நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 31 August 2014

நமஸ்காரம் எவ்வாறு செய்ய வேண்டும் ?

நமஸ்காரம் என்பது பணிவன்புடன் மரியாதை கலந்து தேவர்களையும் பெரியோர்களையும் வணங்கும் முறையாகும். இது தண்டாக்ருதியாய் விழுந்து நமஸ்கரித்தலும், நின்றபடியும் இருந்தபடியும் நமஸ்கரித்தலுமான இரு வகைப்படும். விழுந்து நமஸ்கரித்தலிலும் இரு வகைப்படும். அவை அஷ்டாங்க நமஸ்காரமும் பஞ்சாங்க நமஸ்காரமும் ஆகும். இவற்றுள் அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, செவியிரண்டு, மோவாய், புஜங்களிரண்டு என்னும் எட்டு அவயங்களும் நிலத்தில் பொருந்தும் படியாக விழுந்து நமஸ்கரிப்பதாகும். இது பூமியில் சிரத்தை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலக்கையை முன்னும் இடக்கையைப் பின்னும் நேரே நீட்டிப் பின் அம்முறையே மடக்கி வலப்புயமும் இடப்புயமும் மண்ணிலே பொருந்தும்படி கைகளை அரையை நோக்கி நீட்டி, வலக்காதை முன்னும் இடக்காதைப் பின்னும் மண்ணிலே பொருந்தச்செய்வது. இவ்வகை நமஸ்காரம் ஆண்களுக்குரிய தாகும். பஞ்சாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிரண்டு, முழந்தாளிரண்டு என்னும் ஐந்து அவயங்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும். பெண்கள் இவ்வகை நமஸ்காரம் செய்வதற்கு உரியர். பெண்கள், மார்பு பூமியில் படாமல் வணக்கம் செய்ய வேண்டும். எனவே அங்கப்பிரதட்சணம் பெண்கள் செய்யக்கூடாது என்பது மரபு. தலை மட்டுமே குனிந்து வணங்கல் ஏகாந்த நமஸ்கராம் எனப்படும். தலைக்கு மேல் இரு கரங்கூப்பி வணங்குவது திரியங்க நமஸ்காரம் எனப்படும். 

நம் உடலில் உள்ள எட்டு அங்கங்களும் பூமியில் படும்படி வீழ்ந்து வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும். இதை தண்டனிடுதல் என்பர். அல்லது தண்டம் சமர்ப்பித்தல் என்பர். தண்டம் என்பது கழி அல்லது கோல். கையில் பிடித்துள்ள ஒரு கோலை விட்டு விட்டால் அது கீழே விழுந்து விடும். நமஸ்காரம் செய்வதை தண்டம் போல் செய்ய வேண்டுமென்று சொல்வது வழக்கம். நம் சரீரம் வெறும் மரக்கோல்தான். உதவாத பொருளை, அது தண்டமாகி விட்டது என்கிறோம். அப்படி தண்டமான வஸ்துதான் நம் சரீரம். இதைத் தூக்கிப் பிடித்து நிறுத்தி வைத்து ஆட்டுகிற சக்தி ஈஸ்வரன் கொடுத்ததே ஆகும். இந்த உடம்பை ஏதோ நாமே தாங்கி நடத்துகிறோம் என்ற எண்ணத்தை ஒழித்து விட்டு, அதாவது அகங்காரத்தை விலக்கி விட்டு அதற்கு அடையாளமாக ஈஸ்வரன் முன் இந்தச் சரீரத்தை கீழே போட வேண்டும். இதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்கிறார் ஜகத்குருஸ்ரீ ஆச்சார்ய சுவாமிகள். இந்த நமஸ்காரம் தாய், தந்தை, குரு, தேவர், பெரியோர், மூத்தோர் முதலியவர்களுக்கு உரியதாகும். தவத்தாலும் வயதாலும் ஞானத்தாலும் உயர்ந்தவர்கள் நித்தியம் நமஸ்கரித்தக்கவர்கள். எந்த குருவானவர் வேத சாஸ்திர உபதேசத்தால் துக்கத்தைப் போக்கடிக்கத் தக்கவரோ அவரை நித்தியம் நமஸ்கரிக்க வேண்டும். கெட்ட மரியாதையுள்ளவனையும், நன்றி மறந்தவனையும், கள்வனையும், வஞ்சகனையும், பித்தனையும், மூர்க்கனையும், சூதாடுபவனையும், தன்னிச்சையாக நடந்துகொண்டிருப்பவனையும், அசுசியானவனையும், எண்ணெய் தேய்த்துக் கொண்டிருப்பவனையும், ஜெபம் செய்து கொண்டிருப்பவனையும், வேத பாஷ்யனையும், காரூட வித்தைக்காரனையும், சோதிடங் கூறிப் பிழைப்பவனையும், பாதகனையும், அது போலவே புருஷனைக் கொன்ற பூவையையும், ரஜஸ்வலையானவளையும், விபச்சாரம் செய்பவளையும், பிரசவித்தவளையும், அதிகக் கோபக்காரனையும் எக்காரணம் கொண்டும் நமஸ்கரிக்கக் கூடாது. 

சபையிலும், யாக சாலையிலும், தேவாலயத்திலும், புண்ணிய ÷க்ஷத்திரத்திலும், புண்ணிய நதி தீர்த்தத்தில் நீராடுபவனையும், வேதத்யயன காலத்திலும் பிரத்தியேகமான நமஸ்காரம் செய்வது பூர்வத்தில் செய்த புண்ணியத்தைப் போக்கும். சிரார்த்தம், தானம், தேவ தர்ச்சனம், யக்ஞம், தர்ப்பணம் செய்பவனையும் நமஸ்கரிக்கக் கூடாது. ஆலயத்தில் பலி பீடத்திற்குப் பின்னுள்ள கொடிக் கம்பத்தின் முன்புதான் விழுந்து நமஸ்கரிக்க வேண்டும். ஆலயத்தின் உள்ளே எந்தச் சன்னதிகளின் முன்பும் நமஸ்காரம் செய்யக் கூடாது. பலிபீடம் இறைவனின் மாயா சக்கரம். நாம் பிறப்பு இறப்பு என்னும் மாயா சக்கரமான பலி பீடத்தில் மும்முறை வணங்குவதும், அதை உட்படுத்தி வலம் வருவதும் ஸ்தூல சூட்சும காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக என்று வேண்டுவதைக் குறிப்பதாகும். கிழக்கு மேற்கு நோக்கிய சன்னதிகளில் வடக்கே தலை வைத்தும், தெற்கு வடக்கு நோக்கிய சன்னதிகளில் கிழக்கே தலை வைத்தும் விழுந்தும் நமஸ்கரிக்க வேண்டும். தான் கால் நீட்டும் பின்புறத்தில் எந்தத் தெய்வச் சன்னதியும் இருத்தல் கூடாது. கொடி மரத்தின் முன்னால் விழுந்து வணங்கினால் அங்கு எத் தெய்வச் சன்னதியும் இருக்காது. எனவேதான் கோயிலில் இங்கு மட்டும்தான் விழுந்து வணங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் விதித்துள்ளனர். நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும். அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் !

தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்?


தர்மம் எப்படிச் செய்ய வேண்டும்?
எல்லா மதங்களும் ஒற்றுமையுடன் ஒரே குரலில் அழுத்திச் சொல்லும் சில விஷயங்களில் முன்னணி வகிப்பது ’தர்மம் செய்யுங்கள்’ என்கிற அறிவுரையாக இருக்கிறது. ”அறம் செய்ய விரும்பு” என்று ஔவையாரே ஆத்திச்சூடியை தர்மத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறார். இப்படி நம் ஆரம்பப் பாடமாகவே இருக்கும் தர்மம் இருக்கிறது.
தர்மம் குறித்து மகாபாரதத்தில் மிக அருமையான கதை ஒன்று இருக்கிறது.
கௌரவர்களை குருக்‌ஷேத்திரப் போரில் வென்ற பின் தர்மபுத்திரர் அஸ்வமேத யாகம் செய்து முடிவில் எட்டுத் திக்கிலிருந்தும் வந்திருந்த ஏழை எளியவர்களுக்கு தானங்கள் செய்தார். அந்த நேரத்தில் பாதி உடல் தங்கம் போல் மின்னிய கீரி ஒன்று யாகசாலைக்குள் வந்து தானம் நடைபெற்ற இடத்தில் தரையில் புரண்டு புரண்டு எழுந்தது.
‘எதற்காகப் புரள்கிறாய்?’’ என்று கீரியைக் கேட்டார்கள். ‘‘மிகப் பெரும் தானம் நடக்கும் இடத்தில் புரண்டால், மீதி உடலும் தங்கமாகும் என்று நம்பி வந்தேன். இந்த இடத்தில் பெரும் தானம் நடக்கவில்லை போலும். அதனால்தான் என் மீதி உடல் தங்கமாகவில்லை’’ என்றது கீரி.
எல்லோரும் திருப்தி அடையும் அளவு தானம் செய்திருந்த தர்மபுத்திரர் அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் ‘‘இது என்ன விந்தை? இதை விடப் பெரிய அளவில் யாராவது தானம் செய்யமுடியுமா என்ன? அப்படி எந்த இடத்தில் உன் பாதி உடல் தங்கமானது?’’ என்று கீரியை விசாரித்தார்கள்.
கீரி பதில் சொன்னது. ‘‘ஒரு உஞ்சவிருத்தி பிராமணரின் குடும்பத்தில் அவர், அவர் மனைவி, மகன், மருமகள் என நான்கு பேர் இருந்தார்கள். ஒரு சமயத்தில் கடும் பஞ்சம் வந்து அவர்கள் பல நாள் பட்டினி கிடைக்க நேரிட்டது. பிறகு ஒரு நாள் ஒரு படி சோளம் கிடைக்க அந்த சோளத்தை மாவாக அரைத்து அதை நான்காகப் பிரித்து இறைவனை வணங்கி சாப்பிட அமர்ந்தார்கள். அந்த நேரத்தில் கடும் பசியோடு ஒருவர் அந்த வீட்டுக்கு வர அவரை வரவேற்று உபசரித்த குடும்பத் தலைவர் தன் பங்கு மாவை அவருக்குச் சாப்பிடத் தந்தார். அது வந்தவருக்குப் போதாமல் போகவே அடுத்ததாக மனைவி, பின் மகன், அதன் பின் மருமகள் என மற்றவர்களும் தங்கள் பங்கு மாவை பசியோடு வந்தவருக்கு முழுமையாக தந்து விட்டனர். அப்படி தர்மம் நடந்த அந்த வீட்டில் பரிமாறும் போது சிதறிய சிறு மாவின் மீது நான் நகர்ந்தபோது என் பாதி உடல் தங்கமாகியது. மீதி உடலையும் தங்கமாக்கிக் கொள்ளும் ஆசையில் இங்கு வந்தேன். ஆனால் உங்கள் தர்மம் அந்த ஒரு படி மாவுக்குச் சமமில்லை’’
மிக உயர்ந்த வகையான ஈடில்லா தர்மம் அது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அந்த வகையான தர்மத்தை எல்லோராலும் செய்வது முடியாத காரியம் என்பதால் தங்களால் முடிந்த அளவு, முடிந்த விதங்களில் அடுத்தவர்க்கு தர்மம் செய்யுமாறு எல்லா மதங்களும் ஆன்மிகப் பெருமக்களை வலியுறுத்துகின்றன.
”தனக்கு மிஞ்சித் தானே தர்மம்” என்று பலரும் நினைக்கலாம். அதுவும் சரி தான் என்றாலும் எது கிடைத்தாலும் தனக்கே போதவில்லை என்று நினைப்பவன் அதை வைத்துக் கொண்டே தர்மசிந்தனை இல்லாமல் வாழ்ந்து முடிக்கிறான். இதற்கு என்ன செய்வது? இந்த மனநிலைக்கு ’தெய்வத்தின் குரலி’ல் காஞ்சி மகா பெரியவர் அழகாக வியாக்கியானம் செய்திருக்கிறார்.
”எது உயிர் வாழ்வதற்கு அத்யாவசியமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities -க்குத் தேவயானதைத் தான் 'தனக்கு' என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், 'தனக்கு' என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். சொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக் கொள்ளா விட்டால் தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களைப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ''தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை'' என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. அதனால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படிச் செலவழித்து எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பது தான் ''தனக்கு மிஞ்சித் தர்மம்''.
தைத்திரீயோபநிடதத்தில் தானத்தைப் பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறது. “சிரத்தையோடு தானம் தர வேண்டும். அசிரத்தையோடு தரக்கூடாது.”. தர்மத்தை அகமும், முகமும் மலரத் தர வேண்டும் என்கிற அந்த உபநிடதம் இரண்டு விதமான வெட்கங்களுடன் தர்மம் செய்ய வேண்டும் என்கிறது. இதை விட அதிகமாகத் தர முடியவில்லையே என்ற வெட்கமும், தருவது நான்கு பேருக்குத் தெரிந்து விடக்கூடாது என்ற வெட்கமும் இருக்க வேண்டுமாம். நான்கு பேருக்குத் தெரிந்தால் அவர்களும் கேட்டு விடுவார்களோ என்கிற பயம் அல்ல இங்கு சொல்லப்படுவது. நான்கு பேருக்குத் தெரிய செய்வது புனிதமான தர்மம் ஆகாது என்பதும், தெரிந்து அவர்கள் பாராட்டினால் அது கர்வம் ஏற்படக் காரணமாக இருக்கும் அது தர்மத்தின் பலனை அழித்து விடும் என்கிற பொருளில் தான் இங்கு சொல்லப்படுகிறது.


