நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 19 January 2016

ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு 20.01.2016 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.


ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு 20.01.2016 ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.



ஆசியாவின் பெரிய உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு நாளை 
புதன்கிழமை 20.01.2016  ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.








திருநெல்வேலி: ஆசியாவிலேயே பெரியதும், ராஜகோபுரத்தை கொண்டதுமான நெல்லை தாமிரபரணிஆற்றங்கரையில் மணிமூர்த்தீஸ்வரத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 
நாளை புதன்கிழமை 20.01.2016ம் தேதி விமரிசையாக நடக்கிறது. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி ஆலயம் அமைந்துள்ளது.



ராஜ கோபுரத்துடன் எட்டுநிலை மண்டபங்கள், மூன்று பிரகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள விநாயகருக்கான தனித் திருக்கோயிலாகும். இங்கு உச்சிஷ்ட கணபதி நான்கு கரங்களுடன் யோகநிலையில் அருள் பாலிக்கிறார். இடது மடியில் அம்பாளை தாங்கியிருக்கிறார். இதில் நீராடி விநாயகரை வழிபட்டால் தோஷங்கள் யாவும் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சித்திரை மாதத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அதிகாலையில் சூரிய ஒளி விநாயகர் மீது பரவும் வகையில் கட்டடக்கலை அமைந்துள்ளது.


1000 ஆண்டுகள் பழமை:

இதன் கட்டட அமைப்பும் பழமையும், சுற்றுச்சுவர்களின் தன்மையும், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கோயில் என்பதை பறைசாற்றுகிறது. இக்கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2008ல் இங்கு திருப்பணிக்கான முயற்சிகள் நடந்தன. அறநிலையத்துறை வழங்கிய நிதி 9 லட்சத்து 70 ஆயிரம் மூலம், ராஜகோபுரப்பணிகள் நடந்துள்ளன. பொதுமக்களிடம் பெறப்பட்ட ரூ 2 கோடி நிதியின் மூலம் கன்னிமூல கணபதி மண்டபம், முருகன்வள்ளி மண்டபம் உள்ளிட்ட ஐந்து மண்டபங்கள் 3 அடி உயரத்திற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளன. புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நெல்லையப்பர், காந்திமதியம்மன், புதிதாக 16 விநாயகர்கள் என சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.



இன்று 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்குகிறது.
20.01.2016 ம் தேதி புதன் கிழமை காலை 5.45 மணிமுதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.அழைப்பிதழ் கிடைக்காதவர்வகள் இதையெ அழைப்பிதழ்கள் ஏற்று கொண்டு இந்த
உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தில் காலந்து கொண்டு உச்சிஷ்ட விநாயகர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு உச்சிஷ்ட கணபதி நற்பணி மன்றம் அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு
cell : :98420 78733
90439 42091,
98430 16651

No comments:

Post a Comment