பிரம்மாவின் பேரனும் மரீசியின் மகனுமான கசியபர் அதிதியை மணந்து 12 மகன் களை பெற்றார். அவர்களில் இருவர் வருணனும் மித்ரனும்.அவர்கள் இருவரும் நெருக்கமான சகோதரர்கள்.சில காலம் ஒரே உடம்புடன் இருந்தார்கள். ஒரு சமயம் அப்ஸரஸ் ஊர்வஸி அவர்கள் ஆசிரமத்துக்கு வந்தாள்.
அவள் அழகில் இருவரும் மயங்கினர். அந்த சம்பந்தத்தால் ஏற்பட்ட கர்ப்பம் ஒரு கும்பத்தில் வைக்கப்பட்டது.
சில காலம் கழித்து அந்த கும்பத்தை உடைத்துக் கொண்டு இரு குழந்தைகள் வெளி வந்தன.
அவர்கள் வசிஷ்டரும் அகஸ்தியரும் ஆவார்கள்.
அகஸ்தியர் மிகப்பெரும் ரிஷி.
வால்மீகி ரிஷி ராமாயணத்தில் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை சொல்லும் போது அதன் ரிஷியாதி நியாசங்களை சொல்லுகையில் அகஸ்த்யோ பகவான் ரிஷி: என்பார்.
இப்படி வால்மீகியால் பகவான் என்று பாராட்டப்படும் அகஸ்தியர் ரிக் வேதத்தின் முதன்மையான ரிஷி.
அகஸ்தியரை பற்றிய குறிப்புகள் கீழ்க்கண்ட நூல்களில் பரவலாக இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றிலும் அவர் தவிர்க்க இயலாத ஒரு சக்தியாகவே திகழ்கிறார்.
ரிக் வேதம்
மகா பாரதம்
தேவி பாகவதம்
ஸ்கந்த புராணம்
ராமாயணம்
வாயு புராணம்
சேது மகாத்மியம்
கந்த புராணம்
பாகவதம்
லலிதா சஹஸ்ர நாமம்
அகஸ்தியருக்கு தமிழ் சொல்லி தந்தது சிவனும் முருகப்பெருமானும்.
முதல் இரண்டு தமிழ் சங்கங்களை போஷித்தவர்.
கடல் கொண்ட தென்னாடு-கபாட புரம்-அதோடு இவருடைய பல தமிழ் நூல்கள் போய் விட்டன.
இவருடைய இலக்கண நூல் அகத்தியம் அதுவும் கிடைக்க வில்லை.
இவருடைய மனைவி லோபா முத்ரா. லலிதை உபாசகி.
இவருக்கு லலிதா சஹஸ்ர நாமம் சொல்லி தந்தது ஸ்ரீ ஹயக்ரீவர். அது இன்று அனைவராலும் படிக்கப்படும் சிறந்த நூலாக உள்ளது.
மேலும் இவருடைய ஆதித்ய ஹ்ருதய மந்திரம் மிக பிரசித்தி பெற்றது.
திருமால் கால கேயர்கள் என்ற அசுரர்களை வதம் செய்வதற்கு வசதியாக அவர்கள் ஒளிந்து கொண்டிருந்த சமுத்திரத்தை திருமால் கேட்டு கொண்டதால் குடித்து கடலை வற்ற செய்து அந்த அசுரர்களின் சம்ஹாரத்துக்கு உதவினார்.
கஜெந்திர மோக்ஷத்தில் ஒரு சாபத்தால் யானையாக பிறந்திருந்தான் பாண்டிய மன்னன் இந்திர துயும்னன்.
அவனை சபித்ததே அகஸ்தியர்தான்.
குற்றாலம் சென்ற அகஸ்தியரை அங்கிருந்த கோவிலுக்குள் விட வில்லையாம் வைணவர்கள்.
திரு மண் இட்டால்தன் அனுமதி தருவோம் என்று கூறி விட்டனராம்.
திருமண் இட்டு கொண்டு இவர் உள்ளே சென்றதும் அங்கிருந்த விஷ்ணு விக்ரஹம் சிவலிங்கமாக மாறி விட்டது.
ஸ்வாமி திருகுற்றாலீஸ்வரராகவே இன்று வரை இருந்து வருகிறார்.
அந்த கோவிலில் ஸ்ரீ சக்ரமும் அமைத்துள்ளார். --இது ஸ்காந்த புராணம் சொல்லும் செய்தி.
இப்படி பல சிறப்புகளை பெற்றிருக்கும் அகஸ்தியருக்கு விக்கிரம சிங்க புரம் என்ற ஊரில் கோவில் இருக்கிறது.(பாவ நாசம் அருகில்)
அகஸ்தியரை உபாசிப்பது நியம நிஷ்டைகள் நிரம்பியது.
மூல மந்திரம்:
ஒம் அம் உம் ஒம் வம் மம் மகத்தான அகத்தீசாய நமஹ
ஆதாரம்-அ.வெ. சுகவனேஸ்வரன் அவர்கள் எழுதிய -- மக ரிஷிகள் வரலாறு-2001 கலா நிலயம்/சென்னை
No comments:
Post a Comment