தர்மம் என்பது பொருளாதார ரீதியாக செல்வந்தர்களாக இருப்பவர்கள் மட்டும் செய்யும் காரியமல்ல. தன் தேவைகளை முடித்துக் கொண்ட பின் எஞ்சியதைத் தருவதும் அல்ல. எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் மற்றவர்க்கு தர்மம் செய்ய முடியும். அதற்கு முக்கியத் தேவை மனம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அப்படி தர்மம் செய்பவனை இறைவன் காப்பான் என்று சர்வ மதங்களும் சொல்கின்றன.

குழந்தைப்பேறு தரும் தந்திரம்!



குழந்தைப்பேறு தரும் தந்திரம்!
அகத்தியர், சித்தர் பாடல், சித்தர்கள்
நமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கப் படுவது நிதர்சனம். தற்போதைய நவீன மருத்துவம் பலவேறு தீர்வுகளை தந்துவிட்ட சூழலில் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ச...ித்தர் பெருமக்கள் இதற்கான எளிய தந்திரம் ஒன்றினை அருளியிருக்கின்றனர். கொஞ்சம் சுவாரசியமானதுதான், வாருங்கள் தெரிந்து கொள்வோம்..
"அட்சரமாஞ் சிகாரமுதல் சகலபூவாம்
சிறப்புனனே யிருந்துதான் வருணன்மூலை
நிசமான தாமரையின் மணிதானாவல்
நிலையான பலகையது நீலவஸ்த்ரம்
தலையான வருவைந்து நூறுபோடு
சகலபில்லி சூனியங்கள் தெறித்துப்போகும்
மலையாதே பெரும்பாடு முடனேதீரும்
மங்கையர்க்கு மதலையுண்டா மலங்கிடாதே."
- அகத்தியர் -
நாவல் மரத்தின் பலகை ஒன்றை எடுத்து அதில் “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை எழுதிட வேண்டும். பின்னர் அந்த பலகையின் மீது தாமரை மணிகளையும், ஒரு பூவினையும் வைத்திட வேண்டுமாம். நீல நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு, மேற்கு முகமாய் அமர்ந்து நாவல் மரத்தின் பலகையை முன்னர் வைத்துக் கொள்ள வேண்டும். “சிவயநம” என்கிற சிவ மந்திரத்தை செபித்தவாறே ஒவ்வொரு பூவாக, ஐநூறு முறை அந்த பலகையின் மீது பூக்களை போட வேண்டுமாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களை பீடித்திருக்கும் பில்லி,சூனியம் போன்றவை விலகி, பெரும்பாடு என்ற நோயும் தீர்ந்து போவதுடன் குழந்தை பாக்கியமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். தேவையுள்ளவர்களுக்கு இந்த முறையை பரிந்துரைக்கலாம்

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்


செவ்வாய், 27 மே, 2014

வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்



(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.
(2) நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.
...
(3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம்,மன அழுத்தம்,சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும்.காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம்.நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும்.அதை குடிக்க கூடாது.
(4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
(5) தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை

ஸ்தல விருட்சத்தின் முக்கியத்துவம் என்ன?



