நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 20 August 2014

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தும் ஹோம புகை









நரம்பு மண்டலத்தைப் 
பலப்படுத்தும் ஹோம புகை .........!!!

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். 
மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது.
இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னை யின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம்,
அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது. ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்."அந்தப் புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது....!!!

No comments:

Post a Comment