நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 31 October 2017

மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!!



மாதவிலக்கு பிரச்சனைகள் தீர சில இயற்கை வைத்தியங்கள்..!!



100 கிராம் அச்சு வெல்லத்துடன் 10 கிராம் எள் சேர்த்து இடித்துத் தூளாக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாதவிலக்கு பிரச்னைகள் நீங்கும்.


புதினாக் கீரையை வெயிலில் உலர்த்தி உரலில் போட்டு இடித்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொண்டு நாள்தோறும் மூன்றுவேலை அரைத் தேக்கரண்டித் தூளுடன் அதே அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு காலக்கணக்குபடி சரியான நாட்களில் வெளியேறும்.

20கிராம் கருஞ்சீரகத்தை மணல் சட்டியில் போட்டு வறுத்துத் தூள் செய்து 40 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து, 4 வேளைக்கு காலை, மாலை என பாலுடன் கலந்து குடித்து வர மாதவிலக்கு சிக்கல் மறையும்.
சிலருக்கு மாதவிலக்கு சரியாக ஆகாமல் விட்டுவிட்டு வந்தால், இவர்கள் நாள் தோறும் காலையில் செம்பருத்திப் பூவில் நான்கு, சிறிதளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு பகலில் மோர் சாதமும், இரவில் பால் சாதமும் சாப்பிட்டு வர குணமாகும்.

சிவப்பு நிறங்கொண்ட துளசி இலையைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து மாதவிலக்கின் போது நான்கு நாட்கள் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர மாதவிலக்கு குறைகள் நீங்கும்.

மாங்காயின் தோலை நெய்யில் வறுத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டாலும் மாதவிலக்கு சீர்படும்.

கோதுமைக் கஞ்சியை மாதவிலக்கு காலங்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு ஒழுங்காக நிகழும். உடல் பலம் பெறும். சிக்கலில்லாத சீரான மாதவிலக்கு ஏற்படவும் கோதுமைக் கஞ்சி உதவும்.

மாதவிலக்கு ஒழுங்கான இடைவெளியில் வராத பெண்களுக்கு திராட்சைச் சாறு நல்ல தீர்வு.
மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருந்தால் மாதவிலக்கிற்கு ஒரு வாரம் முன்பே அன்னாசிப்பழம் அல்லது பப்பாளிப்பழம் சாப்பிட வேண்டும். வெறும் வயிற்றில் திராட்சைப் பழங்கள் சாப்பிட்டு வரலாம். பீட்ரூட்டையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பெரிய நெல்லிக்காயைத் துருவி காயவைத்து காப்பிப் பொடி போல் மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதை நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிலக்கு பிரச்னைகள் சீர்படும்.

வல்லாரை இலையை நன்கு உலர்த்தித் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு தேக்கரண்டித் தூளுடன் சுக்கு 5 கிராம், சோம்பு 5 கிராம் தட்டிப்போட்டு 200 மில்லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி காலை, மாலை என குடித்து வர மாதவிலக்குத் தொல்லைகள் நீங்கும்.

Monday, 30 October 2017

சித்தராஜ சுவாமிகள் தவமிருந்த அத்ரி மலை



சித்தராஜ சுவாமிகள் தவமிருந்த அத்ரி மலை












பாம்பாட்டிச் சித்தரின் சீடர் சிவப் பிரபாகர சித்தயோகியின் வழித் தோன்றல்களில் மிக முக்கியமானவர் பிரம்மஸ்ரீ சித்தராஜ சுவாமிகள். இவரும் இந்த அத்ரி தபோவனத்தில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்துள்ளார். இவர் காலத்தில் கூட கோயில் சரியாக கட்டப்படாம லேயே இருந்தது. புதர்களும் மரத்தில் இருந்து விழுந்த இலைகளும் குவியல் குவியலாக கிடக்கும். காட்டுக் கோழிகளெல்லாம் இலைச் சருகுக்குள் நுழைந்து காணாமல் போய்விடும். அதைப் பிடிக்க சருகுகளுக்குள் தேடினால் வேறொரு சருகுக் குவியல்களின் வழியாக வெளியேறிவிடும்.


