நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 14 October 2016

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்


நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்

சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்




எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத்தலைமுறையிலும்செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில்சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒருபங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்குஒதுக்கி அந்த மாதமே அன்னதானம்செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம்இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும்பார்த்துக்கொள்கின்றனர். அதாவது, வீட்டில்நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.
( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்டலட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)


மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம்பாதிக்கிறது.பவுர்ணமிபெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்துஉயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும்பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமிவரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல்அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள்என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாகஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான்சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாகசெல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர்அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையேசோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல்நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,எனவாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.


பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின்அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்தசோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள்மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள்அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும்திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும். திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச்சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும்அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும்எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர்பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும்.அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை.பின் பிரதமை திதி ஆரம்பம் எனஎழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்குஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவதுகாலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில்அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்தஇரண்டு மணி நேரத்திற்குள்சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின்ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் (நாம் வாழும் மில்கி வே, அருகில் உள்ளஅண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும் (பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு, நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல்பாசிகள், ஒட்டகம், ஒட்டகச்சிவிங்கி, பூரான்,பல்லி, ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை, காண்டாமிருகம், நாய், குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு, சுறா மீன் ), ஒவ்வொருமனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்னவேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கைஒன்றாக இருக்க வேண்டும்.பலவாகஇருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதிஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறிதொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும்போது சில மாதங்களில் நமது கோரிக்கைநிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில்(கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல்பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப்பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்குஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்கவேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாகஇருப்பது அவசியம்.வெறும் தரையில்உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்கவேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையைஉருவாக்கும். (அசைவ உணவு அதற்குஎதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒருஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாகஇருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில்அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்கவேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒருமந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல்செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சிஉள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும்தேவையில்லை.


அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை( திருமணம், பணக்காரனாவது, நோய் தீர, கடன்தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவிஉயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றிஎதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்தவண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால்கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழிகடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.




இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.


1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங்
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

இம்மாதம் சோடசக்கலை நேரம் 16.10.2016ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:25 முதல்11:25 வரை.

இம்முறை அமரர்.மிஸ்டிக்செல்வம்அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment