நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 30 July 2014

ஹயக்ரிவரின் மகிமைகள்

ஹயக்ரிவரின் மகிமைகள் 
1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.
3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.
4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.
5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.
6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.
7. உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது.
8. தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.
9. ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
10. பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.
11. ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.
12. புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.
13. ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.
14. ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.
15. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் மலர் போட்டு வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.
16. ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.
17. ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.
18. ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.
19. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.
20. ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.
21. ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
22. ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது.
23. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.
24. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.
25. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.
26. ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.
27. பிகல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.
28. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.
30. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.
31. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.
32. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.
33. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.
34. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
35. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியரும் ஹயக்ரிவரும் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தரிசனம் தருகின்றனர்..
36. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.
37. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.
38. குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.
39. அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.
40. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.
41. ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.
42. சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.
43. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.
44. ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.
45. ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.
46. ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.
47. ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
48. திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.
49. ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.
50. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.
51. சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறது. இத்தலத்தில் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துவது வழக்கம்.
52. காஞ்சிபுரம் தும்புல் வேதாந்த தேசிகர் கோவில் அருகில் சாளகிராம லட்சுமி ஹயக்ரிவர் தரிசனம் தருகின்றார்.
53. காஞ்சி வேதாந்த தேசிகர் ஆலயத்தில் அவரால் பூஜிக்க பட்ட லட்சுமி ஹயக்ரிவர் தரிசனம் தருகின்றார்

அருள்மிகு குருநாதஸ்வாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா



ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுப்பாளையதில் 
அமைந்துள்ள அருள்மிகு குருநாதஸ்வாமி ஆடிப்பெரு தேர்த்திருவிழா 

23.07.2014 புதன்கிழமை பூச்சாட்டுதல் 
30.07.2014 புதன்கிழமை கொடியேற்றுதல்
06.08.2014 புதன்கிழமை முதல் வன பூஜை
13.08.2014 புதன்கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
16.08.2014 சனி கிழமை ஆடிப்பெரு தேர்த்திருவிழா
20.08.2014 புதன்கிழமை பால் பூஜை

ஆடி மாதம் 28-ந் தேதி (13.08.2014) புதன் மறு வன பூஜை என்னும் ஆடிப்பெரு தேர்த்திருவிழா முதல் நாள் காலை 10.00 மணிக்கு ஸ்வாமிகள் மகமேரு தேர்களில் ஸ்ரீ குருநாதஸ்வாமி வனம் செல்லும் அன்று முழுவதும் ஸ்வாமிகள் வனத்தில் தங்கி விசேடப் பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 11.00 மணிக்குமேல் ஸ்வாமிகள் மகமேரு தேர்களில் புறப்பட்டு விடியற்காலை புதுப்பாளையம் மண்டபத் திருக்கோவில் வந்து சேரும்
14.08.2014,15.08.2014,16.08.2014 ஆகிய மூன்று நாட்களும் புதுப்பாளையம் மஹா மண்டபத்தில் மின் விளக்கு அலங்காரங்களுடனும் , விஷேட மேளக் கச்சேரிகளுடனும் ,சங்கீத உபன்யாசங்களுடனும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும்
பக்தகோடிகள் அனைவரும் திரளாக வருகைதந்து அருள்மிகு குருநாதஸ்வாமி திருவருளை பெற்று பல்லாண்டு வாழ பேரன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்

P.S.சாந்தப்பன்
பரம்பரை அறங்காவலர்
phone:04256 261304
cell :98426 46206

கோரக்கர் சித்தர்



காலம்: கோரக்கர் முனிவர் கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 880 ஆண்டுகள் 11 நாள் ஆகும்.

பெண்ணே ! இன்னும் என்ன கலக்கம். உனக்குத்தான் ஒரு மகன் பிறந்திருப்பானே ! அவன் உன்னைக் கவனிப்பதில்லையோ என்ன ! எதற்காக அழுது கொண்டிருக்கிறாய் ? என்ணார் மச்சேந்திர சித்தர். மச்சேந்திரன் பிறப்பு அலாதியானது. சிவபெருமான் ஒருமுறை பார்வதிதேவிக்கு ஒரு கடற்கரையில் அமர்ந்து மந்திர உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு மீன், ஒரு மந்திரத்தை அப்படியே கிரகித்துக் கொண்டது. அந்த மந்திரம் மனித வடிவாக மீனின் வயிற்றில் உருவாகி வெளிப்பட்டது. மீனுக்கு மச்சம் என்ற பெயரும் உண்டு. அந்தக் குழந்தைக்கு மச்சேந்திரன் எனப் பெயரிட்ட சிவன், நீ சித்தனாகி மக்களுக்கு நலப்பணி செய்வாயாக என அருளினார். சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார். சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன். ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர். என் நிலைமைக்கு தீர்வு எப்படி வரப்போகிறதோ என கலங்குகிறேன், என்றாள் கண்ணீர் சிந்தியபடியே. அம்மா ! அழாதே. இதோ! திருநீறு, இதை சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய், என்று சொல்லி திருநீறை கொடுத்து விட்டு சென்று விட்டார். திருநீறுடன் தெருவில் சென்று கொண்டிருந்தவனை அவளது தோழி ஒருத்தி பார்த்தாள். சாமியார் திருநீறு தந்த விபரத்தை அந்தப்பெண் தோழியிடம் சொன்னாள். தோழி அவளிடம், அடிபைத்தியக்காரி ! யாராவது திருநீறு கொடுத்தால் அதை வாங்கி விடுவதா ! இதை சாப்பிட்டால் நீ மயங்கி விடுவாய். அந்த சாமியார் உன்னை தன் தவறான இச்சைக்கு ஆட்படுத்தி விடுவார். இதை வீசி எறிந்து விடு, என்றாள். தோழி சொன்னதிலும் உண்மையிருக்குமோ என்று பயந்து போன அந்தப் பெண், திருநீறை வீட்டுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டு விட்டாள்.

சில ஆண்டுகள் கடந்தன. அந்தப் பெண், இப்போதும் அழுது கொண்டிருக்க, மச்சேந்திரர் வந்தார். அப்போது தான், மேற்கண்ட கேள்வியைக் கேட்டார். சுவாமி ! என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் கொடுத்த திருநீறை என் தோழி சொன்னதால் பயத்தில் அடுப்பில் போட்டு எரித்து விட்டேன். எனக்கு இன்னும் குழந்தையே பிறக்கவில்லை. என்னை மன்னிக்க வேண்டும் என்றாள். அவளது நிலைமையில் யார் இருந்தாலும் அப்படித் தான் செய்திருப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்ட மச்சேந்திரர் அவளிடம் கோபிக்கவில்லை. சரியம்மா ! உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டுவீர்கள் ? ஒரு வேளை கொட்டியதை அப்புறப்படுத்தி விட்டீர்களா ? என்றார். இல்லை சுவாமிஜி அடுப்புச்சாம்பலை இதோ அந்த எருக்குழியில் (கழிவுகளை உரமாக்கும் தொட்டி போன்ற அமைப்பு) போட்டு வைத்திருக்கிறோம், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் அதை அப்புறப்படுத்துவார்கள். நான் திருநீறை எரித்து சாம்பலும் இத்துடன் கலந்து தான் கிடக்கிறது, என்றாள். மச்சேந்திரர் மகிழ்ந்தார். உனக்கு யோகமிருக்கிறது, என்றவர், எருக்குழியில் அருகே போய், கோரக்கா ! என குரல் கொடுத்தார். என்ன சித்தரே ! என உள்ளிருந்து ஒரு குரல் கேட்டது. எழுந்து வெளியே வா, என்றார் சித்தர். அப்போது, சாம்பலைக் கொடுத்த நாளில் இருந்து, இதுவரை கடந்த பத்தாண்டுகளைக் கடந்த நிலையில், பத்து வயது சிறுவன் ஒருவன், தெய்வ லட்சணங்களுடன் எழுந்து வந்தான். அவனை தாயிடம் ஒப்படைத்தார் மச்சேந்திரர். சுவாமி ! தாங்கள் தந்த திருநீற்றின் மகிமை அறியாமல், வீசி எறிந்தேன். இவனை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன். என அழுதவள், மகனை அரவணைத்துக் கொண்டாள். ஆனால், அந்த சிறுவனோ அன்னையின் பிடியில் இருந்து தன்னை உதறிக்கொண்டு வெளிப்பட்டான். தாயே! என்னை சிறு வயதிலேயே வீசி எறிந்துவிட்டாய். நான் இந்த நாற்றம்பிடித்த குழியில் இவ்வளவு நாளும் கிடந்தேன். என்னை ஒதுக்கிய உன்னோடு இணைந்து வாழ நான் விரும்பவில்லை. மேலும், நான் தவ வாழ்வில் ஈடுபடப்போகிறேன். இருப்பினும், நான் இந்த பூமிக்கு வர காரணமாக இருந்ததற்கும், என் தாய் என்ற முறையிலும் உன்னை வணங்குகிறேன். நான் இந்த சித்தருடன் செல்கிறேன். என்னை வழியனுப்பு, என்றான்.

கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்காமல் போனாலும், மகனின் உறுதியான பேச்சால் ஆடிப்போன அந்தத்தாய், வேறு வழியின்றி கோரக்கருக்கு விடை கொடுத்தாள். அதன்பின் கோரக்கர் நாலா திசைகளிலும் அலைந்தார். அவருக்குள் மனிதனையும் பிற உயிர்களையும் படைக்கும் பிரம்மனின் தொழிலை தானே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சக்தியைப் பெறுவதற்காக அவர் தனது நண்பரான பிரம்ம முனியுடன் இணைந்து ஒரு யாகத்தைத் துவக்கினார். படைக்கும் தொழில் இந்த சித்தர்களின் கைக்கு போய் விட்டால், தங்களுக்கு மதிப்பில்லாமல் போய்விடுமே என அஞ்சிய தேவர்கள் வருணனையும், அக்னியையும் அனுப்பி யாகத்தை அழித்து விட உத்தரவிட்டனர். அவர்களும் வந்து யாகத்தில் தொல்லை செய்ய, யாககுண்டத்தில் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருமாறி வெளிப்பட்டன. அவர்கள் முனிவர்களைச் சுற்றி சுற்றி வந்தனர். அவர்களது அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஆனால், இன்ப வாழ்வை முற்றிலுமாக வெறுத்த கோரக்கரும், பிரம்ம முனியும் கமண்டலத்தை எடுத்து, எங்கள் யாகத்தை அழிக்க நீங்கள் பிறப்பெடுத்தீர்களா ? என்று சொல்லி கமண்டல நீரை தெளிக்க இரண்டு செடிகளாக மாறிவிட்டனர். அவை காயகல்ப செடிகள் எனப்பட்டன. சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றி, சித்தர்களே! நீங்கள் தவவலிமை மிக்கவர்கள் என்றாலும், யாகத்தில் இடையூறு ஏற்பட்டது பற்றி என்னிடம் முறையிடாமல், நீங்களே யாக குண்டத்தில் பிறந்த பெண்களை செடிகளாக மாற்றினீர்கள். சித்தர்களுக்கு கோபம் ஆகாது. கோபம் கொண்டவன் தன் பலத்தை இழப்பான். நீங்களும் உங்கள் தவவலிமையை பெருமளவு இழந்து விட்டீர்கள். இனி இந்த காயகல்பத்தைக் கொண்டு, உலக உயிர்கள் பல காலம் வாழ்வதற்குரிய மருந்துகளைத் தயாரியுங்கள், என்றார். அவர்கள் வருத்தப்பட்டாலும், சிவன் சொன்னவாறே செய்தனர். சதுரகிரி மலைக்கும் அவர்கள் வந்ததாக ஒரு தகவல் உண்டு. பல சித்துவேலைகள் செய்து மக்களுக்கு வாழ்வளித்த கோரக்கர், பேரூரில் சித்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள கோர்காடு என்னும் ஊரில் சித்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.

நூல்:

கோரக்கர் சந்திர ரேகை
கோரக்கர் நமநாசத்திறவுகோல்
கோரக்கர் ரக்ஷமேகலை
கோரக்கர் முத்தாரம்
கோரக்கர் மலைவாக்கம்
கோரக்கர் கற்பம்
கோரக்கர் முத்தி நெறி
கோரக்கர் அட்டகர்மம்
கோரக்கர் சூத்திரம்
கோரக்கர் வசார சூத்திரம்
கோரக்கர் மூலிகை
கோரக்கர் தண்டகம்
கோரக்கர் கற்பசூத்திரம்
கோரக்கர் பிரம்ம ஞானம்

தியானச் செய்யுள்:

சந்திர விழியும் மந்திர மொழியும்
கொண்ட சிவபக்தரே
சாம்பலில் தோன்றிய தவமணியே
விடை தெரியா பாதையில்
வீறாப்பாய் நடைபோடும் எம்மை
கைப்பிடித்து கரை சேர்ப்பாய்
கோரக்க சித்த பெருமானே

பாம்பாட்டி சித்தர்



மருதமலை காட்டிலுள்ள எல்லா பாம்புகளும் ஒன்று கூடின. பாம்புகளின் தலைவன் கவலையுடன் பேசியது. பாம்புகளே! நம்மைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழியையே பொய்யாக்கி விட்டான் அந்த இளைஞன். நம் தோழர்கள் எத்தனை பேர் இறந்திருப்பார்கள். அவனைக் கடிக்க மறைந்திருந்து தாக்கினாலும், எப்படியோ நாம் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து, நம்மைத் தூக்கி வீசி எறிந்து விடுகிறான். புற்றுகளையெல்லாம் இடித்து தள்ளுகிறான். அதனுள் இருக்கும் குஞ்சுகளை நசுக்கி விடுகிறான். நம்மிலுள்ள விஷப்பைகளை எடுத்து மருந்து தயாரிப்பதாகச் சொல்கிறான். இப்போது, நம் பாம்பினத்திற்கே பெருமை தரும் வகையில் ஒளிவீசும் நவரத்தினங்களை உள்ளடக்கிய ரத்தினப் பாம்பைப் பிடிக்க வருகிறான். அது மட்டும் அவனிடம் சிக்கி விட்டால், அவன் இந்த உலகத்திலேயே பெரிய செல்வந்தனாகி விடுவான். மன்னாதி மன்னரெல்லாம் கூட அவனிடம் சரணடைந்து விடுவார்கள், என்றது. எல்லாப்பாம்புகளும் வருத்தப் பட்டதே ஒழிய, அந்த இளைஞனுக்கு எதிராக கருத்துச் சொல்லக்கூடத் தயங்கின. இவை இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே, காலடி ஓசை கேட்டது. தங்கள் உணர்வலைகளால், வருபவன் அந்த இளைஞனே என்பதை உணர்ந்து கொண்ட பாம்புகள் திசைக்கு ஒன்றாக ஓடின. பாம்புகளின் தலைவனும் உயிருக்கு அஞ்சி எங்கோ சென்று மறைந்து கொண்டது. இப்படி பாம்புகளையே கலங்கடித்த அந்த இளைஞனுக்கென பெயர் ஏதும் இல்லை. பாம்புகளைப் பிடித்து மகுடி ஊதி ஆடச்செய்பவன் என்பதால், பாம்பாட்டி என்றே அவனை மருதமலை பகுதி மக்கள் அழைத்தனர். அந்த இளைஞனே பாம்பாட்டி சித்தர் என்ற பெயரில் பிற்காலத்தில் மக்களால் வணங்கப்பட்டார்.

அவர் திருக்கோகர்ணம் என்னும் புண்ணிய தலத்தில் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இந்தத்தலம் கர்நாடக மாநிலத்தின் உட்பகுதியில் இருப்பதாகவும், ஒரு சாரார், அவர் அங்கே பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் புதுக்கோட்டை நகர எல்லையிலுள்ள திருக்கோகர்ணத்தில் பிறந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவர் பிறந்த ஊர் பற்றிய ஆதாரம் சரியாக இல்லை.இவர் இளைஞராக இருந்த காலத்தில் தான் பாம்புகளைப் பிடித்து அவற்றின் நாக ரத்தினங்களை எடுப்பதையும், விஷத்தைக் கொண்டு மருந்து தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இப்போது, நவரத்தின பாம்பு பற்றிக் கேள்விப் பட்டு, அதைப் பிடித்து அதனுள் இருக்கும் ரத்தினங்களை எடுத்து விற்றால், உலகத்தின் முதல் பணக் காரராகி விடலாம் என்ற எண்ணம் கொண்டார்.அவர் தான் இப்போது காட்டிற்குள் வந்து கொண்டிருக்கிறார்.பாம்புகள் மறைந்து ஓடின. அப்போது ஓரிடத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. ஆஹா....நவரத்தின பாம்பு தான் அவ்விடத்தில் மறைந்திருக்கிறது. அது தன் உடலை முழுமையாக மறைக்க முடியாததால், அதன் உடல் ஒளிவீசுகிறது என பாம்பாட்டி சித்தர் நினைத்துக் கொண்டார். ஆனால், ஒளி வெள்ளம் சற்று மங்கி, அவர் முன்னால் ஒரு மனிதர் நின்றார். அவரிடம், மகானே! தாங்கள் யார்? தங்கள் உடல் பொன் போல் பிரகாசிக்கிறதே. ஒருவேளை நான் தேடி வந்த பாம்பாக இருந்த நீங்கள், என்னிடம் சிக்காமல் இருக்க மனித உருவம் கொண்டீர்களோ! என்றவர், அவரது தேஜஸைப் பார்த்து, தன்னையும் அறியாமல் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினார். அந்த மகான் பாம்பாட்டி சித்தரை ஆசிர்வதித்தார். இளைஞனே! நீ இந்த சாதாரண பாம்புகளைப் பிடிப்பதற்காகவா இந்த உலகத்தில் பிறந்தாய். உன் பிறப்பின் ரகசியமே வேறு. நீ தேடி வந்த செல்வத்தின் அளவு பெரியது தான்.

செல்வமே உலகத்தை ஆட்டிவைக்கும் கருவி என நீ நினைக்கிறாய். எல்லா மக்களுமே இப்படி நினைப்பதால், நீயும் நினைப்பது இயற்கையே. எனவே, சாதாரண செல்வத்தை தேடி இங்கு வந்திருக்கிறாய், என்றவரை இடைமறித்த பாம்பாட்டி சித்தர், சுவாமி! தாங்கள் யார்? தங்கள் உடலே பொன்போல் மின்னுகிறதே, என்றார்.மகனே! உடலைக்கூட பொன்னாகக் கருதி பார்க்கும் அளவுக்கு, உன் மூளையில் செல்வம் தேடுவதின் தாக்கம் தெரிகிறது. சரி...இந்த உடல் என்றாவது அழியத்தானே போகிறது. அப்போது அது தீயில் கருகியோ, மண்ணில் நைந்தோ உருத்தெரியாமல் போய்விடுமே. அப்போது பொன்னை எங்கே தேடுவாய், என்றார்.அவரது அந்த வார்த்தைகள் இளைஞனின் மனதைத் தொட்டன.சுவாமி! இந்த அரிய உபதேசத்தை செய்த தாங்கள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளும் தகுதியுடையவனா? என பாம்பாட்டியார் பணிவுடன் கேட்டதும், அவனது மனம் செல்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டது என்பதை வந்தவர் உணர்ந்து கொண்டார்.மகனே! நான் தான் சட்டைமுனி சித்தர். இந்தக் காடுகளில் வசிக்கிறேன். நீ நவரத்தின பாம்பைத் தேடி வந்துள்ளதை நான் அறிவேன். அந்தப்பாம்பு உனக்கு பல லட்சம் கோடி தங்கம் வாங்குமளவு செல்வத்தைத் தரும். அதனால் அதை ஆட்டி வைக்க வந்துள்ளாய். ஆனால், அதையும் விட உயர்ந்த பாம்பு ஒன்று இருக்கிறது தெரியுமா? என்றதும், பாம்பாட்டியாரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.அப்படியா? அப்படியும் ஒரு பாம்பினம் இருக்கிறதா? அப்படியானால், எனக்கு இந்த சாதாரண நவரத்தின பாம்பு வேண்டாம். தாங்கள் சொல்லும், அந்த உயரிய இனமே வேண்டும், என்ற பாம்பாட்டியாரிடம், அப்படியா! அந்தப் பாம்பு உன் உடலுக்குள்ளேயே இருக்கிறது, என்றார் சட்டைமுனி.இதைக் கேட்டு ஆ...வென மலைத்து விட்டார் பாம்பாட்டியார்.

சுவாமி! தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. மனிதர்களின் உடலுக்குள் எப்படி பாம்பு இருக்கும்? பாம்பாட்டியார் சந்தேகம் எழுப்பினார். சட்டைமுனி அவரிடம், மகனே! உன்னுள் மட்டுமல்ல. உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனிடமும் இந்தப்பாம்பு இருக்கிறது. அதன் பெயர் குண்டலினி. அந்த பாம்பை நீ ஆட்டுவித்தால் போதும். உன்னிலும் உயர்ந்தவர் யாரும் இருக்க முடியாது. அதை மட்டும் நீ அடக்கிவிட்டால், மாபெரும் சித்தனாகி விடுவாய். சித்தர்களுக்கு உலகப்பொருள்கள் மீது ஆசை வருவதில்லை. அவர்களால் தங்கத்தையே உருவாக்க முடியும். ஆனால், அதைத் தாங்கள் பயன்படுத்தாமல், உலக நன்மைக்காக பயன் படுத்துவர். அப்படிப்பட்ட மனப் பக்குவத்தை தருவதே குண்டலினி. உலகத்தில் உள்ள எல்லாருமே பணத்தைத் தேடி ஓடுகிறார்கள். ஆனால், நிஜமான செல்வம் உன் உடலுக்குள் இருக்கிறது. அதைத் தேடு, என்றார். பாம்பாட்டியார் அவரது உபதேசத்தை ஏற்றார். சுவாமி! தாங்கள் சொல்வது இப்போது எனக்கு விளங்குகிறது. செல்வத்தை அடைந்து தனியொரு மனிதனாக ஆட்சிசெய்வதில் இல்லாத சந்தோஷம், தாங்கள் சொல்லும் குண்டலினியை எழுப்புவதன் மூலம் கிடைக்குமென நம்புகிறேன். தங்கள் உபதேசப்படி நடப்பேன், என்று சொல்லி அவர் காலில் விழுந்தார். செல்வமே பெரிதெனக் கருதிய ஒருவன், தன் கருத்தை ஏற்று, உடனடியாக தன்னைச் சரணடைந்ததை எண்ணி மகிழ்ச்சியடைந்த சட்டைமுனி, மகனே! உடலுக்குள் குண்டலினி என்னும் சக்தி பாம்பு போல தொங்கிக் கொண்டிருக்கும். இந்தப் பாம்பு எப்போதுமே தூங்கிக் கொண்டிருக்கும். இது தூங்குவதால் தான் மனிதன் உலக வாழ்க்கை நிரந்தரமென எண்ணி, அறியாமையில் மூழ்கித்தவிக்கிறான். இதை தட்டி எழுப்ப வேண்டுமானால், தெய்வசிந்தனை எந்நேரமும் இருக்க வேண்டும். அப்போது அந்தப் பாம்பு விழிக்கும். நமது ஜீவனுக்குள் அது அடைக்கலமாகும். அப்போது, உனக்குள் இருக்கும் ஆத்மா இது தான் உலகம், இது தான் வாழ்க்கை என்பதைப் புரிந்துகொள்ளும். அப்போது, நீ தேடியலையும் பொருள் தரும் ஆனந்தத்தை விட பேரானந்தம் உனக்கு கிடைக்கும், என்றார்.

பாம்பாட்டியார் சட்டைமுனிவரின் பேச்சைக் கேட்டு பரவசமடைந்தார்.சித்தரே! இப்படி ஒரு அரிய உபதேசத்தை வழங்கி, என்னை அறிவீனத்தில் இருந்து மீட்ட தாங்களே எனது குருநாதர். தாங்கள் சொன்ன சொல்படி நடப்பேன். இது உறுதி, என்றார் பாம்பாட்டியார். அவரது மனஉறுதி கண்டு மகிழ்ந்த சட்டை முனிவர் பாம்பாட்டியாருக்கு அருள்வழங்கி, மகனே! நீ பாம்பாட்டியே பிழைத்ததால், அந்த பெயரே உனக்கு நிலைத்து விட்டது. இனி உலகமக்கள் உன்னை பாம்பாட்டி சித்தர் என வழங்குவர் எனச்சொல்லி விட்டு மறைந்து விட்டார். இதன்பிறகு, அஷ்டமாசித்திகள் எனப்படும் கூடுவிட்டு கூடு பாய்தல் உள்ளிட்ட அனைத்து சித்து வேலைகளும் பாம்பாட்டி சித்தருக்கு கைவந்த கலையாயின. குண்டலினியை தட்டி எழுப்பும் வகையில் கடும் தியானங்களிலும் அவர் ஈடுபட்டார். பின்னர், தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் ரசவாதம் எனப்படும் வித்தை அவருக்கு தெரிந்தது. நவரத்தினக் கற்களைத் தேடி ஓடிய காலம் போய், அவர் வெறும் கற்களைத் தொட்டாலும் அவை நவரத்தினங்களாக மாறின. அதனால் தனக்கு என்ன பயன் என்று, அவற்றை வீசிவிட்டார். வானத்தில் நடந்து செல்லும் பயிற்சியும் அவருக்கு கிடைத்து விட்டது. ஒருமுறை அவர் வானத்தில் நடந்து சென்ற போது, ஒரு அரண்மனையைக் கண்டார். அந்நாட்டு அரசன் இறந்து விட்டதால், மகாராணி தன் கணவனின் உடலில் விழுந்து புரண்டு அழுது கொண்டிருந்தாள். ஊரே சோகமயமாக இருந்தது. அப்போது வானத்தில் இருந்தபடியே இறந்துபோன ஒரு பாம்பை மன்னனை சுற்றிநின்ற மக்களின் கூட்டத்தில் வீசினார் பாம்பாட்டி சித்தர். கூட்டத்தினர் அலறி அடித்து ஓடினர். ஆனால், ராணி மட்டும் மிரளவில்லை. அவள் அங்கேயே நின்றாள். அப்போது, பாம்பாட்டி சித்தர் தன்னை மறையச்செய்து, மன்னனின் உடலுக்குள் புகுந்தார். இறந்து கிடந்த மன்னன் உருவில் சித்தர் எழுந்து நின்றார். ராணிக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரை அணைத்துக் கொள்வதற்காக வேகமாக அவரருகில் சென்றாள். மன்னன், வடிவிலுள்ள சித்தரோ, அவளைத் தடுத்து விட்டார். அவர் இறந்து கிடந்த பாம்பின் அருகில் சென்று, பாம்பே எழுந்திரு, என்றார். அது உயிர் பெற்றது. மகிழ்ச்சியுடன் தனது கூட்டம் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தது. அதை தடுத்து நிறுத்திய மன்னர், பாம்பே! நீ வாழும் காலத்தில் உன் கூட்டம் எந்தளவுக்கு உன்னை அவமானம் செய்தது? ஆனாலும், உயிர் பெற்றதும் உன் கூட்டத்தை தேடி ஓடுகிறாயே! இந்த உலக வாழ்வில் அப்படி என்ன சுகத்தைக் கண்டுவிட்டாய்? என்றார்.

இதைக் கண்ட ராணியும், அமைச்சர்களும் இறந்தவர் உயிர் பிழைத்து எழுந்ததால் இவருக்கு சித்தசுவாதீனம் இல்லாமல் போய்விட்டதோ! அதே நேரம், இறந்த பாம்பை இவர் உயிர் பிழைக்க வைத்தது எப்படி? என்று குழம்பிப் போனார்கள். அரசிக்கு ஒரு சந்தேகம்.மன்னர் சாகும் முன்பு, நான் ஒருத்தி போதாதென்று, ஏராளமான பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிற்றின்பத்திலேயே மூழ்கிக்கிடப்பார். பணம் வரி கிஸ்தி என எந்நேரமும் செல்வத்தின் நினைப்பிலேயே கிடப்பார். இப்போதோ, ஓடுகிற பாம்பை நிறுத்தி, உலக வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என தத்துவம் பேசுகிறார். இதென்ன குழப்பம், என அதிர்ந்து நின்றாள். இதற்கு பதிலளிக்கும் வகையில் சித்தர் பாட ஆரம்பித்தார். நாடும், வீடும், மனைவியும், உறவும் உயிர் போன பிறகு கூட வராது என்ற பொருளில் அவரது பாடல் அமைந்தது. நான் மனதில் நினைத்தது இவருக்கு எப்படி தெரிந்தது? நம் எண்ணத்திற்கு தக்க பதில் போல் இந்தப் பாடல் இருக்கிறதே என அவள் மேலும் அதிர்ச்சியடைந்தாள். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு, மன்னரே! தாங்கள் எப்படி உயிர் பெற்றீர்கள்? இங்கு நான் காண்பது கனவா, நிஜமா? எனக்கேட்டாள். அதற்கு மேலும் அங்குள்ள மக்களை குழப்ப விரும்பாத சித்தர், மகாராணி! உன் கணவனின் உடலில் புகுந்திருக்கும் என் பெயர் பாம்பாட்டி சித்தர். நீ மன்னனைப் பிரிந்த துயரத்தில் அழுதாய். இறப்பு சாதாரண மான ஒன்று. அது நிச்சயம் எனத் தெரிந்த பிறகும், இறந்தவர்களுக்காக அழக்கூடாது என்பதை உனக்கும், உலகுக்கும் அறிவிக்கவே இந்த விளையாடலைச் செய்தேன், என்றார்.சித்தரின் உண்மை மொழிகளால் ராணி மனம் தேறினாள்.பின்னர் மன்னனின் உடலில் இருந்து விடுபட்டார் சித்தர். மன் னனின் உடல் மீண்டும் சாய்ந்தது.இப்படி உலகுக்கு அளப்பரிய தத்துவத்தை தந்த பாம்பாட்டி சித்தர், மருதமலையில் சித்தியடைந்தார் என்றும், விருத்தாச்சலம் அருகிலுள்ள பழமலையில் என்று சிலரும், துவாரகையில் அவர் சித்தியடைந்ததாகவும் கூறுகிறார்கள். மூன்று தலங்களிலும் இவரது நினைவிடம் உள்ளது.

நூல்:

பாம்பாட்டிச் சித்தர் பாடல்
சித்தரா ரூடம்
சில வைத்திய நூல்கள்

தியானச் செய்யுள்:

அடவி வாழ் பாம்புகளை ஆட்டுவித்து! பின்
உடலில் வாழ் பாம்புதனை எழுப்புவித்து
கூடுவிட்டு கூடுபாய்ந்து ஞானமுத்து கொடுத்தவரே! குவலயத்தின் காவலரே!
ஆதிசேஷனின் அருள் கண்டு
ஆதிசிவன் மகன் வரம் கொண்டு
ஜாதி மதங்கள் பேதம் இன்றி
காக்கும் சித்தரே! காக்க! காக்க!