அந்த அளவுக்கு இலைச் ச ருகுகள் அம்பாரமாகக் குவிந்திருக்கும். அத்ரி தபோ வனத்தில் தற்போது அத்ரி மகரிஷிக்கு பூஜை நடைபெறும் மரமே ஒரு குடைபோல் இருக்கிறது. இது வெயிலாலோ மழையாலோ தவத் திற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாதபடி பாதுகாப்பாக அமைகிறது. தற்போது இந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. தவசீலர் சித்தராஜ சுவாமிகள்தான் இந்த மலையைப் பற்றியும், அத்ரி மகரிஷியின் தபோவனத்தின் சிறப்பு களையும் மலையாளத் தில் நூலாக எழுதினார்.

அந்த நூலை தமிழில் ராமானுஜம் சுவாமிகள் எழுதியுள்ளார். இந்த நூல்தான் அத்ரி தபோவனத்தினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாகும். அதன் பிறகு இந்தக் கோயிலுக்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இவர்கள்தான் வள்ளி-தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தவர்கள். அதோடு, வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். காவடி, பால்குடம் எடுத்துச் செ ல்லுதல், அலகு குத்துதல் போன்ற நிகழ்வுகளை இங்கு உருவாக்கியவர்களே பாம்பாட்டிச் சித்தரின் சீடர்கள்தான்.

பாம்பாட்டிச் சித்த ருக்கு மருத மலை, துவாரகை, விருத்தா சலம் போன்ற மூன்று தலங்களில் ஜீவசமாதி இருப்பதாகக் கூறுகி றார்கள். அதே போல் சங்கரன் கோயிலுக்கு அருகே புளியங்குடி பாதையிலும் ஒரு ஜீவ சமாதி உண்டு. அதாவது, அத்ரி மலையில் பதினாறு வருடங்கள் தவமிருந்த பின்னர், சித்தியான இடமும் இந்த இடத்தில்தான் உள்ளது. சித்தர் ஒரே சமயத்தில் பல பகுதிகளில் தம் இருப்பைக் காட்ட வல்லவர்கள் என்ற அடிப்படையில் இப்படி ஜீவசமாதிகள் அமைந்திருக்கலாம் என்கிறார்கள்.

அத்ரியில் தவமிருந்த போதுதான் சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தினை கட்ட வேண்டும் என்று உத்தரவாகியுள்ளது. அதன்படியே அந்தப் பீடத்தினை பெரிதாக கட்டியுள்ளார்கள். இதில் கல்யாணிபுரம் மாரிவேல் என்னும் பெரியவர் தற்போது பாம்பாட்டிச் சித்தரின் வாரிசுகளோடு அத்ரி மலைக்கு வந்து செல்கிறார். கோயில் பிரபலம் ஆவதற்கு முன்னாலிருந்தே அவர்கள் இப்படி வருவது வழக்கம். மலையில் கிருத்திகை, அஷ்டமி காலங்களில் முருகனுக்கு பூஜை செய்வார்கள்.

அவர்கள் இரவு வரை தங்கியிருந்து பூஜை செய்வார்கள். பின்பு, இங்கிருந்து மலை மீது சற்று தூரமுள்ள கருப்பசாமி கோயிலுக்கும் சென்று பூஜை நடத்துவார்கள். இரவு வேளையில் பக்தர்கள் மூலிகை காபியை குடித்துக் கொண்டும், முருகப் பெருமானை தரிசித்தபடியும் நோய்கள் குணமாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் ஆகாதோர் சந்தன அபிஷேகம் செய்து, அந்தச் சந்தனத்தினை முருகப் பெருமானின் மார்பில் வைத்து விடிய விடிய பூஜித்து மறுநாள் காலையில் அதை பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.