ஸ்தல விருட்சம் என்றால் அங்குதான் சுவாமியே உருவாகியிருப்பார். அந்த ஸ்தலம் உருவாகக் காரணமாக இருப்பதுதான் ஸ்தல விருட்சம். ஒரு சில இடங்களில் கடவுள் சுயம்புவாக இருந்தா‌ர். ம‌க்களு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌ந்தது. அதன் மீது காராம்பசு பால் சொரிந்தது. அங்கு போய் பார்த்தால் சுயம்பு லிங்கம் இருந்தது. அதன் அருகில் இரு‌க்கு‌ம் மர‌ம் தான் ஸ்தல விருட்சம்.ஸ்தல விருட்சத்தைச் சுற்றினால் கடவுளின் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றும் பலன் கிட்டும். வேதம் அறிந்தவர்கள், முக்கியமான சிலர்தானே கர்ப்பகிரகத்திற்குள் செல்ல முடியும். ஆனால் ஸ்தல விருட்சத்தை யார் வேண்டுமானாலும் சுற்ற இயலும். .எனவே பல கோயில்களில் ஸ்தல விருட்சத்திற்கு அருகே சித்தர் பீடம் அமைக்கப்பட்டிருக்கும். சித்தர்கள் அமர்ந்திருப்பதாக ஐதீகம். அங்குள்ள சித்தர்களை வைத்துத்தான் கோயிலின் சுவாமிக்கு சக்தி அதிகரிக்கும். எல்லா இடத்திலும் இறைவன் எப்போதும் இருக்க முடியாது என்பதால், கோயில்களில் சித்தர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்களது தவத்தின் வலிமையால் கோயிலின் வலி¨மை கூடும். அவர்கள் தவம் செய்வதே இந்த ஸ்தல விருட்சத்தின் கீழ்தான். ஈசன் எதிர் நின்றாலும் ஈசன் அருள் பெற்ற நேசன் எதிர் நிற்றல் அறிது என்ற பாடல் உண்டு. அதாவது சிவஞான போதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதாவது ஈசனையே எதிர்க்கலாம். ஈசனிடம் இருந்து வரம் பெற்று அருள் பாலிக்கும் சித்தர்களை எதிர்க்கக் கூடாது என்பது பொருள்.ஸ்தல விருட்சங்கள் என்பது இறைவனுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவோமே அதை விட அதிக சக்தி வாய்ந்தது ஸ்தல விருட்சமாகும்.
ஸ்தல விருட்சத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். ஒரு முறை வந்தாலும் போதுமானதுதான்

வியாபார ஸ்தலங்களுக்கு ஏற்ற மந்திரம்


வியாபார ஸ்தலங்களில் மகாலட்சுமியின் திருவுரவப் படத்தையோ, சிறு சிலை வடிவத்தையோ வைத்து தினமும் பூஜை செய்த பின்பே, அன்றைய வியாபாரத்தை தொடங்கும் வழக்கம் பெரும்பாலோனோர்களுக்கு  உண்டு. அவ்வாறு மகாலட்சுமி பூஜையைச் செய்வதன் மூலமாகவும், கீழே குறிப்பிட்ட மந்திரத்தை அதனுடன் உச்சாடனம் செய்வதன் மூலமாகவும் பல வகைகளில் வியாபார வளர்ச்சி நிலைகளை எட்டலாம்.

நமது கடைகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், நிறுவனங்கள் ஆகிய எந்த வகையான வியாபார ஸ்தலமாக இருந்தாலும், லட்சுமி கடாட்சம் ஏற்பட முக்கியத் தேவை எதுவெனில், அங்கு கடைபிடிக்கப்படும் சுத்தமேயாகும். மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரண சுத்தி மட்டுமல்லாமல் நமது இல்லங்கள், வியாபார, மற்றும் தொழில் தலங்கள் ஆகியவற்றிலும் நாம் கடைபிடிக்கும் தூய்மையானது மகாலட்சுமி ஆகர்ஷயத்தை அமைத்து வைக்கும் ஒரு முக்கியமான காரணியாக விளங்குகிறது. அதன் பிறகே பூஜைகளும், மந்திர ஜபங்களும் இளம் பெற்று தத்தமது பலன்களைத் தருகின்றன.

ஆகவே, நமது வியாபார ஸ்தலங்களில் காலையில் செய்யும் சிறு பூஜையோடு கீழ்வரும் மந்திரத்தையும் பயன்படுத்தி நல்ல பலன்களைக் காணலாம். நெய்யிலோ, நல்லெண்ணெயிலோ தீபம் ஏற்றுவது விசேஷம்.  மந்திரம் கீழ்வருமாறு:-

ஸ்ரீ சுக்லே மஹா நிவாஸே

ஸ்ரீ மஹா லட்சுமி நமோ நம.

செய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம்


செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை  ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.

செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:-

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும்.

யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்

16 வகை லட்சுமியின் பலன்களை பெற



1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

13. ஸ்ரீசாந்தலட்சுமி:-  பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்

குழந்தைக்கு ஞாபகசக்தி அதிகரிக்க ஸ்லோகம் !!!!



படி! படி! என்று அவர்களை எப்போதும் தொந்தரவு செய்யாமல் இருங்கள். சுயமாக யோசிக்கப் பழக்குங்கள். விளையாட்டாகப் பேசும் வழக்கிலேயே பாடங்களை நினைவுபடுத்திக் கொண்டிருங்கள். பிறரோடு ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள். அதுவே போதும். அவர்களது தன்னம்பிக்கை வளர்வதற்கு! தினமும் உதய வேளையில் சூரியனைப் பார்த்தவாறு, ""புத்தி வர்த்தக தேவேச திவாகர நமோஸ்துதே'' என்ற மந்திரத்தை 12 முறை சொல்லச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லி முடித்ததும், சூரியனை நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள்.

ஏன் ஆன்மா உய்வு பெறவேண்டும் ?



ஆன்மா அழியாதது. ஆனால் இந்த உடல் அழியக் கூடியது .நாம் இறப்பு என்று கூறுவது இந்த உடலுக்கு மட்டுமே. பெயரை நீக்கி பிணம் என்று பேரிட்டு இன்னார் என்ற அடையாளம் எல்லாம் முடிந்து பிணம் என்று நாம் பெற்ற பிள்ளைகளும் உற்றாரும் கூறுவர் அந்த இன்னார் என்பது அந்த உடலா ? அல்லது அந்த உடலில் ஒட்டியிருந்த உயிரா ? உடல் இங்கே இருக்கிறது சரி அந்த உயிர் (ஆன்மா) எங்கே சென்றது அதன் பிறகு அந்த உயிர் எனும் ஆன்மா என்ன செய்யும்? எங்கு செல்லும் ? அதன் அடுத்த படி என்ன? 

ஆன்மாவானது இந்த பிறவியில் தான் செய்த பாவ புண்ணியத்திற்கேற்ப (வினை) அடுத்த பிறவியோ அல்லது முக்தியோ (பிறவாத நிலை) என்று ஏதாவது ஒரு நிலைக்கு செல்லும்

பிறக்கும் நிலை என்று பார்த்தால் நம் வினைக்கு ஏற்றாற்போல கல் புல் புழு பூச்சி மரம் பறவை பாம்பு மனிதர் பேய் தேவர் கணங்கள் முனிவர் அசுரர் என்று எதாவது ஒரு உடல் நமக்கு கொடுக்கப்படும் இதை மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் குறிப்பிடுகிறார் இதில் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் (சலிச்சுபோச்சு ) என்று கூறுகிறார் அதனால் சிவபெருமானே உன் திருவடிகளை பிடித்தால் வீடு பேறு கிடைக்கும் என்று கண்டு கொண்டேன் என் ஆன்மா உய்வு பெற எனக்கு முக்தி எனும் வீடுபேற்றை கொடுத்து கடைத்தேற்று என வேண்டுகிறார் அப்பர் சுவாமிகளோ புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் வேண்டும் என்று கேட்கிறார் இன்னும் மேலே சென்று இப்பிறவி தப்பினால் இனி எப்பிறவி வாய்க்குமோ என்று இறைஞ்சுகிறார் அப்படி மீண்டும் ஒருமுறை மனிதபிறவி கொடுத்தால் குனித்த புருவமும் என்று தொடங்கி இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணவேண்டும் என்கிறார் ஏனெனில் இம்மனிதப் பிறவிஅவ்வளவு மகத்துவம் உள்ளது பிரமன் இந்த உயிரை படைத்து படைத்து சலித்து போனானாம் மாதா பிரசவித்து உடல் சலித்தாளாம்

பிறவாத நிலை என்றால் வீடுபேறு எனும் முக்தி. அதற்கு நாம் புண்ணியம் செய்ய வேண்டும். இறைவனை மகிழ்விக்க வேண்டும் எப்படி? பிரமாண்டமாக ஆலயம் கட்டுவதா? மிகப்பெரிய யாகம் செய்வதா? அபிஷேகம் செய்வதா? எதுவும் அவர் கேட்க வில்லை, சாதாரணமாக புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு ஆமாம் பூஜை செய்து இறைவனை வழிபட இது போதும். விருப்பு வெறுப்பு என்ற நிலை கடந்த ஈசனுக்கு ஒரு சிறு விருப்பம் உண்டாம் என்னவென்றால் ஆன்மாக்கள் தன்னை பூஜை செய்து உய்வு பெறவேண்டும் என்று அதற்கு முன்னுதாரணமாக குழந்தையின் நோய் தீர தாய் மருந்து உண்ணுவது போல உலக உயிர்கள் யாவும் சிவனை அறிந்து பூசித்து உய்வு பெரும் பொருட்டு உலகத்தாய் உமை அம்மை ஆகமங்களை எல்லாம் இறைவரிடம் கேட்டு அவற்றில் விதித்த படி பூசித்தருளினார்

ஊத்துமலை முருகன் கோவில் (சேலம்)










சேலத்தில் மிகப் புகழ் பெற்ற, சித்தர்களோடு தொடர்புடைய ஒரு சிறந்த 
ஸ்தலம் சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை முருகன் கோவில் அங்கே இருக்கின்ற முருகன்  அந்த மலையில் ஒரு குகையும் உண்டு. அந்த குகைக்கு அருகிலே அகத்தியர் பிரதிஷ்டை செய்த 44 முக்கோணங்களை கல்லினால் செதுக்கி வைக்கப்பட்டுள்ள 

ஸ்ரீ சக்கரம் உண்டு. அதனது ஆற்றல்களை அளவிட்டுக் கூற இயலாது. 

பொதிகை மலை சென்று அகத்தியரைப் பார்க்க முடியாதவர்கள் இந்த ஊத்துமலை குகையில் தியானம் செய்து ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் அகத்தியர் தரிசனம் தருவார்.



அதுமட்டுமல்லாமல் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றும் அந்த மலையில் உண்டு. அகத்தியர் மட்டுமில்லாமல் சுகர் மகரிஷிக்கும் இந்த மலைக்கும் நிறைய தொடர்பு உண்டு தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு பொதிகையின் ஒரு பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்றை ஒட்டியிருந்த, முருகன் கோயிலில் தான் தங்கினார். காலப்போக்கில் அந்தக் கோயிலே அகத்தியர் கோயில் என பெயர் மாறியது. இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் தமிழகமெங்கும் சென்றிருக்க வேண்டும். அவர் சேலம் பகுதிக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. முருகன் பாலவடிவத்தில் காட்சி தரும் தலமான சேலத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்


இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார்.



முருகன் கோயிலுக்கு எதிரில் கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே மரம், பசு, சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. கிளி வடிவில் சுகரிஷியும், கன்வ ரிஷியும் இங்கு தவம் செய்துள்ளனர். இங்குள்ள தல விருட்சம் வில்வம் ஆகும். பால முகம் கொண்டு, வேலும் மயிலும் கொண்டு, அன்பர்க்கு அன்பனாய், பக்தர்களின் வினை தீர்ப்பவனாய் அருள்பாலிக்கும் பால சுப்பிரமணியரையும், ஆதிசக்தியான பாலதிரிபுர சுந்தரியையும் சக்ராதேவியையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்




இந்த கோயிலில் சொர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்
இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்

நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானம்


நமது கர்மவினையை மாற்றும்சக்திஅன்னதானம்



நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்
துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.             ஆதாரம்: (சிவபுராணம்).பூர்வபுண்ணியம் உள்ளவர்களே இவ்வாறு அன்னதானம் செய்ய முடியும் என்பதையும்,அந்த துவாதசி அன்னதானத்தை நமது முன்னோர்கள் சூட்சுமமாக வந்துஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் உணர்வுபூர்வமாக உணர முடிந்தது

நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போலநமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் செய்த நல்வினைகள் மற்றும் தீவினைகளின் தொகுப்பில் எட்டில் ஒரு பங்கையும் சேர்த்தே அனுபவிக்கும் விதமாக நமது பிறப்பும், நமது ஜனன ஜாதகமும் அமைந்திருக்கிறது. மீதி ஏழு பங்குகள் பிற நமதுதாத்தா பாட்டியின் பேரன் பேத்திகளுக்கு பிரிந்துவிடும்


நமது கர்மாக்களை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.நம் சார்பாக வேறு யாரும் அதைச் சுமக்க முடியாது. மாற்ற முடியாது; பூஜைகள், பரிகாரங்கள் மூலமாக நமதுதீயக்கர்மாக்களை நம்மால் குறைக்க முடிந்தாலும், அந்த பூஜைகள், பரிகாரங்களில் நாம் நேரடியாகக் கலந்து கொண்டால் மட்டுமே நமது தீயக்கர்மவினைகள் குறையதுவங்கும்;அதே சமயம் அந்த பூஜைகள், பரிகாரங்களை நாம் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அவைகள் சூட்சுமமாகச் செயல்படும். 

நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி





ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி

விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.

இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.
இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
இங்கு விஷ்வாமித்திர மகரிஷியின் சூட்சம சமாதி நிலையும் அமையப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்

1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்
நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!

ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

விஜயாபதியில் அமைந்துள்ள 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
02.09.2014 செவ்வாய்கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறுமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98420 78733
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி




இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது..விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும்.

கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது .

விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி...

300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர்.

இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் 

விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர்

முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் ..

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் )

ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

விஜயாபதியில் அமைந்துள்ள 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
பிரதி மாதம்   அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறுமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

மேலும் தகவல்கள்களுக்கு:
9843016651

98420 78733

Saturday, 30 August 2014

ஸ்ரீ கணேச புராணம்

பல தருணங்களில் நாம் நன்கு திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் கூட தடை, தாமதங்களால் மனச் சங்கடங்களை உண்டாக்கும். எல்லாவழிகளும் அடைபட்டு, மன அழுத்தம் உண்டாகும் தருணங்களில் நமக்கு உதவக் கூடிய ஒரு மந்திரத்தை ‘
ஸ்ரீ கணேச புராணம்’ குறிப்பிட்டுக் காட்டுகிறது. அந்த மந்திரம்

‘ஓம் வக்ர துண்டாய ஹம்’.

சூழ்நிலைகளில் உள்ள எதிர்மறை சக்திகளை விலக்கக் கூடியதும், விஷயங்கள் ஒருமுகமாகச் செல்லக்கூடிய அருள் வழிப்பாதையைக் காட்டக்கூடியதுமான மகத்தான சக்திநிலையின் நுட்பமான மந்திர வடிவம் இது.

பக்தி நிறைந்த இதயத்துடன் பிள்ளையாரின் சன்னிதியில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறைகள் உச்சாடனம் செய்து, நமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தால் அந்த யானை முகத்தோன் அனைத்தையும் நாம் நினைத்தபடியே நடத்தி வைப்பான்

எலுமிச்சம்பழ மாலை



எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியுடன்அளிப்பதே பூஜை. ஆண்டவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனானதுஅவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென்றடைந்துபயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியுடன் அளிக்கும்அனைத்து பொருட்களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில்ஒவ்வொரு தெய்வ வடிவங்களுக்கும் அவர்களுக்கு உரிய சிறப்பான மலர்,பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங்கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் எனமிகச் சிறப்பாக வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சிலஅனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத்தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களையும்மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப்பதை ஆகமங்கள்ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம்பழம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது.வெற்றியின் அடையாளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும்எலுமிச்சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தைவெளிப்படுத்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது.எனினும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகையில்எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினால், அந்தப்பழத்தின் சிறந்த மஞ்சள் நிறத்தினாலும் தன்மையாலும் நாம் நமதுகாரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறுதி. அக்காலங்களில் நாம்நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவேதங்களின் பிரார்த்தனைகளை சங்கல்பித்துக்கொண்டு பூவையோபழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைகளைப் பெற்றார்கள்.முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவையோ, பழங்களையோமாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடைவோம்

காந்திமதியம்மன் உடனமர் ஸ்ரீ நெல்லையப்பர் ஆலயம் திருநெல்வேலி


மூலவர்    :     நெல்லையப்பர்  (வேண்ட வளர்ந்தநாதர் )
அம்மன்/தாயார்    :     காந்திமதி, வடிவுடையம்மை
தல விருட்சம்    :     மூங்கில்
தீர்த்தம்    :     பொற்றாமரைக்குளம் (ஸ்வர்ண புஷ்கரணி கருமாறித் தீர்த்தம், சிந்துபூந்துறை
பழமை    :     1000-2000 வருடங்களுக்கு முன்  
சிவபெருமானாரின், நடராசத் திருமேனியின் அருட்கூத்து நடத்துகின்ற ஐம்பெரும் சபைகளான, ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவற்றில் “தாமிர சபை” என்று போற்றப்படுகிற காந்திமதியம்மன் உடனமர் நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலியில் அமைந்துள்ளது. தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சபைகளில், இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ நெல்லையப்பர் காந்திமதி ஆலயம் தாமிர சபையாகவும், ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன.
தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14வது தலம்.
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பதிகம்
அக்குலா மரையினர் திரையுலா
முடியினர் அடிகளன்று தக்கனார்
வேள்வியைச் சாடிய சதுரனார்
கதிர்கொள் செம்மை புக்கதோர்
புரிவினர் வரிதரு வண்டுபண் முரலும்
சோலைத் திக்கெலாம் புகழுறுந்
திருநெல்வேலியுறை செல்வர் தாமே.
 தெற்கிலிருந்து வடக்காக 756 அடி நீளமும் மற்றும் மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும்  கொண்ட ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிவன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  இடையில் அழகிய கல் மண்டபம் மூலம் இணைக்கப்பட்ட அம்மன் ஆலயம் ஒரு புறமும், மறுபுறம் நெல்லையப்பர் ஆலயமும் அமைந்துள்ளது தனிச்சிறப்பு.
ஆல்யத்தினுள் நுழையும் போதே மேற்கூரையில் கேரள ஆலயங்களில் உள்ளது போன்று அற்புதமான மர வேலைப்பாடுகளைக் காணலாம். உள்ளே நுழைந்தவுடன்  10 அடி உயர மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அவரை வழிபட்டுச் சென்றால் உடன் நெடிதுயர்ந்து நிற்கும் பளபளவென்ற கொடிமரம் சுற்றி வணங்கி மேலே சென்றால், மூலவர் ச்ன்னிதானத்தின் முகப்பில் 9 அடி உயரமுள்ள மிகப் பெரிய விநாயகர் திருவுருவம் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போன்று   இங்குள்ள விநாயகரும் இதே திருநாமத்துடன் ’முக்குறுணி விநாயகர்’ என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மூலவர் சன்னிதானத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே மூன்று மூலவர்களைக் கொண்ட கோவில் என்றால் அது ஸ்ரீ நெல்லையப்பர் கோவில் மட்டுமே. சுயம்பு மூர்த்தியான, மூலவர் “வேண்ட வளர்ந்தநாதர்’  பிரதான சன்னதியில் “நெல்லையப்பர்’ என்று அழைக்கப்படுகிற பெரிய திருமேனி லிங்கமாக அருள்பாலிக்கிறார்.  மூங்கில் வேணுவனேசுவரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்களும் வழங்கப்படுகிறது. இந்த சிவலிங்கத்தின் மத்தியில்  அபிஷேகத்தின் போது அம்பிகையின் திருஉருவத்தைக் காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பதை இக்கோலம் உணர்த்துவதாகக் கொள்ளலாம் அல்லவா. இதனால் பெருமானுக்கு “சக்தி லிங்கம்’ என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.
மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார். சாலி வாடீசுவரன், (சாலி என்பது நெல்), விருகி விடுதீசுவரன், ஸ்ரீதானமூர்த்தி ஆகிய திருநாமங்கள் கொண்ட இவரே இக்கோயிலின் முதல் லிங்கம் எனக் கருதப்படுவதால், இவருக்குத் தான் முதல் பூசை நடக்கிறது.  இங்கு பஞ்சமுக தெட்சிணாமூர்த்தி வடிவங்களையும் தரிசிக்கலாம். சண்டிகேசுவரர், மகிசாசுரமர்த்தினி, கால பைரவர் திருவுருவங்களும் காணலாம். சிவபெருமானுக்கு அருகிலேயே வேங்கடவனும் பள்ளி கொண்டிருக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம்.
பெரிய அளவிலான இரண்டாவது பிரகாரத்தின் முகப்பிலேயே “இசைத்தூண்கள்” மற்றும் “தாமிர சபை”, அறுபத்து மூவர் சிலைகள், அஷ்ட லட்சுமி, சகசுவரலிங்கம், சனி பகவான் ஆலயமும் காணலாம்.
மூன்றாவது பிரகாரத்தின் வழியாக அம்மா மண்டபம் உள்ளது. இதிலிருந்து அம்மன் சன்னதி செல்லலாம். ஆஞ்சநேயர், மஞ்சனத்தி அம்மன், ஐயப்பன், சரசுவதி, பிரம்மா ஆகிய மூர்த்தங்களுக்கு தனி சன்னதிகளும் உண்டு. அம்மன் சன்னதியில் மிகப்பெரிய  உள் தெப்பமும் ஆலயத்திற்கு வெளியே சற்று தொலைவில் வெளித்தெப்பம் ஒன்றும் காணப்படுகிறது.
அம்மை, அப்பன் என இரு சன்னிதானங்களின் கிழக்குப் புறத்திலும் தனித்தனியே இராச கோபுரம் அமைந்துள்ளது. அம்மன் கோவிலுக்குத் தென் புறத்தில் ஒரு வாசலும், வடபுறத்தின் சங்கிலி மண்டபத்தின் மூலையில் ஒரு வாசலும் , வடபுறமும், மேற்புறமும் தனித்தனி வாசல்களும் உள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இத்தலம் திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். 32 தீர்த்தங்கள் கொண்ட இத்தலம் அருணாசல கவிராயரால் வேணுவன் புராணத்திலும் காந்தியம்மை பதிகம், சொக்கநாதப் பிள்ளையாலும் பாடல் பெற்றுள்ளது.
காந்திமதி அம்மன் ஆலயம்

இத்தலத்தில் உள்ள அம்மன் காந்திமதி வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பிரதோச காலங்களில்  இக்கோவிலில் அம்பிகைக்கு பிரதோச வழிபாடு நடப்பது தனிச்சிறப்பு. வழமையாக அனைத்துக் கோவில்களிலும் சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூசை நடக்கும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோச பூசை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சி.. அம்மன் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  மகாசிவராத்திரியன்றும் நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு கால அபிசேகம், மற்றும் பூசைகள் நடைபெறுகிறது
”கணவர் நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறும் அம்பிகை” என்று போற்றப்படும் காந்திமதி அம்மன்,  உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களை சிவன் சன்னதிக்குக் கொண்டு சென்று அங்குள்ள அர்ச்சகர்கள் மூலமாக சிவ பெருமானுக்கு படைக்கின்றனர். இந்த பூசை முடிந்தபின், அம்மனுக்கு அதே நைவேத்யம் வைத்து பூசை நடக்கிறது.
இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி, சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். சிம்மமும், மானும் ஒரு சேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் வல்லமையை அருளுகிறாள். மேலும் பண்டாசுரனை வதம் செய்த அம்மன் சிலையும் இங்கு உள்ளது. துர்கையின் வடிவான இந்த அம்மன் “மஞ்சன வடிவாம்பிகை’ என்று போற்றப்படுகிறாள்.
உலகிலேயே வேறு எங்குமே இல்லாத  ’மிடறு’ என்ற் இசைத்தூண்கள்:
இரண்டாம் பிரகாரத்தின் முகப்பில் அமைந்துள்ள மண்டபத்தில், இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூண்களிலிருந்தும்  ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற ஏழு சுரங்களையும் கேட்க முடிவதே இதன் சிறப்பு! ஒவ்வொரு பெரிய தூண்களைச் சுற்றியும் பல சிறிய தூண்கள் கட்டப்பட்டுள்ளது.. இதிலிருந்து ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களைக் கேட்க முடியுமாம். .  பெரிய தூணிலிருந்து கர்நாடக சங்கீதமும்., அதைச் சுற்றியுள்ள சிறிய தூண்களிலிருந்து, மிருதங்கம், வீணை, கடம், சலங்கை, மணி போன்ற இசைக் கருவிகளின் நாதத்தையும் கேட்க முடியுமாம். மெலிதாக விரல்களில் மீட்டினாலே எந்த வலியும் இல்லாமல் சுகமான நாதம் இசைக்கிறது. நல்ல இசை ஞானம் உள்ளவர்களால் இதன் வேறுபாடுகளை நன்கு உணர முடியும். ’மிடறு’ என்று அழைக்கப்படும்  இது போன்ற இசைத் தூண்கள் உலகில் வேறு எங்குமே இல்லையென்கிறார்கள். தொழில்நுட்பங்கள் முன்னேறாத அந்த காலத்திலேயே இது எங்கனம் சாத்தியமானது என்று நினைக்கும் போது ஆச்சரியமே மேலிடுகிறது.இன்றைய நவீன தொழில்நுட்ப முறையைக் கொண்டு (spectral analysis) ஆய்வு செய்த போது இத்தூண்களிலிருந்து வரும் இசைகள் தன்மைகளுக்கேற்ப இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால் சப்தம் உருவாகிறது என்று தெரிவிக்கின்றது இத்தூண்களில் ஒரு சிறு துவாரமோ அல்லது வேறு ஏதும் தூண்டுகோலோ இல்லாமல் அழகாக இசைப்பதுதான் அதிசயத்தின் உச்சம்.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருமார்பில் லிங்கம் உள்ளது மற்றொரு சிறப்பம்சம். கருவறையின் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளி கொண்ட கோலத்தில், சிவலிங்க பூசை செய்தபடி இருக்கிறார். அருகில் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும் உற்சவர் விஷ்ணுவையும் காண முடிகிறது. திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

இக்கோவிலின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. தினசரி சிறப்பான பூசைகளுடன், ஆண்டுதோறும் ஆனி மாதம். 10 நாட்களுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும் இத்திருவிழாவில் தேரோட்டம் நிகழ்வு சிறப்பான ஒன்றாகும். கார்த்திகை மாத உற்சவம், ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று மற்ற பிற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன