மா அவரை விசாரித்தாள்;
வீரப்பிரம்மமோ நான் ஒரு அனாதை,எல்லா ஊரும் என்னுடைய ஊரே! அனைவரும் என்னுடைய சுற்றத்தாரே!1 அனைவருக்கும் பணி செய்து கிடப்பதே எனது வேலை;திக்கற்றவர்கள் அனைவருக்கும் நானே துணை என்று கூறினார்.
இதைக்கேட்ட அந்த அச்சம்மா, ஐயா என்னிடம் பசுக்கள் இருக்கின்றன;அவைகளை தினமும் மேய்த்து வருவீர்களானால் நான் தினமும் உங்களுக்கு மூன்று வேளையும் உணவு படைக்கிறேன்.அதற்குச் சம்மதமானால் சொல்லுங்கள் என்று வீரப்பிரம்மத்திடம் கேட்டாள்.
இதற்குச் சம்மதித்த வீரப்பிரம்மம்,தினமும் காலையில் அருகில் இருக்கும் காட்டிற்கு பசுக்களை மேய்த்திட அழைத்துச் செல்வார்.காட்டின் ஒருபகுதியை அடைந்ததும் தன் கையில் உள்ள கோலினால் பூமியில் சில இடங்களில் கோடு போட்டு விட்டு, மாடுகளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தான் வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டு பனை ஓலையில் முட்களின் உதவி கொண்டு எழுதி வந்தார்;அன்று அவர் எழுதிய நூலே காலக்ஞானம் ஆகும்.மாலை வரை பசுக்கள் அவர் கோடிட்ட எல்லையைத் தாண்டாது எல்லைக்குள்ளேயே மேயும்;அந்த எல்லைக்குள்ளும் துஷ்ட ஜந்துக்களோ,வேறு மனிதர்களோ நுழைய முடிவது இல்லை;
ஒரு சமயம் ஒரு புலியானது,ஒரு பசுவை கொன்று தின்றுவிட வந்தது;அதுஅந்த எல்லைக்குள் நுழைய முடியாமல் திண்டாடுவதை வேறு பல யாதவர்கள் கண்டார்கள்;இதனை பசுவின் சொந்தக்காரியான அச்சம்மாவிடம் சொன்னார்கள்;இவர் மாடு மேய்த்து வந்த நாள் முதல் அவர் வீட்டில் பால் பெருகியும்,வியாபாரம் சிறந்த முறையிலும் நடந்து வந்தது.
மற்ற யாதவர்கள் சொன்னதைக்கேட்டு நேரில் விசாரிக்க எண்ணம் கொண்ட அச்சம்மா ஒரு நாள் காட்டிற்கு வந்தாள்.காட்டில் தன் பசுக்கள் இல்லாதிருப்பதையும் கண்டாள்.ஆச்சரியம் அடைந்தாள்.அவர் எங்கு உள்ளார் என்பதனைக் காண காட்டில் உள்ளே சென்று பார்த்தாள்.அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து,ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார்.அவரிடம் ஒன்றும் பேசாமல் அந்த அச்சம்மா வீடு திரும்பினாள்.
தான் முதலில் சந்தித்த அன்று அவருடன் உரையாடிய நிகழ்ச்சியை நினைத்து அவரின் மேல் பயமும்,பக்தியும் கொண்டார்.அவர் வீடு திரும்பி வந்ததும் அவரின் கால்களில் வீழ்ந்து வணங்கி, ஐயா நீவிர் மகா புருஷர்,உங்களின் சக்தி அபாரமானது;நீங்கள் தெய்வத்திற்கு ஒப்பானவர்.உங்களின் அருமை தெரியாது நான் உங்களுக்கு மாடு மேய்க்கும் வேலை கொடுத்துவிட்டேன்.நான் தெரியாமல் செய்த பிழையை பொறுத்து என்னை மன்னிப்பீராக என்று வேண்டினாள்.
அம்மா நான் ஒரு சிறுவன்;எனக்கு ஒன்றும் தெரியாது;நான் எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும் என்று வீரப்பிம்மம் கூறினார்.அதற்கு அச்சம்மா,நீவிர் மஹாபுருஷர் என்பதை உங்களின் ஒவ்வொரு செயலிலாலும் நான் அறிந்து கொண்டேன்.ஆகவே,நீவிர் என்னை உங்களுடைய சீடனாக ஏற்று எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என வேண்டினாள்
இதைக் கேட்ட வீரப்பிரம்மம், அச்சம்மா நீ போன பிறவியில் மஹா பதிவிரதையாக இருந்தவள்.எனவே தான் நான் உனக்கு இப்பிறவியில் பணிவிடை செய்யும் இந்நிலையினை பெற்றேன். நீ முக்திகதியினை அடைய ஓம்நமசிவாய என்னும் பஞ்சாட்சரி மந்திரத்தை ஜபித்துவா.இம்மந்திரத்தை நீ உச்சரித்து வருவதனால்,நீ முக்தி அடைந்து பிறப்பு என்னும் மாயை உன்னை விட்டு நீங்கும் எனக் கூறினார்.
அப்போது அந்த அச்சம்மா,நீங்கள் காட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தீரே.அதனை நான் அறிந்து கொள்ளலாமா? என வினவினார்.
அதற்கு அவர் கலியுகத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நான் எழுதுவது காலக்ஞானம் என்னும் நூல். வருங்காலத்தில் வாழும் மக்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.அதை நீ அறிந்து கொள்ள ஆசைப்படுவதால் நான் உனக்குச் சொல்லுகிறேன்.கவனமாக நீ கேட்டுக்கொள்வாயாக என்று காலக்ஞானத்தில் தான் எழுதியதை வீரப்பிரம்மம்,அச்சம்மாவுக்குச் சொன்னார்:
சுமார் இன்றைய நாளிலிருந்து (கி.பி.1612) எண்ணூற்றி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூலோகத்தில் தர்மம் நசிந்து அதர்மம் தாண்டவமாடும்.
• புண்ணிய தலங்களில் மட்டுமே தர்மதேவதையானவள் இருப்பாள்.அச்சமயம் நான் வீரபோக வசந்தராயன் என்ற பெயரில் பிறந்து உலக மக்களுக்கு ஞான வழியினை போதிப்பேன்.அது கலிமுற்றியதற்கான அறிகுறி நேரம் ஆகும்.
• கலி முற்றும் போது உலகில் அசத்தியம் விருத்தி அடையும்.சத்தியம் முழுவதும் மறைந்துவிடும்.
• மக்களிடையே பாரபட்சம் அதிகரித்து அதன்படி நடப்பார்கள்;
• துரோகிகள் மிக அதிகமாகப் பிறப்பார்கள்.
• நடு இரவில் சூரியன் தோன்றுவான்.
• ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகும்
• ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.
• பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.
• பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்
• மக்கள் பரமாத்மாக்களை (கடவுள்) நிந்திப்பார்கள்.
• துஷ்ட தேவதைகள் தோன்றி கிராமங்களை அழிக்கும்;இது போன்ற விபரீதங்கள் சர்வசாதாரணமாக நடைபெறும்.
• உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும்
• உலக வாழ்க்கையில் தந்தை மகனையும்,மகன் தந்தையையும் மோசம் செய்வார்கள்.
• தாய் தந்தையர்கள் மகன்களை நம்பாமல் தங்களின் மகள்களையே நம்புவார்கள்.
• கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.
• திருமணங்கள்,குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.
• அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்
• தெய்வ வழிபாடு செய்வோர்,தெய்வ விரதம் இருப்போர் கஷ்டமும்,தரித்திரமும் அனுபவிப்பார்கள்.
• குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.
• வேப்ப மரத்தின் இலை இனிப்பாக மாறும்.
• பகலில் நட்சத்திரம் தோன்றும்;அதனால் மக்களுக்கு சேதாரம் உண்டாகும்.
• குருவாயூரில் இருக்கும் க்ருஷ்ணன் மனிதர்களிடையே பேசுவார்.
• காசியில் உள்ள கங்கை காணாமல் மறைந்து விடும்.
• காசிக் கோவிலில் இருக்கும் நடன சிற்பங்கள் அனைத்தும் உயிர் பெற்று நடனம் செய்த வண்ணம்,மக்களுடனும் பேசும்.
• வேதங்களும்,புராணங்களும்,சரியான முறையில் ஆன விளக்கங்கள் கூறப்படாமல்,தவறான கேலிக்குரிய முறையில் விளக்கங்கள் சொல்லப்படும்.
• தர்ம சிந்தனையே தன் இதயத்தில் அற்றவர்கள்,குரோத குணம் உடையவர்கள்,அநியாயம்,அதர்மம்,அக்கிரமம் செய்வோர்களின் ஆதிக்கம் அதிகமாகும்.
• மூன்று வயதுடைய சிறுவன் பெரியோர்களிடம் வாதம் செய்வான்.
• வயிற்றுப்பிழைப்புக்கான கலைகளையே மக்கள் கற்றுக்கொள்வார்கள்.
• உயர்ந்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் நாட்டியம்,கச்சேரி,பாட்டு,நிழற்படம் என்ற மோகத்தால் கெட்டுப்போவார்கள்.
• உலகம் எங்கும் ஆண்களின் எண்ணிக்கை குறையும்;ஏழு பெண்களுக்கு ஒரு ஆண் என்ற விகிதம் ஏற்படும்.
• பதிவிரதைகள் அபூர்வமாக இருப்பார்கள்.
• விதவை மறுமணம் செய்து கொள்வாள்.
• பெண்கள் கற்பை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
• அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்
• பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்
• பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்
• தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.
• தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.
• குலத்தொழில்கள் மாறுபடும்.
• சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.
• சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும்.
• பசுவின் கருவில் மனிதன் பிறப்பான்.அவன் மக்கள் இடையே ஆண்டவனைப் பற்றி விவாதம் செய்வான்.
• வேதங்களின் பொருள் மாற்றமடையும்.
• வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.
• திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.
• அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும். ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.
• வேற்று மதத்தின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.
• புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.
• எங்கும்,எதிலும் பொறாமையும்,பொச்சரிப்பும் அதிகமாகும்.
• மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
• ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
• சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
• கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
• போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
• கண்பார்வை மிகையாக கெடும்
• எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும்.
• உணவுப்பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
• மக்களின் ஆயுட்காலம் குறைவாக இருக்கும்.
• செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.
• முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.
• மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.
• இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.
• இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.
• இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.
• நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.
• வெள்ளைக் காக்கைகள் காணப்படும்;அவைகள் ஊருக்கு வெளியே பறந்து சென்று அழும்.
• நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.
• மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.
• இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
• இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
• நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.
• கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப் பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.
• புண்ணிய க்ஷேத்திரம்,புண்ணிய நதி,புண்ணிய தீர்த்தம் ஆகிய இடங்களில் இருக்கும் வியாபாரிகளும், பூஜை செய்பவர்களும், ஊழியர்களும் ஆண்டவனுக்குப் பயந்து நடக்காமல் அந்த ஸ்ரீஸ்ரீசர்வேசரன் பெயரால் ஏமாற்றியும்,வஞ்சித்தும் பிழைப்பார்கள்;அதனால் பக்தி குறைந்து நாத்திகம் பேசுவதற்கும், கேட்பதற்கும் ஆவல் ஏற்படும்.
ஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள் தான் 14000 ஓலைச்சுவடிகளில் நான்கு லட்சம் தத்துவங்களை எழுதியுள்ளார்.அவைகளை பனகானபள்ளி என்ற ஊரில் புதைத்து வைத்துள்ளார்.அவ்விடத்தில் ஒரு புளியமரம் வளர்ந்தது.அம்மரம் இரண்டு கிளைகளாக பிரிந்து சுமார் அறுபது அடி உயரமும்,நான்கு அடி அகலமும் வளர்ந்துள்ளது.அந்த மரம் இன்றும் அவ்விடத்தில் இருக்கிறது.அதில் காய்க்கும் காய்கள் உள்ளே கருப்பாக இருக்கும்.அதை யாரும் சாப்பிடுவது இல்லை;இம்மரத்தில் பூக்கள் ஒரே நாளில் தோன்றி ஒரே நாளில் உதிர்ந்துவிடும்.இந்த சிறப்பான நிகழ்ச்சியை இன்றும் காணலாம்.
அதுசரி,கடைசியில் இந்த கலியுகம் எப்போது முடிவுக்கு வரும்.அப்போது இந்த உலகம் அழியுமா?இல்லையா ?!!
(அடுத்த பதிவில் ...........)

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்











அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 19.11.2017 கார்திகை மாதம் (3)ஞாயிற்று கிழமைஅனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி
cell : 8754016236
9843016651
9842078733

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி விஸ்வாமித்திரமகரிஷி கோவில்

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி
விஸ்வாமித்திரமகரிஷி கோவில்
















விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.

இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!

ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 19.11.2017 கார்திகை  மாதம் (3)ஞாயிற்று  கிழமை  அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி
cell : 8754016236
9843016651
9842078733

Thursday, 16 November 2017

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம்














உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 
17.11.2017 வெள்ளி கிழமை கார்த்திகை மாதம் (01)
அன்று நடைபெறுகிறது.அமாவாசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜிதிரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். 

செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது 

விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்

இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார்


மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். 

அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.

இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Thursday, 9 November 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திரஅபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திரஅபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 11-11-2017 ஐப்பசி (25) மாதம் சனி கிழமை  ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்


ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்













அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்
11-11-2017 சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள் மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா
தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537

ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட கோவிலில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு
11-11-2017 ஐப்பசி (25) மாதம் சனி கிழமைஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,அன்னதர்மம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Monday, 6 November 2017

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்

குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய்விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு


அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு




அதிக பலன் தரும் பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு




பஞ்சமி திதியில் சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.

அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்தேவிக்கு பழங்களை படைக்கலாம்.
அன்பே .. என்..அருந்துணையே ..!
உன்னை வந்தடைந்த எந்தனுக்கு ..
வந்த வினை அகற்றி மகா...பாக்கியம் தந்தருள்வாய்!
தந்தையும் தாயும் நீயே..! தற்காக்கும் ரட்சகி நீயே.... !!!
என்று மனமுருகி வழிபட வேண்டும்..!!!
நித்ய நிரந்தர பரிபூர்ண வாழ்வு பெறுவோம் ..!!!

சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்

சனிக்கிரக தோஷம் நீக்கும்
ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்



















இன்றைய காலகட்டத்தில் இருந்து சுமார் 35 வருடங்களுக்கு முன்னால் திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்.

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிழமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்கள். இந்த காலத்தில்
குடுமியான்மலை குகையின் முன்னால் சுவாமிகள் ஒரு அத்திமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மலைக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள வீரப்பட்டி என்ற ஊரில் உள்ள அடர்ந்த காட்டில் அதிசயிக்கத்தக்க தன்மைகொண்ட மரம் ஒன்று இடிவிழுந்து கருகி பட்டு போயிருப்பதைத் தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். மகிமை பொருந்திய அம்மரத்தின் பெயர் தான்றிமரம். இந்த மரத்திற்கும் நளமகாராஜனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை இங்குக் காண்போம்.


நளன் எல்லாவற்றையும் சனி தோஷத்தால் இழந்து சமையல்காரனாகவும், தேரோட்டியாகவும் வந்து தேரோட்டி சென்ற பொழுது ராஜாவின் அங்கவஸ்திரமான மேலாடை கீழே விழுந்து விட்டது. அதனை தேடி எடுக்க ரதத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நளமகராஜன் தான்றி மரத்தின் மீது வஸ்திரம் இருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு கிளைகள் செல்வதைக் கண்டார். அதில் ஏறி வஸ்திரம் எடுக்கும்முன்பு மரத்தை ஒருமுறை சுற்றி வணங்கிவிட்டு அதில் ஏறினார். மரத்தில் நான்கு கிளைகளுக்கும் கிளைக்கு ஒன்றாக நான்கு கனிகள் இருந்தன. அதை பறித்து சாப்பிட்டபொழுது ஒவ்வொன்றும் ஒருவித சுவையாக இருந்தது. அவைகளை நளன் பறித்து சாப்பிட்ட பொழுது இனிப்பு சுவையை உடைய கனியைச் சாப்பிட்ட பொழுது அங்கு ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அசரீரியாக சனிபகவான் நளனிடத்தில் இந்த தலத்திற்கு வந்து தான்றி மரத்தை நீ வணங்கியதால் நான் உன்னிடம் விட்டு விலகிக் கொள்கிறேன். நீ குடும்பமாக வந்து திருநள்ளாறில் என்னை வழிபடு என்று அருளினார்.இவ்வளவு சிறப்புப்பெற்ற நளமகாராஜனுக்கே சனி விலக செய்த இந்தத் தான்றி மரத்தின் சிறப்பை உலக மக்கள் அறியும்படி அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சுவாமிகள் எண்ணினார்.
சுவாமிகள் குடுமியான மலையை விட்டு நீங்கி தான்றி வனத்தை அடைந்தார். அங்கு பட்டுப்போயிருந்த தான்றி மரத்தை அடைந்தார்கள். இந்த மரத்தின் தூரில் உள்ள பொந்தினுள்ளே சுவாமிகள் அமர்ந்து தியானத்தைத் தொடங்கி விட்டார்கள். சுவாமியின் ஆணைப்படி அன்பர்கள் வெளியே அடிமரத்தையும் அவர் அமர்ந்துள்ள பொந்தையும் சுற்றி களிமண்ணைக் கொண்டு முழுமையாகப் பூசிவிட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து பட்டுப்போன அந்த மரம் மெல்ல தளிர்க்க தொடங்கியது. புரவி படர்ந்து பூத்துக் குலுங்கியது. இதனைக்கண்ட மக்கள் சுவாமியின் சக்தியைக் கண்டு போற்றி வணங்கினர்.

சுவாமிகள் நடத்திக் காட்டிய அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஆகும். அவற்றை எல்லாம் எழுதினால் இக்கட்டுரை முடியாது. இவற்றில் சிகரம் வைத்தாற்போல் அமைந்த அதிசய செய்தியை மட்டும் இங்கு விவரிக்கின்றேன்.



மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில்சனிக்கிரக தோஷம் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களும் தங்களது வாழ்க்கை துன்பங்களில் விடுதலை அடைய வேண்டும் என்று நல்ல என்னதில் தான் நான் இதில் பதிவு செய்கிறேன்


மேலும் தகவல்கள்களுக்கு

cell :98420 78733 9843016651

Thursday, 2 November 2017

செல்வம்-தைரியம் தரும் அபிஜித் முகூர்த்த வழிபாடு

செல்வம்-தைரியம் தரும் அபிஜித் முகூர்த்த வழிபாடு









கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா? அஸ்வதி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.

ஆனால் முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுபநிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி- வாரம்- நட்சத்திரம்-யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும். ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.

அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.

அபிஜித் உருவம் என்ன? - 27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும்.

இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில் முதல் பகுதி - ஜ, புகழைக் குறிக்கிறது. இரண்டாம் பகுதி- ஜி வெற்றியைக் குறிக்கிறது. மூன்றாம் பகுதி -ஜீ. இறையருளைக் குறிப்பது. 4-ம் பகுதி-ஐ-ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டு விட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும். நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.

இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்- இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.

அதற்கு மறு மாங்கல்ய பூஜை செய்து திருமணப் பதிகம் ஓதி உமை ஒருபாகனை வழிபட்டால் அடுத்து அமையும் திருமணம் நல்லபடியாக நடந்து வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். துணி நீல வண்ணம் முகில் தோன்றியன்ன மணி நீல கண்டனம் உடையாய் மருகல் அகணி நீலவண்டார் குழுவாள் சிவந்தன் அணி நீலஒண்கண் அயர்வாக்கினயே என்று சிவன் முன் கூறுக.

இழந்த பொருள் மீட்க- நிலம், வீடு சொந்தங்கள், இழப்பு நண்பர்கள் எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டால் `எம் நமக் கார்த்த வீர்யாய ஹீம்பட்' என்ற மூல மந்திரத்தை ஒரு வட்டமிட்டு எழுதி தீபம் ஏற்றி

ஓம் கார்த்த வீர்யா போற்றி!
ஓம் இழந்ததை மீட்பாய் போற்றி!
ஓம் பராக்கிரம சாலியே போற்றி!
ஓம் இரக்க குணம் உடையோய் போற்றி!
ஓம் சக்கர வாசனே போற்றி

என்று கூறி வழிபடுக.

அபிஜித் காலத்தில் பார்லி அரிசி கருங்காலிக் குச்சியால் யாக முறை செய்திட பலன் கிடைக்கும்.

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமிதிருவிளக்குபூஜை


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமிதிருவிளக்குபூஜை
 






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்03-11-2017 ஐப்பசி(17) மாத வெள்ளி கிழமை
காலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்
காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236