நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 31 March 2017

அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்


அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்


குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.


2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.


3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

Thursday, 30 March 2017

அனுமனுக்கு இந்த பொருட்களை செவ்வாய்கிழமை அன்று படையுங்கள்: செல்வம் கொழிக்கும் -


அனுமனுக்கு

இந்த பொருட்களை செவ்வாய்கிழமை அன்று 
 படையுங்கள்: செல்வம் கொழிக்கும் -
01


அனுமனை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் காப்பார் என்று கூறுவார்கள்.

அந்த வகையில் செவ்வாய் கிழமை அன்று ஒருசில பொருட்களை வைத்து படைத்தால், அவருடைய முழு ஆசிர்வாதத்தையும் பெறலாம் என்று ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது.

அனுமனுக்கு செவ்வாய் கிழமை அன்று படைக்க வேண்டிய பொருட்கள் என்ன?

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்கி, அந்த துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு அதை வைத்து படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், வீட்டில் பணம் சேரும்.


அனுமனுக்கு ஆரஞ்சு நிற சிந்தூர் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.

மல்லிகை எண்ணெயை மனநிலையை மேம்படுத்த உதவுவது. இத்தகைய சிந்தூர் பொடியை மல்லிகை எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, மிகவும் நல்லது.

செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் ஆகியவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதத்தையும் பெறலாம்.

5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…





ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் சரும செல்கள் ஆரோக்கியத்தை இழப்பதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. மேலும் சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கத்தால், சரும செல்கள் வறட்சியடைந்து, சருமம் சுருக்கமடைகிறது.


இதனைத் தடுப்பதற்கு எத்தனையோ க்ரீம்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு கொடுக்கப்படும் பராமரிப்பு போன்று ஏதும் வராது. இங்கு 5 நிமிடத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் ஓர் அற்புத ஃபேஸ் பேக் கொடுக்கப்பட்டுள்ளது.


முட்டை வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இச்சத்து சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. எனவே இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சரும ஆரோக்கியமடைந்து, பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.


எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சரும செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும்.


தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு – 1


தயாரிக்கும் முறை:
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


பயன்படுத்தும் முறை
இந்த கலவையை முகம், கழுத்து, கைகளில் தடவி மென்மையாக விரலால் மசாஜ் செய்து, 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும்.


எத்தனை முறை செய்ய வேண்டும்?
இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3-4 முறை போட்டு வந்தால், சருமத்தில் உள்ள முதுமை சுருக்கங்கள் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்

Wednesday, 29 March 2017

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்

திருஈங்கோய்மலை ஸ்ரீ போகர்க்கு மகரிஷி பரணி நட்சத்திர பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதர்மம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


முசிறி --தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலைஸ்ரீ மரகதாசலேஸ்வரர-மரகதவல்லி அம்பாள் கோவிலின் மலைகீழ் அமைந்து உள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு
30-03-2017 பங்குனி (17) மாத வியாழக்கிழமை பரணி நட்சத்திர தினத்தன்று காலை 10.30 மணிக்கு மேல் பூஜை அபிஷகம்,ஆராதனை மற்றும் 12.00 மணிக்கு மேல் அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீமரகதாசலேஸ்வரர் மரகதவல்லி அம்பாள் மற்றும் ஸ்ரீபோகர் மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :+9842858236

Tuesday, 28 March 2017

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!

செல்வ வளத்தை அள்ளித் தரும் மூன்றாம் பிறை தரிசனம்!!


சந்திரனுக்கு தட்சன் தனது 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார்;அவர்களில் ரோகிணி,கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார் சந்திரன்;இதனால் மனம் வருந்திய மற்ற மனைவிகள் தனது தந்தையிடம் புகார் செய்தனர்;

தட்சன் தனது மருமகன் சந்திரனைச் சந்தித்து, “நீ அழகாக இருப்பதால் தான் ஆட்டம் போடுகிறாய்;உன் முகத்தின் பிரகாசம் மறையட்டும்” என்று சாபம் இட்டார்;

இதனால் சந்திரனின் கலைகள் தேயத் துவங்கின;இதுவே வளர்பிறை,தேய்பிறை என்று உருவாகக் காரணமாகவும் அமைந்தது;
ரோகிணியும்,கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்;தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்ததால்,சாபத்தைத் திரும்பப் பெற முடியவில்லை;

உடனே ரோகிணியும்,கார்த்திகையும் சிவனை நினைத்து தவம் செய்யத் துவங்கினர்;அவர்களது நீண்ட கடும் தவத்தினால் சிவன் அவர்களுக்கு காட்சியளித்து அவர்களின் கோரிக்கையை செவிமடுத்தார்;

