நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 17 August 2014

கடவுளை காணும் கருவி ” தியானம் “

படம்
தியானம் மனம் அமைதியாக இருக்கும் போதுதான் தியானம் கைகூடும், நமக்கு வெளியே கடவுளை காண முடியாது, நமது ஆன்மாக்களே வெளியிலிருந்து தெய்வத் தன்மையை வழங்குகின்றன, நாமே கோவில்க்ள இதைப் போன்றுதான் கோவில்கள் அமைக்கப்பட்டன, திருமூலரும் இதன்பொருட்டு ” 
” உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பு ஆலயம் 
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தோர்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காள மணிவிளக்கே. என்றார்
மனத்தின் சக்தியை ஒருமுனைப்படுத்தலே நமக்கு கடவுளைக காண உதவும் கருவியாகும். நீங்கள் உங்களுடைய ஆன்மாவைத் தெரிந்து கொண்டால் முக்காலத்திலும் உள்ள எல்லா ஆன்மாக்களையும் தெரிந்து விடுவீர். ஒரு முனைப்படுத்தி குவிந்த மனம் , ஆன்மாவின் ஒவ்வொரு மூலையையும் காண்பதற்கு விளக்குபோல் உதவும். அமைதியான இடத்தில் அமைதியான மனத்துடன் ஆன்மா மீது தியானம் செய்யுங்கள் அதன் மீது உங்கள் மனத்தை ஒருமுனைப்படுத்துங்கள் அதனுடைன் ஐக்கியமாகுங்கள். பேச்சு இல்லா மெளனம் உண்மையை தெரிவிக்கும் பேச்சில் உங்களது சக்தியை செலவழிக்காதீர்கள் மெளனமாக இருந்து உங்கள் சக்தியை சேகரித்துக் கொண்டு ஆன்மீகச் சக்தியின் ” மின் உற்பத்தி செய்யும் டைனமோ” வாக ஆகிவிடுங்கள். தியானம் தொடங்கும் முன் உங்கள் மனம் அடங்கி ஒருநிலைப்பட கீழ்கண்ட பாடல் கொண்டு பிராத்தனை செய்யுங்கள்
” எவ்வுயிரும் இன்புற்று இருக்க
எவ்வுயிருக்கம் அமைதி நிலவுக
எவ்வுயிரும் ஆனந்தம் பெறுக
எத்திசை உயிர்களும் இவற்றை பெறுக”
இவ்வாறு பலதடவை மனத்தில் தியானத்தால் நலம் பெறலாம் ஞானம் பெறுவதற்கே இந்த பிராத்தனை .

No comments:

Post a Comment