நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 30 April 2016

அமாவாசை குலதெய்வ வழிபாடு

அமாவாசை குலதெய்வ வழிபாடு



குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

ராவணனிடம், ஸ்ரீராமர் விரும்பி கேட்ட உபதேசங்கள்


ராவணனிடம், ஸ்ரீராமர் விரும்பி கேட்ட உபதேசங்கள்







ராவணனிடம், ஸ்ரீராமர் விரும்பி கேட்ட உபதேசங்கள் – அரியதொரு வர லாற்றுத் தகவல்
சீதையை கடத்திய இராவணனின் படைகளை, அவனது மகன், மற்றும் சகோதரர்களையும் தோற்கடித்து, ராவணனையும் கொன்று, சீதையை மீட்டார்.அச்சமயத்தில்
ஸ்ரீராமரின் தாக்குதல்களால் நிலைகுலைந்து மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராம ன், பவ்யமாக , அவனது காலடியிலே யே நின்று , கேட்ட உபதேசங்கள் இது!
இது இராமர். மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற் றி பெற நம் எல்லோரும் கடைபிடிக்க‍ வேண்டி ய முக்கிய உபதேசங்கள் இது
ஸ்ரீராமர், இராவணனிடம், ஐயா, உங்கள் ஞானம் உங்களோடு அழி ந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினார் .
அப்போது ஸ்ரீராமர் கேட்டுக்கொண்டபடி யே இராவணனும் ஸ்ரீராமருக்கு உபதேசித் தான் ……..
அந்த உயரிய உபதேசங்கள் இதோ


1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனி டமோ, சகோதரனிடமோ பகை கொள்ளா தே . உடனிருந்தே கொல்வர்.
2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .
4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .
5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள்.
6.இறைவனை, விரும்பினாலும் மறுத்தாலும், முழுமை யாகச் செய்.

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை










நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை





பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆலஇலை,வெற்றிலை,
மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
நன்றி: அகஸ்திய விஜயம்,பக்கம் 38,டிசம்பர் 2009.

Friday, 29 April 2016

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி


ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு

சனிக்கிழமையன்று  காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச் சுற்றிப்போட வேண்டும் ,


அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படிமாறியதும்,அதன் இழந்துபோய்விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்
மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் பரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன் அடையலாம்.

இதை இன்று இரவு (வெள்ளிக்கிழமைகளில்) 8-9 மணிக்குள் செய்தால் பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.

சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும்.

அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) வைத்து விடவும். தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம். இவை தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில் மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப.


---நன்றி Vamanan Sesshadri

Wednesday, 27 April 2016

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்


விஸ்வாமித்திரமகரிஷி குருபூஜை படங்கள்



விஸ்வாமித்திரமகரிஷி குருபூஜை படங்கள்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிற விஜயாபதியில் அமைந்துள்ள 
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 
25.04.2016  திங்கள் கிழமை அனுஷம் நட்சத்திர அன்று குருபூஜை அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெற்ற படங்கள்















Tuesday, 26 April 2016

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு உத்திராட நட்சத்திர அபிஷகம்,ஆராதனை அன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர்
(காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, 
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு
28-04-2016 வியாழகிழமை சித்திரை 15
 உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Saturday, 23 April 2016

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு குருபூஜை

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு குருபூஜை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிற விஜயாபதியில் அமைந்துள்ள
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 25.04.2016
சித்திரை மாத(12) திங்கள் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுகுருபூஜை சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : :9842078733
cell : :9842078733
9043942091,
9843016651















விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.
இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.


4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்


விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோர கிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது


Thursday, 21 April 2016

கற்றாழை பல நோய்க்கு ஒரூ மருந்து



கற்றாழை பல நோய்க்கு ஒரூ மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

சித்தர்களின் காய கல்ப மூலிகைகளில் முதன்மையானது கற்றாழை
எளிதில் எங்கும் கிடைக்கும் சுலபமாக உபயோகப்படுத்தலாம் .

பயன் படுத்தும் விபரம்


கற்றாழை ,சோற்றுக் கற்றாழை ,குமரி ,கன்னி என பல பெயர்கள் உண்டு
தேரையர் இதை பயன்படுத்தினால் இளமையாக வாழலாம் என குறிப்பிட்டுள்ளார் .

விஷ முறிவிற்கு

உடலில் இருக்கும் எவ்விதமான விஷமானாலும்
கற்றாழையின் தோலை சீவி சதையை மட்டும் ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் சம எடை நன்னாரி வேர் இவை இரண்டையும் கலந்து சாப்பிட்டால் விஷம் முறியும் .இதை சாப்பிட இயலாதவர் இதனுடன் கொஞ்சம் நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் .
மூன்று நாள் உணவுக்குமுன் சாப்பிட்டால் நன்று .

அல்சருக்கு கை கண்ட மருந்து

பல விதமான அல்சருக்கு உணவுக்கு முன் சிறிதளவு கற்றாழை சோறை எடுத்து சாப்பிட்டால் குணமாகும் .கசப்பின் காரணமாக சாப்பிட இயலாதவர் கற்றாழை ஜூஸ் வாங்கி 30 மில்லி தினமும் குடித்து வந்தால் அல்சர் குணமாகும் .

தீப்புண் ஆருவதற்கு

சமையல் செய்யும் போது ஏற்படும் தீப்புண்களுக்கு
மேல் பூச்சாக பூசி வந்தால் புண் விரைவில் ஆறும் .

தலைமுடி நன்கு வளர

100 கிராம் கற்றாழை சோறை 500 மில்லி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வைத்துக்கொண்டு தினமும் தலைக்கு தடவி வந்தால் முடி கொட்டுவது நின்று நன்கு வளரும் ,தலை,கண் குளிர்ச்சியடையும் .

பொருளாதாரம் தரும் குபேர விரதம்

பொருளாதாரம் தரும் குபேர விரதம்





பூசம் நட்சத்திரம் வரும் நாட்களிலோ அல்லது நிறைந்த அமாவாசை நாட்களிலோ அசைவம் சேர்க்காமல், விரதம் இருந்து குபேரனை மனதில் தியானித்து குபேரனுக்கு பூ பழங்கள் படைத்து,

ஏதாவது இனிப்பான நிவேதன பொருளை வீட்டில் தயார் செய்து, அதை குபேரனுக்கு படைக்க வேண்டும்.

குபேரனை மனதில் தியானித்து பொருளாதார உயர்வுக்காகவும்,வறுமை நிலை போகவும் மனதால் தியானித்து வரவும். முடிந்தவரை குபேரனின் கீழ்க்கண்ட 108 துதிகளை சொல்லி வரவும். கண்டிப்பாக பொருளாதார பிரச்சினைகள்,வறுமை நிலைகளில் இருந்து குபேரன் உங்களை காப்பார்.

* அழகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே போற்றி சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி சிவபூஜை பிரியனே போற்றி சிவ பக்த நாயகனே போற்றி சிவ மகா பக்தனே போற்றி சுந்தரர் பிரியனே போற்றி சுந்தர நாயகனே போற்றி சூர்பனகா சகோதரனே போற்றி செந்தாமரைப் பிரியனே போற்றி செல்வ வளம் அளிப்பவனே போற்றி செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி சொர்ணவளம் அளிப்பவனே போற்றி சொக்கநாதர் பிரியனே போற்றி சௌந்தர்ய ராஜனே போற்றி ஞான குபேரனே போற்றி தனம் அளிக்கும் தயாபரா போற்றி தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி திருவிழி அழகனே போற்றி திருவுரு அழகனே போற்றி திருவிளக்கில் உறைவாய் போற்றி திருநீறு அணிபவனே போற்றி தீயவை அகற்றுவாய் போற்றி துன்பம் தீர்த்திடுவாய் போற்றி தூயமனம் படைத்தவனே போற்றி தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி தேவராஜனே போற்றி பதுமநிதி பெற்றவனே போற்றி பரவச நாயகனே போற்றி பச்சை நிறப் பிரியனே போற்றி பவுர்ணமி நாயகனே போற்றி புண்ணிய ஆத்மனே போற்றி புண்ணியம் அளிப்பவனே போற்றி புண்ணிய புத்திரனே போற்றி பொன்னிற முடையோனே போற்றி பொன் நகை அணிபவனே போற்றி புன்னகை அரசே போற்றி பொறுமை கொடுப்பவனே போற்றி போகம்பல அளிப்பவனே போற்றி மங்கல முடையோனே போற்றி மங்களம் அளிப்பவனே போற்றி மங்களத்தில் உறைவாய் போற்றி மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி முத்து மாலை அணிபவனே போற்றி மோகன நாயகனே போற்றி வறுமை தீர்ப்பவனே போற்றி வரம் பல அருள்பவனே போற்றி விஜயம் தரும் விவேகனே போற்றி வேதம் போற்றும் வித்தகா போற்றி வைர மாலை அணிபவனே போற்றி வைகுண்டவாசப் பிரியனே போற்றி நடராஜர் பிரியனே போற்றி நவதான்யம் அளிப்பவனே போற்றி நவரத்தினப் பிரியனே போற்றி நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி வளம் யாவும் தந்திடுவாய் போற்றி ராவணன் சோதரனே போற்றி வடதிசை அதிபதியே போற்றி ரிஷி புத்திரனே போற்றி ருத்திரப் பிரியனே போற்றி இருள் நீக்கும் இன்பனே போற்றி வெண்குதிரை வாகனனே போற்றி கைலாயப் பிரியனே போற்றி மனம் விரும்பும் மன்னவனே போற்றி மணிமகுடம் தரித்தவனே போற்றி மாட்சிப் பொருளோனே போற்றி யந்திரத்தில் உறைந்தவனே போற்றி யௌவன நாயகனே போற்றி வல்லமை பெற்றவனே போற்றி குபேரா போற்றி போற்றி

இந்த போற்றியை விரதம்,பூஜை இல்லாத சாதாரண நாட்களிலும் தொடர்ந்து சொல்லி வந்தாலும் மிகவும் சிறப்பான பலன்களை அளிக்க கூடியதாகும்.எனவே குபேரனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து நற்பலன்களை பெறுவோமாக

கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம்








கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட பரிகாரம்


மனிதர்களைத் தாக்கும் பொறாமை சக்திகள் அவர்களின் கண்கள், மூக்கு, காது போன்ற ஒன்பது துவாரங்கள் வழியாக உடலில் புகுந்து துன்பத்தை விளைவிக்கின்றன.

எனவே பொறாமை எண்ணங்களின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க விழைவோர் அவர்கள் உடலில் உள்ள நவ துவாரங்களைத் தூய்மைப்படுத்தும் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருஷ்டித் துன்பங்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.


• மனித உடல் ஒன்பது சரீரங்களின் தொகுதியாகும். கோயில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மனித உடலின் தூல ரூபமாகும். எனவே, ஒன்பது கலசங்களுக்குக் குறையாமல் உள்ள கோயில் கோபுரங்களை தினந்தோறும் குறைந்தது மூன்று நிமிடங்கள் கண்ணார தரிசித்து வழிபடுதலால் மனித சூட்சும சரீரங்கள் தூய்மை பெறுவதுடன் உடலில் உள்ள நவதுவாரங்களும் சீர் பெறும். அதனால் திருஷ்டி துன்பங்களின் தீய விளைவுகள் தவிர்க்கப்படும்.


• மனித உடலின் நவதுவாரங்களுக்கு அதிபதியாக விளங்கும் தெய்வங்களே விநாயகப் பெருமானும், ஆஞ்சநேய மூர்த்தியும் ஆவார்கள். உலகிலேயே மிகப் பெரிய சுயம்பு பிள்ளையார் மூர்த்தியான திருச்சி உச்சிப் பிள்ளையார் அருளும் மலைக் கோட்டையை ஒன்பது முறைக்குக் குறையாமல் கிரிவலம் வந்து வணங்குவதால் கண் திருஷ்டி துன்பங்கள் விலகும்.


• ராமபிரான் கயிலை ஈசனை வழிபடுவதற்காக திருக்கயிலையிலிருந்து சிவலிங்க மூர்த்தியைப் பெற்று வருமாறு ஆஞ்சநேயரை அனுப்பினார் அல்லவா? அப்போது ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் எம்பெருமானை லிங்க வடிவில் பூஜித்து அதன் பின்னரே ராமேஸ்வரத்திற்கு சிவலிங்கத்தைக் கொண்டு வந்தார். அவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி கயிலை ஈசனை வழிபடும் சித்திரத்தை அல்லது உருவப் படத்தை அல்லது ராமேஸ்வரத்தில் உள்ள விஸ்வநாத லிங்க மூர்த்தியை தொடர்ந்து வழிபடுவதால் கண் திருஷ்டிக் கோளாறுகள் நம்மை அண்டாது.


• பொதுவாக, ஜாதக ரீதியாக செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சமாக விளங்குபவர்கள் கண் திருஷ்டி துன்பங்களால் பாதிக்கப்படுவதில்லை. முருக பக்தர்களும், கௌமார உபாசகர்களையும் திருஷ்டித் துன்பங்கள் அண்டாது. எனவே குமரன் அருளும் மலைத் தலங்கள் யாவும் கண் திருஷ்டியை நீக்கும் தலங்களே. அதிலும் சிறப்பாக திருச்செங்கோடு, செங்கோட்டை அருகே திருமலை, கோயம்புத்தூர் அருகே அனுவாவி மலை போன்ற குமரத் தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த கண் திருஷ்டிக் காப்புத் தலங்களாக சித்தர்களால் போற்றப்படுகின்றன.

Wednesday, 20 April 2016

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்

ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதானம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரித்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள 
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் சித்திரை மாதம் (8) வியாழகிழமை 21.04.2016 பௌர்ணமி அன்று இரவு அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

cell :9787521143 ,98428 5823

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம் திருவிளக்குபூஜை


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 
பௌர்ணமி -தங்கக் கவசம் திருவிளக்குபூஜை




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

சித்திரை மாதம் (8) வியாழகிழமை 21.04.2016
காலை 10.00 மணிக்கு மேல் சித்ரா பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜை
மற்றும் மாலை 6.00மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

Monday, 18 April 2016

ஸ்ரீ தையல் நாயகி -ஸ்ரீ வைத்திஸ்வரன் கோவிலுக்கு பாத யாத்திரை


ஸ்ரீ தையல் நாயகி -ஸ்ரீ வைத்திஸ்வரன் கோவிலுக்கு பாத யாத்திரை





ஸ்ரீ தையல் நாயகி -ஸ்ரீ வைத்திஸ்வரன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 
 மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா கோவில் பக்தர்கள் சார்பாக பக்தர்களுக்கு 
23-04-2016 சித்திரை 10 சனி கிழமை அன்று
மாலை திருக்கருக்காவுரீல் அன்னதானம் வழங்கபடுகிறது
மேலும் தகவல்கள்களுக்கு
9842858236
9442319485

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அபிஷகம், ஆராதனைஅன்னதானம்

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு உத்திரம் நட்சத்திர அபிஷகம், ஆராதனை அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள 
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு,ஸ்ரீ அமிர்தவல்லி,
ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் , ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு மற்றும் அடிவாரத்தில் 
ஸ்ரீ ஆதி விநாயகர் , ஸ்ரீ செங்கதுரை அய்யன்க்கு 19.04.2016 செவ்வாய் கிழமை சித்திரை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
98428-58236



Thursday, 14 April 2016

அத்ரி மலையி!ன் அற்புதங்கள்



அத்ரி மலையி!ன் அற்புதங்கள்







பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள்.
அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே. கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.
நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.
அப்படி ஒரு சிறப்பம்சம்.


சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.
ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.

இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.


இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது


அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார்.
அங்குள்ள வனதுர்க்கையம்மன். 
காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள அத்ரிமரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது

அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்.




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
16-04-2016 சனி கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651
மன்னார்குடி பூவனூர்
அகஸ்தியருக்கு ஆயில்யம் நட்சத்திர
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 
9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் 
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும்
16-04-2016 சித்திரை (3) மாதம் சனி கிழமை
ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00 வரை
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

Sunday, 10 April 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷகம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு அபிஷகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14.04.2016 அன்று துன்முகி ஆண்டு சித்திரை (1) மாத தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . வியாழ கிழமை புத்தாண்டு தினத்தன்று சிறப்பு அபிஷகம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு புத்தாண்டு கனி காசு மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
98428 58236

Saturday, 9 April 2016

எலுமிச்சம்பழ மாலை


எலுமிச்சம்பழ மாலை




எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன்அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானதுஅவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்துபயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும்அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில்ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர்,பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் எனமிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சிலஅனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத்தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும்மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள்ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும்எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தைவெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது.எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில்எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப்பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமதுகாரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம்நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவேதங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோபழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள்.முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோமாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி


ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும்,இந்த தலைமுறையில் நீங்கள் தெரிந்து செய்த பாவங்கள், தெரியாமல் செய்தபாவங்கள்,அறிந்து செய்த பாவங்கள்,அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு

சனிக்கிழமையன்று காலையில் வன்னி மரம் அருகே அமைந்துள்ள விநாயகர்க்கு பச்சரிசியை ஒரு கையில் அள்ளி (நன்கு பொடி செய்து) சூரியநமஸ்காரம் செய்துவிட்டு மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த பச்ச அரிசிமாவை வன்னி மரம்விநாயகரைச் சுற்றிப்போட வேண்டும் ,


அதை எறும்பு தூக்கிச் செல்லும்.அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித்தூக்கிச்சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அதன் கெடும்தன்மை நீங்கிவிடும்.

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக்கொண்டிருப்பார்கள்.


இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன்இழந்துபோய்விடும். இதனால்,நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும்.ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம்.இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ வசந்த நவராத்திரி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ வசந்த நவராத்திரி


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ வசந்த நவராத்திரி பங்குனி மாதம்(26) 08.04.2016 வெள்ளிகிழமை முதல் சித்திரை மாதம்(2) 15.04.2016 வரை

உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வங்களை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்
பங்குனி மாதம்(26) 08.04.2016 வெள்ளிகிழமை முதல் சித்திரை மாதம்(2) 15.04.2016 வரை
ஸ்ரீ வசந்த நவராத்திரி நடைபெறுகிறது


தினமும் காலை 7.00 மணிலிரூந்து 11.00மணி வரை கணபதிஹோமம், மஹன்யாச ஸஹித எகாதச ருத்ராபிசேகம்,

தினமும் மாலை4.00 மணிலிரூந்து 6.30 வரை
ஸ்ரீ துர்கா ஹோமம்,தீபாராதனை

இந்த யாகத்தில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236