கார்த்திகை,ரோகிணி இருவரின் கோரிக்கையை ஏற்று,அவர்களின் கணவன் சந்திரனின் சாபம் தீர,சந்திரன் தனது தலை மீது அமரும் பாக்கியத்தை அருளினார்;

ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசைக்கு மூன்றாவது நாளன்று வரும் திதி த்ரிதியை ஆகும்;மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால்,சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம்;தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வற்றாத செல்வ வளத்தைப் பெறுவார்கள்

Saturday, 25 March 2017

கடும் வெப்ப காலநிலையால் தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து உதவுங்கள்


கடும் வெப்ப காலநிலையால் தாகத்தால் தவிக்கும் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து உதவுங்கள்





தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் மனிதர்களால் மட்டுமல்ல விலங்குகள், பறவைகளாலும் இதனை தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீரை தேடி கால்நடைகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பறவைகளும் தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலையை காணக் கூடியதாக உள்ளது.

ஆகவே, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் அதன் சூழலில் அகன்ற பாத்திரத்துக்குள் தண்ணீர் வைத்து பறவைகள், விலங்குகளின் தாகத்தை தீர்க்க உதவுங்கள்.



தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை மாற்றி விடுங்கள். நுளம்பு பெருகும் அபாயத்தை இதன் மூலம் தடுக்கலாம்.

தாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு

தாங்க முடியாத துன்பம் துயரம் அகல குலதெய்வ வழிபாடு





குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின்குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்கேண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் அனுகிரகம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

Friday, 24 March 2017

பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்

பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்
(25.03.2017 சனி பிரதோஷம்)


பிரதோஷத்தன்று வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்



நான் ஏழையாயிற்றே! சுவாமி கும்பிட ஐந்து ரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கக்கூட வசதியில்லாத நான், தங்கப்பூவைப் பற்றி சிந்திக்க முடியுமா! அதிலும் ஆயிரம் தங்கப்பூ!'' என்பவர்கள் இதைப்படியுங்க!

சிவபெருமானுக்கு விருப்பமானது வில்வார்ச்சனை. பிரதோஷத்தன்று ஒரு வில்வ இலையால் அர்ச்சித்தால், ஆயிரம் தங்கப்பூக்களால் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
இந்த வில்வ இலையையும் காசு கொடுத்து வாங்க வேண்டாம். அநேகமான சிவன் கோயில்களுக்குள் வில்வமரம் இருக்கிறது. அதிலிருந்து உதிரும் இலைகளைக் கழுவி பூஜித்தாலே போதும். முற்பிறவியில் செய்த கொடிய பாவம் கூட வில்வ அர்ச்சனையால் நீங்கும். வில்வமரத்தில் திருமகள் நித்யவாசம் செய்வதாக ஐதீகம். வில்வார்ச்சனை மூலம் உலகிலுள்ள செல்வம் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பதாக பொருள். "நமஸ்தே பில்வதரவே' என்ற மந்திரம் சொல்லி வில்வத்தை பறிப்பதோ, எடுப்பதோ நல்லது. மந்திர சாஸ்திரப்படி, லட்சுமி கணபதி, வில்வமரப்பலகையில் வரைந்து வழிபடுவது மிகவும் சிறப்பு. அதர்வணவேதத்தில் வில்வத்திற்கு 108 சூக்த மந்திரங்கள் உள்ளன. இதனை சிவராத்தியன்று படிப்பார்கள். காளஹஸ்தி புராணத்தில் வில்வத்தின் மகிமை கூறப்பட்டுள்ளது. வில்வ இலை

பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்




பிரதோஷம் அன்று சிவன் கோயில்களில் எப்படி வணங்க வேண்டும்

(25.03.2017 சனி பிரதோஷம்)

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வணங்கும் முறையை பற்றி கடண்பவன புராணம் தெரிவிப்பது யாதென்றால், நந்தியை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வரவேண்டும். நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வரவேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். இப்படி பரிதட்சணம் செய்து வழிபடுவது "சோமசூத்திர பிரதட்சணம் என்று கூறப்படுகிறது. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு "ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கோடி கிட்டும்.

ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு குருபூஜை


ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு குருபூஜை






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

கேரளா ,ஓமலூர்
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமி .கோவில் கேரளா ,ஓமலூரில் . அமைந்து உள்ளது .
ஸ்ரீ சிவ பிரபாகர சித்த யோகி சுவாமிக்கு (27-03-2017) பங்குனி மாதம் திங்கட் கிழமை பூரட்டாதி நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு குருபூஜை , அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிவ பிரபாகர் சித்த யோகி சுவாமி குருவருள் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
98428 58236

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்அமாவாசை யாகம்



உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
27.03.2017 திங்கட் கிழமை பங்குனி மாதம்14 அன்று நடைபெறுகிறது.அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்
ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். 

செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். 

புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது 

விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.
அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். 

அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்

யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.

இந்த மண்ணை மிதித்து புனித சேஷ்திரமகிமை இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்படிபட்ட புனித சேஷ்திரம் இது .
.அனைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : +91 98428 58236

Thursday, 23 March 2017

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்



இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||
நன்றி :M.சூர்யா -
திருநெல்வேலி

Wednesday, 22 March 2017

குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிக்க செய்யும் பெளர்ணமி விரதம்

குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிக்க செய்யும் பெளர்ணமி விரதம்





பெளர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. கடவுள் நம்பிக்கை கொண்ட பலரும் பெளர்ணமி விரதம் இருப்பதையும், திருவண்ணாமலை கிரிவலம் செல்வதையும்,

இன்னும் சிலர் தங்கள் ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெளர்ணமி பூஜையில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பெளர்ணமியன்று சிறு குழந்தைகளை விரதம் இருக்க பழக்கினால் மிகவும் சிறப்பாகும். குழந்தைகள் பெளர்ணமி விரதம் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் வளமான வாழ்வை பெறுகிறார்கள்.

தொடர்ந்து அம்பாளை நினைத்து குழந்தைகள் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து சிவன் கோவில் சென்று சிவன், அம்பாள், சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் குழந்தைகளின் ஞானம், நினைவாற்றல் அதிகரித்து அவர்களின் கல்வி சிறக்கும் என்பது உண்மை

Tuesday, 21 March 2017

ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்









அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள 

ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,
ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு 23-03-2017பங்குனி 10 மாத வியாழகிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Wednesday, 15 March 2017

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி விஸ்வாமித்திரமகரிஷி கோவில்

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி
விஸ்வாமித்திரமகரிஷி கோவில்






















விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும்.
இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது



திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
18.03.2017 சனி கிழமைஅனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு

cell : 8754016236
9843016651
9842078733

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்


ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்




ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 18.03.2017  சனி கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9843016651
        9842078733
இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். 

இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . 
விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படிகொன்றதால்,
இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 

300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.

விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் 

விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார்.

 தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். 

இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) 

அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Tuesday, 14 March 2017

மானாமதுரை ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம் ஆராதனை

மானாமதுரை ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி அபிசேகம் ஆராதனை


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள 
ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு 16.03.2017 பங்குனி மாதம் (03) வியாழக்கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும்
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 
காரைக்காலில்அமைந்துள்ள
 ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு
16.03.2017 பங்குனி மாதம் (03) வியாழக்கிழமை
சுவாதி நட்சத்திரதன்று அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார்
திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

Monday, 13 March 2017

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,







ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் (ஜங்ஷன்) இருந்து சரியாக 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது 
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயச் சிறப்புகள் :-

இந்தியாவிலேயே ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள்,கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயில் என்ற சிறப்பு உடைய ஆலயம்.

இத்திருத்தலத்தில் உச்சிஷ்ட கணபதி அமர்ந்த திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார்.

வற்றாத ஜீவநதியும், வேதங்களில் புகழப்பட்ட புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதி வடக்கு முகமாக (உத்திர வாஹினி) ஓடுகின்ற பகுதியில் அமைந்துள்ளது.

திருக்கோயிலின் அருகில் பைரவ தீர்த்தம் என்னும் உன்னதமான தீர்த்தக் கட்டம் உள்ளது.இதில் நீராடி விநாயகரை வழிபடத் தோஷங்கள் யாவும் நீங்கும்.

தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் தேதி அன்று சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் அதிசயம் நிகழ்கிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் ஈசான பாகத்தில் அமைந்துள்ள ஒரே விநாயகர் ஆலயம் இது மட்டுமே.

இந்த ஆலயம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வழிபாட்டின் பயன்கள் :-

திருமணத்தடை நீங்கும்.கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருகும்.பல ஜோதிடர்கள் பரிகார ஸ்தலமாக இவ்வாலய தரிசனத்தைப் பரிந்துரைப்பதால் பல அன்பர்கள் நாடெங்கிலும் இருந்து வந்து கிரக தோஷங்கள் நீங்கிப் பலன் பெற்று வருகின்றனர்.

.

ஆலயத்திற்கு வரும் வழி :-

ரயிலில் வருபவர்கள் :- திருநெல்வேலி சந்திப்பு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி எதிரில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது.அதனுள் ஒரு 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது.




பஸ்ஸில் வருபவர்கள் :- திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் வந்து மேற்சொன்ன படி வந்து சேரலாம்.அல்லது திருநெல்வேலி வண்ணார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்தும் வரலாம் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது .




காரில் வருபவர்கள் :- மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வடக்கே இருந்து வருபவர்கள் சங்கர்நகர் தாண்டி 5 கிலோ மீட்டரில் தச்சநல்லூர் பைபாஸ் வரும் அதில் இருந்து கன்யாகுமரி சாலையில் 1.5 கிலோ மீட்டர் தூரத்தில் ஆற்றுப் பாலத்துக்கு சிறிது முன்னால் இடது புறம் வழிகாட்டும் பலகை இருக்கும் அந்த வழியில் வரவும்.
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

நன்றி ! வாழ்க வையகம் !!வாழ்கவளமுடன் !!

Wednesday, 8 March 2017

ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள்

ஸ்ரீ ல ஸ்ரீ சற்குரு பழனி கணக்கம் பட்டி ஸ்வாமிகள்

அன்பு மாறா இல்லறமும்
ஆசை இல்லா தர்மமும்
இன்னல் தாரா உறவுகளும்
ஈகை உள்ள நெஞ்சமும்
உண்மை உணரும் லட்சியமும்
ஊக்கம் அளிக்கும் நட்பும்
என்றும் மாறா நற்குணமும்
ஏவல் கேட்கும் பணிவும்
ஒற்றுமை நீங்கா இயக்கமும்
ஓம் கார பெருமையும்
பிறப்பு அறுக்கும் ^ஒளஷதமும்
ஒன்று சேர தந்து அருள்வாய்
சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்

ஞானத்தின் முதற் படிகள்....
1.உண்மை மறவாமல் இருத்தல்...
2.நற்சிந்தனையை வளர்த்தல்...
3.நான் என்ற மமதை அகற்றுதல்..
4.பிறர் குறை காண்பதை விட தன் குறையை நிவர்த்தி செய்தல்...
5.பிறர் மனதை துன்புறுத்தாமல் இருத்தல்....
6.தன்னை நோக்கு எது வந்ததோ அதை மனதார ஏற்றல்...
7.சான்றோன் சபையில் அமைதி காத்தல்.....
8.முகத்தில் என்றும் மகிழ்ச்சி பொலிவுடன் இருத்தல்...
9.நிகழ்காலத்திலே வாழ்தல்....
10.எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை மனதில் கொண்டு வாழும் வரை உத்தமன் என்று மற்றவர் மனதில் இடம் பிடித்தல்...
இவை கொண்டு நடைமுறைக்கு வந்தால் ஞானம் உங்கள் எண்ணத்தில் குடி புகும்

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம்நட்சத்திரஅபிஷகம்,ஆராதனை, அன்னதர்மம்

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம்நட்சத்திரஅபிஷகம்,ஆராதனை,
அன்னதர்மம்






மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை ,அபிஷகம்,ஆராதனை,அன்னதர்மம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,
ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,

ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்
10-03-2017  வெள்ளிகிழமை
ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று
காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம், ஆராதனை,அன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள்

மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537


மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட
ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது

Saturday, 4 March 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
10-03-2017 வெள்ளி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651







பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள்.
அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே. கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.
நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.
அப்படி ஒரு சிறப்பம்சம்.


சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.
ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.
இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.


இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது


அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார்.
அங்குள்ள வனதுர்க்கையம்மன்.






காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்தவனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அத்ரிமரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது

அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்.

Friday, 3 March 2017

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்



இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||
நன்றி :M.சூர்யா -
திருநெல்வேலி

Wednesday, 1 March 2017

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக குறைந்து விடும்




ஆலயங்களும், அமைவிடங்களும் :



அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்






இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது


கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்



ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்



இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.


மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்



திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்



புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.


ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு


மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ




பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது


உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.


ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.



சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்


இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்




சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்




விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்

.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன



அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.



கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்


இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.



மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)



பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.








உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.








திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்




இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்






அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது.








சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது










பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்




இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது









உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூர



ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்


இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி