நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 16 July 2014

நம்மை சுற்றியிருக்கும் ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா

நம்மை சுற்றியிருக்கும் (AURA CLEANSING) ஒளி வட்டத்தை சீராக்க ஆப்பசோடா (BAKING SODA) பரிகாரம் !!
( ஆப்பசோடா நம்மிடம் கிடைக்காது மளிகை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறேன் !! )
நம் உணர்ச்சிகள், மனம் மற்றும் எண்ணங்களில் தெளிவின்மை, தவறான முடிவுகள் எடுத்தல், உடல் நலம், ஆன்மீக வளர்ச்சி போன்ற அனைத்திற்கும் நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்திற்கும் (AURA) தொடர்புண்டு. மேற்கூறிய எதுவும் சரியில்லை என்றால் அதுவே அந்த ஒளி வட்டத்தின் (AURA COLOUR) நிறமாக தெரியும். நம்மை சுற்றியுள்ள ஒளி வட்டத்தை (AURA) நாமே பார்த்து அறிந்து கொள்ளும் முறையை வேறு ஒரு பதிவில் வெளியிடுகிறேன் !! இப்போது எப்படி அதை சுத்தி செய்வது என்பதை பார்ப்போம். எப்படி காற்றுள்ள இடத்தில் நாம் நின்றாலோ அல்லது நாம் உள்ள இடத்தில் காற்று வந்தோலோ நம் புழுக்கம் மறையுமோ இதுவும் அப்படி தான் !! புற ஒளி வட்டத்தை (AURA) சீர் செய்து நம் எதிர் மறை எண்ணங்களை, நம்மை சுற்றியுள்ள எதிர் மறை சக்திகளை விரட்டுகிறோம் !! அவ்வளவே !! இதுவும் நாம் ஏற்கனவே கூறி பலரால் முயற்சிக்கப்பட்டு பலன் கொடுத்து வரும் 'உப்பு நீர் பரிகார' முறையை போன்றே மிகவும் சக்தி வாய்ந்தது !!! இதற்கு நாள்,கிழமை,நட்சத்திரம்,திதி,நேரம் காலம் எதுவுமில்லை !! எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் !! கிழக்கு முகமாக நின்று மிதமான சூட்டில் உள்ள குளியல் நீரில் சிறிது ஆப்பசோடா எனப்படும் Baking சோடா வை எடுத்து கலந்து உடல் முழுவதும் கைகளை சீப்பு போல் எண்ணி வாறுவது போல் தேக்க வேண்டும். மேலிருந்து கீழ்-பின்பு கீழிருந்து மேல்-3 முறை . அப்படி செய்யும் பொழுது கண்களை மூடி நம் உடலில் உள்ள தீய சக்திகள் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலக தியானித்து கொண்டே செய்ய வேண்டும். முடிந்ததும் அப்படியே 3 நிமிடங்கள் நின்று தியானத்தை முடித்து கொண்டு, பின்பு சகஜமான முறையில் எப்போதும் போல் குளித்து முடிக்கலாம். குளித்து முடித்ததுமே நல்ல மாற்றம் தெரியும். இதை செய்யும் நாளில் ஸோப் உபயோகிக்க கூடாது. வெறும் நீரில் மட்டும் நன்கு குளிக்கலாம். குளித்த அன்றைய தினமே நம் எண்ணங்களில் , நடத்தையில் மாற்றம் தெரியும்.இதை மாதம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும் !! வீட்டில் உள்ள அனைவரும் செய்யலாம். (10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மாரடைப்பு வந்தவர்கள், இதய கோளாறு உள்ளவர்களை தவிர)
அடுத்த நாள் முதல் தினசரி "ஹிமாலயன் க்ரிஸ்டல் ராக் ஸால்ட்" உபயோகித்து குளித்து வரலாம். சிறிது தண்ணீரில் கலந்து முதலில் உடலெங்கும் தேய்த்து குளித்து விட்டு பின்பு ஸோப் தேய்த்து குளிக்கலாம். இதை தினமும் செய்யலாம். நல்ல மாற்றம் தெரியும். வாங்க இயலாதவர்கள் கள் உப்பு அல்லது இந்துப்பு உபயோகிக்கலாம் !! 70% மாற்றம் தெரியும் !!
(Himalayan Crystal Rock Salt நம்மிடம் கிடைக்கும் !! 1 கிலோ ரூ.150/- அழைக்க வேண்டிய எண் : +919840130156. வெளி ஊர்களுக்கு Courier லும் அனுப்பப்படும் !! )
அன்பர்கள் செய்து விட்டு எனக்கு மாற்றத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் !! 

No comments:

Post a Comment