நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 5 April 2016

முன்னோர்கள் வழிபாடு செய்யும் முறை !

முன்னோர்கள் வழிபாடு செய்யும் முறை !
எத்தனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும். தெரியவில்லை யென்றால் முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அவர்கள் இறந்த தேதிக் குண்டான திதியை தெரிந்து கொள்ளுங்கள்.


மறைந்த முன்னோர்களின் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி செய்ய வேண்டும்.

தாய் வழி தந்தை வழி ,உங்கள் தாயாரின் தகப்பனார் தாயார் உங்கள் தகப்பனாரின் தகப்பனார் தாயார் உங்கள் தாயாரின் தாத்தா பாட்டி
உங்கள் தகப்பனாரின் தாத்தா பாட்டி உங்கள் தாயாருடைய தகப்ப னாரின் தாத்தா பாட்டி உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா பாட்டி
மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தர்ப்பணத்தை எங்கு வேண்மானாலும் செய்யலாம்.

ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம்.

மனம் சுத்தமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

தர்ப்பணம் செய்வது பற்றி தங்களுக்கு முறைகள் தெரிந்திருந்தால் தாங்களே செய்து கொள்ளலாம்.

எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது.

மதியம் சாப்பிடலாம்.

கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது.

மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும்.

பச்சரிசி உண்ண வேண்டும்.

இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது.

இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும்.

பின் தந்தை வழியில் உள்ளவர்களுக்கு.

பின் தாய் வழியில் உள்ளவர்களுக்கு, செய்தல் வேண்டும்.

புடலங்காய் ,வாழைக்காய் , அன்ன தானம் மிகவும் நல்லது.

No comments:

Post a Comment