நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 29 June 2017

கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ஹர்.


கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ஹர்.


கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூப லக்ஷ்மி நரசிம்ஹர்.


*இங்குள்ள நரசிம்ஹ மூர்த்தியானவர் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், ஆனந்த பீடம், யோக பீடம் ஆகிய 5 பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்று இருக்கும் நரசிம்மருக்கு மேல் இரண்டு கரங்களில் சக்ரமும், வில் அம்பும் தாங்கி மற்றும் அபய வரத முத்திரை காட்டி தன்னை நாடி வந்தவரை வாழ வைக்கும் பெருமாள் என்பதனை உணர்த்துகிறது.




*மஹாலக்ஷ்மி தேவியுடன் காட்சி தரும் இந்த நரசிம்ஹ மூர்த்தியானவர் " த்ரி நேத்திரம்" அமைந்துள்ளது. " அருள் விழியால் கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்."

* மடியில் அமர்ந்துள்ள தாயார் தாமரை மலர் தாங்கி அபய ஹஸ்தம் கொண்டு மிகவும் திவ்யமான ஹம்ஸம் கொண்டு காட்சி தருவதை பக்தர்கள் காண்கில் அருள் பொழியும் திவ்ய தம்பதிகள் இவர்கள் தான் என்பதனை உறுதி செய்யும் வண்ணம் காட்சி தருகின்றனர்.

*இங்கு அருள்புரியும் இந்த நரசிம்ஹ மூர்த்திக்கு வஜ்ரதம்ஷ்ட்ரங்கள் ( பற்கள்) 12 அமைந்து இருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளை குறிக்கிறது.

*திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய், நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆகிய நவக்கிரஹ அம்சத்துடன் இந்த ஸ்தலம் விளங்குவது கூடுதல் சிறப்பு.

* நரசிம்ஹர் அமைப்பு பெருமாளின்

6 அவதாரங்கள், தான் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களை நினைவுபடுத்தும் வண்ணம் இருக்கிறது.

*இந்த புகழ் பெற்ற ஆலயம் சென்னையில் இருந்து சுமார் 70 km தொலைவில் அமைந்துள்ளது.

Wednesday, 28 June 2017



சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம்





சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அன்னதர்மம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள 
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் 
ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 30.06.2017 வெள்ளிக்கிழமை ஆனி மாதம்(16)உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236

Thursday, 22 June 2017

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம் நடைபெறுகிறது


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை  யாகம்  நடைபெறுகிறது








உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
23.06.2017 வெள்ளி கிழமை  ஆவனி  மாதம் 09 அன்று நடைபெறுகிறது.அமாவாசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் 

இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது 

அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று 
 மானாமதுரை 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயம் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Monday, 19 June 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

 அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

 







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
27-06-2017தேதி செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும்ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


 கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும் மேலும் தகவல்கள்களுக்கு 
cell :9842078733
9043942091,
9843016651

அத்ரி மலையின் தெய்வீக அனுபவங்கள் நெல்லை மாவட்டம் அம்பசமுத்திரம் ஆழ்வார்குறிச்சியிலிருந்து அருகே உள்ள கடனா அணையின் மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் அத்ரிமலை அமைந்துள்ளது. இங்கு அத்ரிமுனிவர், அனுசூயா தேவி வாழ்வதாக ஐதீகம். அத்ரி மகரிஷி அவருடைய துணைவியார் அனுசுயா தேவியுடன் இங்கு பல ஆண்டுகளாக தவம் செய்திருக்கிறார். மேலும் அத்ரி மகரிஷியின் சீடர் கோரக்கரும் இங்கே சில காலம் வந்து இருந்து,தவம் இருந்திருக்கிறார்.மேலும் கோந்தகர், கொங்கனர், குதம்பைசித்தர், மச்சமுனி, அழுகண்ணர், பாம்பாட்டி சித்தர் கருவூரார், பதஞ்சலி ஆகியோர் தவம் மேற்கொண்ட சிறப்புடையது. இங்கு அத்ரி மகரிஷி, கோரக்கர் கோயில் உள்ளது. சித்தர்கள் வேண்டுகோளின்படி உமாதேவி லிங்கவடிவில் சிவனோடு அமர்ந்து அருள்பலிப்பது இத்தலத்தின் சிறப்பு. அத்ரி முனிவரின் வேண்டுகோளின்படி கங்கா தேவி அத்ரி கங்கை என்ற பெயரில் இங்கு விங்குவதாக ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். பல தெய்வீக மூலிகைகள் இங்கே விளைகின்றன.இவைகளை அடையாளம் கண்டு கொள்ளும் மனிதர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தார்கள்;தற்போது அவ்வாறு எவரும் இல்லை சித்தர்கள்

 பலருக்கு பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன.உள்முகமான ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த அத்ரிமலை பல ஆன்மீக விளக்கங்களை சூட்சுமமாக பல நூற்றாண்டுகளாக விளக்கிக்கொண்டே இருக்கிறது இங்கு வந்து அத்ரி மகரிஷியை வழிபடுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் ஆசி வழங்குவது அவருடைய வழக்கம்;வெற்றுபந்தா ஆட்களால் இங்கே வரவே முடியாது.உள்ளார்ந்த தேடலுடன் இருப்பவர்களுக்கு இந்த அத்ரி மலையின் சித்த ஆசி எப்போதும் உண்டு. அத்ரி மகரிஷியின் கோவில்வருகிறவர்கள் .வனத்துறையின் அனுமதியில்லாமல் இங்கு நுழைய அனுமதியில்லை;

Friday, 16 June 2017


செல்வ செழிப்போடு வாழ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

நாளை 17-06-2017 சனி கிழமை தேய்பிறை அஷ்டமி ராகு காலம் 9.30AM to 10.30AM



செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று (ராகு காலம் 1.30 to 3.00PM )
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்து நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை

பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கும் தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்

பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கும் தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்

நாளை 17-06-2017 சனி கிழமை  தேய்பிறை அஷ்டமி ராகு காலம் 9.30AM  to 10.30PM











தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்மைகள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.


தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?




பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.
மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது



திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்

மானாமதுரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம், அலங்காரம்,தீபாரதனை

மானாமதுரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை 





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு 17-06-2017ஆனி (03) மாதம் சனி கிழமை
காலை 9.00 -11.00மணிக்கு ஆவரணபூஜை
மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

cell : +91 98428 58236

Thursday, 15 June 2017

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்





நமது இணைய தளம் , சில அபூர்வமான அதே சமயம் சக்தி வாய்ந்த ஸ்தலங்களை , நமது வாசர்களிடம் பகிர்ந்து கொள்வதை , கொள்கையாக வைத்துக் கொண்டிருக்கிறது.


எப்படி கும்பகோணம் பகுதியில் நவக்கிரகத்தின் கோயில்கள் அமைந்துள்ளனவோ,அதே போல,தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள் சிவபெருமானின் அம்சமாக கோயில் கொண்டுள்ளன.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.


இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

1. பாபநாசம்

2. சேரன்மாதேவி

3. கோடகநல்லூர்

4. குன்னத்தூர்

5. முறப்பாடு

6. ஸ்ரீ வைகுண்டம்

7. தென் திருப்பேரை

8. இராஜபதி

9. சேர்ந்த பூமங்கலம்


பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 4.30 முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர்.


சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார் அவர்களின் போன்:04534-261849.

குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது செல்:9442018567,9442018077.

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,இவரது செல்:9842404559.

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும். இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.போன்:04630-252117.

தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர் திரு.கமலேஷ் பட்டர் செல்:9365889291.

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.

பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்

Friday, 2 June 2017

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர குரு பூஜை அன்னதர்மம்


சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர குரு பூஜை அன்னதர்மம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள 
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் 
ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 03.06.2017 சனிக்கிழமை வைகாசி மாதம்(20)
உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை குரு பூஜை அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236