காலம்: பாம்பாட்டி முனிவர் கார்த்திகை மாதம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 123 ஆண்டுகள் 4 நாள் ஆகும்.

தச மஹா-வித்யைகளின் பத்து விதமான சக்திகள்:




தச மஹாவித்யா என்னும் பத்துவிதமான சக்திகள் இந்த பிரபஞ்சத்தின் அனைத்து விதமான செயலுக்கும் மூலகாரணமாக விளங்குகிறது. ஓர் மஹாசக்தி தனது நிலையில் பத்துவிதமாக பிரிவடைவதை அறியும் நுட்பமே தசமஹாவித்யா. நமது ஆணவம் இந்த சக்திகளை உணராத வண்ணம் நம்மை இருளில் வைத்திருக்கிறது. ஆணவம் அற்ற நிலையில் மஹாசக்திகளை முழுமையாக உணரமுடியும். நடைமுறையில் தசமஹாவித்யா தவறான பாதையில் கையாளப்படுகிறது. செல்வம் – அஷ்டமாசித்திகள் என கீழ்த்தரமான நோக்கத்திற்காக இந்த மஹாவித்யா பயன்படுத்தப்படுகிறது.

ஓர் ஊரில் மாபெரும் ஞானி ஒருவர் வாழ்ந்து வந்தார். தினமும் அவரிடம் பலர் அறிவுரை கேட்டு வருவதுண்டு. சமீபகாலமாக ஊரில் அடிக்கடி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதால் இதன் காரணம் என்ன என மக்கள் ஞானியிடம் கேட்டனர். அகந்தை அதிகமாவதால் செல்வம் அதிகமாக சேர்த்து மக்கள் மாயையில் மூழ்கி இருப்பதை உணர்ந்த ஞானி, அவர்களுக்கு எளியமுறையில் விளக்கம் கொடுக்க எண்ணினார். எல்லா செயலுக்கும் “நானே” காரணம் என்றார். ‘நான்’ என்ற எண்ணமே ஆணவத்தின் அடையாளம் என பொருள்பட ஞானி கூறினாலும், மக்கள் அறியாமையில் இருந்ததால் திருட்டு அனைத்துக்கும் தான் மட்டுமே காரணம் என கூறுவதாக எண்ணி அவரை அடித்து கொன்றனர். இந்த கதையை கூற காரணம் தசமஹாவித்யா சரியான முறையில் போதிக்கப்பட்டாலும், அதை பயன்படுத்துபவர்கள் அற்ப விஷயத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மாபெரும் சக்தி வாய்ந்த யானையை மனிதன் கட்டுப்படுத்தி, கடைவீதியில் சில்லறை காசு வாங்கவைக்கும் சமூகத்தில் மஹாவித்யாவை கற்று மேல்நிலையில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமே.

தசமஹாவித்யா அனைத்து இடங்களிலும் இருப்பதாக கூறினேன். அதுசுவை [நவரசம்], உணர்வுகள், நவகிரகங்கள் என அனைத்து பொருளின் இயங்கு சக்தியாக இருப்பது மஹாசக்தியே. அத்தகைய மஹாசக்திகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளலாம்.

1. மாதங்கி:
**********************
என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள்.

2. புவனேஸ்வரி:
**************************
மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தரவதனமும் நிறைந்தவள்.

3. பகுளாமுகி
*************************:
பயங்கர ஆயுதங்களை தாங்கியவள். முட்கள் நிறைந்த கதாயுதம் இவளின் பிரதான ஆயுதம். எதிர்பாராத நிலையில் அசுரர்களை கதாயுதத்தால் தாக்குபவள். வேகமான பயணத்தால் எதிரிகளின் குழப்பத்திற்கு காரணமானவள்.

4. திரிபுரசுந்தரி:
***************************
பதினாறு வயது கன்னிகையின் உருவைகொண்டவள். புதிய சிந்தனை மற்றும் புதிய கோட்பாடுகளின் மொத்த உருவம், என்றும் பிறருக்கு நுட்பமான ஞானத்தை வழங்குபவள். சிவனின் உடலில் அமர்ந்து தியானிக்கும் உருவம் இவளுடையது.

5. தாரா:
*************
நட்சத்திரத்தை போல ஒளி வீசுபவள். தனது மஹாசக்தியை உள்ளே வைத்து எளிமையாக காட்சியளிப்பவள்.

6. கமலாத்மிகா:
***********************
தாமரையில் உறைபவள் என பொருள். அனைத்து சக்தியின் கிரியா சக்தியாக திகழ்பவள். அழகும், செல்வமும் நிறைந்தவள். இவளின் வடிவத்தையே லஷ்மியாக வணங்குகிறோம். வெள்ளை யானை சூழவலம் வரும் நாயகி கமலாத்மிகா.

7. காளி:
***************
கரிய நீல நிறம் கொண்டவள். வேதத்தில் அதர்வன வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் நகர்பவள். சிவனை பாதத்திற்கு அடியில் வைத்திருக்கும் குரூரமான அமைப்பு காளியின் உருவம்.

8. சின்னமஸ்தா:
****************************
தலையற்ற உடலுடையவள். தலை கழுத்து பகுதியில் இருந்து வரும் ரத்தத்தை தனது கைகளில் உள்ள பாத்திரத்தில் பிடிக்கும் உருவம் இவளுடையது. ஆண் – பெண் உடலின் மேல் நர்த்தனம் ஆடும் நிலையில் காட்சி அளிப்பவள்.

9. தூமாவதி:
***********************
கைகளில் முறத்துடன் விதவை கோலத்தில் அமர்ந்திருப்பவள். வெள்ளை நிற ஆடையும், நகைகள் இல்லாத விரிந்த தலையும்கொண்டவள். கையில் புகை கக்கும் பாத்திரம் உடையவள். கொடுமையான மற்றும் தொற்றும் நோய்களுக்கு காரணமானவள்.

10. திரிபுரபைரவி:
***************************
பைரவி என எல்லோராலும் அழைக்கப்படுபவள். கழுதையின் மேல் அமர்ந்து குரூரமாக காட்சியளிப்பவள். கருநீல நிறத்தில் உடலும், பெரிய போர்வாள் கைகளிலும் கொண்டவள். முகத்தில் அழகும் உடலில் ஆவேசமும் கொண்ட வித்யாசமான உருவ அமைப்பு கொண்டவள்.

தசமஹாவித்யாவில் ஒவ்வொரு சக்தியின் உருவங்கள் விளக்கப்பட்டாலும் நிதர்சனத்தில் இவர்களுக்கு உரு கிடையாது. அவர்களின் செயல்களை விளக்கவே உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு சக்திக்கு உரியதாக கொண்டாடப்படுகிறது. மாஹளய அமாவாசை துவங்கி பத்து நாட்களுக்கு விஜயதசமி வரை இவர்களே வணங்கப் படுகிறார்கள். வசந்த காலத்தை வரவேற்க நவராத்திரி கொண்டாட படுவதாகசொல்வதுண்டு. உண்மையில் இந்த மஹாசக்திகள் நம்முள் தியானிக்கபட்டால் ஒவ்வொரு நாளும் வசந்தகாலம் தானே?

உலகில் அனைத்து உருவாக்கத்திலும் மஹாசக்தியின் அம்சம் உண்டு. மஹாசக்தியை யந்திரத்தில் ஆவாகனம் செய்து மந்திரத்தால் அழைத்தால் அவர்களின் சக்தியை வெளிப்படுத்துவாள். மஹாசக்தியின் வரிசை அமைவுகள் தந்த்ரசாஸ்திரத்தில் ஒன்றுபோலவும் தேவிமஹாத்மியத்தில் வேறு அமைப்பிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு நவகிரகத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

மஹாசக்திகளின் தொடர்புகொண்ட விஷயங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. வேதசாஸ்திரம், தந்த்ரசாஸ்திரம், தேவிபாகவதம், தேவிமஹாத்மியம் மற்றும் லலிதாசஹஸ்ரநாமம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டதன் எளியவடிவமே இது.

தசாவதாரம் கூட இவளின் சக்தியாலேயே இயங்குகிறது. மஹாவித்யை குறிக்கும் பொருட்களை இது போல வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இந்த நவதானியங்களில் அரிசி, கோதுமை தவிர கடலை மற்றும் பருப்பு வகைகளிலும் ஒன்பது வகை உண்டு. நவராத்திரி நாளில் ஒன்பது வித்யா வாசினிகளை வழிபட்டு அவர்களுக்கு உண்டான தானியத்தை படையாலாக உட்கொள்ளும் வழக்கம் நம் சம்பிரதாயத்தில் ஒன்று. நவகன்னிகைகளை அழைத்து அவர்களின் மேல் மஹாசக்திகளை ஆவாஹனம் செய்து வழிபடும் முறையும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தசமஹாவித்யாவிற்கு தனித்தனி கோவில்கள் உண்டு. ஆதிசங்கராச்சாரியார் இதைதொடர்புகொண்டு புதிப்பித்தார் என்பது வரலாறு. ஹரித்துவாருக்கு அருகில் ‘கன்கல்’ என்ற ஊரில் இருக்கும் ஆலயத்தில் தசமஹாவித்யா அனைத்தும் யந்திரங்களுடனும் மந்திரங்களுடனும் ஸ்தாபிக்கபட்டுள்ளது.

லலிதா சகஸ்ரநாமத்தில் ஸ்ரீசக்ரத்தில் அமைந்திருக்கும் மஹாசக்தியையும், மற்ற தசமஹாவித்யாக்களையும் தெரிந்து கொள்ளலாம். முறையான தீட்சை மூலம் தசமஹாவித்யா உபாசனை செய்யும் பொழுது நமது பிறவியின் நோக்கம் கைகூடும். தீட்சை பெறும் வரையில் வெளியே மஹாசக்திகளை தேடாமல் உங்கள் உள்ளே பத்து வித சக்திகளாக இருப்பவளை தியானியுங்கள். அவளே குருவாக வந்து தீட்சை தருவாள்

வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்




  1. வேள்வி, யாகம், ஹோமம், ஓமம் என பல்வேறு பெயர்களில் வழங்கப்படும் சடங்கு முறைகளைப் பற்றியே இனிவரும் நாட்களில் பார்க்க இருக்கிறோம். நெருப்பினை ஏற்றி அதில் பலவேறு பொருட்களை இட்டு எரிப்பதன் மூலமாக இறைவனை வழிபடும் முறையே ஹோமம் என பொதுமைப் படுத்திவிடலாம். இந்து மரபியலில் வேதகாலத்தில் இருந்தே இத்தகைய சடங்கு முறைகள் வழக்கில் இருந்து வருகிறது. வேறு சில மதங்களிலும் இத்தகைய வழிபாட்டு முறைகள் வழக்கத்தில் இருக்கின்றன.

    ஆதி மனிதனின் வாழ்வில் சூரிய வழிபாடு பிரதானமாய் இருந்தது.நெருப்பின் பயன்பாடு அறியப்பட்ட பின்னர், நெருப்பினை சக்திவாய்ந்த சூரிய கடவுளின் பிரதிநிதியாக கருதினர். இதன் தொடர்ச்சியாக தங்களை காத்துக் கொள்ளவும், தங்களது வேண்டுகோள்களை சூரிய கடவுளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் ஊடகமாய் நெருப்பு விளங்கத் துவங்கியது. இந்த புள்ளியில்தான் வேள்வி அல்லது ஹோமங்களின் ஆரம்பப் புள்ளி இருந்திருக்க வேண்டும். கடவுளுக்கு அர்பணிப்பதாக கருதி பொருட்கள், விலங்குகள் சமயங்களில் மனிதர்களைக் கூட யாகத்தில் இட்டு வழி பட்டிருக்கின்றனர்.

    யஜுர்வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. இந்த யாகங்களை குறிப்பிட்ட இனத்தவரே செய்திட வேண்டும் என்கிற மரபு காலம் காலமாய் இருந்து வருகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும், ஒவ்வொரு தேவதைக்கும் என தனித் தனியான யாக முறைகள் கூறப் பட்டிருக்கிறது. யாகத்தில் இட வேண்டிய பொருட்களும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மாறுபடும். யாகங்களின் மூலம் அந்தந்த தெய்வங்களை திருப்தி செய்து அதன் மூலம் நற் பலன்களைப் பெறலாம்; என்கிற கருதுகோளே காலம் காலமாய் இந்த பழக்கம் தழைத்திருக்க காரணம்.

    மத நம்பிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும் இந்த யாகங்களின் பின்னனியில் அறிவியல் வாதங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதை நிறுவும் வகையில் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த ஆய்வுகளின் தெளிவுகள் அறிக்கைகளாய் பகிரப் பட்டிருக்கின்றன.

    சித்தர் பாடல்களில் ஹோமம்!

    தமிழர்கள் வாழ்வில் ஹோமச் சடங்குகள் எப்போது துவங்கியது என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை.ஆனால் அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் இந்த சடங்குகள் குறித்த தகவல்களை அளித்திருக்கின்றனர்.நான் பார்த்த வரையில் அகத்தியர்,திருமூலர், போகர், அகத்தியர், புலிப்பாணி, கருவூரார், கோரக்கர் போன்ற பல சித்தர்களின் பாடல்களில் ஹோமம் பற்றிய தகவல்கள் விரவிக் கிடக்கிறது.

    அகத்தியர் தனத் “ஏமதத்துவம்” என்கிற நூலில் ஹோமம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

    பாரப்பா பார்தனிலே யிருக்குமட்டும்
    பத்திகொண்டு டிசைந்துநீ ஓமஞ்செய்தால்
    நேரப்பா பருதிமதி யுள்ளம் மட்டும்
    நீமகனே பூரணமாய் வாழ்வாயப்பா
    காரப்பா நித்தியகர்ம அனுஷ்டானங்கள்
    கருணையடன் செய்துகொண்டு கனிவாய்மைந்தா
    தேரப்பா சிறப்புடனே ஓமஞ்செய்து
    சிவசிவா விசயோகத் திறத்தைகாணே.

    - அகத்தியர் -

    ஹோமம் செய்வதனால் உண்டாகும் சிறப்புகளை அகத்தியர் இந்த பாடலில் கூறியிருக்கிறார். திருமூலர் அருளிய திருமந்திரத்தில் பல இடங்களில் ஹோமம் பற்றிய வரிகள் காணக் கிடைக்கின்றன. அவை பின்வருமாறு...

    "ஓமத்திலேயும் ஒருத்தி பொருந்தினாள்"

    "வின்னா விளம்பிரை மேவிய குண்டத்துச்"

    "நாடறிமண்டலம் நலவிக் நலவிக் குண்டத்தும்"

    "நின்ற குண்டம் நிலையாறு கோணமாய்"

    பழந் தமிழகத்தில் அறுவடை முடிந்த பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களை கொளுத்தி விடும் பழக்கம் இருந்தது.இன்றும் கூட சில இடங்களில் இதனைக் காணலாம்.இதன் பின்னர் மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருந்தனவா என்பது தெரியவில்லை.

    ஆனால் அறிவியல் ரீதியாக இத்தகைய செயல்கள் நிலத்திற்குத் தேவையான சத்துக்களை தரும்.இதை இங்கே குறிப்பிட காரணம் வரப்புகள் சூழ்ந்த வயல்வெளியில் வளர்த்த தீயின் சுருங்கிய அல்லது சுருக்கிய வடிவமே ஹோம குண்டங்களாயிருக்க வேண்டும். ஏனெனில் ஹோமங்கள் பூமியின் மீதுதான் வளர்த்திட வேண்டுமெனவும் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த ஹோம குண்டங்களின் வடிவங்கள் என்ன?, அவற்றின் வகைகள் யாவை?, என்பதைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

    ஹோமங்களின் அறிவியல்!

    திருமூலர், யாகம்
    ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். சித்தர்களின் யாக முறைகளைப் பற்றி பகிர்வதற்கு முன்னர், நானறிந்த சில அறிவியல் கூறுகளை இன்று பகிர விரும்புகிறேன்.

    ஒலியும், ஒளியும் இல்லாத ஒரு வாழ்க்கையை நாம் நினைத்தே பார்க்கமுடியாது. இந்த இரண்டு சக்திகள் நமது வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கண்ணிழந்த, செவித்திறனற்ற நமது சகோதர, சகோதரிகளை பார்க்கும் போது எவரும் உணரமுடியும்.

    ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

    அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.

    யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான Haffkine Institute for Training, Research and Testing நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.

    ஹோமங்களின் அறிவியல் தொடர்ச்சி...

    சித்தர்கள் அருளிய ஹோமங்கள் பற்றிய தொடர் திசை மாறுவதாய் கருதிட வேண்டாம். பழமையின் அற்புதங்களை முன் வைக்கும் போது அவை தொடர்பான சமகால தெளிவுகளை இனையாக பகிர்ந்து கொள்வதனால் வாசிப்பனுபவம் மேலும் சுவாரசியமாகும் அல்லவா!. ஹோமங்கள் பொதுவாக ஏதேனும் ஒருவகையான எதிர்பார்ப்புகளை முன்வைத்தே செய்யப் படுகிறது. எண்ணிய எண்ணங்கள் ஈடேறிட, நோய் நொடிகளில் இருந்து காத்துக் கொள்ள, சமூக நன்மைகளை முன்வைத்து என எதிர்பார்ப்புகளே முன்னிலை வகிக்கின்றன.

    ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.

    ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன, எதிர்காலத்தில் மேலும் பல புதிய தகவல்கள் நமக்கு வந்து சேரலாம் அவை ஆச்சர்யமாகவுமிருக்கலாம்.

    இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே சில்வர் அயோடைட் அல்லது உலர் பனிக் கட்டிகள் தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். வருணயாகம் என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர். இது தொடர்பாக பகிர்ந்து கொள்ள நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன். தனியே மின் நூல் ஒன்று எழுதிடும் உத்தேசமிருக்கிறது. அப்போது இந்த ஹோமங்களின் அறிவியலை விரிவாக பகிர முயற்சிக்கிறேன்.

    ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?

    யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை.பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.

    பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது. இன்றைய பதிவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி நமது சித்தர் பெருமக்கள் கூறியுள்ளதை மட்டும் பார்ப்போம்.

    அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.

    "நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
    நலமான அரசினொடு மாவின் சுப்பி
    சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
    சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
    ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
    அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
    சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
    கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
    நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
    நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"

    - புலிப்பாணிச் சித்தர் -

    "கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
    கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
    வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
    வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
    நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
    நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
    மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
    தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"

    - அகத்தியர் -

    இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை சமித்துக்கள் என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...

    ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும். இது தொடர்பான முந்தைய பதிவை இந்த இணைப்பில் காணலாம்.

    மேலும் இவற்றுடன், பசுப்பால், பசுத்தயிர், பசுநெய், கோசலம், மற்றும் கோமயம் பயன் படுத்தப்படுமாம். மேலும் இதில் அனைத்துவகை மூலிகை தாவரங்களும் பயன்படுத்தலாமாம். அத்துடன் தானிய வகைகளும், அனனம், எலுமிச்சை, பருத்தி ஆடைகள் மற்றும் நூல்களும் மேலும் பல பொருட்களும் வழிப்பாட்டின் தேவையைப் பொறுத்துப் பயன் படுத்தபடுகிறது என்கின்றனர்.

    ஹோம குண்டத்தின் அமைப்பும்,வகைகளும்..

    சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை இந்த வாரத்தின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த பதிவுகளில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் இந்த ஹோமகுண்டங்களைப் பற்றி பார்ப்போம். சித்தர்கள் ஹோம குண்டங்களை ஆறு வகையாக கூறியிருக்கின்றனர். ஒவ்வொரு தேவைக்கேற்ப இந்த ஹோமகுண்டங்களின் அமைப்புகள் மாறுபடுமாம்.

    ஹோமங்கள் பூமியின் மீதுதான் செய்யப் படவேண்டும் என்கின்றனர். இந்த ஹோம கிரிகைகளில் வழிபடுபவர் கிழக்கு முகமாய் பார்த்து உட்காரவேண்டுமாம். மிக முக்கியமாக இந்த ஹோமங்களை எவரும் செய்திடலாம் என்கின்றனர். குறிப்பிட்ட இனத்தவர் மட்டுமே செய்திட வேண்டும் என்கிற இந்து மரபியலை சித்தர்கள் முழுமையாக நிராகரிக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

    ஹோம குண்டங்களின் ஐந்து படிநிலைகளை கொண்டதாக அமைத்திட வேண்டுமாம். நடுவில் வட்டவடிவமான குழி அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். ஹோம குண்டத்தின் மகத்துவத்தினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

    "தானான தீபமடா மந்திரபீடம்
    சராசரத்துக் குயிரான மந்திரபீடம்
    வானான அண்டமடா மந்திரபீடம்
    மகத்தான ரவிமதியு மந்திரபீடம்
    சிவாயகுரு பீடமென்ற பீடங்கள்போடே"

    - அகத்தியர் -

    ஹோம குண்டங்களை ஆறு வகையாக பார்த்தோம் அவையாவன...

    அகத்தியர் அருளிய “கிரக தோஷம்” போக்கும் ஹோமம்!

    நண்பர்களே, இனிவரும் நாட்களில் சித்தர்கள் அருளிய ஹோமங்கள் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். ஹோமங்கள் என்றால் ஏதோ ஒரு சிலரால் மட்டுமே செய்விக்க கூடியது என்பதாகவே நம்மில் பலர் அறிந்து வைத்திருக்கிறோம். அந்த கருத்துக்களை சித்தர் பெருமக்கள் உடைத்தெறிகிறார்கள்.

    குருவருளை வேண்டி வணங்கி இந்த ஹோமங்களை யாரும் செய்திடலாம். தேவையற்ற செலவு பிடிக்கும் காரியம் எதுவும் இதில் இல்லை. அந்த வகையில் முதலாவதாக நவகிரகங்களின் பாதிப்புகளில் இருந்து நீங்க உதவும் ஹோமத்தைப் பற்றி பார்ப்போம்.

    சோதிட இயலில் நவகிரகங்களின் பாதிப்புக்கு உள்ளாகாத சாதகர்களே இருக்க முடியாது. இந்த பாதிப்புகளின் தீவிரத்தை தணித்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு பரிகாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. பெரிய பொருட் செலவில் செய்யும் பரிகாரங்கள் மட்டுமே தேவையான பலனைத் தரும் என்பது மாதிரியான ஒரு கருத்தோட்டம் நம்மில் பரவியிருக்கிறது. செலவு பிடிக்காததும் அதே நேரத்தில் நல்ல பலனைத் தரக்கூடியதுமான ஒரு ஹோம முறையினை அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

    "காணவே இன்னமொரு கருமானங்கேள்
    கருணைவளர் புலத்தியனே கருணை கூர்ந்து
    பேணவே ஓமகுண்டம் நன்றாய்ச் செய்து
    பிலமான அக்கினியை லரசால்செய்து
    பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
    புத்தியுடன் எள்ப்பொரிகொண் டோமாமம்பண்ணு
    தோணவே கிரகமதில் நின்றதோஷந்
    சுத்தமுட நீக்குமடா நித்தம்பாரே"

    - அகத்தியர் -

    என்கோண வடிவத்தில் ஹோம குண்டம் ஒன்றினை அமைத்து, அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்குமுகமாய் அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் குருவினையும், குலதெய்வத்தினையும் வணங்கிய, அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீ வளர்க்க வேண்டும் என்கிறார். இந்த தீயை வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரத்தை சொல்லியவாறே தீயை உருவாக்க வேண்டும் என்கிறார். அக்கினியின் மூல மந்திரம் பின் வருமாறு.

    "ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

    தீயை நன்கு வளர்த்த பின்னர் அடுத்த கட்டமாக “புவனை”யின் மந்திரமாகிய "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா" என்ற மந்திரத்த்தை உச்சரித்தவாறே எள் பொரியினை நெருப்பில் இட வேண்டும் என்கிறார். இந்த மந்திரத்தை 1008 தட்வை உச்சரித்து எள் பொரியினை நெருப்பில் போட நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகும் என்கிறார் அகத்தியர்.

    அகத்தியர் அருளிய “புத்திரபாக்கியம்” தரும் ஹோமம்!

    திருமணமான பலர் தங்களுக்கு புத்திரபாக்கியம் தள்ளிப் போவதைக் கண்டு மனம் வெதும்பி வாடுவதைப் பார்த்திருக்கிறோம். இன்றைய நவீன அலோபதி மருத்துவம் எத்தனையோ உயரங்கள் வளர்ந்து இக் குறையினை நிவர்த்திக்க நல்லபல தீர்வுகளைத் தந்திருக்கிறது.

    எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு காலகட்டத்தில், குழந்தையின்மைக்கான தீர்வாக அகத்தியர் இந்த ஹோமத்தினை முன்வைக்கிறார். இதன் சாத்திய, அசாத்தியங்கள் ஆய்விற்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை.

    இந்த ஹோமத்திற்கு நாற்கோண வடிவத்திலான ஹோம குண்டத்தினை பயன் படுத்திட வேண்டும். ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திடல் வேண்டும். கணவணும், மனைவியும் ஒருங்கே அமர்ந்து செய்தால் இன்னமும் சிறப்பு. இந்த ஹோமத்தினை எவ்வாறு செய்திட வேண்டுமென்பதை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

    சித்ததான சித்துகளுக் குறுதியான
    சிவசிவா புவனைதிரு மந்திரந்தன்னை
    பத்தாசை வைத்து மன துறுதிகொண்டு
    பாலுடன் சந்தனமொடு தேனுங்கூட்டி
    சுத்தான மனம்நிறுத்தி யேகமாகி
    கருத்தாய்நீயும் சிறப்புட னோமம்பண்ண
    வத்தாத பாக்கியசந் தான பாக்கியம்
    வளருமடா ஒன்றுபத்தாய் மனங்கண்டாயே.

    - அகத்தியர் -

    கருங்காலி மரம் மற்றும் நாவல் மரத்தின் குச்சிகளைக் கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூலமந்திரத்தை உச்சரித்து வரவேண்டும்.

    அக்கினியின் மூலமந்திரம்...

    "ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா"

    தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின் மந்திரத்தைச் சொல்லி பசும்பால், சந்தனம், தேன் கலந்த கலவையினை நெருப்பில் விடவேண்டும் என்கிறார். இந்த முறையில் புவனையின் மந்திரத்தை 1008 தடவைகள் சொல்லிட வேண்டுமாம். புவனையின் மூல மந்திரம்...

    "ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா"

    இப்படி செய்தால் புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்கிறார் அகத்தியர். ஹோமம் செய்த மறு மாதமே கரு உண்டாகி பத்தாம் மாதத்தில் மகப்பேறு சித்திக்குமெனவும் கூறுகிறார். இந்த ஹோமத்தினை யாரும் இதை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர். சுவாரசியமான தகவல்தானே...

    நீண்ட ஆயுளைத் தரும் ஹோமம்!

    மனிதராய் பிறந்த அனைவருமே நல்ல ஆரோக்கியத்துடனும்,நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகின்றோம். நல்ல உடல் ஆரோக்கியமே நீண்ட நாள் உயிர்வாழ்வதற்கு ஆதாரமாய் அமைகிறது. இதற்கெனவே வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுகிறோம் என்பதும் உண்மை. உடலைப் பேண பல்வேறு வழி வகைகள் இருந்தாலும், அகத்தியர் ஹோமம் செய்வதன் மூலம் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்கிறார். அதுவும் முன்னூறு ஆண்டுகள் வாழ முடியுமென்கிறார்.

    ஆச்சர்யமாய் இருக்கிறதல்லவா?, நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா என்று கேலிபேசி ஒதுக்குவதை விட இதன் பின்னால் ஏதேனும் சூட்சுமங்கள் பொதிந்திருக்கிறதா என ஆராயலாம். அகத்தியர் இந்த ஹோம முறை பற்றி பின்வருமாறு விளக்குகிறார்.

    "ஆமப்பா நெற்பொரியுந் தேனுங்கூட்டி
    தானென்ற டோமமது அன்பாய்ச்செய்தால்
    நாமப்பா சொல்லுகிறோ முன்னூருண்டு
    நன்மையுடன் தானிருப்பாய் நயனம்பாரு
    தாமப்பா நயனமென்ற தீபந்தன்னை
    சதாகாலம் பூரணமாய்த் தானேகண்டால்
    வாமப்பால் மந்திரகலை வாமபோதம்
    வாமம்வளர் புவனையைநீ மகிழ்ந்துகாணே"

    - அகத்தியர் -

    முக்கோணம் வடிவத்தை உடைய ஓம குண்டம் ஒன்றினை அமைத்து அதன் முன்னர் ஹோமம் செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து கொள்ள வேண்டுமாம். ஹோம குண்டத்தில் ஆலமரக் குச்சிகளைக் கொண்டு அக்கினி வளர்க்க வேண்டும் என்கிறார். அக்கினி வளர்க்கும் போது அக்கினிக்குறிய மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

    நன்கு வளர்ந்த தீயில் நெற்பொரியும், தேனும் கலந்து போட வேண்டும் என்கிறார். அப்போது புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டுமென்கிறார். இப்படி 1008 முறைகள் செய்திட வேண்டுமாம்.

    இந்த ஹோமத்தை ஒரு மண்டல காலத்திற்குள் நூறுமுறை செய்யும் ஒருவருக்கு நீண்ட ஆயுளும், மகா சக்தியான புவனையின் தரிசனமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். மேலும் நம்பிக்கை உள்ள எவரும் இந்த ஹோமத்தை வீட்டில் செய்யலாம் என்கிறார் அகத்தியர்.

    யாரிந்த புவனை?,அகத்தியர் அருளிய புவனையின் அருளைப் பெறும் ஹோமம்!

    இன்று வெளியாவதாக இருந்த “செல்வம் தரும் ஹோமம்” பற்றிய பதிவு நாளை வெளியாகும். இன்றைய பதிவில் புவனை அன்னையின் அருளைப் பெறும் ஹோமம் பற்றி பார்ப்போம்.

    முந்தைய மூன்று பதிவுகளிலும் புவனையின் மூல மந்திரங்களை ஹோமங்களின் போது கூறிடவேண்டுமென குறிப்பிட்டிருந்தேன். ஹோமத்தில் பயன்படுத்தப் படும் பொருட்கள் மட்டும்தான் மாறுகின்றன, ஆனால் மந்திரம் ஒன்றுதான். இத்தனை மகத்துவமான மந்திரத்துக்கு உரிய தெய்வமான புவனை பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தந்து அவளின் அருளைப் பெறும் முறையினை பகிர்ந்து கொள்கிறேன்.

    சித்தர்கள் வணங்கிய தெய்வங்களின் ஒன்றான வாலைத் தெய்வத்தினைப் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். வாலை என்பவள் குழந்தை வடிவத்தையுடைய தெய்வம். வாலையை பூசிக்காத சித்தர்களே இல்லையெனலாம். வாலை தெய்வத்தைப் பற்றி மேலதிக விவரம் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

    புவனை அம்மன் என்பவள் இந்த புவனமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியின் அம்சமாவாள். வாலை தெய்வம் குழந்தையின் அம்சமென்றால், புவனை அவளின் தாய் அம்சம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். இந்த தெய்வம் உருவமில்லா உருவத்திற்கு சொந்தமானவள். இந்த அன்னையின் அனுசரனையின்றி ஏதும் நடவாது என்பதும் சித்தர்களின் கூற்று. இந்த மகா சக்தியின் அருளினை ஒரு ஹோமம் மூலம் பெற முடியுமானால் எத்தனை ஆச்சர்யமான விஷயம்.