விரைவிலேயே அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி விடும். இதுபோலவே குழந்தை வரம் வேண்டுவோரும் செய்வார்கள். சங்கரன் கோவில்-புளியங்குடி ரோட்டில் அமைந்துள்ள பாம்பாட்டிச் சித்தருடைய ஜீவசமாதியானது சில வருடங்களுக்கு முன்புதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அத்ரி மலையில் தவமிருந்த பாம்பாட்டிச் சித்தரின் சீடர்களே ஆவார்கள். சித்தர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போகர் விளக்குகிறார்.

பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பல விதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்து நின்றா
ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே
(போகர் ஜெனன சாரம் - 324)

இந்த அகண்ட பூமியில் அங்கும், இங்கும், மலைகளிலும், குகைகளிலும் நிறைந்து நிற்கின்றனர் சித்தர்கள். அவர்களுடைய சீடர்களும் நிரம்பியிருக்கின்றனர். சித்தருடைய மூலத்தைக் கண்டறிய இவ்வுலகத்திலே யாருக்கும் சக்தியில்லை. ‘என்னால் என் சக்திக்கு இயன்றவரை சிறிது சொன்னேன். தங்களை வெளிக் காட்டாமல் எல்லாச் சித்தர்களும் மறைந்தே வாழ்கின்றனர்’ என்று போகர் கூறுகிறார். அதனால்தான் அத்ரி தபோவனத்தில் பாம்பாட்டிச் சித்தர் உட்பட பல சீடர்கள் தவம் புரிந்துள்ளார்கள். இப்படி 50 வருடங்களுக்கு முன்புவரை நிகழ்ந்திருக்கிறது.

பாம்பாட்டிச் சித்தரின் வழி தோன்றலில் வந்த சீடரான சித்தராஜ சுவாமிகள் அத்ரி மலையில் தவமிருந்தபோது, உடன் கல்யாணிபுரம் மாரி வேல் இருந்திருக்கிறார். அதாவது, மாரிவேல், தனது பத்து வயதிலிருந்தே சித்தராஜ சுவாமிகளோடு இருந்திருக்கிறார். இதைப் பற்றி மாரிவேல் ஐயா கூறுகிறார்: ‘‘அப்போ சுவாமிகள் தபோவனத்துக்கு வந்து தவமிருக்கும்போது புலி, கரடி, கடுவாய், யானை கூட்டங்களும் மலையிலிருந்து இறங்கி தபோவனத்துல வந்து நிற்கும். இந்த கூட்டங்களோட கூட்டமா சித்தராஜ சுவாமிகள் இருப்பார். ராத்திரியில் தீ மூட்டி தங்குவோம்.

விஷப் பாம்புகள் அலையும். சிலசமயம் பாய்க்கு அடியில கூட கிடக்கும். ஆனா, எந்த தொந்தரவும் பண்ணாது. ஐயா அவங்க ரெண்டு மரங்களுக்கு நடுவுல கயிறு கட்டி தொட்டில்போல் செஞ்சு படுப்பாங்க. மத்தவங்களெல்லாம் அங்கங்க படுத்து உறங்குவாங்க. ஆனா, ராத்திரியில எழுந்து அவரைத் தேடினா இருக்க மாட்டாரு. எங்க போயிருப்பாருன்னு கண்டு பிடிக்கவே முடியாது. தபோவனத்துக்கு மேல இருக்கற கருப்பசாமி கோயிலுக்கும், காளி கோயிலுக்கும் பூஜை பண்ணிட்டு வருவாரு.

