நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 31 October 2016

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள்

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள்



சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள்

வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.

(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.

பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன ?

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை

கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதை








பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி
கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி
பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று
வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ
சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று
வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப்
போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து
கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா
ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய
சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த
திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம்
மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை
எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர்,
முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம்
இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர்
கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு,
கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில்
அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள்
புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும்
திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள்
மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து
ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான
சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார்.
அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின்
பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி,
சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள்
இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த
வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை
முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல்
புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி
தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள்
யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு
தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும்
கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள்
கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த
சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.
அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும்
இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட
வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம்.
இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம்
போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி.
இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது.
அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில்தொடங்கி,

ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை
நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்
பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை
வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப்
பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்
பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின்

ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம்,
சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும்
வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான்.
அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5
அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய
சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும்
பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி
கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால்
நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப்
பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,
நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,
குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள்
கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்
பட்டுள்ளது.

கந்தசஷ்டி கவசத்தின் வயது 362!


கந்தசஷ்டி கவசத்தின் வயது 362!





சென்னிமலை முருகன் கோயிலில் அரங்கேற்றப்பட்ட கந்தசஷ்டி கவசம், இன்று பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்கு உரிய பாராயண நூலாகத் திகழ்கிறது. இதைப் பாடியவர் பாலதேவராயசுவாமிகள். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நூல். இதைப் பாடுவோரை கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டதால் ‘கந்த சஷ்டி கவசம்’ எனப் பெயர் பெற்றது. கி.பி., 1654ல்பிறந்த இந்நூலின் இன்றைய வயது 362. ‘துதிப்போர்க்கு வல்வினை போம்’ என்று துவங்கும் இந்த பாராயணம், பக்தர்களின் நோய், பயம் தீர்க்கும் மாமந்திர நூலாகும். இக்கவசத்தை மனப்பாடமாக நெஞ்சில் பதிய வைப்போருக்கு செல்வம் பெருகும்.

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி விஸ்வாமித்திரமகரிஷி கோவில்

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி
விஸ்வாமித்திரமகரிஷி கோவில்














விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும்.
 

இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
02.11.2016 ஐப்பசி (17 )மாத புதன் கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி cell : 8754016236
9843016651
9842078733

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம்அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரம்அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
02.11.2016 ஐப்பசி (17 )மாத புதன் கிழமை
 அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
கருப்பசாமி cell : 8754016236
9843016651
9842078733

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும்.


இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால் வழங்கபடுகிறது


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்சூடான பசும் பால் வழங்கபடுகிறது





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திருசெந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி சூராசம்கார திருவிழாவில்
கந்தசஷ்டி விரதம் கடைபிடிக்கும் முருக பக்தர்கள் மற்றும் முருக அடியார்களுக்கும்

31.10.2016 ஐப்பசி15 மாத திங்கள் கிழமை சூடான பசும் பால்

01.11.2016 ஐப்பசி 16 மாத செவ்வாய் கிழமை சூடான பசும் பால்

02.11.2016 ஐப்பசி 17 மாத புதன் கிழமை சூடான பசும் பால்

0311.2016 ஐப்பசி18 மாத வியாழ கிழமை சூடான பசும் பால்

04.11.2016 ஐப்பசி 19 மாத வெள்ளி கிழமை சூடான பசும் பால்

தினமும் மாலை 4 மணிக்கு மேல் வழங்கபடுகிறது. அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ திருசெந்தூர் முருகன் ,ஸ்ரீ வள்ளி ,ஸ்ரீதெய்வானை திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு 
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
மேலும் தகவல்கள்களுக்கு:98428-58236

Friday, 28 October 2016

மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மானாமதுரை சுவாமிஜி - மாதாஜி சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்












தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.!!! .

.என்றும் வாழ்வில் வளங்களை பெற்று மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவோம்...
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி சார்பாக
அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் கிருஷ்ணாங்காரக சதுர்த்ததி தீபாவளி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் கிருஷ்ணாங்காரக சதுர்த்ததி தீபாவளி



மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் 29.10.2016 ஐப்பசி மாதம் சனி கிழமை காலை 9-11மணிக்கு கிருஷ்ணாங்காரக சதுர்த்ததி தீபாவளி பண்டிகை அன்றுஆவரண பூஜை நடைபெறுகிறது
.அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஐப்பசி மாத லட்சுமி குபேர பூஜை

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் ஐப்பசி மாத லட்சுமி குபேர பூஜை

அமாவாசை யாகம் 30.10.2016 
ஞாயிற்று கிழமை ஐப்பசி மாதம் (14)












மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம் மாதம்தோறும் மற்றும் ஐப்பசி மாதம் லட்சுமி குபேர பூஜை நடைபெறுகிறது
உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்

30.10.2016 ஞாயிற்று கிழமை ஐப்பசி மாதம்14 அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Wednesday, 26 October 2016

senthillakshmi.blogspot.in தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

senthillakshmi.blogspot.in தீபாவளி நல்வாழ்த்துக்கள் .

தீபம்’ என்றால் ஒளி விளக்கு













தீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.!!! .

.என்றும் வாழ்வில் வளங்களை பெற்று மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடுவோம்....! நீங்கள் அனைவருக்கும் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்க வளமுடன் 

....senthillakshmi.blogspot.in சார்பாக அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

என்றும் அன்புடன்
senthillakshmi.blogspot.in
திருநெல்வேலி
தமிழ்நாடு
இந்திய
செல் :+918428218718

அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்

அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம்அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம் க்கான பட முடிவு
அதிகாலை ஏற்ற வேண்டிய நட்சத்திர தீபம் க்கான பட முடிவு


நட்சத்திர தீபம் என்பது தீபாவளி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமைத் தினத்தில் இருந்து பவுர்ணமி வரை, அதாவது உத்தான தவாதசிக்குப் பிறகு வரும் பவுர்ணமி வரை தினமும் ஏற்ற வேண்டிய தீபம் ஆகும். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். வீட்டிற்குள் ஏற்றுவது கூடாது.


வீட்டிற்கு வெளியில்தான் ஏற்ற வேண்டும். வெளியில் துளசி பிருந்தாவனம் இருந்தால் பிருந்தாவனத்திற்கு முன்பு ஏற்றலாம். அல்லது திறந்த வெளி முற்றம் அல்லது திண்ணையில் ஏற்றலாம்.

வெளி முற்றம், திண்ணை அல்லது துளசி பிருந்தாவனத்தின் முன்பு போன்ற இடங்கள் எதுவும் சரியாக அமையவில்லை என்றால், நாம் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு ஒரு தட்டிலோ அல்லது பலகையிலோ தீபங்கள் ஏற்றி வெளியில் வைக்கலாம். மாடியிலும் ஏற்றலாம்


விளக்குகள் ஏற்றும் இடத்தை சுத்தம் செய்து தண்ணீர் தெளித்து செம்மண் கோலம் இட்டு அதன் மேல்தான் ஏற்ற வேண்டும். மண் அகல் விளக்குகளே போதும். பித்தளை, வெண்கலம் போன்ற விளக்குகளில்தான் ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

ஆனால் எவர்சில்வர் விளக்கு கூடாது. இந்த தீபங்கள் நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். அதாவது வெளிச்சம் வந்து நட்சத்திரங்கள் மறைவதற்கு முன் ஏற்ற வேண்டும். ஆகையால் அதிகாலை சுமார் 4 மணியிலிருந்து 5 மணிக்குள் ஏற்ற வேண்டும்.

இந்த நட்சத்திர தீபம் என்று கூறப்படும் தீபம் தினமும் 27 ஏற்ற வேண்டும். தீபம் முடியும் பவுர்ணமி அன்றோ அல்லது சாத்யப் பட்ட சந்தர்பத்திலோ தீபதானம் கொடுக்க வேண்டும்.

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"

"தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்"


தீபாவளி என்றால் தீபம் + வளி ... வளி என்றால் வரிசை என்று பொருள். வரிசையாக தீபங்களை வைத்துக் கொண்டாடப்படுகிற பண்டிகையாக இருந்ததால் தீபாவளி என்ற காரணப் பெயராக நிலைத்துவிட்டது!

தீமையை விலக்கும் உண்மையாகவும், இருளை விலக்கும் ஒளியாகவும் இந்த விழாவைச் சொல்கிறோம்.

இந்தியத் தத்துவ மரபில் ஒளி என்பது ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது. எனவே தீபாவளிப் பண்டிகையின் போது ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள் மனிதனுக்கு ஞானத்தைக் கொண்டு வருவதாக ஐதீகம். பஞ்சாங்கங்களில் தீபாவளியன்று காலையில் "சந்திர தரிசனம் " என்றோ சந்திரோதயத்தின் போது கங்கா ஸ்நானம் செய்ய உத்தமம் என்றோ காணப்படும்.

சந்திர தரிசனம்

"சந்திர தரிசனம்" என்றால் என்ன?

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். இது கிழக்கில் அடிவானத்தில் தெரியும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது.

ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆகையால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்காஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

கதை, கதைகள்

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நம் நாட்டில் ஏராளமான கதைகள் உண்டு. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கதையை தங்கள் பேரக் குழந்தைகளுக்கு பாட்டிகள் சொல்லி வருகிறார்கள்.

நம் ஊரில் தாத்தா, பாட்டிகள் சொல்லும் ஜெனரல் கதை 'நரகாசுர வதம்'.

பூமாதேவியோட மகன்தான் நரகாசுரன்! நரகாசுரன் பிரம்மாகிட்ட ஒரு வரம் வாங்கினான். தன்னோட தாயைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் சம்பவிக்கக் கூடாதுன்னு பிரம்மனிடம் வரம் வாங்கியிருந்தான். வரத்தை வாங்கீட்டோம்ங்கிற தைரியத்துல அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களை பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான்.

எப்படிப்பட்ட தொல்லைன்னா ராத்திரியில யாரும் வீட்டுல வெளக்கேத்தக் கூடாதுன்னு உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்சவிளக்குகளை வீட்டில் வைத்தவர்களின் தலைகளைக் கொய்தான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், பகவான் கிருஷ்ணரிடம் முறையிட்டனர். கிருஷ்ணரும் நரகாசுரனை அழிக்கிறேன் என்று சொல்லி மக்களுக்கு ஆறுதல் சொன்னார்.

பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை எதிர்த்துச் சண்டை போடுறதுன்னு முடிவு செஞ்சார் பகவான் கிருஷ்ணர். சண்டை ஆரம்பிச்சுச்சு. போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடையிற நிலைக்கு ஆளாயிட்டார். இதனால் கோபமான சத்தியபாமா, நரகாசுரனோட சண்டை போட்டு அவனை வெட்டி வீழ்த்தினாங்க.

நரகாசுரன் சாகிறதுக்கு முன்னாடி தன் தாயிடம் ஒரு விண்ணப்பம் செஞ்சான். எனக்குச் சாவு வரதுக்கு காரணம், நான் எல்லோரையும் வெளக்கேத்தக் கூடாதுன்னு சொன்னதுதான்! அதனால நான் இறக்கிற இந்த நாளை மக்கள் வெளக்கேத்தி சந்தாஷமாக் கொண்டாட நீங்கதான் ஏற்பாடு செய்யணும்ன்னு கேட்டான்.

பூமாதேவி நரகாசுரனின் கோரிக்கையை நிறைவேத்துறதா ஒத்துக்கிட்டாங்க. அதனால நரகாசுரன் என்ற அந்தக் கொடிய அரக்கன் இறந்து ஒழிந்த அந் நாளை தீபங்கள் ஏற்றி வெளிச்சத் திருவிழாவாக.... தீபத்திருவிழாவாக எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

வட நாட்டில்..

ஆனால், வட நாட்டிலோ, 14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர்சீதா தேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.

குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்.

சீக்கியர்களின் தீபாவளி

சீக்கியர்கள் தீபாவளி கொண்டாடுகிற..... தீபாவளிக்கு சொல்கிற காரணம் வேற. சீக்கிய மதத்தின் ஆறாவது குருவான குரு கோவிந்த சிங் குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சிறையிலிருந்து விடுபட்ட நாளைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுவதாச் சொல்கிறார்கள்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு !

சிங்கப்பூர் செய்த சிறப்பு

துர்கா தேவி மகிசாசுரனை வதம் செய்தழித்த நன்னாளே தீபாவளித் திருநாள் என்று சொல்வதும் உண்டு. சொல்லப்படுகிற அனைத்துக் கதைகளிலும் உள்ள ஒரே ஒற்றுமை விஷ்ணுவின் அவதாரம் இருப்பதுதான் !

தீபாவளிப் பண்டிகையின் பிறப்பிடமான இந்தியாவில் அதற்கு செய்யாத சிறப்பை சிங்கப்பூர் செய்திருக்கிறது. ஆம்! தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பித்துத் தபால் தலை வெளியிட்ட நாடு சிங்கப்பூர் மட்டும்தான்.

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்

தீபாவளியன்று மாமிசம் உண்ணாதீர்கள்




சில வீடுகளில் மறைந்த முன்னோர்களான பிதுர்கள் வருவதாக ஒரு ஐதீகம். நரகத்தில் இடப்பட்டவர்கள் விடுதலை பெற்று வீடுகளுக்கு வருவதாக நம்பி உணவு படைப்பார்கள். இதனால் இத்திருநாளுக்கு நரக சதுர்த்தி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

அசைவம் வேண்டாம் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி பாவச் செயல்களை விடுத்து தர்மசிந்தனையோடு விளங்க தீபாவளி அன்று ஆலயம் சென்று வழிபடுவதும் நல்லது. ஆனால் பலர் தீபாவளியை தவறான முறையில் கொண்டாடி தீபாவளியின் தெய்வத் தன்மையை கெடுத்து விடுகின்றனர்.

சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறி மது அருந்தி மாமிசம் உண்டு மகிழ்வதாக கூறி தாங்களே நரகாசுரர்களாக மாறிவிடுவது கவலைக்குரிய ஒன்றாகும். புனிதமான தீபாவளி திருநாளில் தீய பழக்கங்களை கைவிட்டு தூய உணவை சாப்பிட்டு களித்திருக்க வேண்டும்.

மது அருந்துதல் மாமிசம் உண்ணுதல், பலவித கேளிக்கைகளில் ஈடுபடுதல், அசுர குண இயல்புகளாகும். கடவுளை மறந்து வாழ்பவர்கள் பலவித துன்பங்களை அனுபவிப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டவே நரகாசுரன் வரலாறு சொல்லப்பட்டுள்ளது. எனவே தீபாவளியன்று மது மாமிசம் உண்பதை நிறுத்தி இறை பக்தியோடு வாழ வேண்டும்

தீபாவளி திருநாள் கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம்செய்தால், தரித்திரங்கள் விலகும்

தீபாவளி திருநாள் கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம்செய்தால், தரித்திரங்கள் விலகும்






தீபாவளி திருநாளாள் அன்று நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கும்போது, அந்த தண்ணீரை கங்கை நீராக பாவித்து வணங்கி ஸ்நானம் செய்தால், தரித்திரங்கள் விலகும்.
தீபாவளி திருநாள் அன்று, காலையில் வீட்டு வாசல் பெருக்கி, பசும் சாணம் அல்லது பன்னீரில் மஞ்சள் கலந்த தண்ணீரை வாசலில் தெளித்து, தாமரை பூகோலம் போட வேண்டும்.

வாசற்காலுக்கு மஞ்சள் – குங்குமம் வைக்க வேண்டும். வாசலுக்கு மாயிலை தோரணம் கட்டி, மல்லிகை பூவைத்து அலங்கரிக்க வேண்டும். இதனால் அந்த இல்லத்தினுள் ஸ்ரீலஷ்மிதேவி நுழைவாள் என்கிறது சாஸ்திரம்.
அத்துடன் இந்த தீபாவளி திருநாள் அன்று பித்ருக்கள் (முன்னோர்கள்) நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் கூறுகிறது.


பித்ருக்களின் புகைப்படம் இருந்தால் அவர்களின் புகைப்படத்திற்கு துளசியும், வாசனை மலர்களையும் வைக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவுகளை படைக்க வேண்டும். தீப திருநாள் அன்று, பித்ருகளுக்கும் முக்கியதுவம் இருப்பதால் இதற்கு, “நரக சதுர்த்தி” என்று பெயர்.
தீபாவளி திருநாள் அன்று, மாலையில் பெருமாள் படத்திற்கு துளசி, மல்லிப்பூ வைத்து, ஸ்ரீலஷ்மிதேவிக்கும் தாமரை பூ, மல்லிகைப் பூ வைத்து, வணங்குவது மிக சிறப்பு.

மாலையில் தீபம் ஏற்றிய பிறகு, ஸ்ரீகனகதார ஸ்தோத்திரம் சொல்லலாம். அல்லது ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களை கேசட்டில் ஒலிக்கச் செய்யலாம்.
வடக்கு வாசம் – குபேர வாசம் என்பார்கள். அதனால் வடக்கை நோக்கி குபேர பகவானை வணங்குங்கள்.

இப்படி, முன்னோர்களின் ஆசியும், ஸ்ரீலஷ்மிதேவியின் ஆசியும், இன்னும் பல தெய்வங்களின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும் மகிமை வாய்ந்த அற்புத திருநாள்தான் தீபாவளி திருநாள்.
தீப திருநாளாம் இந்த தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

Tuesday, 25 October 2016

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை




பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.

வேண்டும் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர் !


வேண்டும் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர் !

, திட்டை செல்லும் வழியில் - பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ஊருக்கு செல்லும்போது யாரிடமாவது வழி கேட்டால் , ஆஞ்சநேயர் கோவிலுக்கா , இல்லை சிவன் கோவிலுக்கா என்று கூட கேட்கின்றனர். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ளது நவநீத கிருஷ்ணன் ஆலயம் . இங்கு தான் இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.



இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... கோவிலில் நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.


மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு - நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது... இதுஎன்னிடம் பல பேர் சொன்ன, முற்றிலும் உண்மையான விஷயம்.


தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் விளங்குவதால் , வாய்ப்பு கிடைக்கும்போது - நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.. !


இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு காட்சி தருகின்றார் ராம பக்த காரிய சித்தி அனுமன். மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு இச் சந்நதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள் இனிதே நிறைவேறும். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதையும் காணலாம்.


விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். "ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.


பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்பது நிச்சயம்.


அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம்.
====================================


ஹனுமான் அருள் பெற வேண்டுமென்று எண்ணுபவர்கள் - ஸ்ரீ ராம ஜெயம் - என்று பேப்பரில் - 1008 , அல்லது 10008 , அல்லது 100008 முறை - எழுதி , அதை மாலையாக தொடுத்து , ஆஞ்சநேயருக்கு அணியலாம்.


குழந்தைகளுக்கு நல்ல கல்வி, மதிப்பெண் பெற வேண்டுவோர் , உயர் கல்வி வேண்டுவோர் , IIT - IIM , UPSC என்று எய்ம் பண்ணுபவர்களுக்கு ஸ்ரீ ராம ஜெய மாலை அணிவித்தல் மிக நல்ல பலன்களைத் தரும்.


குழந்தையாக இருக்கும்போது , அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டு , குழந்தை வளர்ந்து எழுத படித்தவுடன் , அதன் கையாலேயே எழுதி நேர்த்திக்கடன் செலுத்துவது நல்லது.

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்



சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதானம்











அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,
ஸ்ரீ அமிர்தவல்லி,ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் ,
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 27.10.2016வியாழன்கிழமை ஐப்பசி  மாதம்(11)உத்திரம்உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236