நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 30 June 2014

சென்னிமலை கும்பாபிஷேகம்

சென்னிமலை கும்பாபிஷேகம்

உலகமெங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ் உள்ளகளுக்கு வண்ணக்கம். நம்மளுடைய தமிழ் கடவுள் முருகபெருமாள் பற்றி அறிந்து இருபேர்கள் .இதில் தலையாய முருகபெருமான் கோவில் தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்து உள்ளது . இப்பூவுலகமே தினசரி பாராயணம் 
செய்யும் ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஸ்ரீ பாலன்தேவராய சுவாமிகளால் இயற்றி அரங்கேற்றம் செய்யப்பட்ட திருத்தலம்   இவர் சிரகிரி பட்டத்துக்கு சொந்தகாரர்ரான அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள்   நடைபெருகிறது.

அழைப்பிதழ் கிடைக்காதவர்கள் இதனயே  அழைப்பிதழ் ஏற்று கொண்டு  அனைவரும் இந்த கும்பாபிஷேகதில்  கலந்து கொண்டு  அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி   திருவருள்  ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு கேட்டு கெள்கிறேன் 


சென்னிமலை ஆண்டவர் கும்பாபிஷேகத்திற்க்கு நேரில் வர முடியாத வெளியூர் வெளிநாட்டு பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இணையதளம் மூலம் நேரடியாக ஒளிபரப்படுகிறதது
05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை கும்பாபிஷேகம் நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர் திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர்

www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org

மேலும் தகவல்கள்களுக்கு:

சென்னிமலை ரவிகுமார் cell :9994754092

Sunday, 29 June 2014

சென்னிமலை கும்பாபிஷேகம்

சென்னிமலை அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 
 ஜூலை மாதம்  07.07.2014 திங்கள்கிழமை சுவாதி நட்சத்திர தினதன்று 
காலை 9.00 மணிக்குமேல் 10.30மணிக்குள்  அருள் சுப்பிரமணியசுவாமி  திருக்கோவில்
பரிவார சகித நூதன இராஜகோபுரம் மற்றும் சென்னி ஆண்டவர்க்கு உத்தமபட்ச 
மஹா  கும்பாபிஷேகம் திருக்குட  நன்னீராட்டு நடைபெருகிறது 
அன்று  காலை 8.00 மணி  முதல் அடிவாரம் செங்குட்டைதோட்டத்தில் அன்னதானம் 
நடைபெறும்.   அனைவரும் இந்த கும்பாபிஷேகத்தில்  கலந்து கொண்டு சென்னிமலை அருள்மிகு  சுப்பிரமணியசுவாமி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுங்கள் 

05.07.2014 சனிகிழமை முதல் 07.07.2014 திங்கள்கிழமை வரை  கும்பாபிஷேகம் 
நிகழ்வினை கீழ்க்காணும் இணையதளங்களில் உலக மக்கள் யாவரும் கண்டு சென்னிமலை ஆண்டவர்  திருவருள் ஆசிர்வாதம் பெறுவீர் 
 www.chennimalaitemple.tnhrce.in
www.tntemple.org
www.tnhrce.org



மேலும் தகவல்கள்களுக்கு:
கோவில் அலுவலகம் 04294 250223.
மலைக்கோவில் 04294 293595,292263

Saturday, 28 June 2014

ஸ்ரீ வாராகி நவராத்ரி

"அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் " 

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

ஸ்ரீ வாராகி நவராத்ரி 

27.6.2014 வெள்ளி   பஞ்சமி பூஜை  
28.6.2014   சனி         தண்டநாதா பூஜை 
29.6.2014  ஞாயிறு   ஸஙகேதாபூஜை
30.6.2014   திங்கள்    ஸயயேஸ்வரி பூஜை
1.7.2014    செவ்வாய்  ஸமயஸங்கேதா பூஜை  
2.7.2014    புதன்             வாராகி பூஜை
3.7.2014   வியாழன்     போத்ரி பூஜை
4.7.2014   வெள்ளி       சிவா பூஜை 
5.7.2014   சனி              வார்தா பூஜை
6.7.2014   ஞாயிறு     மஹாஸேநா பூஜை


Wednesday, 25 June 2014

அமாவாசை குலதெய்வ வழிபாடு

 அமாவாசை குலதெய்வ வழிபாடு
(நாளை  அமாவாசை  26.6.2014  மாலை 5.30 PM  முதல் 27.6.2014 மதியம் 2.00 PM வரை) 

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால்   நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது

.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

Tuesday, 24 June 2014

கண்திருஷ்டி


கண்திருஷ்டி பற்றி விளக்கம் தேவை.
பிறர் பார்த்து பிரமிக்கும் விதமாக ஒன்று இருந்தால் திருஷ்டி தோஷம் உண்டாகி விடும். இதனைப் போக்குவது அவசியம். மிளகாய் வத்தல், உப்பு, நடைபாதை மண் ஆகிய மூன்றாலும் திருஷ்டி பட்டவர்களுக்கு வலமாக மூன்று முறையும், இடமாக மூன்றுமுறையும் சுற்றி நெருப்பில் போட வேண் டும். இதனை "கண்ணேறு கழித்தல்' என்பார்கள். திருஷ்டி என்பது தவிர்க்க முடியாதது. கழித்து விட்டால் பாதிப்பு உண்டாகாது

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல

அமானுஷ்ய பரிகாரங்கள் (2)
 :
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்

 பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.
கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:
இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.

பண பிரச்சனைகளுக்கு 48 முறை
உடல் நலம் பெற 58 முறை
வம்பு, வழக்கு சரியாக 78 முறை
நல்ல வேலை கிடைக்க 80 முறை
கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை
குழந்தையின்மை 52 முறை
மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்

பண வரவிற்கு

:
மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்

பணப்பிரச்சனைகள் நிரந்தரமாக தீர அமானுஷ்ய பரிகாரம்


வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீவித்யா குங்குமத்தில் சுத்தமான பசு நெய் கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தில் இந்த கலவையில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து மஹாலக்ஷ்மி விளக்கின் பாதத்தில் வைக்கவும். இவை காலை 6-7 அல்லது மதியம் 1-2 அல்லது இரவு 8-9 செய்தல் நலம். இதை ஒரு வருடம் செய்ய வேண்டும். ஒரு வருடம் முடிந்ததும் அனைத்து பழங்களுடன் 12 ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்து ஓடும் ஆற்றில் அல்லது நீர் நிலைகளில் கிழக்கு முகமாக நின்று விட்டு விடவும். பின்பு அங்கேயே குல தெய்வம் மற்றும் விநாயகருக்கு மூல மந்திரம் கூறி பூஜையை செய்து வீடு திரும்பவும். இதன் பின் பண பிரச்னை என்பதே இல்லாமல் போவது உறுதி. மேலும் இந்த ஒரு வருட காலமும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏதேனும் பசு மாட்டிற்க்கு 6 மொந்‌தன் வாழை பழம் கொடுத்து வர பலன் இரட்டிப்பாகும்

வேலை கிடைக்க மிக எளிய பரிகாரம்

அமானுஷ்ய பரிகாரங்கள் (7)

(1) காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து விடலாம்.
வேறு முறை : புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக எறிந்து விடவும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்

அமானுஷ்ய பரிகாரங்கள் (4)


தடைகள் விலக தாந்த்ரீக முறை :
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய வேண்டும். 
ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்.

இழந்தவை அனைத்தையும் திரும்ப பெற தெய்வீக பரிகாரம்


27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை / தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன். நாளை வளர்பிறை அஷ்டமி 

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள்,கடன்,எதிரிகள் தொல்லை ,முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம்


(1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு
(2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு
(3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு
(4) தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்
(5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு
மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்

வியாபார வெற்றிக்கு புருவ திலகம்


ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி அன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் மை கட்டும். அந்த மை எடுத்து அத்துடன் ஜவ்வாது,பட்சை கற்பூரம்,புனுகு,கோரோசனை சேர்த்து குழைத்து வெள்ளி டப்பியில் வைத்து தொழில் வியாபாரம் செய்ய, மற்றும் எங்கு செல்வதானாலும் மையை புருவத்தில் வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும்

சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள் (1)


வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.
பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன ?

அனைவருக்கும் பொருந்தும் சூட்சும பரிகாரங்கள்


(1) எப்பொழுதும் தலைருக்கும் பொருந்துயணைக்கு ஊதா வண்ண கவர்களையே உபயோகப்படுத்துங்கள்
(2) தலையணை அடியில் சிறு படிகார கல் வைத்திருப்பது உத்தமம்
(3) அக்னி ஹோத்திரம் செய்ய பயன்படும்தாமிர பாத்திரத்தில் சந்தனம் மற்றும் கற்பூரம் சேர்த்து முக்கிய அறைகளில் வைத்திருக்கவும்

வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண பிரச்சனைகளுக்கு

 :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம் அல்லது பாத்திரத்தில் பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும் நீரோடையில் விடவும். சுத்தமான நீரோடையாக இருக்க வேண்டும். 
2. வலது கையில் வெள்ளி வளையம் அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில் மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7 நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர் சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7 நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ் உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம் பருப்பை மறு நாள் புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும் போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில் தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால் பாக்கெட்டுகள் கோவிலுக்கு கொடுத்து வரவும்

சகலமும் வசியமாக பழங்கால முறை


சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.

எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்


(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

பண புழக்கம் அதிகரிக்க


பணவசியம் ஏற்பட, பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பட்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம்.ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது

அமானுஷ்ய பரிகாரங்கள்


(1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது
(2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்
(3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்
(4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்
(5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்
(6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.
(7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்

தாந்த்ரீக பரிகாரங்கள்


அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
ஆரஞ்சு மரத்தில் வேறை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்

பிரதோஷம் வழிபாடு

பிரதோஷம் வழிபாடு

மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது.  பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரியவிரதங்களில் பிரதானமானதாகும்.விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பின்னர் சிவபுராணம், சிவ நாமங்களை படித்து கோயிலுக்கு சென்று சிவனை வழிபட்டு நந்திக்கு காப்பரிசி படைத்து நெய்தீபம் ஏற்றி பிரார்த்திக்க வேண்டும்.
நந்தி தேவருக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத்  என்றால் துக்கம்  ரன்  என்றால் விரட்டுபவன், ருத்ரன் என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். எனவே பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்தியெம் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி காப்பரிசி வைத்து பூஜை செய்கிறார்கள்.
வழமையான நாட்களில் ஆலயத்தை மூன்று முறை வலம் வரும் வழக்கத்திற்கு மாறாக பிரதோஷ விரதநாளில் சோம சூக்கப் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
முதலில் சிவலிங்கத்தையும் தேவரையும் வணங்கிகொண்டு அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சந்நிதி வரை சென்று அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும் ரிஷப தேவரையும் வணங்கிக் கொண்டு வழக்கம்போல் பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரும்போது சுவாமி அபிஷேகத் தீர்த்தம் விழும் நிர்மால்யத் தொட்டியைக் கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி அப்பிரதட்சணமாக சந்நிதிக்கு வந்து சிவலிங்கத்தையும் ரிஷபதேவரையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பல அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என நூல்கள் கூறுகின்றன.

Monday, 23 June 2014

மூன்று முக்கிய வழிபாடுகள்

மூன்று முக்கிய வழிபாடுகள்:

குல குரு வழிபாடு
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும்

குல தெய்வ வழிபாடு
 குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்

குல முன்னோர் வழிபாடு
மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும்.
அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூற வேண்டும்


இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்

பூவனூர் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர்



மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீ கற்பகவல்லி , ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும், புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் பிரதி மாதம் ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்
நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
அபிஷகம்தினம் :ஜூலை மாதம் 01-07-2014 செவ்வாய்கிழமை  . மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236 பூவனூர் தியாகராஜன் : 94436 55399

Saturday, 21 June 2014

மன்னார்குடி வழி நீடமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீ கற்பகவல்லி ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,
புலிப்பாணி சுதிஸ்சனருக்கும்  பிரதி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் ஜூலை 01-07-2014 செவ்வாய்கிழமை 
தினத்தன்று  அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்
 நடைபெறுவதால் 

அனைவரும் கலந்து கொண்டு  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399


மன்னார்குடி வழி நீடமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீ கற்பகவல்லி ,

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீ சாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,
புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் பிரதி மாதம் ஆயில்யம் நட்சத்திர  
ஜூலை 01-07-2104 செவ்வாய்கிழமை தினத்தன்று  அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்
 நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு  திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன் : 94436 55399

ஏழு தலை நாகம் குடை பிடிக்க

ஆண்டவனின் படைபின் ஆதிசயம் எங்கும் அவன் படைப்பு ஏழு ஏழு தான் கோள்கள் ஏழு உலகின் கண்டங்கள் ஏழு உலக அதிசயங்கள் ஏழு மேல் உலகம் ஏழு கீழ் உலகம் ஏழு இதை உணர்த்தவே அம்மா ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மான்ட நாயகி ஓம் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஏழு தலை நாகம் குடை பிடிக்க நம் எல்லோருக்கும் காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்

ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுங்கள்


* முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா. (ரிக் வேதம் 10.81.03)
*இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.
* நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.
* அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.
சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.
* தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.
* சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.
* இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.
* ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.

இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்

ஸ்ரீ சரபேஸ்வரர் பிரதோஷ காலத்தில் வழிபாடு



பிரதோஷ காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது சிறப்பு. அருகம்புல்லும்,வில்வமும் கொண்டு வழிபடுவது சிறந்தது. சரபரை வழிபட்டால் பில்லி,சூன்யம், ஏவல், பிணி, கடன் தொல்லை, இவற்றிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.

அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் வழிபடுவது சிறப்பு. ராகு காலத்தில் வழிபடுவது மிக்க நல்லது.சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் அபரிமிதமான சக்தி. பக்தர்கள் முழு மனதோடு வழிபட்டு, சரண் அடைந்து சரபரின் அருளைப் பெறலாம்.

சரபரை ஒரு நிமிஷம் உள்ளன்புடன் நினைத்தாலே போதும் எதிரிகள் குலநாசம், போக மோக்ஷ பலம், முக்தி ஏற்படும். ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை மக்கள் உரவேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே சரபேஸ்வரரின் தோன்றல் நடந்ததாக கூறுவது உண்டு.

திண்டுக்கல் நகரில் நாகல்நகர் சந்தைரோடு பகுதியில் உள்ள பொன்னழகு காளியம்மன் கோவிலில் சரபேஸ்வரர் சன்னதி உள்ளது. இங்கு பிரதிவாரம் ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரருக்கு யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றனர்.

வீட்டில் ஸ்ரீசரபேஸ்வரர் படம் வைத்து பெண்கள் ராகு கால வேளையில் துதித்து வந்தால் வீட்டில் துர் தேவதைகள் எல்லாம் விலகிவிடும். சரபேசுவரரை மனம் உருக வழிபட்டால் செய்வினை கோளாறு, உடல்நிலை பாதிப்பு, கடன் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள், கடன் நிவர்த்தி எல்லாம் சர்வ நாசம் செய்து உங்களுக்கு உங்கள் குடும்பத்துக்கு நன்மை தருவார்.

புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் 6 கிலோ மீட்டர் மொட்டாண்ஹில் பக்கம் பிரத்தியங்கரா தேவி உக்கிரமான முறையில் கோவில் கொண்டுள்ளாள். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியும், ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தியும் சேர்ந்தருள் செய்த சந்தி நேரத்தில் பூஜை செய்வது நல்லது.

ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடச் செல்லுகையில் இல்லத்தி லிருந்தே செருப்பு அணியாமல் செல்வது நல்லது. ஸ்ரீசரபமூர்த்தி, ஸ்ரீபிரத்தியங்கிரதேவி, ஸ்ரீ துர்க்காதேவி, ஸ்ரீநரசிம்மமூர்த்தி போன்ற சுவாமி படங்களை வீட்டில் வைத்தும் வழிபடலாம்.

பிரதோஷ நேரத்தில் தான் ஆதிபரம் பொருளாம் சிவபெருமான் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் அவதாரம் கொண்டு ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரக சக்தியினைத் தணித்தார். எனவே, பிரதோஷ நேரத்தின் போது ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு அதி அற்புத பலன்களைப் பெற்றுத் தருகிறது
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்.
 இந்த அறகட்டளை சார்பாக  பிரதி மாதம் அமாவசை தோறும்  ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்ங்கிரா தேவிக்கு குருஜி  ஆசிர்வாதத்துடன் அம்பாள் அனுகரகத்துடன்  ப்ரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது 
இங்கு செய்யப்படுகிற யாகம்   "அன்புடன் உலக மக்கள் அனைவரும் னந்தமாய் வாழ வேண்டும்" என்ற ஒரே   தாரக மந்திரத்தில் நடைபெறுகிறது   இந்த தாரக மந்திரம் நாம் எதை  கேட்டாலும் நமக்கு  கூடுக்கும் .சந்தோஷத்தில்  கூட தோஷம் இருக்கு ஆன  னந்த்தில் தோஷம் கிடையாது  அந்த  ஆனந்தம் 27 வகை இருக்கு அந்த 27 வகையான
 ந்ததை நமக்கு அள்ளிகொடுக்க ந்த சொரூபமாக 
மங்களா ரூபிணியாக ந்தம்னா  புன்னகையோடு  
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த இடத்தில் கமலத்தில் கட்சி அளிக்கிறாள். ப்ரத்ங்கிரா எல்லா இடத்திலும் உக்கிர தெய்வமாக இருப்பாள்  ஆனா  இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் புன்னகையோடு கட்சி அளிக்கிறாள்.குருவோட ஆசிர்வாதம் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.
 குருவோட ஆசிர்வாதம் இல்லை என்றால் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.கிடைக்காது குரு இல்லாமல் இந்த வித்தையும்  கத்துகிட்டாலும் குரு இல்லாமல் இதை செய்தாலும் சித்திபண்ண  முடியாது.

நாம் அற வழியில் நடந்து குருவின் ஆசிர்வாதத்துடன் தருமத்தையும் தெய்வத்தையும் நாடினால் தருமமும் தெய்வமும் நம்மை தேடி
நாடி வரும்

மானாமதுரை சுவாமிஜி