நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 31 January 2016

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்





ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 03.02.2016 தை 20 மாத புதன் கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்
cell : :9842078733
9043942091,
9843016651
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.


.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )
ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

Saturday, 30 January 2016

தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு

தேய்பிறை அஷ்டமியன்று 
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு

தேய்பிறை அஷ்டமியன்று
 ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்மைகள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.

தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்


தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்



#மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்  ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று  சிறப்பு அபிஷேகம் நடைபெறும்


#திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்து அதற்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகிறது .
  

#திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

#தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் பிரதிஷ்டை செய்து அதற்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகிறது .
தேய்பிறை அஷ்டமி அன்று  சிறப்பு அபிஷேகம் நடைபெறும் 

#திருவண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

#அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

#சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

#திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

#திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


#திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


#காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
#பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

#ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

#சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று!!!

சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை



சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை






தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். இந்த கிராமத்தில் ஸ்ரீவாலைகுருசாமி கோவில் இருக்கிறது. இத்தலத்தில் சித்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமாக வணங்கிய வாலாம்பிகை அம்மன் அருள்பாலித்து வருகிறாள். இந்த அம்மனுக்கு பாலாம்பிகை என்ற பெயரும் உண்டு.

கொம்மடிக்கோட்டையில் குடிகொண்டிருக்கும் வாலாம்பிகை, தனக்கு ஒரு ‘குரு’ வேண்டும் என்று எண்ணி, வடக்கில் இருந்து ஸ்ரீவாலைகுருசாமியையும் (சிவன்), காசியானந்தரையும் சுமார் 800 வருடங்களுக்கு முன்பு இந்த இடத்துக்கு அழைத்து வந்ததாகவும், அவர்களுக்கு தன்னுடைய இடத்திலேயே ஆலயம் அமைத்து வணங்கிய தாகவும் தல வரலாறு கூறுகிறது.

இங்கு வாலைகுருசாமியும், காசியானந்தரும் ஒரே கருவறையில் பிரதான தெய்வங்களாக காட்சி தருகின்றனர். அபூர்வமாக காட்சி தரும் அந்த இருவரையும் முழுமையாக சரண் அடைந்தால், குருவின் அனுக்கிரகத்தையும், அனைத்து பாக்கியங்களையும் பெறலாம். மேலும் வாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம்.

இதனை அறிந்த சித்தர்கள் இங்கு வந்து, வாலைகுருசாமி–காசியானந்தருடன் வாலாம்பிகையையும் வணங்கி இருக்கிறார்கள். இதற்கு சித்தர்கள் பாடிய பாடல்கள் சான்றாக உள்ளன.

வாலாம்பிகை பற்றி திருமூலர் தனது திருமந்திரத்தில்,

‘சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண்பிள்ளை
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்
பத்தியை பாழில் உருத்த அப்பாவிகள்
சுத்திய நாய் போல கதறுகின்றனவே’

– என்று பாடி உள்ளார்.

இத்தகைய சிறப்பு மிக்க ஸ்ரீவாலைகுருசுவாமி கோவிலில் ஸ்ரீசந்திரசேகரர் சமேத மனோன்மணி அம்பாள் சன்னிதி, ஸ்ரீகன்னி விநாயகர் சன்னிதி, ஸ்ரீபாலமுருகன் சன்னிதி,
ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதிகளும் உள்ளன.

மனோன்மணி என்பது அம்பிகையின் திருநாமங்களில் ஒன்று. மனதை அழித்து ஞானநிலைக்கு அழைத்துச் செல்பவள் என்பது இதன் பொருள். புருவ மத்திக்கு மேலே, பிரம்ம மந்திரத்திற்கு கீழ் உள்ள, பிந்து முதலிய எண் வகை நிலைகளில் இறுதி நிலை உன்மனி எனும் மனோன்மணியாகும். அங்கு உறைவதால் இவளுக்கு மனோன்மணி என்றும் பெயர். பற்றற்ற நிலையில் மனம் இயங்குதல். அற்று நிற்கும் நிலை உன்மனி. அந்த நிலையில் அருள்புரிவதால் அம்பிகைக்கு இப்பெயர் ஏற்பட்டது. மனோன்மணி வடிவில் இருப்பதும் பாலாம்பிகையே.

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி, சொர்ண ஆகார்ஷண பைரவர் சன்னிதி அமைந்துள்ளது. சித்தர்கள் அனைவரும், அஷ்டமா சித்திகளை எளிதில் பெறுவதற்கு சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபாடு செய்தனர். அவரது அருளாசியாலேயே அனைத்து சித்திகளையும் தடையின்றி எளிதாகப் பெற்றனர். அகத்திய முனிவர், சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டு பல வரங்களை பெற்று மகிழ்ந்தார்.

மனதை ஸ்திரப்படுத்தி அன்னை ஸ்ரீவாலையை அணுகுவதற்குரிய மனப்பக்குவத்தை பைரவர் வழிபாடு மூலம் தடையின்றி பெறலாம். நாமும் ஸ்ரீ சொர்ண ஆகார்ஷண பைரவரை வழிபட்டால், நமது ஜென்ம பாவ வினைகள் அனைத்தும் தீரும். நினைத்த காரியம் தடையின்றி எளிதில் கைகூடும். ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெறுகிறது.

கோவிலின் தல விருட்சமாக மஞ்சணத்தி மரம் உள்ளது. இந்த மரத்தின் இலைகளை நோய் தீர்க்கும் மருந்தாகவும் பக்தர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆரம்ப காலத்தில் கோவிலில் இருந்த மஞ்சணத்தியின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன், அந்த மரம் பட்டுப்போனது. பக்தர்கள் மனக்கவலையுடன் இருந்தனர்.

புதிய மஞ்சணத்தி மரக்கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது. ஆனால் புதிய மரம் எதுவும் நடத் தேவையில்லை. பட்டமரம் துளிர்க்கும் என இறைவனின் உத்தரவு கிடைத்தது. அதே போல பழைய பட்டமரம் துளிர்த்து மரமாகியது. இதைக்கண்ட பக்தர்கள் மனம் குளிர்ந்தது.

இங்கு வருடந்தோறும் ஆவணி, சித்திரை மாதங்களில் திருவிழாக்களும், ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் மனோன்மணி அம்பாள் சமேத ஸ்ரீசந்திரசேகர மூர்த்திக்கு திருக்கல்யாண உற்சவமும் பிரசித்தி பெற்றவை. சிவராத்திரி நாளன்று இரவு நான்கு கால பூஜையும், அபிஷேகமும், மார்கழி மாதம் பஜனையும், திருக்கார்த்திகை தினத்தன்று சிறப்பு பூஜையுடன் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வும் நடக்கின்றன. இதுதவிர மாதந்தோறும் பவுர்ணமி பூஜை, அமாவாசை பூஜை, தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகார்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று இரவு லலிதா சகஸ்ர நாம பாராயணம், திருவிளக்கு பூஜையும் நடக்கின்றன.

மேலும் தகவல்கள்களுக்கு:
9842078733
9043942091,
9843016651

விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு

விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு













க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந்தவர் விஸ்வாமித்திரர் என்கிறது விஷ்ணு புராணம். சத்யவதி கர்ப்பவதியாக இருக்கும்போது, பிராமணனைப் போன்ற குணமுடைய குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினார்


ரிஷிகா. ஆனால், சத்யவதியின் மனதில், க்ஷத்திரியனைப் போல்

வீரமுள்ள குழந்தைதான் பிறக்க வேண்டும்
என்ற எண்ணம் இருந்தது. முதல் குழந்தையான விஸ்வாமித்திரர் தாயின் க்ஷத்திரிய குல சாயலாகவும், பிராமண குல பண்புடனும் பிறந்தார்.
அவர் தம்பியான ஜமதக்னி போர்க்குணம் நிறைந்த பிராமணனாகவும் க்ஷத்திரியர்களை அழிக்கவும் மனம் கொண்டிருந்தார். விஸ்வாமித்ர முனிவர் க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவராக இருந்தபடியால், அவரிடம் கோபம், வேகம், வேட்கை ஆகியவை இயற்கையாகவே இருந்தன.

ராஜ குலத்தைச் சார்ந்ததால், ரிஷி எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் பெற வேண்டும் என்ற ஆணவம் அவரிடம் நிறைந்திருந்தது.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் புத்திரரான வசிஷ்ட மகரிஷியைப் போல் தானும் படைப்பாற்றல் பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த எண்ணம் கொள்ளாமல், சுயநலத் தேவைகளுக்காக படைப்புச் சக்தியைப் பெற பெரும் முயற்சி கொண்டார்.

அதில் தோல்வியையும் கண்டார். இவர் அஷ்டதிக் பாலகர்களைப் பார்த்தாலும், அவர்களைப் போல் தனக்கே அத்துணை சக்திகளும் வேண்டும் என்றே நினைப்பார்.


விஸ்வாமித்திரருக்கு, தான் வசிஷ்டரைப் போல் பிரம்மரிஷியாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இத்துடன் வசிஷ்ட மகரிஷியே தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. அவரின் க்ஷத்திரிய குல அரச குணத்தால், அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
விஸ்வாமித்திரை சிறந்த பிரம்மகுல ரிஷியாக மாற்ற, இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும், அறிவில் சிறந்தவளுமான மேனகையை முதலில் அனுப்பி, அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து பெண் சக்தியின் ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தார். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை பந்தத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார்.

தன் சுய அறிவினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்று நினைத்த விஸ்வாமித்திரருக்கு, பிரம்மா பாடம் புகட்ட நினைத்தார். விஸ்வாமித்திரர் முன்னால் தோன்றி, அவர் பிரம்ம ரிஷிதான் என்று கூறியவுடன், அதை பிரம்ம ரிஷியான வசிஷ்டர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று கூறினார். வசிஷ்டர் அப்படித் தன்னை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கிற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார். வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து, தன் கணவரிடம் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷிதான் என்று அவர் தம் வாயால் கூறி விடும்படி ஆலோசனை வழங்கினார்.
வசிஷ்டரின் ஆக்ஞை சக்கரம் அருந்ததியால் தூண்டி விடப்பட்டது. வசிஷ்ட மகரிஷியும் தன் திருவுளம் திறந்து அருந்ததியே! நான் விஸ்வாமித்திரரின் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் பயந்துவிடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே, அவரை பிரம்ம ரிஷி என்று என் மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார்.


வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் க்ஷத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி, மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர், விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரம் விழிப்பு உணர்வு பெற, புருவ மத்தியில் தொட்டு ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். தன் ஆக்ஞை சக்கரம் செயல்படத் தூண்டுகோலாக இருந்த அருந்ததியையும் விஸ்வாமித்திரர் வணங்கி விடைபெற்றார். பிரம்மரிஷி என்ற பட்டம், அவருக்கு பெருமையைத் தராமல் பொறுமையைத் தந்து விழிப்பு உணர்வையும் தந்தது. ஆண் குலத்திற்கே விழிப்பு உணர்வு எனும் மூன்றாம் கண்ணைக் கொடுத்த சக்தியை, தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் கண்டுணர்ந்தார். காயத்ரிதேவியின் தரிசனம், பஞ்சமா பாவத்திலிருந்து அவரை விடுதலையாக்கியதுடன், அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது.


விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரத்தின் தூண்டுதலை வசிஷ்டர் உணரச் செய்ததால், உணர்வு எனும் உன்னதமான மூன்றாம் நிலைக்கு விஸ்வாமித்ர முனிவர் சென்றார். உணர்வு நிலையில் பெண்மையின் தன்மையை அவர் உணரச் செய்ததுடன், அதன் வல்லமையை அனைவரும் உணரும் வண்ணமாக காயத்ரி மந்திரத்தைப் போல் சிறந்த மந்திரம் இல்லை என்று சொல்லும்படியாக தன் உணர்வால் உருவாக்கினார். கிருஷ்ண பரமாத்மாவும், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கின்றேன் என்று கீதையில் கூறுகின்றார். பாவங்களை நீக்கி, சமநிலைப்படுத்தி, சந்தோஷத்தைக் கொடுத்து சக்தியைப் பெருக்கும் மிகவும் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் எனும் மந்திரத்தை விஸ்வாமித்திரரே இந்த உலகிற்குக் கொடுத்தார் என்று ரிக் வேதம் கூறுகின்றது. புத்தியால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மூர்க்க குணத்துடன், பிடிவாதமாக, வெறித்தனமான தவ வலிமையால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்ற மமதையில் வாழ்ந்த விஸ்வாமித்திரர், பெண் சக்தியால் கொடுக்கப்பட்ட ஆக்ஞை சக்கரம் விழிப்பு உணர்வு பெற்று உணர்வு நிலைக்குத் திரும்ப அருந்ததி காரணமாக இருந்தார். பெண்மையின் தன்மையை முழுவதுமாக உணர்ந்து காயத்ரிதேவியின் தரிசனம் பெற்றார். ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர்தான் இயற்றினார்.


விஸ்வாமித்திரரின் வாழ்க்கை, முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளை எழுதியதுடன், லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் பெறுவதின் சாபங்களையும் குறித்து எழுதினார் என்று, மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ராமபிரானுக்கும், லட்சுமணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்று போதித்து, 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.



விஸ்வாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின்திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதிஉள்ளது




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
விஜயாபதியில் அமைந்துள்ள 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 03.02.2016 தை மாத புதன் கிழமை   அனுஷம் நட்சத்திர தினத்தன்றுசிறப்புஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
cell : :9842078733
9043942091,
9843016651



பைரவரை வழிபாடும் முறை தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் .பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடவேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு) இழந்த பொருட்களை மீண்டும் பெற: பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும். குழந்தைச் செல்வம் பெற: திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும். சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க: சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும். தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்: ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும். 6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்

பைரவரை வழிபாடும் முறை


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் .பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனி கிழமையும் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்

சனி கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்
திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போடவேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது


64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம்


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய குரு)


இழந்த பொருட்களை மீண்டும் பெற:


பைரவரின் சன்னதி முன்னால் (27) மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.


குழந்தைச் செல்வம் பெற:


திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.


சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:


சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.


தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:


ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்

பொருளாதாரம் தரும் குபேர விரதம்




பொருளாதாரம் தரும் குபேர விரதம்






பூசம் நட்சத்திரம் வரும் நாட்களிலோ அல்லது நிறைந்த அமாவாசை நாட்களிலோ அசைவம் சேர்க்காமல், விரதம் இருந்து குபேரனை மனதில் தியானித்து குபேரனுக்கு பூ பழங்கள் படைத்து,



ஏதாவது இனிப்பான நிவேதன பொருளை வீட்டில் தயார் செய்து, அதை குபேரனுக்கு படைக்க வேண்டும்.

குபேரனை மனதில் தியானித்து பொருளாதார உயர்வுக்காகவும்,வறுமை நிலை போகவும் மனதால் தியானித்து வரவும். முடிந்தவரை குபேரனின் கீழ்க்கண்ட 108 துதிகளை சொல்லி வரவும். கண்டிப்பாக பொருளாதார பிரச்சினைகள்,வறுமை நிலைகளில் இருந்து குபேரன் உங்களை காப்பார்.

* அழகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே போற்றி சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி சிவபூஜை பிரியனே போற்றி சிவ பக்த நாயகனே போற்றி சிவ மகா பக்தனே போற்றி சுந்தரர் பிரியனே போற்றி சுந்தர நாயகனே போற்றி சூர்பனகா சகோதரனே போற்றி செந்தாமரைப் பிரியனே போற்றி செல்வ வளம் அளிப்பவனே போற்றி செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி சொர்ணவளம் அளிப்பவனே போற்றி சொக்கநாதர் பிரியனே போற்றி சௌந்தர்ய ராஜனே போற்றி ஞான குபேரனே போற்றி தனம் அளிக்கும் தயாபரா போற்றி தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி திருவிழி அழகனே போற்றி திருவுரு அழகனே போற்றி திருவிளக்கில் உறைவாய் போற்றி திருநீறு அணிபவனே போற்றி தீயவை அகற்றுவாய் போற்றி துன்பம் தீர்த்திடுவாய் போற்றி தூயமனம் படைத்தவனே போற்றி தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி தேவராஜனே போற்றி பதுமநிதி பெற்றவனே போற்றி பரவச நாயகனே போற்றி பச்சை நிறப் பிரியனே போற்றி பவுர்ணமி நாயகனே போற்றி புண்ணிய ஆத்மனே போற்றி புண்ணியம் அளிப்பவனே போற்றி புண்ணிய புத்திரனே போற்றி பொன்னிற முடையோனே போற்றி பொன் நகை அணிபவனே போற்றி புன்னகை அரசே போற்றி பொறுமை கொடுப்பவனே போற்றி போகம்பல அளிப்பவனே போற்றி மங்கல முடையோனே போற்றி மங்களம் அளிப்பவனே போற்றி மங்களத்தில் உறைவாய் போற்றி மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி முத்து மாலை அணிபவனே போற்றி மோகன நாயகனே போற்றி வறுமை தீர்ப்பவனே போற்றி வரம் பல அருள்பவனே போற்றி விஜயம் தரும் விவேகனே போற்றி வேதம் போற்றும் வித்தகா போற்றி வைர மாலை அணிபவனே போற்றி வைகுண்டவாசப் பிரியனே போற்றி நடராஜர் பிரியனே போற்றி நவதான்யம் அளிப்பவனே போற்றி நவரத்தினப் பிரியனே போற்றி நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி வளம் யாவும் தந்திடுவாய் போற்றி ராவணன் சோதரனே போற்றி வடதிசை அதிபதியே போற்றி ரிஷி புத்திரனே போற்றி ருத்திரப் பிரியனே போற்றி இருள் நீக்கும் இன்பனே போற்றி வெண்குதிரை வாகனனே போற்றி கைலாயப் பிரியனே போற்றி மனம் விரும்பும் மன்னவனே போற்றி மணிமகுடம் தரித்தவனே போற்றி மாட்சிப் பொருளோனே போற்றி யந்திரத்தில் உறைந்தவனே போற்றி யௌவன நாயகனே போற்றி வல்லமை பெற்றவனே போற்றி குபேரா போற்றி போற்றி

இந்த போற்றியை விரதம்,பூஜை இல்லாத சாதாரண நாட்களிலும் தொடர்ந்து சொல்லி வந்தாலும் மிகவும் சிறப்பான பலன்களை அளிக்க கூடியதாகும்.எனவே குபேரனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து நற்பலன்களை பெறுவோமாக

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி



வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி



விஸ்வாமித்திரமகரிஷி கோவில்













விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.
இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.


இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது





விஜயாபதியில் அமைந்துள்ள
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
03.02.2016  தை மாத புதன் கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுபூஜை சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
cell : :9842078733
9043942091,
9843016651

பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்!


பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம்!







நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்? என்ற கேள்விக்கு ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை... என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே? என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு... என்று தலையிலடித்துக் கொள்கிறார்.

இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி கர்மா என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக் செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்.

தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு









.நாளை ஞாயிற்றுகிழமை 31.01.2016
தேய்பிறை அஷ்டமி ராகு காலம் மாலை 4.30pm to 6.00PM

-திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில்
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!

செல்வ செழிப்போடு வாழ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு


செல்வ செழிப்போடு வாழ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

.நாளை ஞாயிற்றுகிழமை 31.01.2016
தேய்பிறை அஷ்டமி ராகு காலம் மாலை 4.30pm  to 6.00PM



செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்து நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை

Sunday, 24 January 2016

மகாலட்சுமி இருக்கும் இடம் எது,'?


மகாலட்சுமி இருக்கும் இடம் எது,'?






மகாலட்சுமி இருக்கும் இடம் எது,'?



மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் "அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்னப பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது,'' என கேட்டனர்.

மகாலட்சுமி கூறுகையில், எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களா, எந்த குடும்பத்தில் கணவனும், மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ, எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ, எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்'' என்றாள்.

27 வகையான ஆனந்தம்


27 வகையான ஆனந்தம்


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்






மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்.
இந்த அறகட்டளை சார்பாக பிரதி மாதம் அமாவசை தோறும் 

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு குருஜி ஆசிர்வாதத்துடன் அம்பாள்
அனுகரகத்துடன் ப்ரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது
இங்கு செய்யப்படுகிற யாகம்
 "அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்" என்ற ஒரே தாரக மந்திரத்தில் நடைபெறுகிறது 

 இந்த தாரக மந்திரம் நாம் எதை கேட்டாலும் நமக்கு கூடுக்கும் .சந்தோஷத்தில் கூட தோஷம் இருக்கு ஆன ஆனந்த்தில் தோஷம் கிடையாது அந்த ஆனந்தம் 27 வகை இருக்கு
 அந்த 27 வகையான ஆனந்ததை நமக்கு அள்ளிகொடுக்க ஆனந்த சொரூபமாக மங்களா ரூபிணியாக ஆனந்தம்னா புன்னகையோடு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இந்த இடத்தில் கமலத்தில் கட்சி அளிக்கிறாள். ப்ரத்யங்கிரா எல்லா இடத்திலும் உக்கிர தெய்வமாக இருப்பாள் ஆனா இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் புன்னகையோடு கட்சி அளிக்கிறாள்.

குருவோட ஆசிர்வாதம் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.குருவோட ஆசிர்வாதம் இல்லை என்றால் இந்த அம்பாள்ளுடைய அனுகரகம்.கிடைக்காது குரு இல்லாமல் இந்த வித்தையும் கத்துகிட்டாலும் குரு இல்லாமல் இதை செய்தாலும் சித்திபண்ண முடியாது.

நாம் அற வழியில் நடந்து குருவின் ஆசிர்வாதத்துடன் தருமத்தையும் தெய்வத்தையும் நாடினால் தருமமும் தெய்வமும் நம்மை தேடி
நாடி வரும்

மானாமதுரை சுவாமிஜி


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

ஊத்துமலை முருகன் கோவில் (சேலம்)


ஊத்துமலை முருகன் கோவில் (சேலம்)













சேலத்தில் மிகப் புகழ் பெற்ற, சித்தர்களோடு தொடர்புடைய ஒரு சிறந்த
ஸ்தலம் சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை முருகன் கோவில் அங்கே இருக்கின்ற முருகன் அந்த மலையில் ஒரு குகையும் உண்டு. அந்த குகைக்கு அருகிலே அகத்தியர் பிரதிஷ்டை செய்த 44 முக்கோணங்களை கல்லினால் செதுக்கி வைக்கப்பட்டுள்ள
ஸ்ரீ சக்கரம் உண்டு. அதனது ஆற்றல்களை அளவிட்டுக் கூற இயலாது.

பொதிகை மலை சென்று அகத்தியரைப் பார்க்க முடியாதவர்கள் இந்த ஊத்துமலை குகையில் தியானம் செய்து ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் அகத்தியர் தரிசனம் தருவார்.


அதுமட்டுமல்லாமல் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றும் அந்த மலையில் உண்டு. அகத்தியர் மட்டுமில்லாமல் சுகர் மகரிஷிக்கும் இந்த மலைக்கும் நிறைய தொடர்பு உண்டு தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு பொதிகையின் ஒரு பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்றை ஒட்டியிருந்த, முருகன் கோயிலில் தான் தங்கினார். காலப்போக்கில் அந்தக் கோயிலே அகத்தியர் கோயில் என பெயர் மாறியது. இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் தமிழகமெங்கும் சென்றிருக்க வேண்டும். அவர் சேலம் பகுதிக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. முருகன் பாலவடிவத்தில் காட்சி தரும் தலமான சேலத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்

இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார்.


முருகன் கோயிலுக்கு எதிரில் கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே மரம், பசு, சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. கிளி வடிவில் சுகரிஷியும், கன்வ ரிஷியும் இங்கு தவம் செய்துள்ளனர். இங்குள்ள தல விருட்சம் வில்வம் ஆகும். பால முகம் கொண்டு, வேலும் மயிலும் கொண்டு, அன்பர்க்கு அன்பனாய், பக்தர்களின் வினை தீர்ப்பவனாய் அருள்பாலிக்கும் பால சுப்பிரமணியரையும், ஆதிசக்தியான பாலதிரிபுர சுந்தரியையும் சக்ராதேவியையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்




இந்த கோயிலில் சொர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்

இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்

ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்


ஆனைமுகனுக்கு பிடித்த அருகம்புல்


இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. அவற்றில் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மலர்களால் மாலை சூட்டி வழிபடுவார்கள். ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது.


உலகில் முதன் முதலில் தோன்றியது இந்த அருகம்புல்தான் என்ற கூற்று உள்ளது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

ஒரு முறை தேவர்களை கொடுமைப்படுத்திய அனலாசுரன் என்ற அசுரனுடன் விநாயகப்பெருமான் போர் புரிந்தார். அப்போது அனலாசுரனை, தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டார். உள்ளே சென்றதும் அசுரனின் அனல் காரணமாக, விநாயகரால் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில் முனிவர்கள், சித்தர்கள் பலரும் பல முயற்சிகள் செய்தும் பலன் இல்லாமல் போய்விட்டது. இறுதியில் அருகம்புல்லை எடுத்து மாலையாக கட்டி அதனை விநாயகரின் உடல் முழுவதும் வைத்து தடவிவிட்டார்கள். அனல் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. அது முதல் விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிப்பது வழிபாடாக மாறியது.

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்


ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்


பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.
கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:
இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.


பண பிரச்சனைகளுக்கு 48 முறை
உடல் நலம் பெற 58 முறை
வம்பு, வழக்கு சரியாக 78 முறை
நல்ல வேலை கிடைக்க 80 முறை
கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை
குழந்தையின்மை 52 முறை
மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி


மானாமதுரை
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி




ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியை இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர்.
16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர். பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் 

 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி இவள் பத்ரகாளியின் அம்சம்
அகோர ரூபம் என்றாலும் தேவி இங்கு சர்வமங்களங்களையும் அருளும் குணம் கொண்டவள். பயம் நீக்குபவள். எந்தவித பயம் ஏற்பட்டாலும் இத்தேவியின் நாமத்தை சொல்ல அந்த பயங்கள் தீர துணையிருப்பவள். கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள் பக்தருக்கு உறுதுணையாய் கூடவே இருப்பவள்.

முற்பிறவி வினைகள், தீராத நோய்கள், குழப்பங்கள், கஷ்டங்கள் தீர்க்கும் பிரத்யங்கிராதேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கிரா, பிராம்மி பிரத்யங்கிரா, ருத்திர பிரத்யங்கிரா, உக்கிர பிரத்யங்கிரா, அதர்வண பிரத்யங்கிரா, சிம்ம முகக் காளி, மும்முக ப்ரத்யங்கிரா, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா 
 ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.

 தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் 
இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.என்ற இவளது மூல மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து, இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். தீயவர்கள் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். 
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டி நடைபெறுகிறது
உக்கிர தேவியான இவளுக்கு மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் ஏற்றவை..
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள். அகசம்பந்தமான பாவங்களை நீக்கக்கூடியவள் 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் 
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236