ஆனா, காலையில கயிறு ஊஞ்சலில் படுத்து கிடப்பாரு. ஆனையடி தம்பிரான் கோயில் சுவாமிகள், நிர்மானந்தா சுவாமிகளெல்லாம் கூட தபோவனத்துக்கு வருவாங்க. அப்படித்தான் திடீர்னு ஒருநாள் சங்கரன் கோவில்ல பாம்பாட்டிச் சித்தரோட ஜீவ சமாதியை சீரமைத்து வழிபாட்டு தலமாக அமைக்க உத்தரவு வந்ததா சொன்னாரு. அந்த பணியை செய்யப் போறேன்னாரு. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சியா இருந்தது. ஏன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கும் அத்ரிமலைக்குமான தொடர்பு அப்போ பலபேருக்கு தெரியாமயே இருந்தது’’



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறுச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு பிரதி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல்


மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்




கடன் தொல்லைகள் தீர்க்கும் திருச்சேறை பரமேஸ்வரன்

கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர்
( ரிண விமோசன லிங்கேஸ்வரர் )
என்று அழைக்கப்படுகிறார்.

"பெருந் திரு இமவான் பெற்ற பெண் கொடி பிரிந்த பின்னை
வருந்து வான் தவங்கள் செய்ய, மா மணம் புணர்ந்து, மன்னும்
அருந் திருமேனி தன் பால் அங்கு ஒரு பாகம் ஆகத்
திருந்திட வைத்தார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே."
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன்.

தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்ய அனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது.

இச்சந்நதியின் முன் நின்று கூறை உவந்தளித்த கோவேயென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே என மனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்

ஊத்துமலை முருகன் கோவில் (சேலம்)


ஊத்துமலை முருகன் கோவில் (சேலம்)













சேலத்தில் மிகப் புகழ் பெற்ற, சித்தர்களோடு தொடர்புடைய ஒரு சிறந்த
ஸ்தலம் சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை முருகன் கோவில் அங்கே இருக்கின்ற முருகன் அந்த மலையில் ஒரு குகையும் உண்டு. அந்த குகைக்கு அருகிலே அகத்தியர் பிரதிஷ்டை செய்த 44 முக்கோணங்களை கல்லினால் செதுக்கி வைக்கப்பட்டுள்ள
ஸ்ரீ சக்கரம் உண்டு. அதனது ஆற்றல்களை அளவிட்டுக் கூற இயலாது.

பொதிகை மலை சென்று அகத்தியரைப் பார்க்க முடியாதவர்கள் இந்த ஊத்துமலை குகையில் தியானம் செய்து ஸ்ரீ சக்கரத்தை வழிபட்டால் அகத்தியர் தரிசனம் தருவார்.


அதுமட்டுமல்லாமல் அகத்தியர் பூஜித்த லிங்கம் ஒன்றும் அந்த மலையில் உண்டு. அகத்தியர் மட்டுமில்லாமல் சுகர் மகரிஷிக்கும் இந்த மலைக்கும் நிறைய தொடர்பு உண்டு தமிழ் முனிவர் அகத்தியருக்கும், முருகனுக்கும் சம்பந்தம் அதிகம். அவர் பொதிகை மலைக்கு வந்ததும், தாமிரபரணியை உருவாக்கினார். அதன்பிறகு பொதிகையின் ஒரு பகுதியில் நீர்வீழ்ச்சி ஒன்றை ஒட்டியிருந்த, முருகன் கோயிலில் தான் தங்கினார். காலப்போக்கில் அந்தக் கோயிலே அகத்தியர் கோயில் என பெயர் மாறியது. இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பொதிகையில் இருந்து புறப்பட்ட அகத்தியர் தமிழகமெங்கும் சென்றிருக்க வேண்டும். அவர் சேலம் பகுதிக்கும் வந்ததற்கான சான்றுகள் உள்ளன. முருகன் பாலவடிவத்தில் காட்சி தரும் தலமான சேலத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அவர் விஜயம் செய்துள்ளார்

இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன. இந்த மலையில் சமணர்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதை இங்குள்ள குகைகள் மூலம் அறியலாம். இங்குள்ள முருகனை அகத்தியர் பூஜித்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் மிகப்பெருமை வாய்ந்த ஸ்ரீ சக்ராதேவியும், 43 முக்கோணங்கள் கொண்ட சக்தி யந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. சகல சக்திகளையும் உள்ளடக்கியதாக கருதப்படும் ஸ்ரீ சக்கரத்தின் ஒரு பக்கம் ஒரு குடில் உள்ளது. அந்த குடிலில் ரிஷிபத்தினி ஒருவர் தவக்கோலத்தில் இருக்கிறார். ஸ்ரீ சக்கரத்தின் மற்றொரு பக்கத்தில் புலித்தோல் மீது அகத்தியர் ஒரு மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ளார்.


முருகன் கோயிலுக்கு எதிரில் கபிலர் குகை அமைந்துள்ளது. இந்த குகையில் கபிலர் தவக்கோலத்தில் இருப்பது புடைப்புச் சிற்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அவர் அருகே மரம், பசு, சூலாயுதம் ஆகியவை உள்ளன. சிவராத்திரி நாட்களில் அதிகாலை வேளையில் அமாவாசை பிறக்கும் சமயத்தில் சப்தரிஷிகளும் அங்குள்ள சுனை, தீர்த்தங்களில் நீராடிவிட்டு சதாசிவ மூர்த்திக்கு சப்தரிஷி பூஜை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. சிவசித்தர், கஞ்சமலை சித்தர், கரடி சித்தர், பழநி போகர் ஆகியோர் இங்கு வாசம் செய்துள்ளனர் என்ற தகவலை கொங்கு மண்டல சதகமும், பாபநாச புராண ஓலைச்சுவடியும் குறிப்பிடுகின்றன. கிளி வடிவில் சுகரிஷியும், கன்வ ரிஷியும் இங்கு தவம் செய்துள்ளனர். இங்குள்ள தல விருட்சம் வில்வம் ஆகும். பால முகம் கொண்டு, வேலும் மயிலும் கொண்டு, அன்பர்க்கு அன்பனாய், பக்தர்களின் வினை தீர்ப்பவனாய் அருள்பாலிக்கும் பால சுப்பிரமணியரையும், ஆதிசக்தியான பாலதிரிபுர சுந்தரியையும் சக்ராதேவியையும் வணங்கினால் வாழ்வில் நலம் பெறலாம்




இந்த கோயிலில் சொர்ண விநாயகர், அகஸ்தீஸ்வரர், சதாசிவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்

இங்கு வந்து வழிபடுவோருக்கு தொழில்வளமும் வியாபார மேன்மையும் உண்டாகும்காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார்

Saturday, 28 October 2017

ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்


ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்


ஓம் என்ற பிரணவ மந்திரத்தின்

பெருமையை பலர் சரியாக இன்னும் உணரவில்லை என்று தான் கூற வேண்டும். இந்த மந்திரத்தை கொண்டு பல விஷயங்களை சாதிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ளதை சரியாக கடைபிடித்தோமானால் வெற்றி நிச்சயம்.
கணவன்-மனைவி, காதல்,மாமியார்-மருமகள் போன்ற எந்த உறவு விட பிரச்சனைகளுக்கு:
இரவு தூங்கு முன் கண்மூடி 72 முறை 'ஓம்' என மனதிலேயே தியானித்து கொண்டு மூச்சு விட வேண்டும். அதாவது மூச்சிழித்து வெளிவரும் போது சொல்லி முடிக்க வேண்டும். அப்படி உள்ளிழுத்து வெளி வருவது ஒன்று என கணக்கில் 72 முறை கூறவேண்டும்.


பண பிரச்சனைகளுக்கு 48 முறை
உடல் நலம் பெற 58 முறை
வம்பு, வழக்கு சரியாக 78 முறை
நல்ல வேலை கிடைக்க 80 முறை
கடன் பிரச்சனைகளுக்கு 84 முறை
குழந்தையின்மை 52 முறை
மூச்சு எண்ணிக்கை மிக முக்கியம். மேலும் இதை இரவு உறங்குமுன் கூறுவது நல்ல பலனளிக்கும்

உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்:-

உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்:-































அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.


ஆத்தூர் டூ சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன சேலத்தில் இருந்து 3 கி.மீ தொலைவிலும் உள்ளது தென் பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயம்.

