நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 31 October 2015

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை



































அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி



அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை


நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 04-11-2015 தேதி ஐப்பசி (18) மாதம் புதன்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்மேலும் தகவல்கள்களுக்கு


cell :9842078733
9043942091,
9843016651

மன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்





அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி


மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் 04-11-2015 தேதி ஐப்பசி (18) மாதம் புதன்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!



உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.


1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

((((((((நீங்கள் தெரிந்துகொண்டதை மற்றவருக்கும் தெரியபடுத்துங்கள்.... பகிருங்கள்,,,))))))

செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப்பட்டது


செல்வ வளம் பெருகிட ஒரு சுலபமான பரிகாரம்:நிரூபிக்கப்பட்டது



ஒரு எலுமிச்சம்பழத்தில் வெள்ளிக்கிழமையன்று நயம் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சக்கரம் எழுதி திருவிளக்கு பாதத்தில் வைத்து வணங்கலாம்.ஒவ்வொரு வாரமும் ஒரு எலுமிச்சம்பழம் வைத்து வணங்கியபின் தனியாக எடுத்து வைக்கவும்.
ஒரு வருடம் ஆனதும் ஏதாவது ஒரு ஆற்றில் மொத்தமாக போட்டு 12 ரூபாய் நாணயங்களை தட்சிணையாக ஜலம் ஓடும் ஆற்றில் போடவும்.இதனாலும் செல்வ வளம்(தன ஆகர்ஷணம்) உண்டாகும்.இதுவும் செய்ய முடியாதவர்கள் மாப்பொடி,மஞ்சள்பொடி கொண்டு ஸ்வஸ்திக் கோலம் போடலாம்.


வெள்ளிக்கிழமைதோறும் மாலை 6 மணிக்குள் ஏதாவது ஒரு பசுமாட்டிற்கு 6 மொந்தன் பழம் கொடுத்துக்கொண்டே வரலாம்.இதனாலும் நம்முடைய பணக்கஷ்டம் தீரு
ம்

அத்ரி மலையி!ன் அற்புதங்கள்

அத்ரி மலையி!ன் அற்புதங்கள்








பிரபஞ்சத்தின் ஜீவநாடி அறுந்து போகாமலிருப்பதற்காக இயற்கை அன்னை பல நற் கொடைகளை வாரி வழங்கியிருக்கிறாள்.
அந்த இயற்கைவளம் அலாவுதீனின் அற்புத விளக்கைப் போல பல ஆன்மீக அதிசயங்களைக் கொண்டுள்ளது என்பதற்கு ஆணித்தரமான உதாரணம் அத்ரி மலையும் அங்கே உடனுறையும், சிவன் வடிவில் உள்ள அத்ரி ஆலயமே. கையடக்கமான அந்த ஆலயம், அன்றாடம் ஆன்மீக பக்தர்களை ஈர்த்த வண்ணமிருக்கிறது.

எந்த ஒரு பொருளையும் நினைத்த வேளையில் அடைந்து விட்டால் அதற்கு மதிப்பு குறைவு தான். சிரமப்பட்டு, கஷ்டங்களை அனுபவித்துப் பெறும் பொருள், அதுவே பரம்பொருள் ஆனாலும், அது தரும் சுகமும், அமைதியும், வாழ்நாள் முழுக்க மனதில் கல்வெட்டாகப் பதிந்து விடும்.

அத்ரிமலை ஆலயத்தின் வரலாற்றுக்குள் போவதற்கு முன், அந்த ஆலயம் சென்றடைவதற்கான வழியினை முதலில் பார்த்து விடுவது நல்லது.
நெல்லை மாவட்டத்தின் நகரமான தென்காசி அல்லது அம்பாசமுத்திரம் அடுத்துள்ள ஆழ்வார்குறிச்சிக்கு, பேருந்துகள், ரயில் போக்குவரத்து வசதிகள் தாராளமாக உள்ளன. ஆழ்வார்குறிச்சியில் இறங்கி மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கமிருக்கும் அழகப்பபுரம் வரை போக்குவரத்து வசதியுள்ளது. அங்கிருந்து மேற்கிலிருக்கும் கடனா நதிக்கு கால்நடைப் பயணமாகச் சென்ற பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல 6 கிலோ மீட்டர் நடந்தால் அத்ரி மலை சிவன் ஆலயத்தை அடையலாம்.

சுத்தமான பிராணவாயுக்காற்றோடு மூலிகை மணத்தையும் கொண்ட காற்று வீசும் சூழல். சுவாசிக்கும் மனிதர்களின் இதயத்தைச் சுத்திகரிக்கும். புத்துணர்ச்சியோடு கரடு முரடானபாதையைக கடப்பது கூட அங்கே செல்லும் பக்கதர்களுக்குத் துன்பமே தெரியாது.
அப்படி ஒரு சிறப்பம்சம்.


சரி. இனி ஞான விஷயத்திற்கு வருவோம்.
ஆன்மீக சரித்திரம் இப்படித்தான் பதிவு செய்திருக்கிறது.
இன்றைக்கு சரியாக 2.500 ஆண்டுகளுக்குச் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலைப் பயணமாக வந்த மகாமுனிவர் தான் அத்ரி
தனது பக்தர்களோடு வந்த அத்ரி முனிவர் அந்த மலையில் சிவபெருமானை வேண்டிக் கடும் தவம் செய்தார். தனது அடியாரின் கடும் தவத்தை மெச்சிய சிவபெருமானும் அத்ரி முனிவருக்குக் காட்சி கொடுத்தார்.
அத்ரி மாமுனிவர் அங்கு தவமிருந்ததால் அது அத்ரி மலை எனப் பெயராகி, சிவன் வடிவில் உள்ள அத்ரி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறிய ஆலயாமானது.


இடையில் ஒரு அதிசயத்தைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அத்ரி முனிவர் தவ வேளையில் இருக்கும் சமயம் அவரது சீடர்களில் ஒருவரான அனுசுயாதேவிக்குத் தாக மெடுதத்து. தண்ணீருக்காக தன் சிஷ்யை தவிப்பதை உணர்ந்த அத்ரி முனிவர் தனது கமண்டலத்தைத் தரையில் ஒங்கி ஒரு தட்டு தட்ட, அந்த இடத்தைப் பிளந்து கொண்டு நீருற்று பீய்ச்சியடிக்க அனுசுயாதேவி தன் தாகம் தீர்த்துக் கொண்டாள். வானம் பிளந்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்த்தாலும், 110 டிகிரியளவு கோடைவெப்பம் சூட்டைக்கிளப்பினாலும், அந்த நீர் ஊற்று ஒரே சீரான அளவு பொங்கி வருவது. அற்புதமானது என்பது பக்தர்களின் திகைக்கவைக்கும் பேச்சாகத் தொடர்கிறது.