    அத்தகைய ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

    "பாரப்பா யின்னமொரு பாகங்கேளு
    பத்தியுடன் கோதுமைகொண் டோமம்பண்ண
    வீரப்பா கொண்டதொரு அபமிருத்து
    மெஞ்ஞான பூரணத்தால் விலகும்பாரே
    நேரப்பா அபமிருத்து விலகித்தானால்
    நினைத்தபடி முடிக்கவண்ணம் நிசந்தான்பாரு
    காரப்பா கருணைவளறர் புவனைதன்னால்
    கண்காண இன்னம்வெகு கடாட்சமே"

    - அகத்தியர் -

    இந்த ஹோமத்திற்கு வட்ட வடிவ ஹோம குண்டத்தை பயன் படுத்த வேண்டுமாம். ஹோமத்தினை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்திட வேண்டும். ஹோம குண்டத்தில் அரச மரத்தின் குச்சிகளை இட்டு தீ வளர்க்க வேண்டும், அப்படி தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை கூறிட வேண்டும் என்கிறார்.

    தீ வளர்ந்த பின்னர் அதில் கோதுமையை போட்டுக் கொண்டே புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தினை சொல்லிட வேண்டும் என்கிறார். இப்படி 1008 தடவை மந்திரம் சொல்லி கோதுமையைப் போட புவனை அம்மனின் அருள் கிட்டும் என்கிறார். அத்துடன் நன்மைகள் பலவும் சித்திக்கும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை வீட்டில் எவரும் செய்யலாம் என்கிறார்.

    நம்பிக்கையுள்ளவர்கள் குருவினை வணங்கி முயற்சித்து பலன் பெற்றிடலாம்.

    பாவம் போக்கி, செல்வம் தரும் ஹோமம்!

    பாவச் செயல்களை செய்வதன் மூலமாய் ஒருவன் தன் வாழ்க்கையில் சம்பாதிக்கும் பாவங்களின் வகைகளை அகத்தியர் பின்வருமாறு பட்டியலிடுகிறார்.

    "காணவே யின்னமொரு சூட்சங்கேளு
    கருணையுட னுலகத்தோ டிருக்கும்போது
    பூணவே கண்ணாரக் கண்டபாவம்
    புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
    பேணவே காதாரக் கேட்டபாவம்
    பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
    ஊணவே பலவுயிரைக் கொன்ற பாவம்
    ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே"

    - அகத்தியர் -

    வாழும் காலத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் பாவச் செயல்களை பார்ப்பதால் உண்டாகும் பாவம், தவறென அறிந்தும் செய்கின்ற செயல்களினால் உண்டாகும் பாவம், தீயவைகளை கேட்பதனால் உண்டாகும் பாவம், பெண்களுக்கும், பசுக்களுக்கும் கொடுமை செய்வதால் ஏற்படும் பாவம், உணவிற்காக பிற உயிர்களை கொல்வதால் உண்டாகும் பாவம் என பாவத்தின் வகைகளை பட்டியலிடுகிறார். இப்படி நாம் சேர்த்த கோடிக் கணக்கான பாவங்களை நீங்கிட வழியொன்று இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

    அதென்ன வழி... அதனை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.

    "ஒழியாத பாவமெல்லா மொழியமைந்தா
    உனக்குறுதி சொல்லுகிறே னுண்மையாக
    வழியாக ஓமகுண்டம் நன்றாய்ச்செய்து
    சுழிவாக ஆலரசு சமுத்துதன்னால்
    சுத்தமுட னக்கினியை வளர்த்துமைந்தா
    தெளிவாகச் சொல்லுகிறேன் நன்றாயக்கேளு
    மார்க்கமுடன் புவனையுட மந்திரந்தன்னால்
    சிவசிவா நவதானியங்கொண் டோமஞ்செய்யே"

    - அகத்தியர் -

    மேலே சொன்ன பாவங்கள் எல்லாம் தீர்ந்திட, ஐங்கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் ஆலமரம், மற்றும் அரசமரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்க்கும் போது அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தைச் சொல்லி வளர்த்திட வேண்உம்

    தீ நன்கு வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு நவதானியங்களை தீயில் இட வேண்டும். இந்த முறையில் 1008 தட்வை மந்திரம் சொல்லி நவதானியத்தை போட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

    "நீசெய்யடா சிறந்தஓமமது தீர்க்கமாக
    தீராத பாவமெல்லாந் தீருந்தீரும்
    மெய்யடா பிரமையொடு சகலரோகம்
    விட்டுவிடும் யெக்கியஓ மங்கள்செய்தால்
    மய்யமென்ற புருவநடு உச்சிமீதில்
    மகத்தான கற்பூர தீபந்தன்னால்
    அய்யனே உனதுடைய சமூகங்கண்டால்
    அனுதினமுஞ் செல்வபதி யாவான்பாரே"

    - அகத்தியர் -

    இப்படி இந்த ஹோமத்தினை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர தீராத பாவமெல்லாம் தீருமாம், அத்துடன் மனக்குழப்பமும் சகல நோய்களும் தீருமாம். இப்படி மூன்று நாளும் சிறப்பாக செய்து முடித்தால் ஹோமம் செய்தவனின் புருவ மத்தியில் ஒரு ஒளி தென்படுமாம். அந்த ஒளியைத் தரிசித்தால் அவன் எப்போதும் செல்வ சிம்மானாக வாழ்வான் என்கிறார் அகத்தியர்.

    300 வயதுவரை வாழவைக்கும் ஹோமம்?

    நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று. இருந்தாலும் சித்தர் பெருமக்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக நமக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. எப்படி அத்தனை காலம் வாழ்ந்தார்கள் என்கிற உபாயங்களும் நமக்கு சித்தர்களின் பாடல்களில் கிடைத்திருக்கிறது.

    ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயது வரை வாழலாம் என்கிறார் அகத்தியர். இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். வாருங்கள் அகத்தியரின் மொழியில் அந்த ஹோமம் பற்றிய தகவலைப் பார்ப்போம்.

    "அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
    அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
    தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
    சிறப்பான ஓமமது தீர்க்கமாக
    வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
    மகத்தான பிரமமய மாவாய்பாரு
    இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
    என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே"

    - அகத்தியர் -

    அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டுமாம். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டுமாம்.

    தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும் என்கிறார். இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர்.

    இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

    அகத்தியர் அருளிய நோய் தீர்க்கும் ஹோமம்!

    நோய் தீர்க்கும் ஹோம முறை ஒன்றினை அகத்தியர் அருளியிருக்கிறார். எந்த மாதிரியான நோய்களுக்கு இந்த ஹோமம் பயன் தரும் என்கிற தகவல் பாடலில்இல்லை. எனினும் பொதுவான தேக ஆரோக்கியம் வேண்டுவோர் செய்து பயனடைந்திடலாம் என கருதுகிறேன். இந்த ஹோமம் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

    "பாரப்பா யின்னுமொரு சூட்சுமந்தான்
    பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
    பேணவே ஓமகுண்டம் சிறப்பாய்ச் செய்து
    நலமான அக்கினியை லரசால்செய்து
    பூணவே புவனையுட மந்திரந்தன்னால்
    புத்தியுடன் பலாசுகொண் டோமாமம்பண்ணு
    வீரப்பாயு ன்னைபிடித்த நோய்களோடு
    வெகுநூறு பிணிகளெல்லாம் விலகுந்தானே"

    - அகத்தியர் -

    அறு கோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து அதில் அரச மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்க்க வேண்டும். வழமை போல அக்கினியின் மூல மந்திரமான “ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்க்க வேண்டும் என்கிறார்.

    நன்கு வளர்ந்த தீயில் புவனையின் மூல மந்திரமான “ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா” என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பலாசு மரத்தின் குச்சிகளை போட வேண்டும் என்கிறார். இந்த பலாசு மரத்திற்கு புரசு என்ற வேறொரு பெயரும் உள்ளது. இப்படி ஆயிரத்தி எட்டுத் தடவைகள் மந்திரம் சொல்லி பலாசுக் குச்சிகளைப் போடவேண்டும் என்கிறார்.

    இப்படி செய்வதன் மூலம் இந்த ஹோமத்தை செய்தவரை பீடித்திருக்கும் நோய் விலகுவதுடன் எதிர்காலத்தில் பல வகையான நோய்களும் அண்டாது என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தை எவரும் செய்து பலனடையலாம்.

    ஹோமம் - நிறைவாய் சில விளக்கங்கள்!

    அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இதுகாரும் அகத்தியர் அருளிய சில அரிய ஹோம முறைகளைப் பகிர்ந்து கொண்டேன். தொடரின் சுவாரசியம் கருதி இன்றுடன் ஹோமங்கள் பற்றிய பதிவுகளை நிறைவு செய்கிறேன். கடந்த பதின்மூன்று பதிவுகளின் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக நண்பர்கள் சிலர் கேட்டிருந்த விளக்கங்களுக்கு என்னாலான தெளிவுகளை இன்றைய பதிவின் வாயிலாக பகிர்ந்து கொள்கிறேன்.

    இந்து மரபியலில் ஹோமங்கள் ஒரு குறிப்பிட்ட உயர் பிரிவினரால் மட்டுமே நடத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக அவர்களே ஹோமங்களைச் செய்து பலனை வழங்கி வந்தனர். இதனை சித்தர் மரபியல் உடைத்தெறிகிறது. அவசியமும், ஆர்வமும் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்கின்றனர். இடைத் தரகர்கள் இல்லாத ஒரு நிலையினை சித்தரியல் வலியுறுத்துகிறது.

    இந்த கருத்தியலின் இன்னொரு அம்சத்தினையும் நாம் அவதானிக்க வேண்டும். சித்தர்கள் தங்களின் தெளிவுகளை தங்களின் சீடர்களின் பயன்பாட்டுக்கெனவே பாடல்களாய் அருளியிருக்கின்றனர்.இந்த ஹோம முறைகளும் கூட சீடர்களின் நலன் விரும்பியே அருளப் பட்டிருக்கின்றன.எனவே பிறர் நலம் கருதி நாம் ஹோமம் செய்வதைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. எனவே இயன்றவரையில் நம்முடைய தேவைகளுக்கு நாமே ஹோமம் செய்து கொள்வது சிறப்பு.

    ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும் என கருதுகிறேன். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டுமாம். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.

    ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப் படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப் படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டுமாம்.ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.

    என் வரையில் ஹோமங்கள் என்பவற்றை ஒருவகையான அறிவியல் நிகழ்வாகவே கருதுகிறேன். இவற்றின் பின்னால் பொதிந்திருக்கும் நுட்பங்களை தேடுவதன் மூலம் பல அரிய உண்மைகள் நமக்குப் புலப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன

கட்டு மந்திரம்



நாம் பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம் பல்வேறு தொழில்களைச் செய்கிறோம் பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்

நாம் செல்கின்ற இடங்களிலே நம்மைச் சுற்றி தீய சக்திகள் நம்மைத் தாக்கக் கூடியநிலை இருக்கலாம் பிறரிடம் உள்ள சத்தி கூட நம்மை பாதிப்படையச் செல்லக் கூடிய நிலை உருவாகலாம் நம்மை பாதிப்பு அடையச் செய்யக் கூடிய எந்த விதமான எதிர்மறை சக்திகளும் முரண்பட்ட சக்திகளும் நம்மைத் தாக்காமல் இருக்க இருப்பதற்காக பயன் படுத்துவது தான் கட்டு மந்திரம்

நம்மை பிடிக்காதவர்கள் நம்முடைய விரோதிகள் நம்மை அழிப்பதற்காக பயன்படுத்தும் ஏவல் பில்லி சூன்யம் போன்றவைகளும் பேய் பிசாசுகளும் நம்மை அணுகி நம்மை பாதிப்பு அடையச் செய்யாமல் இருப்பதற்காகவும் பயன் படுத்துவது தான் இந்த கட்டு மந்திரம்

மந்திரம் தினமும் உச்சாடணம் செய்பவர்கள் தனக்கு விருப்பப்பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்பவர்கள் கட்டு மந்திரத்தை செய்த பிறகே தனக்கு விருப்பப் பட்ட தெய்வத்தின் மந்திரத்தை உச்சாடணம் செய்ய வேண்டும்

ஏனென்றால் எந்த மந்திரத்தை நாம் உச்சாடணம் செய்தாலும் மந்திரத்தை உச்சாடணம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆத்மா விரிவடைகிறது ஆத்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்கிறது மந்திரத்தை உச்சாடணம் செய்து விட்டு முடித்தவுடன் ஆத்மா சுருங்கி தன் பழைய நிலையை அடைகிறது

ஆன்மா விரிந்த நிலையில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான சக்திகளுடன் தொடர்பு கொண்டு அதில் உள்ள சாராம்சத்தை எடுத்துக் கொண்டு உடலுக்குள் வருகிறது
அந்த சக்திகளில் உடலுக்கும் உயிருக்கும் துன்பத்தை தரக்கூடிய சக்திகளும் இருப்பதால் அவைகள் உடலையும் உயிரையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டு வந்து விடுகிறது

கட்டு மந்திரத்தை போட்டுக் கொண்டு மந்திரத்தை உச்சாடணம் செய்யும் போது கட்டு மந்திரம் ஒரு வடிகட்டியாகச் செயலபட்டு நம்மை தீயவைகளிலிருந்து உடலையும் உயிரையும் பாதுகாக்கிறது

ஓஸோன் எப்படி இந்த புவியைச் சுற்றி ஒரு கவசம் போல் இருந்து புவியை பாதிக்கக் கூடியவைகளை தடுத்து நிறுத்தி வடிகட்டயாகச் செயல்படுகிறதோ அதே அடிப்படையில் இந்த கட்டு மந்திரமும் செயல்படுகிறது

பல்வேறு கட்டு மந்திரங்கள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் குரு சீடர் பரம்பரையில் வந்த ஒரு கட்டு மந்திரத்தை இப்பொழுது பார்ப்போம்

எந்த உச்சாடணம் செய்தாலும் முதலில் செய்ய வேண்டியது திக்கு கட்டு இரண்டாவதாக செய்ய வேண்டியது உடல்கட்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு
முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்

குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்

பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே

உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)

கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர
கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்

தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்

Tuesday, 29 July 2014

பதஞ்சலி சித்தர்

யோக கலையின் ஆசான் ... பதஞ்சலி சித்தர் 


உலகெங்கும் பிரபலமாகக் பின்பற்றப் படும் யோகக் கலையினைமுறையாக வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி ஆவார். இவர்சித்தர்களுள் ஒருவராகக் கருதப் படுகின்றார்.
பதஞ்சலியின் யோக சூத்திரம் புரிவது கடினம்,ஆனால் இவரது நூலுக்கு சுவாமி விவேகானந்தர் விளக்கவுரை எழுதியுள்ளார்.ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி பயன் பெறலாம்...
இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலேயோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது. இவர் வாழ்ந்ததுதமிழகத்திலுள்ள சிதம்பரம் ஆகும்.
இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷிமண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமானஅத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கியஅனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின்அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின்கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும்.எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும்ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரணசூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்குநேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்றுஉண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவியபணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலிநேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையைபோட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில்கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரணசூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனைநாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டுமகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டானசந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது.
“குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக்கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும்கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்றுகேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா,பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமாசித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்”என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில்திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரியகுருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிடவேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரைவிலகியது.
அடுத்த கணம்.... ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்

கரூரில் மௌனசாமிகள் தரிசனம்



கரூரில் மௌனசாமிகள் தரிசனம் ...

>> தாயுமானவரின் பிரதான குருவாகிய மௌனசாமிகள் கரூரில் லஷ்மிராம் திரையரங்கத்தின் அருகாமையில் வஞ்சியம்மன் கோவில் தெருவில் ...ஜீவ சமாதி கொண்டு அருள்பாலிபவராக உள்ளார் ..தமிழகத்தில் நான்கு இடங்களில் இவரது சமாதி உள்ளது ..
>> நந்தீசர் சித்தரின் மாணவர் சாரமா முனிவர் ஆவார் . திருமூலர் மரபில் வந்தவர் வந்தவர் தான் சாரமா முனிவர் .....கயிலாய மலையிலிருந்து தமது சீட கோடிகளோடு திருச்சி மலைக்குன்றில் ‘”சாரமா முனிவர் மடாலாயம்’’ என்ற பெயரில் விளங்கி வந்தது.
>> மெளன குரு சுவாமிகள் ...தேசிகர் சிவயோகி தருமபுரம் ஆதீனத்தில் உபதேசம் பெற்று, பல புண்ணியத்தலங்களை தரிசித்து இறுதியாக, சாரமா முனிவர் மடாலாயத்தில் வந்து தங்கினார்.
>> மெளன குருவின் பிரதான சீடர்தான் தாயுமானவர்...ஒருமுறை மெளன குரு மடம் வழியாக தாயுமானவர் வந்தபோது மெளன குருவைக் கண்டு அவரது காலில் வீழ்ந்து வணங்கி, ஆசியும் பெற்றார். மெளன குரு சிவயோகி தாயுமானவரைக் கண்டவுடன் இவர் ஒரு சித்தயோகி என்பதை உணர்ந்து அவருக்கு தீட்சை அளித்து தமது சீடராக ஏற்றுக்கொண்டார். மெளன குரு உபதேசித்தருளிய யோக ஞான முறைகளை கடைப்பிடித்து, நிஷ்டைப் பயிற்சியில் ஆழ்ந்து தியானித்துவந்தார்.
>> மோன நிலையே குருவடிவமாகக் கண்டுணர்ந்து குருநாதரை வணங்கி ஆனந்த மெய்விதிர்ப் பெய்தி .. அந்த உணர்வைப் பாடல்களாகப் பாடினார் தாயுமானவர்.அன்னையர், உற்றார் உறவினர் அவரைத் திருமணம் செய்துள்ள கொள்ள வற்புறுத்தினர்.திருமணத்தில் நாட்டம் இல்லாத காரணத்தால் நிர்வாண தீட்சை செய்து துறவு நிலையை அளிக்குமாறு தம் குருநாதரிடம் கேட்டார். சிறிது காலம் இல்லறத்திலிருந்து மீண்ட பின்பே உனக்கு அது வாய்க்கும் என குருநாதர் இடமிருந்து அருள் வாக்கு வந்தது. வேறு வழியின்றி இப்போது திருமணத்திற்கு சம்மதித்தார். மட்டுவார் குழலி எனும் குணவதியை தாயுமானவர் மணந்து கொண்டார். கனகசபாபதி எனும் ஒரு ஆண் மகவு பிறந்ததும், மனைவி இறைவனடி சேர்ந்தார். மிஞ்சியிருந்த இல்லறப்பற்றும் அறவே தீர்ந்து போக, தாயுமானவர்துறவு நெறிக்கு முற்றிலும் தம்மை தயார்ப்படுத்திக் கொண்டார். தம்முடைய செல்வத்தை எல்லாம் தமையாரிடம் ஒப்படைத்து விட்டு உலகப்பற்று நீக்கிக் கோவண சந்தியாசியானர் தாயுமானவர். .சிந்தையெல்லாம் யோக நெறி நின்று வாழும் சித்த வாழ்வு நிலைத்தது.-

>> வெயிலின் ஒளியிலே காய்ந்த பொருள் பலகாலம் சிதையாமலிருப்பது போல், சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவருக்கு உடலும் ஆன்மாவும் ஒரு நாளும் அழிவதில்லை.முக்திக்கு வழி அறிவால் ஐம்புலன்களைக் காத்து வாழ்வதும்தான். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து, தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கற்றுக்கொண்டுவிட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமானவர்.உணர்வும் நினைவும் ஒடுங்கிய பின்னர் மனமானது சுத்தசூன்யமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலற்று வெறுமையாக இருக்கும்.மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மனவெறுமை நிலையே தேவையாகிறது என்பதை அறிந்து தெளிந்தார் தாயுமானவர்.உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும்.அதற்கு வழி ஒன்றேதான் நெற்றிக்கு நேராகச் சுழுமுனையில் வியாபித்திருக்கும் ஞானக் கினியைக் காணவேண்டும். அப்படி கண்டுவிட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்ற மகரிஷிகளின் ஆழ்மனது தாயுமானவருக்குப் பிடிபட்டது.