ஸ்தல வரலாறு :-
1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர் சித்தர், 16 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான தவத்தின் பயனாக 16முகங்களுடன் கூடிய சிவலிங்க தரிசனம் பெற்றார்.

அதே போல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பக்தர்களும் எதிர்காலத்தில் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.

மூலவர் – சொர்ணபுரீஸ்வரர்

அம்மன் – உமையாள்,சொர்ணாம்பிகை

தல விருட்சம் – அரசமரம்

பழமை – 1500-1000 வருடங்களுக்கு முன்

ஊர் – தென்பொன்பரப்பி

மாவட்டம் – விழுப்புரம்

சூரியகாந்த லிங்கம் :-

நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கம் இது.

சுமார் 5.5அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்கு சான்று.

காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
பால நந்தி:-

எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம்.

ஆனால்,இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30மணிக்குள் பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலந்நதிக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70அடியாகும்).

கோவில் சிறப்பு:-

இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும்.

இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று “காகபுஜண்டர் நாடி” சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

மேலும் இராகு கால வேளையில்,தேன், பால், தயிர், பன்னீர், இளநீர்,மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம்,
கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச் சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் நடக்கும்.

அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை:-

இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது.

காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.

காகபுஜண்டர் சித்தர்:-

காகபுஜண்டர் சித்தர், சிவனின் தலையிலுள்ள சந்திரனின் கலையிலிருந்து தோன்றியவர். நினைத்த நேரத்தில் காக வடிவம் எடுக்கும் தன்மை கொண்டவர்.எனவே சந்திர தோஷம், சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.

இத்தலத்தில் உள்ள நந்தி குட்டியாக இருக்கிறது. “பால நந்தி” என்பது இதன் திருநாமம். ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது.சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு உருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.

இந்த கோயிலில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆறுமுகமாக காட்சியளிக்கும் முருகன், 12திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.

முருகனுக்கு வலது பக்கம் உள்ள வள்ளி தலை சாய்த்து நிற்கிறாள். கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக,இரு இலிங்கங்கள் உள்ளன.மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

குருபகவான் சன்னதியும் துர்க்கை சன்னதியும் ஆடம்பரமின்றி காட்சி தருகிறது.இக்கோயிலின் சுற்றுச் சுவரில் ஏராளமாக கல்வெட்டுக்கள் செதுக்கப்பட்டுள்ளது.எழுத்து வடிவம் ஆதி கிரந்த எழுத்துக்களிலும், தமிழ் எழுத்துக்களிலும் உள்ளது.

கோரிக்கைகள்:

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், இராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம்,கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள்,செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று இராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அப்போது,அபிஷேகம் செய்த பால், சந்தனம், தேன் ஆகியவை இளம் நீலநிறமாக மாறுவதை காணலாம்.

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இங்குள்ள பாணலிங்கத்திற்கு, பாலில் மிளகை அரைத்து கலந்து தடவி வழிபாடு செய்கின்றனர். அவிட்டம் நட்சத்திரத்திற்குரியவர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சிவனுக்கு தேனபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

ஆலய முகவரி:-

அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,தென்பொன்பரப்பி, விழுப்புரம் மாவட்டம்.

+91-4151- 257057, 94432 40127



காலை 5.30 மணி இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்

சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள்



என் சுவாச காற்றினுள்ளே இருந்து இயக்கி என்னை வழிநடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளை துணைக்கொண்டு சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் அவர்களைப் பற்றிய படிக்கும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.
வாத்தியார் ஐயா என்று அன்புடன் மக்களால் அழைக்கப்படும் சித்தர் முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் ஜீவசமாதி திருக்கோவில் சிங்கம்புணரியில் அமைந்துள்ளது. 