அத்ரி மலையின் சிவனாலயம் பற்றிய பேச்சு கசிந்த உடனேயே. அது ஆலயமாக உருவெடுக்கும் காரியங்கள் நடக்கத் தொடங்கின. மலைக்கு அவரைத் தரிசிக்கச் சொல்லும் பக்தர்களே நேர்ச்சையாகத் தலைக்கு மூன்று செங்கற்களைக் கொண்டு சேர்க்க, அதன் பிறகே பக்தர்களால் அமைக்கப்பட்ட கையடக்க கோயில் மலைமேல் உருவானது வனதுர்க்கை, பேச்சியம்மன், 21 கன்னிமார்சிலைகள், கருப்பசாமி, சுடலை மாடன உள்ளிட்ட பல துணை தெய்வங்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு. காலப் போக்கில் பிரபலமாகி தற்போது பக்தர்களின் ஜனரஞ்சகக் கேத்திரமாக மாறி நிற்கிற அளவிற்கு வளர்ந்திருக்கிறது


அத்ரி மலை சிவபெருமானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் தங்களின் மன எண்ணப்படி நேர்ச்சையாகவும் விரதமிருந்தும், சிலர் அவரையே நெஞ்சில் தேக்கிக் கொண்டு மலை ஏறுகிறார்கள். அப்படி வரும் பக்தர்களுக்கு கரடு, முரடான கற்களையும், பாதைகளையும், முட்களையும் மெத்தையாக மாற்றி அவர்களைச் சேதாரமில்லாமல் மலைக் கோவிலுக்குக் கொண்டு சேர்க்கிறார்.
அங்குள்ள வனதுர்க்கையம்மன். காட்டு மிருகங்கள் பக்தர்களை அண்ட விடாமல் பாதுகாத்தும், மழைக் காலங்களில் அங்குள்ள கல்லாறு வெள்ள மெடுத்து பக்தர்கள் கடப்பதற்கு தடையாய் நிற்பதையும் தடுத்துக் கொண்டு, அத்ரி பரமேஸ்வர சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களைச் சிரமமின்றி தரிசனம் முற்றுப் பெற்று தரையிறங்கும் வரை காவல் துணையாய் வழித்துணையாய் வந்த வனதுர்க்கையம்மனுக்கு முதல் வணக்கும் வைத்துப் பூஜிக்கிறார்கள்.


அத்ரிவனத்தின் காவல் தெய்வம். ராமரும், சீதாப்பிராட்டியாரும் அத்ரிமலை தபோவனத்திற்கு வந்த போது வனதுர்க்கையைத் தான் முதலில் வணங்கி முதல் மரியாதை செலுத்தினார்கள்.


அத்ரிமலை அமைதிச் சூழலையும், மெஞ்ஞானத்தையும் கொண்ட சிறப்பான ஒரு தபோவனமாக இருந்த காரணத்தினால் தான், தன் பிரதான சிஷயர்களோடு இங்கே யாகம் புரிய வந்தார் அத்ரி மகரிஷி. அவரது சீடர்களில் குறிப்பிட்டத்தக்கவர் கோரக்கர். தன்னுடைய குருவான ஆத்ரி முனிவருக்குப் பணிவிடைகளைச் செய்தமையால், அதன் வலிமை காரணமாக தென்பாண்டிச் சீமையின் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தையும் போக்கியவர் கோரக்கர்


அத்ரி பரமேஸ்வர சுவாமியை மனதார வணங்கி நீர் ஊற்றில் தலை நனைத்து பிறகு, அங்கேயுள்ள 
அத்ரிமரத்தின் முன்பாக தியானத்தில் அமர்வது தான் இங்கே குறிப்பிடும்படியான விசேஷம்.


பரம்பொருளை வணங்கி விட்டு, மனதார அரசமரம் முன்பு தியானத்திலிருப்பவர்களின் மனக்குறை நீங்கப் பெற்று எண்ணிய காரியங்கள். ஈடேறுகின்றன. பறைசாற்றலோ விளம்பரமே இல்லாமல் அன்றாடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தெல்லாம் அத்ரி மலைக்கு வருகின்றார்கள்.

ஞாயிறு, அமாவாசை, பங்குனி, சித்திரை, மாதப் பிறப்பு, பிரதோஷம் போன்ற காலங்களில் சிறப்பான சிறப்பு பூஜை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கிறது
அத்ரிமலையின் அற்புதங்களில் இது கடுகளவே... மலை ஏறினாலோ புதைந்து கிடக்கும் பிரம்மாண்டங்கள் விரியும்.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடன் மார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
04-11-2015 புதன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651


மேலும் தகவல்கள்களுக்கு :


செந்தில்குமார்திருநெல்வேலி cell :+91 98420 78733

நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவது, நல்லதை செய்ய முயற்சிப்போம்


நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவது, நல்லதை செய்ய முயற்சிப்போம்




இதிகாசங்களும், சாஸ்திரங்களும் மனித வாழ்வை செம்மைப்படுத்த, பல நல்ல வழிகளை சொல்லி, வழி காட்டுகின்றன. அவற்றின்படி நம்மால் நடக்க முடிகிறதோ இல்லையோ, அதன்படி நடந்தவர்கள், நன்மையே அடைந்துள்ளனர் என்பதை, நாம் தெரிந்து கொள்வதன் மூலம், நம் வாழ்வை நெறிபடுத்திக் கொள்ளலாம். காசியில், தர்மபாலன் என்ற அந்தணர் இருந்தார். பெயருக்கு ஏற்றார் போல, நற்குணங்கள், நிறைந்தவர். அவரது மகன் தட்சசீலத்தில் இருந்த ஒரு வித்யாலயாவில், கல்வி கற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம், குருகுலத்தில், குருவின் மகன், சிறு வயதிலேயே இறந்து விட்டான். அதுகுறித்து, மாணவர்கள் வருந்திப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எங்கள் வம்சத்தில் இப்படி யாரும் சிறு வயதில் இறந்ததில்லை... என்றான் தர்மபாலனுடைய மகன். இந்த விஷயத்தை, மாணவர்கள், குருவிடம் சொல்ல, அவர், அவனை அழைத்து விவரம் கேட்டார். அதற்கு அவன், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக அனைவருமே முதுமையடைந்து தான் இறந்திருக்கின்றனர். சிறு வயதில் யாருமே இறந்ததில்லை... என்றான். அது எப்படி சாத்தியமாகும் என்று நினைத்த குரு, இதன் உண்மையை அறிந்து கொள்வதற்காக, ஆட்டு எலும்புகளை ஒரு பையில் சேகரித்து, காசியில் இருக்கும் தர்மபாலனின் வீட்டுக்கு சென்றார்.

அங்கு தர்மபாலனிடம், உங்கள் பையன் திடீரென இறந்து விட்டான். இதோ பாருங்கள் அவன் எலும்புகள்... என்று சொல்லி, ஆட்டு எலும்புகளை காட்டினார். இதைக் கேட்ட தர்மபாலன் சிறிதும் கலங்காமல், சிரித்தபடியே, இவை என் பையனின் எலும்புகளாக இருக்க முடியாது; அவன் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டான். காரணம், எங்கள் பரம்பரையில், ஏழு தலைமுறைகளாக யாருமே, சிறு வயதில் இறந்தது கிடையாது... என்றார். குருநாதர், ஆச்சர்யம் அடைந்து, உண்மையை சொல்லி, உங்கள் பிள்ளையும் இதையே தான் கூறினான். இது எப்படி சாத்தியம்? எனக் கேட்டார். தர்மபாலன் சொன்னார்: இதில், வியப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறோம்; தீயவர்களுடன் சேர்வது இல்லை, நல்லவர்களைப் பிரிப்பது இல்லை. பொய் சொல்ல மாட்டோம்; துறவிகள், அந்தணர்கள் மற்றும் ஏழைகள், பிச்சை கேட்போர், யாத்திரிகர்கள் ஆகியோருக்கெல்லாம், முழு மனதோடு, இனிமையாக பேசி, உணவு அளிக்கிறோம். நாங்கள் செய்யும் இத்தகைய நன்மைகள் தான், எங்களை வாழ வைக்கின்றன. அதன் காரணமாகவே, எங்கள் பரம்பரையில் யாரும், சிறு வயதில் இறப்பதில்லை. - இவ்வாறு அவர் கூறினார். உண்மையை உணர்ந்த குரு, தன் செயலை எண்ணி வருந்தியபடி, ஊர் திரும்பினார் என்பது கதை. நமக்காக இல்லாவிட்டாலும், நம் சந்ததிகளின் நன்மையை நினைத்தாவது, முடிந்தவரை, நல்லதை செய்ய முயற்சிப்போம்

வினை தீர்த்து விதியை மாற்றும் அற்புத ஆலயங்கள்


வினை தீர்த்து விதியை மாற்றும் அற்புத ஆலயங்கள்

தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்

அடுத்த முறை, நீங்கள் எப்போது கும்ப கோணம் சென்றாலும், இந்த கட்டுரையிலும் அடுத்து வரும் மூன்று கட்டுரைகளிலும் உள்ள - மிக முக்கியமான , கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஸ்தலங்களை தரிசித்து வாருங்கள். ரத்தினச் சுருக்கமாக , இந்த ஆலயங்களுக்கு சென்று வருவதால் ஏற்படும் முக்கிய பலன்களை கொடுத்துள்ளேன்.

இணைய தளத்தில் இருந்து எடுத்தது
நம் நண்பர்களுக்கும் பயன் தரும் என்பதால் , அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்

சில ஆலயங்களைப் பற்றி அந்த வரிகளை படிக்கும்போதே , உங்கள் உள்ளுணர்வு அந்த கோவிலுக்கு போக வேண்டும் என்று சொல்லும். அந்த ஆலயத்திற்கு அவசியம் சென்று வாருங்கள். உங்கள் பூர்வ ஜென்ம , கர்ம வினைகள் நிச்சயம் அகலும்.

எல்லா ஆலயங்களுக்கும் செல்ல முடியவில்லை என்றாலும், கலக்கம் வேண்டாம். அதே நேரத்தில் , உங்களால் மிகத் திருப்தியாக பூஜை , அபிசேகம், அலங்காரம் செய்ய முடியவில்லையே என்று கூட மனக்கலக்கம் வேண்டாம். ஐயா , ஒரு அர்ச்சனை கூட செய்ய வேண்டாம்.. ஒரே ஒரு விஷயம் மட்டும் தவறாமல் செய்யுங்கள்...

மூலவருக்கு முன்பாக, அவரைப் பார்த்தபடியோ , அல்லது உங்களால் முடிந்தவரை அருகிலோ - அல்லது மற்றவருக்கும் தொந்தரவு இல்லா வண்ணம் - ஒரு மணி நேரம் வரை வெறுமனே அமர்ந்து , மனத்தால் இறைவனிடம் உங்கள் குறைகளை தீர்க்க வேண்டி மன்றாடுங்கள். முடிந்தால் மனதுக்குள் - ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் ஜெபிக்கலாம், அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். ஸ்ரீ ருத்ரம் ஜெபிக்கலாம்.

சில சமயங்களில் ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தால் , குறைந்த பட்சம் 12 நிமிடங்களாவது , அமர்ந்து வாருங்கள். இறைவனின் சிருஷ்டியில் எல்லா நாளும், நேரமும் புனிதமானதே. ஒரு சில மணித்துளிகள் மட்டும் , பலப்பல காரணங்களால் - மிக சக்திவாய்ந்த தருணங்கள் ஆகி விடுகின்றன.

இதில் இன்னொரு சூட்சுமம் உள்ளது. உங்களுக்கு நடக்கும் தசை / புக்தி என்னவென்று பாருங்கள். அதற்கேற்ப உகந்த நேரத்தில் - நீங்கள் அந்த தெய்வத்தின் முன் நிற்க, உங்களுக்கு ஏற்படும் தடைகள் அனைத்தும் , படிக்கற்கள் ஆகிவிடும். ்

நல்ல விஷயங்களை , நீங்கள் அறிந்து உணந்த விஷயங்களை - உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்திலும், உங்கள் குழந்தைகளுக்கும் தக்க நேரத்தில் எடுத்து சொல்லுங்கள். லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு அன்பர்களும் , இந்தியாவை , குறிப்பாக தமிழகத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக நினைப்பது , நம் ஊர் ஆலயங்களுக்காகத்தான். இங்கேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்த அனைவரும், அதை பயன்படுத்திக் கொள்வது நல்லதுதானே..!

மன நோய் அகற்றும் " திருவிடை மருதூர் "

சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து, வழிபட்ட லிங்கமானதால் இவர் " மகாலிங்கமானார்". இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தல நாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர். மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர். கும்பகோணத்தில் இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்.
புற்றுநோய் தீர்க்கும் " திருந்துதேவன் குடி அருமருந்தம்மை "



புற்று நோய்தீர்க்கும் தலம்

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் " திருந்துதேவன்குடியின் " நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது. இது, சர்வ வியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

*கடன் தொல்லைகள் தீர்க்கும் " திருச்சேறை **ருண* *விமோச்சனர் "*

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது " திருச்சேறை உடையார் கோவில் ". இங்கு தனி சந்நதியில் " ருணவிமோச்சனராய் " அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று

" கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே "

என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

*சங்கடங்கள் தீர்க்கும் திருபுவனம்

" சூலினி, பிரத்தியங்கரா சமேத சரபேஸ்வரர் *"

கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி, சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்து அருள்பாளிக்கும் " திருபுவனம் " சென்று வழிபடலாம். இவர் வழிபடுபவரின் அனைத்து சங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை 11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11 வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளை சிறந்தது.

*பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய
"ஸ்ரீவாஞ்சியம்"*
காசிக்கு இணையான தலம் இந்த ஸ்ரீவாஞ்சியம். காசியில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால், இத் தலத்திலோ புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே சிலையில் காட்சி தரும் இத் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீராடி வாஞ்சிநாதரையும், மங்களநாயகியையும், மஹாலஷ்மியையும் வழிபட்டால், பிரிந்திருக்கும் தம்பதியர், பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர். கால சர்ப்ப தோஷம் நீக்கும், பாவங்கள் தீர்த்து முக்தி அருளும் இது சனி தோஷ பரிகாரத்திற்கு சிறந்த திருத்தலம்.

*அட்சரப்பிரயாசம் ( எழுத்தறிவு ) பெற இன்னம்பூர் எழுத்தறிநாதர்*

அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களை கற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக்கான அட்சரப்பியாசம் நடைபெறுகிறது. குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்து வந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்து பயிற்சி தருகின்றனர்.இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும் வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது.

தடைபட்ட திருமணம் நடக்க கோனேரிராஜபுரம் என்றழைக்கப்படும் " திருநல்லம் "

முக்கண்ணன் " உமா மகேஸ்வரராய் "மேற்கு நோக்கி வீற்றிருக்க, " அங்கவள நாயகியாய் "அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம். பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த, திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். " பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் "என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார். இத் தலத்தில், நோய் தீர்க்கும், " ஸ்ரீ வைத்திய நாதர் " சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம், திருவிடை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் - வடமட்டம் பேருந்து வழித் தடத்தில், கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

*தீரா நோய்கள் தீர்க்கும் "வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர் "*
மயிலாடுதுறை - சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் " வைத்தீஸ்வரன் கோவில் ". செவ்வாய் தோஷம் நீக்கும் " அங்காரகனுக்குரிய " திரு கோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் "தன்வந்திரி" இத் தலத்திற்கு உரியவர். அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

*செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" *

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

*சரஸ்வதி கடாட்சம் தரும் கூத்தனூர்*

மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும், கலைமகளின் பரிபூரண அருளை பெறவும் வழிபட வேண்டிய தலம் ஞானசரஸ்வதி காட்சி தரும் "கூத்தனூர்". நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே. மயிலாடுதுறை - திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

நாக,புத்திர,மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்

காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்

கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் "ஜூரகேஸ்வரர் "

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதி வராகப் பெருமாள்

ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன்

உடல்நிலை பாடாய் படுத்துகிறதா?


உடல்நிலை பாடாய் படுத்துகிறதா?






சிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை. அடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம். செலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.
ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்' என்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

பிரிந்த தம்பதி சேர வழி


பிரிந்த தம்பதி சேர வழி

ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி மிகவும் புனிதமானது. சுந்தரம் என்பதற்கு "அழகு' என்பது பொருள். சீதாதேவியைப் பிரிந்த ராமபிரானுக்கு அனுமன் மூலம்,"கண்டேன் சீதையை' என்ற நல்ல செய்தி கிடைத்தது இதில் தான். அசோகவனத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக அனுமன் தோன்றி ராமனின் வரவிருப்பதை எடுத்துச் சொன்னதும் இப்பகுதியே. கிரக தோஷத்தினால், பல்வேறு சோதனைகளில் சிக்கி செய்வதறியாது திகைப்பவர்கள், திருமணமாகாத கன்னியர்கள் மிகச் சிறந்த பரிகாரமாக சுந்தர காண்ட பாராயணத்தை அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர இதை விடச் சிறந்த பரிகாரம் வேறு இல்லை. காயத்ரிமந்திரம் ஜெபித்த பலனை சுந்தரகாண்டத்தின் மூலம் பெறமுடியும்.
சுந்தரகாண்டத்தில் 68சர்க்கங்கள்(பகுதிகள்) உள்ளன. வளர்பிறையில் நல்லநாளில் தொடங்கி, தொடர்ந்து ஒருநாளைக்கு ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் பாராயணம் செய்யவேண்டும். 68வது நாளில் ராம பட்டாபிஷேக சர்க்கத்தையும் சேர்த்து படித்து நிறைவு செய்யவேண்டும். தினமும் ராமர் படத்தின் முன் பால் அல்லது பழம் படைத்து வழிபடவேண்டும். உலகமே கைவிட்டாலும் உத்தமனான ராமன் சோதனைக்குள்ளானவர்களை கைவிடமாட்டான். சொல்லின் செல்வனான அனுமன் சுந்தரகாண்டம் பாராயணம் செய்யும் இடத்தில் சூட்சுமவடிவில் எழுந்தருள்வான் என்பது ஐதீகம். சுந்தரகாண்டம் நீங்கலாக "ஸ்ரீராமஜெயம்' மந்திரத்தை 108 முறை எழுதுவதோ, ஜெபிப்பதும் இதற்குரிய பரிகாரமே.

மந்திரம் சொல்லி மஞ்சள் பொடியை பூசுங்க

மந்திரம் சொல்லி மஞ்சள் பொடியை பூசுங்க



சுமங்கலிகள் தினமும் தரமான மஞ்சள் தேய்த்து குளிப்பது அவசியம். மஞ்சள் கிழங்கைத் தேய்க்கும்போதோ அல்லது மஞ்சள் பொடியைக் கையில் எடுத்த பிறகோ,

""ஹரித்ரே பீதவர்ணே! த்வம் ஹாரிணீ ஜனரஞ்ஜனீ!

அதஸ் த்வாம்லே பயிஷ்யாமி ஸெளபாக்யம் தேஹி மேனகே!''

என்ற ஸ்லோகம் சொல்லியபடியே பூச வேண்டும். இதனால் சவுபாக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். மஞ்சள் சருமநோயைப் போக்கி, முகப்பொலிவையும் தருகிறது

அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்


அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்



குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.


2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.


3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.

4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.

5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.

6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.

7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?


கோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?





ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரஸாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது. ரூபாய் நோட்டுக்கும் வெறும்தாளுக்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா. ரூபாய் நோட்டுக்களிலும் கூட அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது. இதுபோன்று ஒவ்வொரு கடவுளர்களின் பிரஸாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும். பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது வைத்துவிடல் வேண்டும். வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்குவேறு மலர்களை சார்த்துவது சிறந்தது

உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?

உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?





ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்

நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்


நட்சத்திரப்படி வணங்க வேண்டிய பைரவ ஸ்தலங்கள்




யோகா பைரவர், திருப்பத்தூர்



வ. எண் நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.



பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்

ஹயக்ரிவரின் மகிமைகள்

ஹயக்ரிவரின் மகிமைகள் 


1. ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.

3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.
4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.
5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.
6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.
7. உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது.
8. தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.
9. ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.
10. பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.
11. ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.
12. புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.
13. ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.
14. ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.
15. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் மலர் போட்டு வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.
16. ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.
17. ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.
18. ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.
19. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.
20. ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.
21. ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
22. ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது.
23. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.
24. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.
25. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.
26. ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.
27. பிகல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.
28. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.
30. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.
31. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.
32. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.
33. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.
34. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
35. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகத்தியரும் ஹயக்ரிவரும் காமாட்சி அம்மன் கோவில் ராஜகோபுரத்தில் தரிசனம் தருகின்றனர்..
36. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.
37. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.
38. குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.
39. அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.
40. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.
41. ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.
42. சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.
43. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.
44. ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.
45. ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.
46. ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.
47. ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
48. திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.
49. ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.
50. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.
51. சென்னை நங்கநல்லூரில் ஒரு லட்சுமி ஹயக்ரீவர் ஆலயம் இருக்கிறது. இத்தலத்தில் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாத்துவது வழக்கம்.
52. காஞ்சிபுரம் தும்புல் வேதாந்த தேசிகர் கோவில் அருகில் சாளகிராம லட்சுமி ஹயக்ரிவர் தரிசனம் தருகின்றார்.
53. காஞ்சி வேதாந்த தேசிகர் ஆலயத்தில் அவரால் பூஜிக்க பட்ட லட்சுமி ஹயக்ரிவர் தரிசனம் தருகின்றார்

மன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்

மன்னார்குடி பூவனூர் அகஸ்தியருக்கு அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து
9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்
ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் 04-11-2015 தேதி  புதன்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிலிருத்து 12.00வரை
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .


மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :93443 02923

நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை


நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை





பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி

உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.

இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.

சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு






சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

 சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு
( 03-11-2015 செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி)



இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்

தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில்

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்து நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்க வேண்டும் என்றால்? அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமில் அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை

குழந்தைகள் நன்றாகப் படிக்க...


குழந்தைகள் நன்றாகப் படிக்க...



சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால் படிப்பில் ஈடுபாடு இல்லாமலும், சிலர் மணிக்
கணக்காய் படித்தாலும், பாடங்கள் புரியாமலும் சிரமப்படுவர். சிலர் விளையாட்டு புத்தியால் படிப்பில் கவனமில்லாமல் இருப்பர். இன்னும் சிலர், வீட்டில் நன்றாகப் படிப்பர். ஆனால், தேர்வு அறைக்கு போனதும் பதட்டத்தில் படித்ததை மறந்து விடுவர்.
இப்படி எந்த பிரச்னையாக இருந்தாலும், அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை அருள லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவி செய்யும். குதிரை முகத்தோடு இருக்கும் இப்பெருமானை வழிபட்டே, சரஸ்வதியே அனைத்து வித்தைகளையும் கற்றதாகச் சொல்வர். காலை, மாலை நேரத்தில் வீட்டில் படிக்கத் தொடங்கும் முன்,

 ""ஞானானந்தம் மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே!''

என்ற ஸ்லோகத்தை சொல்லிய பிறகு படிக்கத் தொடங்கச் சொல்லுங்கள். அதோடு கூட, கல்விக்குரிய புதன் கிழமையில் பெருமாள் கோயில்களில் ஹயக்ரீவர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி வாருங்கள். நிச்சயம் பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படத் தொடங்கும்

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை


மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

மகாலட்சுமி நிலைத்திருக்க குடும்பத் தலைவிகள் கடைப்பிடிக்க வேண்டியவை

பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது. காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். 
காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது.

விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது. பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது.

நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்குமுன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்.

பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்குதேய்பிறை அஷ்டமி அபிஷேகம் ,அலங்காரம்,தீபாரதனை










அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து
உள்ள 
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்க்கு 03-11-2015 தேதி ஐப்பசி (17) மாதம் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமி,அபிஷேகம்,
அலங்காரம்,தீபாரதனை நடைபெறும். அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் மற்றும்  
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் திருவருள்ஆசிர்வாதமும் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

Friday, 30 October 2015

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய் விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும். அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும். இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

குல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள் 

குல தெய்வம் இன்னதென அறியாதவர் செய்ய வேண்டியது என்னவெனில் தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் பிரம்ம முகூர்த்த வேளையில் சுத்தமான பசு நெய்விட்டு ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
அந்த விளக்கயே உங்கள் குல தெய்வமாக பாவிக்க வேண்டும். அந்த விளக்கிடமே என் குல தெய்வத்தை அறிந்து கொள்ள உதவுமாறு பிரார்த்தனை வைக்க வேண்டும்.
இப்படியே தொடர்ந்து நாற்பத்து ஒரு நாள் செய்து வர உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருந்தாலும் சரி, சரியாக தொண்ணூறு நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய உண்மையான தகவல் உங்களை வந்து சேரும்

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா


உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா




'ஹூம்... எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா.
இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது... கர்வம்! 'நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், 'கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார்.
'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன...?
'இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!
திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!
தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!
குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்... சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.
ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே... சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.
இன்னொரு விஷயம்... பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான... அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் 'பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி
மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.
இதோ... ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி விட்டது; 2010-ஆம் வருடத்தை வரவேற்கவும் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறவும் தயாராகி விட்டோம். இந்த வேளையில்... நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!


மஞ்சள் காப்பு... புளியோதரை!
வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!
7ஆம் தேதி பிறந்தவரா?
ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்... சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர்.
ஷென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!
மாதந்தோறும் வருகிற... உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில், பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!
எங்கே இருக்கிறது?
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்!
சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.
கோயில் தொடர்புக்கு: 94438 17385 / 98949 26090

அமாவாசை குலதெய்வ வழிபாடு

அமாவாசை குலதெய்வ வழிபாடு






குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்குஎண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம: விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.


ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம: விஸ்வகர்ம பெருமக்களுக்கு சமர்ப்பணம்.







ஓம் ஸ்ரீ விராட் விஸ்வகர்மனே நம:
வரலாறு
ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளவாறு:
தேவ சிற்பி என்று புகழப்படும் 
ஸ்ரீ விஸ்வகர்மாவே ஸநாதனமான ஸப்த ரிஷிகளுக்கும் முதன்மையானவர். பிரபாஸூக்கும், யோக சித்தைக்கும் மகனாய் அவதரித்தவர். யோக சித்தை மஹா பிரஹஸ்பதியின் சகோதரி. பிராஸ் அட்டம பஸூவின் எட்டாம் தலைமுறை ரிஷிகுமாரர்.
ரிக் வேதம் விஸ்வகர்மாவைப் புகழ்வதைக் கண்ணுறுங்கள்:
முழு உலகத்தையும் வடிவமைத்த தெய்வீக கைவினைஞன் விஸ்வகர்மா.
 (ரிக் வேதம் 10.81.03)
இவரே தெய்வங்களின் வசிப்பிடங்களையும், அவர்களது வாஹனங்களையும், பறக்கும் இரதங்களையும் வடிவமைத்தவர்.
நான்காவது துணை வேதமாகிய ஸ்தபத வேதத்தை வெளிப்படுத்தியவர்.
அறுபத்து நான்கு ஆய கலைகளுக்குத் தலைவரானவர்.
சொர்க்கம், நரகம் இவைகளோடு பதினான்கு உலகங்களையும் படைத்த ஆதி பிரம்மன்.
தெய்வங்களுக்கு ஆயுதங்களையும் செய்தளித்தருளியவர். குறிப்பாக இந்திரனுக்காக ததிச்சி என்ற முனிவரின் முதுகெலும்பிலிருந்து வஜ்ராயுதத்தையும், விஷ்ணுவிற்காக சாரங்கம் என்னும் வில்லையும், சிவபெருமானுக்காக பிங்களம் என்னும் வில்லையும் படைத்தளித்தவர்.
சிவ-பார்வதி திருமணத்தின் போது லங்கா பட்டிணத்தை ஸமுத்திரத்தின் மத்தியில் படைத்தவர்.
இராமபிரானுக்கு உதவுவதற்காக கடலினில் ஸேதுவை கட்டும் வல்லமையுள்ள நளன் என்னும் வானரத்தைப் படைத்தவர்.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆட்சிப்பீடமான துவாரகையையும், எமபுரத்தையும் சிருஷ்டித்தவர்.
இப்படி பலப்பல அற்புத நிகழ்வுகளை வேதப்பதிவுகளிலிருந்து கூறிக்கொண்டே போகலாம்.
வசிஸ்ட புராணம் (3.6.11)ல் கூறப்பட்டுள்ளவாறு,
ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவானவர், தனது ஐந்து முகங்களிலிருந்தும் ஐந்து பிரம்மாக்களை படைத்தார். பஞ்ச பிரம்மாக்கள் என்றும் பஞ்ச பிரம்ம ரிஷிகள் என்றும் அழைக்கப்பட்ட இவர்கள்:
1. சானக பிரம்ம ரிஷி, 2.ஸநாதன பிரம்ம ரிஷி, 3. அபுவநஸ பிரம்ம ரிஷி, 4. ப்ரத்னஸ பிரம்ம ரிஷி, 5. ஸூபர்ணஸ பிரம்ம ரிஷி
ரிக் வேதம் (10.81. மற்றும் 10.82) ஸ்ரீ விராட் விஸ்வகர்மாவின் சொரூபத்தை சித்தரிக்கிறது:
உலகத்தின் முழு முதல் தோற்றுவிக்கும் சக்தியாகவும், உலகத் தந்தையாகவும் விளங்குபவர் தனது அனைத்துப் புறங்களிலும் விழிகளையும், வதனங்களையும், புஜங்களையும், பாதங்களையும் உடையவர்.
மஹாபாரதம், ஹரிவம்சம் போன்ற மஹா காவியங்கள் “கலைகளின் தேவன். ஆயிரக்கணக்கான தொழில்நுட்பங்களை விளைவிப்பவர், கடவுளர்களின் சிற்பி, மிகவும் முதல்தரமான, மேம்பட்ட, தலைமையான தொழில் நிபுணர், அணிகலன்களில் புதுமைகளைப் புகுத்துபவர், முடிவும்-அழிவும் அற்ற நிலையான இறைவன்.” என்று விராட் ரூபத்தைப் புகழ்கின்றன.
நான்கு கரங்களையுடைத்தும், மணிமுடி தரி்த்தும், மணம் நிறைந்த மலர்களைச்சூடியும், பட்டாடை உடுத்தும், நவரத்ன சிம்மாஞஸத்தில் வீற்றும், தனது நான்கு கரங்களில் புனிதநீர்க் கமண்டலமும், ஒலைச்சுவடியும், பாசக் கயிறும், அளக்கும் கருவியும் தாங்கியவராய் வேத-புராண-சாஸ்த்ரங்களிலே வர்ணிக்கப்படுகிறார்-------+---------++++-+-----++-------—-----்
பாரம்பரியமும் பரம்பரையும்
இன்றைய ஆய்வறிஞர்கள் வேதம், ஸூக்தம், ஸாஸ்த்ரம் முதலிய நூல்களை நன்கு ஆய்ந்து, விஸ்வ கர்ம குலம் ப்ருகு குலம் என தெளிந்துள்ளனர். வாயு புராணத்தின் நான்காவது அத்தியாயத்தில், இந்த நெடிய பரம்பரை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன


த்ரிஷிரா விஸ்வரூபஸ்து த்வஸ்டு: புத்ராவ பவதாம்|
விஷ்வரூபானுஜஸ்சாபி விஸ்வகர்மா ப்ரஜாபதி:||
விஸ்வகர்ம மஹத்பூதம் விஷ்வகர்மானாம் மதங்கேஷூ ச ஸம்பூதா|
புத்ரா பஞ்ச ஜடாதரா:ஹஸ்ய கெளசல ஸம்பஔர்ணா பஞ்ச பிரண்மரதா ஸதா||
இவ்வழியிலான மரபுப்படம் தரப்பட்டுள்ளது:
தரன், துருவன், சோமன், அஹன், அனிலன், அனலன், ப்ரத்யுஸன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ஆவர். இவர்கள் பிரஜாபதியின் புத்திரர்கள் ஆவார்கள்.
பஞ்ச கர்ம குலங்களின் வம்சாவளி:
1) மனு :
விஸ்வகர்மாவின் தலைமகன். அங்கீரஸ் என்ற முனிவரின் மகளாகிய காஞ்சனையை மணந்தவர். மனித குலத்தின் சிருஷ்டிகர்த்தா. பிற்காலத்தில் மனுவின் பெயரினால் அறியப்பட்ட அரசன் நீதிபரிபாலனையில் தன்னிகரில்லாது திகழ்ந்ததனால் நீதிக்கே இலக்கணம் வகுத்து, மனுநீதி என்னும் பெரும் நூலை சிருஷ்டித்தார்.
2) மயன் :
விஸ்வகர்மாவின் இரண்டாம் மகன் இந்திரஜால சிருஷ்டி கர்த்தா என்று புகழப்படுபவர். பராசர முனிவரின் மகளாகிய சுசனை இவரது மனைவி.
3) த்வஷ்டா:
விஸ்வகர்மாவின் மூன்றாவது மகன். கெளசிக மஹரிஷியின் மகளான ‘ஜெயந்தி’யை மணந்தார்.
4) சில்பி : ப்ருஹூ முனிவரின் புத்ரி கருணாவை மணந்தவர்.
5) தைவக்ஞர் (அ) விஷ்வக்ஞர் :
ஜைமினி முனிவரின் மகளான சந்திரிகா இவரது மனைவி. இவரது வழித்தோன்றலான ஸூபர்ணரிஷி, விநதையின் மகனான கருடனுக்கு பொன்னொளியை வழங்கி, ஸ்ரீமந் மஹாவிஷ்ணுவின் வாஹனமாகும்படி அனுக்ரஹம் செய்தார். கருடன் அங்கிரஸ குலத்தில் உதித்த கன்வ முனிவரின் மகனாவார்.
ஆதாரம்: விஸ்வகர்மா விஜயபிரகாஷ், ஆசிரியர்: இந்திரதேவ்சர்மா
இந்துமதத்திற்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் கொள்ளப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களில் விஸ்வகர்மாவினைப் பற்றி ஏராளமான விஷயங்கள், சுலோகங்கள் காணப்படுகின்றன. இவற்றிலெல்லாம் விஸ்வகர்மா முழுமுதற் பிரம்மனாகவும், அனைத்துலகத்தையும் வடிவமைத்த சிறந்த கலைஞனாகவும், வித்தையின் (கல்வி) வடிவமாகவும், அனைத்துத் திறன்களிலும் நிபுணனாகவும், கலைகளின் தலைவனாகவும், எல்லா இடங்களிலும் நிறைந்தவராகவும், சிறந்த கலைஞர்களின் மனத்திலும், அவர்கள் உருவாக்கும் கலைப்பொருட்களில் வாஸம் செய்பவராகவும், யாரையும்-எவற்றையும் சாராது விளங்கும் தனிப்பெரும் பொருளாகவும், பூர்ணத்வமுடையவராகவும், ஸூர்ய ஒளி பொருந்தியவராகவும், ஸத்வ குணமுடைவராகவும் இன்னும் பலப்பல புகழொலிகளால் அலங்கரித்துப் போற்றப்படுகிறார். எப்போது ஆதியில் நீரும், நெருப்பும், காலநிலையும், அறிவும் (ஞானமும்), மணமும், உணர்வும், ப்ரம்மனும், விஷ்ணுவும், ருத்ரனும் இல்லையோ, வெற்றிடம் மட்டுமே இருந்தபோது தானே தோன்றியவர் விஸ்வகர்மா என்றும் விஸ்வகர்மா தோன்றிய விதத்தை வேதம் விவரிக்கின்றது


கோத்திரங்கள்பஞ்ச கம்ஸலர்கள் எனவும் கம்மாளர்கள் எனவும் விஸ்வகர்ம பெருமக்கள் எனவும் அழைக்கப்படுகின்ற குலத்தினருக்கு ஐந்துவித கோத்திரங்கள் (பூர்வீக ரிஷிகள்) உள்ளன. இன்று பலருக்கும் தங்களின் கோத்திரம் தெரியாது. தங்கள் செய்யும் தொழிலைப்பொருத்து தங்கள் கோத்திரத்தை அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
1) மனுவின் வழித்தோன்றல்கள் (இரும்பு தொடர்பான வேலையில் ஈடுபடும் கலைஞர்கள்) – சானக ரிஷி கோத்திரம் – ரிக் வேதம்
2) மயன் வழித்தோன்றல்கள் (மர வேலைக் கலைஞர்கள்) – ஸநாதன ரிஷி கோத்திரம் – சாம வேதம்
3) த்வஷ்டா வழித்தோன்றல்கள் – (உலோகத்தில் தேர்ந்த கலைஞர்களுக்கு) – அபுவனஸ ரிஷி கோத்திரம் – யஜூர் வேதம்
4) சில்பி வழித்தோன்றல்கள் (கல்லில் கலைவண்ணம் காண்போருக்கு) – ப்ரத்னஸ ரிஷி கோத்திரம் – அதர்வ வேதம்
5) விஷ்வக்ஞர் வழித்தோன்றல்கள் – (பொன்னில் எண்ணத்தைப் பொறிப்போருக்கு) – ஸூபர்ணஸ ரிஷி கோத்திரம் – ப்ரணவ வேதம்


வாஸ்த்து சாஸ்திரம் (கலை) தொடர்பான விதிமுறைகளையும், அக்கலையினது நுணுக்கங்களையும் சாக்ஷாத் சிவபெருமானே பராசர ரிஷிக்கு உபேதசம் செய்தருளினார். பராசரர் ப்ருஹத்ரதனுக்கும், ப்ருஹத்ரதன் தேவசில்பியான விஸ்வகர்மாவிற்கும் உபதேசம் செய்தனர். விஸ்வகர்ம பரப்ரஹ்மனே இன்றளவும் இக்கலையை காத்து, வளர்த்து வருவதாய் ஐதிஹம்.
ஆர்ஷபாரத கலாச்சாரத்துடன் தொடர்புடையவர்கள் விஸ்வகர்மாக்கள். இவர்களே முன்பு சிந்து நதி தீரத்தில் மொஹஞ்சதாரோ, ஹரப்பன் நகரங்களை நிர்மாணித்து, வாழ்ந்து சிந்துச் சமவெளி எனும் சீரிய நாகரிகத்தை உருவாக்கினார்கள். சிந்துச்சமவெளி நாகரிகமே பின்னாட்களில் மருவி இந்து என்னும் மதமாகியது.
வாயுபுராணத்தின் நான்காம் அத்யாயம், மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம்.
மத்ஸ்ய புராணத்தின் 252ஆம் அத்யாயம், மஹாபாரதம் அனுசாஷன பர்வம் 85ஆம் அத்யாயம் முதலியவற்றில் ஸ்ரீ விராட் விஸ்வகர்ம வம்சாவளியின் குலங்கள் விளக்கப்பெற்றுள்ளன.இரும்பு, மரம், கல், உலோகம், தங்கம் முதலிய பொருட்களைக் கொண்டு படைக்கும் தொழிலைச் செய்யும் கைவினைஞர்கள் “விஸ்வகர்மா” என பொதுப்பெயர் கொண்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இக்குலத்தோர் பரவி இருந்தாலும் ஆசியா கண்டத்தில் இவர்களின் பரவல் அதிகம் என புள்ளி – விவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் வாழும் விஸ்வகர்மாக்கள் குறித்து அறிவோம்


1) தமிழகம் :
தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் விஸ்வகர்மாக்கள் வாழ்கின்றார்கள், தச்சர், பொற்கொல்லர், ஆச்சாரி, விஸ்வபிராமணர், சில்பி, கன்னார், தட்டார், கம்மாளர் என பலவகையாக அழைக்கப்படுகின்றனர், பெரும்பான்மையோர் தமிழும், சிலர் தெலுங்கையும் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.
2) ஆந்திர மாநிலம் :
விஸ்வபிராமணர்கள் என்றும், கம்ஸலர்கள் என்றும் ஆந்திராவில் பொதுவாய் அழைக்கப்படும் இவர்கள் கம்சாலி, முசாரி, வத்ராங்கி, காசி, சில்பி என உட்பிரிவுகள் பலவற்றைக் கொண்டுள்ளனர்.
3) கேரளம் :
கேரள தேசத்தில் ஆச்சாரிகள் எனவும், விஸ்வ பிராமணர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்


4)கர்நாடகம்:
கர்நாடக மாநிலத்தில் விஸ்வகர்மா என பொதுப் பெயரினையும், குசாலர், சிவாச்சார், சத்தராதி என உட்பிரிவுகளையும் கொண்ட இவர்களின் சிலர் அசைவ உணவு வகைகளை உண்ணும் பழக்கம் கொண்டவர்கள். வட கர்நாடகத்தில் உள்ளவர்கள் சிலர் ‘லிங்காயத்’ என்னும் வழிபாட்டு முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
5) கோவா:
கோவாவில் விஸ்வகர்மாக்கள் ‘சாரி’கள் என அழைக்கப்படுகிறார்கள், மனு மய பிராமணர்கள் எனவும் இவர்கள் அறியப்படுகிறார்கள், போர்ச்சுகீசியர்களின் காலத்தில் இவ்வினத்தினர் சிலர் கிறிஸ்தவ மதத்தினைத் தழுவியுள்ளனர்.
6) ராஜஸ்தான்:
ராஜஸ்தானத்தில் ஜங்கித் பிராமணர்கள் என அழைக்கப்படும் இவர்கள் இன்றளவும் இறைவனின் உருவங்களையும் ரதங்களையும் வடிவமைத்துப் புகழ் சேர்க்கிறார்கள்.பெரும்பாலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வாழும் இவர்கள் உயர் பொருளாதார நிலை முதல் மிகவும் ஏழ்மையான நிலைவரை தங்களது வாழ்க்கை நிலையைக் கொண்டுள்ளார்கள். பொதுவாக இந்திய சமூகத்தில் இவர்கள் குறிப்பிடக்கூடிய சமுதாய-பொருளாதார நிலையினை பெற்றுள்ளனர்.


சமூக-பொருளாதார நிலைகளில் உயர்ந்தும் தாழ்ந்தும் விளங்கும் இவர்கள் கிராமப்புற பொருளாதாரத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றனர். தற்போது தொழிற்புரட்சி மற்றும் தானியங்கி இயந்திரப்புரட்சி ஆகியவற்றின் ஆதிக்கத்தினால் வேலைவாய்ப்பை இழக்கும் இவர்கள் தங்களது குலத்தொழில்களை விடுத்து மற்ற வேலைகளுக்கும் செல்கின்றனர்.
எழுத்தாளர் ஆனந்த் கே.குமாரசாமி ஹிந்து மற்றும் புத்தமதத்தினரின் தொன்மங்கள் (ஆங்கிலம்) என்ற தனது புத்தகத்தில் கம்மாளர்கள் விஸ்வபிராமணர்கள் எனவும், வேதகம்மாளர்கள் எனவும் அறியப்படுகிறார்கள். அவர்கள் தெற்கு நோக்கிப் புலம் பெயர்ந்து, சிலோன், பர்மா, ஜாவா தீவுகள் போன்ற இடங்களில் வாழ்கிறார்கள். ஆன்மீகத்திலும், கல்வியிலும் தங்களை முன்னோடிகளாகக் கருதுகிறார்கள். இவர்கள் தங்களின் சடங்குகளைத் தாங்களே நடத்துகிறார்கள். பிராமர்களைச் சார்ந்து நிற்பதில்லை. என்று பதிவு செய்து இருக்கிறார்.
டாக்டர் கிருஷ்ணராவ் தனது நூலில், உயர்ந்த தொழில் நிலையையும், சமூக அந்தஸ்தையும் பெற்றவர்களாக இரும்பு வேலை, மரவேலை செய்வோரும், கைவினைஞர்களும் இருந்தனர். எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் இவர்கள் மிகச் சிறப்பானதொரு சமூக-பொருளாதார நிலையைப் பெற்றிருந்தனர். பவித்ரமான பூநூல் அணிந்தும், தங்களை விஸ்வகர்ம பிராமணர்கள் என பிரகடனப்படுத்தியும் வாழ்ந்தனர். இவர்களின் புகழும் பெருமையும் வளர மிக முக்கிய காரணம், இவர்கள் தங்களது கலைத் திறமைகளின் மூலம் இந்தியப் பண்பாட்டினை, குறிப்பாக இந்து மத கலாச்சாரத்தை உலகினுக்கு உணர்த்தி, உணர்த்தியதுதான் என்று ஆய்ந்து கூறியிருக்கிறார்.
மறைக்கப்பட்ட வரலாறு:


சமுதாயத்திற்கான பெரும்பாலானத் தேவைகளை நிறைவேற்றியும், சமுதாயத்திற்குக் குருமார்களாய் இருந்து வழிகாட்டியும் வந்த விஸ்வகர்ம இனம் பேஷ்வாக்கள் ஆட்சிக்காலத்தில் ஒரு மிகப்பெரும் கொடுமைக்கு ஆளானது. இந்த வரலாறு பெரும்பாலும் ஆய்வறிஞர்கள் கூட அறியாதது. வரலாற்றின் ஆழ்ந்த ஏடுகளித் தேடிப்பார்த்தால் கிடைக்கும் இந்த அவலத்தின் சில துளிகள் இதோ…
பாஞ்சாலர்கள் என அழைக்கப்பட்ட விஸ்வகர்ம இனத்தவர்களின் சமூக முக்கியத்துவத்தையும், அபார வளர்ச்சியையும் கண்ட பிராமணர்கள் இவர்களை சமுதாயத்தினின்றும் ஒதுக்க ஆவல் கொண்டவர்களாய், பொறாமை மேலிட, இவர்கள் விஸ்வகர்மாக்கள். பிராமணத் தகுதியுடையவர்கள் அல்ல என்று கூறி பிராமணர்களாக ஏற்க மறுத்தனர்.இதனால் பிராமண-விஸ்வபிராமணர்களிடையே பல காலங்களாக விரோத மனப்பான்மை இருந்து வந்தது.
பேஷ்வாக்கள்
எனப்படும் ஒரு இனத்தவர் மன்னர்களாக அரசாண்ட காலத்தில், விஸ்வகர்மாக்கள் பல வகையிலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில், பேஷ்வாக்கள் பிராமண சமுதாயத்தைத் தழுவியவர்கள். இவர்கள் பாஞ்சாலர்களை இடுப்பில் வேட்டி கட்ட அனுமதிக்க வில்லை. வேறுசில காலத்தில் பஞ்ச கச்சம் போன்ற ஆடைகளை (பிராமணர்களுக்கு உரியது) அணிய தடை செய்தனர். சிகையை பாரம்பரிய வழக்கப்படி (மரபுப்படி) வளர்க்கவோ, கட்டவோ அனுமதிக்கவில்லை. இன்னும் நாம் அறியாத பல கொடுமைகளும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.
வேதகால நாகரிகத்தின் தோற்றுவாய்களாய் திகழ்ந்த இனம் ஒடுக்கப்பட்ட இந்த வரலாறு இன்று பெரும்பாலும் தேய்ந்து, மறைந்து வெளியில் தெரியாமல் போய்விட்டது


-+--+-------+++++-
பங்களிப்பு
இந்திய நாகரிகத்தின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் விஸ்வகர்ம பெருமக்கள் தொன்றுதொட்டு பெரும் பங்காற்றி வந்துள்ளார்கள்.
சில வரலாற்றுப் பெருமைகளை காணலாம்.
நாளந்தா பல்கலைக்கழகம்:
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும், ஏறத்தாழ 2 ஆயிரம் ஆசிரியப் பெருமக்களையும் கொண்ட இப்பல்கலைக்கழகம் விஸ்வ-வினைஞர்களால் உருவாக்கப்பட்டது. வானுயர்ந்த சுவர்களையும், பாதுகாப்பான கதவங்களையும் கொண்ட இப்பல்கலைக் கழகத்தில் எட்டு தனித்தனி பகுதிகளும், பத்து கோணங்களும், பரந்த தியான அறையும், வகுப்பறைகளும் அமைந்திருந்தன. மிகப்பெரிய நீர்நலைகளும், பூங்காக்களும் வளாகத்திற்குள்ளேயே அமைந்திருந்தன. ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரம்மாண்டமான நூல்நிலையமும் நாளந்தாவில் இருந்தது. அங்கு புகழ்பெற்ற புத்தகங்களைப் படியெடுக்கும் செம்பணி நடைபெற்று வந்தது. இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்ட அரிய பல பாடங்களைப் பயில கொரியா, ஜப்பான், சைனா, திபெத், இந்தோனேஷியா, பெர்ஷியா, துருக்கி உட்பட உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் வந்து சென்றனர். உலகின் முதல் பல்கலைக்கழகமாக விளங்கும் இந்த நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு கெளதம புத்தர் வந்து பார்வையிட்டுச் சென்றதாக வரலாறு புகல்கிறது


இரும்புத்தூண்:
IORN PILLER
இந்தியத் திருநாட்டின் தலைநகராம் புதுதில்லியில் உள்ள இரும்புத்தூண் 98 சதவீதம் தூய இரும்பினால் படைக்கப்பட்டது. கடந்த 1600 ஆண்டுகளாக துருப்பிடிக்காமல், சேதமடையாமல் உள்ள இது தனிப்புகழுடன் விளங்குகிறது. இவ்விரும்புத்தூணின் அடிப்பாகத்தில் ஒரு மெல்லிய காகிகத்தை சொறுகி, அதனை மறுபக்கத்திலிருந்து எடுத்துவிடலாம் என்று கூறுகிறார்கள். (என்றால் அத்தூண் பூமிக்குள் புதைக்கப்படாமல் உள்ளதென்பது அவர்கள் கூற்று)

அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு


அதிக பலன் தரும் பஞ்சமி திதி வழிபாடு




அதிக பலன் தரும் பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு

 31.11.2015 சனி கிழமை   பஞ்சமி திதி



பஞ்சமி திதியில் சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.

அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்தேவிக்கு பழங்களை படைக்கலாம்.
அன்பே .. என்..அருந்துணையே ..!
உன்னை வந்தடைந்த எந்தனுக்கு ..
வந்த வினை அகற்றி மகா...பாக்கியம் தந்தருள்வாய்!
தந்தையும் தாயும் நீயே..! தற்காக்கும் ரட்சகி நீயே.... !!!
என்று மனமுருகி வழிபட வேண்டும்..!!!
நித்ய நிரந்தர பரிபூர்ண வாழ்வு பெறுவோம் ..!!!