இதற்கு மதுரை, புதுக்கோட்டை, பொன்னமராவதியில் இருந்து பஸ்வசதிகள் உள்ளது.எல்லா சித்தர்கள் சமாதியிலும் மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்யப்பட்டு இருக்கும். இந்த விசயம் மிகவும் வித்தியாசமான ஒன்று ஆகும். சுவாமிகள் சமாதி அடைவதற்கு 12 வருடத்திற்கு முன்பே சுடுகாட்டில் காட்டுப்பகுதியில் தன்னுடைய உருவத்தைப் போன்று உருவச்சிலையை சிற்பியைக் கொண்டு வடிவமைத்து அதனை சேர்த்து அணைத்து தினசரி தியானம் செய்து தன்னுடைய தவசக்தியை அந்த சிலைக்கு மாற்றியமைத்துக் கொண்டார். அந்த சிலைதான் சுவாமியின் சமாதியில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து 3 பௌர்ணமி பூஜைக்கு சென்று வழிபாடு செய்தால் சுவாமியின் அருள் பார்வை கட்டாயம் நமக்கு கிடைக்கும்.சுவாமியின் பௌர்ணமி பூஜையில் விடாது சென்று வழிபாடு செய்து வருபவர்களுக்கு எப்படிப்பட்ட கோர்ட், கேஸ் வழக்கிலும் வெற்றி தேடிவரும். பூர்வீக சொத்துக்களின் பிரச்சனைகள் தீர்வு ஏற்படும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு தொழிலில் விருத்தியும், லாபமும் உண்டாகும். செவ்வாய் திசையில் ஏற்படும், கெடுபலன்களுக்கு செவ்வாய் கிழமை எலுமிச்சை லைமாயை சுவாமிக்கு சாற்ற் அதனை வீட்டின் வாசலில் கட்டி தொங்கவிட பாதிப்புகள் நீங்கும். ஓரிஜினல் பசும் சாணம் விபூதியைக் கொண்டு சுவாமியின் திருமேனியில் அபிஷேகம் செய்து பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டால் சீர்பிடித்த குழந்தைகளுக்கு பொட்டு நோயை நீக்கலாம். தினசரி சிறிதளவு பஞ்சகவ்வியத்தில் கலந்து சாப்பிட்டுவர எப்படிப்பட்ட சரும வியாதியும் நீங்கும். படிப்படியாக நோயின் பாதிப்புக் குறையும். ஆனால் கட்டாயம் சைவ உணவு பாதுகாப்பு சாப்பிட வேண்டும். சிறிதளவு பன்னீரில் கலந்து நெற்றியில் வாத்தியார் ஐயா என்று திலகம் நெற்றியில் வைக்க துஷ்ட ஆவிகள் ஓடி ஒளியும். சுவாமியின் திருஉருவப்படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்தாலே தேவையற்ற முனி ஓட்டங்களும் விலகிச் செல்லும்

Wednesday, 25 October 2017

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை. எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர் கர்ம வினையே - லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து - பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும், வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது.
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது, நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை - உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக குறைந்து விடும்




ஆலயங்களும், அமைவிடங்களும் :



அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்






இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது.
பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது

பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில் உள்ளது.

கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்



ரோஹிணி - அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்



இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.


மிருக சீரிஷம் - அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்



திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்



புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.


ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு


மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ




பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது


உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.


ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.



சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்


இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில் கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்




சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்




விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்

.
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன



அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.



கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்


இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.



மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)



பூராடம் - அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.








உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.








திருவோணம் - பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்




இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்






அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது.








சதயம் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது










பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்




இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது









உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்


இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது. மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூர



ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்


இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி

Saturday, 21 October 2017

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி














விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.

இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.

இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்

விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!

ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திரஅபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

திருநெல்வேலி மாவட்டம்கூடங்குளம்
அணுமின் நிலையம் அருகில் விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 23.10.2017ஐப்பசி  மாதம் (6)திங்கள்கிழமைஅனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம், ஆராதனை ,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின்
ஸாக்த மடாலயம் ,
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell : 8754016236
9843016651
9842078733