நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 29 November 2014

Cancer External Medicine புற்று நோய் வெளி மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


Cancer External Medicine புற்று நோய் வெளி மருந்து





தேங்காய்த் துருவல் தவசி முருங்கைஇலை
தாங்காத புற்றுமேல் பற்று ......குறள்



விளக்கம் ;
கைப்பிடி அளவு தேங்காய் துருவி எடுத்துக்கொண்டு அதனுடன் சம அளவு தவசி முருங்கை இலை எடுத்து இருப்புச் சட்டியில் இட்டு வதக்கி புற்று நோய் உள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்கவும் பின்பு அதை பிழிந்து வடித்த நெய்யை உடம்பு முழுவதும் தடவி வரவும் .


Thursday, 27 November 2014

கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு குரு பூஜை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

 கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு குரு பூஜை




கார்த்திகை மாதம் 02-12-2014 செவ்வாய் கிழமை ரேவதி நட்சத்திர தினத்தன்றுகாலை 8.30 மணிக்கு மேல் கரூர் சித்தர் ஸ்ரீ ல ஸ்ரீ பாலசுப்ரமணியம் ஸ்வாமிகள் இரண்டாம் ஆண்டு குரு பூஜை அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஆசிர்வாதம் மற்றும் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

பஸ் ஸ்டாப் கரூர் --வெள்ளகோவில் வழி
 டிவிஎஸ் ஸ்டாப் 9944460066-9443228716





Tuesday, 25 November 2014

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் வட்டம்,புதுபாளையம் அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழ்

ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் வட்டம்,புதுபாளையம் அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அழைப்பிதழ் 

அருள் மிகு குருநாதஸ்வாமி கோவிலில் 
நாளை  27-11-2014 வியாழகிழமை காலை 10.00 மணிக்கு மேல் 11.30மணிக்குள் அருள்மிகு காமாட்சி அம்மன் ,அருள்மிகுபெருமாள் ஸ்வாமி, அருள் மிகு குருநாதஸ்வாமி திருக்குட நன்னீராட்டு நடைபேருகிறது
பக்தர்கள் அனைவரும் இந்த  திருக்குட நன்னீராட்டுபெருவிழாவில் கலந்து கொண்டு அருள் மிகு குருநாதஸ்வாமி திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லவும் 



Monday, 24 November 2014

கருப்பை புற்று நோய் மருந்து Ovarian Cancer medicine

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கருப்பை புற்று நோய் மருந்து Ovarian Cancer medicine

பெண்கருவாய்ப் புற்றைப் பிழையில் சேங் கொட்டைத்தூள் ,
தண்சந் தனம்தேற்றான் மாற்று ......................குறள் 


விளக்கம் ;
பெண்களுக்கு கருப்பை வாயில் உண்டாகின்ற புற்று நோய்க்கு தேற்றான் விதையின் தூளும் ,சந்தனத்தூளும் ,சுத்தி செய்த சேராங்கொட்டை தூளும் சமமாக எடுத்து இருநேரம் அருந்தி வரவும்,இவற்றின் கொதி நீர் கொண்டு வெளியே கழுவி வரவும்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி & ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி &
ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு
26-11-2014 புதன் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ள ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு 26-11-2014 புதன் கிழமை உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு திரு .அண்ணாமலை cell :9442559844 Make Money at : http://bit.ly/copy_win Make Money at : http://bit.ly/copy_win Make Money at : http://bit.ly/copy_win

Make Money at : http://bit.ly/copy_win

Saturday, 22 November 2014

கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

கல்வியில் சிறக்க /வேலை சிறக்க படிக்க வேண்டிய பதிகம்


 அருணகிரிநாதர் திருப்புகழில் பாடிய பதிகம்

மதியால் வித்தகன் ஆகி
மனதால் உத்தமன் ஆகிப்
பதிவாகிச் சிவ ஞான
பர யோகத்து அருள்வாயே
நிதியே நித்தியமே என்
நினைவே நற் பொருளா யோய்
கதியே சொற் பர வேளே
கருவூரிற் பெருமாளே

கரூர்ரில் பாடியது
இப்பதிகம் காலையில் அலுவலகம் செல்லும் முன் படித்து விட்டு செல்லவும் படிக்கப் படிக்கப் பலன் உணர்வீர்கள்
குழந்தைகள் கல்வியில் சிறக்க அவர்களை படிக்கச் சொல்லவும் ,

Thursday, 20 November 2014

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி அனுஷம் நட்சத்திரம் அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்

 




இந்தியாவில் ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனி கோவில் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில்உள்ள விஜயாபதி என்ற ஊரில் உள்ளது.

.விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் உலக வெற்றியின் ரகசியம்ஆரம்பமாகிறது.

விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும். இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் இருக்கிறது . விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,நவகலசயாகம் செய்த இடமே விஜயாபதி... 300 ஆண்டுகளுக்கு முன்பு விஜயாபதி ஒரு மாபெரும் நகரமாக இருந்தது.விஜயாபதி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு கடல்வாணிகம் செய்திருக்கின்றனர். இங்கே விஸ்வாமித்ர மகரிஷியால் ஹோமகுண்ட கணபதி கோயிலும்,அதையொட்டி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி திருக்கோவிலும் உருவாக்கப்பட்டது இன்றும் சூட்சுமமாக விஸ்வாமித்ர மகரிஷி இங்கு வாழ்ந்து வருகிறார்.விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் யாகம் செய்த இடமே படத்தில் நீங்கள் காண்பது!!! இந்த இடத்தோடு சேர்ந்து ஒரு சிறிய கிணறு இருக்கிறது.இந்தக் கிணற்றைத் தோண்டிப் பார்த்ததில்,சாம்பல் நிறைய கிடைத்திருக்கிறது.இந்த சாம்பலை மேல்நாட்டைச் சேர்ந்த சிலரும் வந்து எடுத்துப்போய்,ஆராய்ச்சி செய்து பார்த்ததில், சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் என தெரிந்துள்ளது.எனவே,இராமாயணம் நிஜம் என்பதற்கு இந்த விஜயாபதி விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமி கோவிலும் ஒரு ஆதாரம் ஆகும் விஸ்வாமித்திர மகாரிஷி என்றால் தன் உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபம் ஏற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை நமக்கு கொடுத்தவர் ஆவார். தர்ம தேவனால் விஸ்வா மித்திரன் என்று அழைக்கப்பட்டவர் விஸ்வம் என்றால் உலகம், மித்திரன் என்றால் நண்பன் ஆகும். ஆகவே உலக நண்பன் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டவர். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இறைவனுக்கு போட்டியாக திரிசங்கு என்ற நண்பனுக்கு சொர்க்கத்தை அமைத்தவர் முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் .. விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து .அரசு பஸ் , பிரைவேட் பஸ் பயணிக்க வேண்டும்(காலை 5.00மணி முதல் மாலை 7.30வரை ) அங்கிருந்து,25 கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும் .(இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம் ) ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!! 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு 23.11.2014 ஞாயிறு கிழமை அனுஷம் நட்சத்திரம் தினத்தன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறுமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

மேலும் தகவல்கள்களுக்கு: 
98428 58236 
8754016236 
98420 78733

அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பெற

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


அழகான அறிவாற்றல் மிக்க குழந்தை பெற
மனமகிழ்வு மாறா மருவின் மகவின்
மனமதியின் மாண்பின் மருந்து ..................குறள் 


கணவன் மனைவி இருவரும் ஒருமித்து உயர்ந்த எண்ணத்துடன் நீராடியபிறகு மகிழ்வாய் மருவுதல் ,குருதியோட்டத் தொடர்பால் உண்டாகும் கருக்குழந்தை பிற்காலத்தில் பெறும் அரிவாற்றல்லுக்கு மிக சிறந்த மருந்து என்பது முற்றிலும் உண்மை .

இக் குறள் முற்று மோனையில் அமைந்துள்ளதும் ஒரு சிறப்பே .

அழகாய் குழந்தை பெற
 


 கருத்தரித்த மூன்றாம் மாதத்திற்கு பிறகு பசும் பாலில் செம்மலரின் மொட்டு இட்டு காய்ச்சி நாளும் ஒரு வேளை பருகி வர குழந்தை அழகுடன்
செம்மை நிறமாய் பிறக்கும் ,
செம்மலர் மொட்டு = ரோஜா மொட்டு அல்லது குங்குமப் பூ தூள்கள் .



Tuesday, 18 November 2014

காரைக்குடியில் முதியோருக்கு உணவு

       உ
சிவமயம்
தர்மோ ரக்ஷதி ரக்ஷித


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லா உலகினை உருவாக்குவோம்


காரைக்குடியில் முதியோருக்கு உணவு





ஆன்மீகப் பெரு மக்களே உங்களின் ஆதரவு வேண்டி
காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரதியங்கிரா கோயில் பக்கதர்கள் மானாமதுரை சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய் சமைத்திட்ட உணவை கொண்டு போய் கொடுத்து பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும் 3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.
வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர் பரிந்துரையின் பேரில் இலவசமாக அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .
இதற்க்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன் தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன் வேன் ஓட்டுவதற்கு டிரைவர்கள் தேவை தங்கும் இடம்,உணவு கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்
தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796

பசு வதை தடுப்பு/பராமரிப்பு இயக்கம்

பசு வதை தடுப்பு/பராமரிப்பு இயக்கம்


மானாமதுரை ஸ்ரீ ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரதியங்கிரா கோயிலில் கோ சாலை வைத்து பசுவை பராமரித்து வருகின்றார்கள் .மேலும் பசுக்களை பராமரிக்க இயலாதவர்கள் ,வீதியில் உணவின்றி அலைய விடாமல் ,இறைச்சிக்கு விற்றுவிடாமல் பசுவை இங்கு கொண்டு வந்து விட்டால் அதன் ஆயுசு பரியந்தம் வரை பாதுகாத்து இரட்சிக்கப்படும் .
டாட்டா ACEகுட்டியானை வைத்திருக்கும் அன்பர்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள் .
மானமதுரைக்கு கொண்டு வந்து விட இயலாதவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியாக இலவசமாகவோ ,குறைந்த கட்டணத்திலோ கொண்டு வந்து விட்டு அந்த புண்ணிய கைங்கரியத்தில் நீங்களும் பங்கு பெறலாம் ,உங்களுக்கும் இறைஅருள் கிட்டும்.
அன்புள்ளம் கொண்ட நமது அன்பர்கள் தங்கள் பகுதியில் பசுக்களை வதைக்கு அனுப்ப விடாமல் தடுத்து அல்லது எடுத்துக்குச் சொல்லி மானாமதுரைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யலாம் ,வண்டி வாடகையை ஒருவரோ ,பலரோ பகிர்ந்து கொள்ளலாம் .
முதலில் அழிப்பதை தடுப்போம் ,வளர்க்க முயலுவோம் ,
பசுவின் கண்களில் மிளகாய்: பசுக்களை கேரளாவுக்கு கடத்துகையில் பல நாள் பயணம், நீர் - உணவு - ஓய்வு இன்மை போன்ற காரணங்களால் பசுக்கள் சோர்வு அயர்ச்சி அடைந்து நிற்க கூட முடியாமல் தடுமாறி கீழே விழும்.
அப்படி விழாமல் , பசுக்களை கடத்தி கொலை செய்யும் மாமிச வெறி பிடித்த ராட்சதர்கள், பசுவின் கண்களில் மிளகாயை செருகி வைத்து விடுகிறார்கள். மேலும் கொதிக்கும் நீரை பிடித்து அதன் காதுகளில் ஊற்றுவார்கள். ஏதும் அறிய வாயில்லா ஜீவன்கள் வலியாலும் எரிச்சளாலும் துடி துடிக்கும். பசுக்களை தெய்வமாகவோ, ஒரு உயிரினமாகவோ பாராமல் வெறும் சதை பிண்டமாக பார்க்கும் இந்த கொலையாளிகளை என்ன செய்தாலும் தகும். அதே மிளகாயை இவர்கள் கண்களிலும், சுடு நீரை காதுகளிலும் ஊற்றினால் தான் என்ன..??
பாவிகள் படம்: PFCI கடத்தப்பட்ட மாடுகளை மீட்ட பொழுது எடுத்தது!

நமக்கு பால் கொடுத்த பசுவிற்கா இந்த நிலை ,எளியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதற்கு போராட வேண்டும்.
இப்போது பராமரிக்க இடம் உள்ளது ,மானமதுரை கோயிலின் அருகில் உள்ளது
இந்த தர்மத்தில் பங்கேற்க அனைவரும் வாரீர்,இறை அருள் பெறுவீர்.
தொடர்புக்கு ; சுந்தர் ;9842858236,9865993238,9442559844 மானாமதுரை

பல்லி கடிக்கு மருந்து

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

பல்லி கடிக்கு மருந்து

பல்லிக் கடிக்குப்  பனைவெல்லம்  உள் மருந்தாம் ,

நல்லமஞ்சள்  நீர்மேல் மருந்து .                            ...............குறள்


விளக்கம் :

பல்லி கடித்தால்  25 கிராம் பனை வெல்லம் உண்ட பின்  கடி பட்ட இடத்தில்
மஞ்சள் நீர்  பூசுவதும்  நஞ்சை  அகற்றும்  நன் மருந்தாகும் .



Monday, 17 November 2014

நரம்பு தளர்ச்சி நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


நரம்பு தளர்ச்சி நீங்க



நரம்புநலத் திஞ்சோமம் \சீரகம் கோட்டம்
திரிகடுகீர் சாதி கிராம்பு . .....................குறள்


விளக்கம் :

உடலில் நரம்பு மண்டலம் வலிமை பெற இஞ்சி ,ஓமம் ,சீரகம் ,சுக்கு ,மிளகு ,திப்பிலி ,சாதிக்காய் ,சாதிப்பத்திரி ,கிராம்பு இவற்றின் தூளை தேனில் குழைத்து உண்ணவேண்டும்

Saturday, 15 November 2014

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு 17.11.2014 திங்கட் கிழமை கார்த்திகை மாத உத்திரம் நட்சத்திரம் தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும்
ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :94425 59844

ஈரல் புண் குணமாக

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஈரல் புண் குணமாக

ஈரல்புண் கொண்டோரை ஈக்கள் மொய்ப்பதைக் காணலாம்
கனிந்த பழத்தை ஈ மொய்ப்பது போல் .-----நோய் அறிகுறி
மருந்து :
கருநொச்சி வாதநோய் கல்ஈரல் நோய்க்காம்
ஒரு இலவங்கம் பூண்டு மிளகொடு ........குறள்
விளக்கம் :
கருநொச்சி இலையோடு இலவங்கம் ,பூண்டு, மிளகு இவற்றை சேர்துண்ண கல்லீரல்,மண்ணீரல் ,நுரையிரல் ஆகிய மூவிரல் நோயும் வாத நோயும் தீரும்

.

Friday, 14 November 2014

ஆவுடையார்கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி

ஆவுடையார்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்கவாசகர்க்கு 15.11.2014 சனி கிழமை மகம் நட்சத்திரத்தில் அபிஷகம், ஆராதனை

அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவருள்,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு: திரு .மு.நாகராஜன் cell :9443007479




Thursday, 13 November 2014

பூவனூர் அகஸ்தியருக்கு அன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி 

மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான அகஸ்தியருக்கும் ,அருபமான போகர்க்கும்,புலிப்பாணி சுதிஸ்சனருக்கும் நாளை 14.11.2014 வெள்ளி கிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236 
பூவனூர் தியாகராஜன் : 94436 55399
 நாரயணசாமி :93443 02923

Monday, 10 November 2014

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்

[Image1]



மூலவர் : அகத்தீஸ்வரர்
உற்சவர் : அகத்தியர்
அம்மன்/தாயார் : லோபமுத்திரை

ஆகமம்/பூஜை : சிவாகமம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : அம்பாசமுத்திரம்
மாவட்டம் : திருநெல்வேலி





திருவிழா:


பங்குனியில் பிரம்மோற்ஸவம், ஆனியில் வருஷாபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, திருவாதிரை, சிவராத்திரி.
தல சிறப்பு:

அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு.




திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.


முகவரி:

அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், அம்பாசமுத்திரம் - 627 401. திருநெல்வேலி மாவட்டம்.

திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் அம்பாசமுத்திரம் உள்ளது. கோயிலுக்கு அருகிலேயே பஸ் ஸ்டாப் இருக்கிறது

போன்:
+95- 4634 - 250 882.



தலபெருமை: 

அகத்தியருக்கு சிவபூஜை: உற்சவர் அகத்தியர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி, பக்தர்களை அழைத்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பான அமைப்பு.
அகத்தியரின் மனைவி லோபமுத்திரை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவர் அம்பிகையைப் போலவே வலது கையில் பூச்செண்டு வைத்திருக்கிறாள். நவராத்திரி விழாவின்போது 9 நாட்களும் இவளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது

தல வரலாறு:

கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது, பூமியை சமப்படுத்த அகத்தியர் தென்திசை நோக்கி வந்தார். பொதிகை மலைக்குச் செல்லும் வழியில் அவர், பல இடங்களில் சிவபூஜை செய்தார். இவ்வூரிலுள்ள காசிபநாதரை பூஜித்துவிட்டு, பொதிகை மலைக்கு கிளம்பினார். அப்போது அவருக்கு பசி எடுத்தது. அவ்வேளையில் அகத்தியரை தரிசிக்க சிவபக்தர் ஒருவர் வந்தார். அவரிடம் தனக்கு அமுது படைக்கும்படி கேட்டார் அகத்தியர். அவர் தன் இருப்பிடத்திற்கு சாப்பிட அழைத்தார். ஆனால், அகத்தியர் அவரிடம் ஒரு புளியமரத்தடியில் காத்திருப் பதாகச் சொல்லிவிட்டார். சிவபக்தரும் அன்னம் எடுத்து வரக்கிளம்பினார். அவர் வருவதற்கு தாமதமாகவே, அகத்தியர் சாப்பிடாமலேயே பொதிகை மலைக்குச் சென்று விட்டார். அதன்பின் சிவபக்தர் சாதமும், அரைக்கீரையையும் சமைத்து எடுத்து வந்தார்.அகத்தியர் சென்றதைக் கண்ட அவர், அகத்தியர் உணவை சாப்பிடாமல் தான் இருப்பிடம் திரும்பமாட்டேன் என சபதம் கொண்டார். அகத்தியரை வேண்டி தவமிருந்தார். சிவபக்தரின் பக்தியை மெச்சிய அகத்தியர் அவருக்கு காட்சி கொடுத்து, அன்ன அமுது சாப்பிட்டார். இந்த நிகழ்வு நடந்த இடத்தில் பிற்காலத்தில், அகத்தியருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவனருள் பெற்றவர் என்பதால் இவர், "அகத்தீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி இருக்கிறார். இடக்கையில் ஏடு இருக்கிறது. இவரது சன்னதி எதிரில் நந்தியும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரும் இருக்கிறார். சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு

பஞ்சமி திதி அன்று வராஹி வழிபாடு

பஞ்சமி திதி அன்று வராஹி வழிபாடு

11-11-14  செவ்வாய் கிழமை  பஞ்சமி திதி

[இரவு நேர வழிபாடு சிறந்தது]:





வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!வராஹி அம்மன் இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி.
சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள்.இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் [99437 98083]ஆகும்.

இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே பெற்ற தாயை விட பல மடங்கு ..சதுர்த்தி, சஷ்டி, பஞ்சமி ,அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. ...திருஆனைக்காவின் அம்பாள் ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி } வராஹி ஸ்வரூபமே. வராஹி வழிபாட்டால் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லும் .இதனால் தான் வராஹி பக்தனிடம் வாதாடாதே என்பார்கள். வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான



ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்



என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள். வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.




ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.உண்மையாக இருந்தால் உங்களுக்கு வராஹி தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும்.


நம் அடியவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் , ஸ்ரீ வராஹி உபாசகர். மாதத்தில் , சில குறிப்பிட்ட தினங்களில் - வராஹி அம்மனை , நேரில் தரிசிப்பதாக கூறுகிறார். பல நேரங்களில் , மனம் குழப்பமடைந்து , முடிவெடுக்க தடுமாறும் தருணங்களில், இவரிடம் ஆலோசனை கேட்டு , பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்த அநேகம் பேர் - இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.கடவுள் இல்லை , கடவுளை நம்புபவன் முட்டாள் - என்று இவர்களிடம் சொன்னால், ஏதோ வேற்றுக்கிரக ஜந்துவைப் போல் ஒரு பார்வை பார்க்கிறார்கள். நல்லதுங்க தம்பி., உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்னு சொல்லிவிட்டு , அமைதியாக செல்கிறார்கள்.


இதே வராஹி மந்திரம் ஜெபித்து - வசியம், மாந்திரீகம் என்று ஒரு கூட்டமே பல அமானுஷ்யங்களை நிகழ்த்திக் கொண்டும் இருக்கிறது.கடவுளை பார்த்தால் தான் நம்புவேன் என்று ஆசைப்படும் அன்பர்கள், இந்த மந்திரங்களை ஜெபித்து , உருவேற்றினால் - கன்னிமார்கள் பிரசன்னம் நிச்சயம் உண்டு.
"ஸ்ரீ வராஹி மாலை" என்று - தமிழில் 32 பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் ,

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம். இதை முழு நம்பிக்கையுடன் பாடி , வராஹியை தரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், இவர்கள் யாரும் இதை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை.. !


நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள்,

வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.


நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,

கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,

குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.


"பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி" ஆகிய திருபெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
---நன்றி அ.விஜய் பெரியசுவாமி .....

சந்தானம்(குழந்தை)இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியானஅரியதொரு மந்திரம்


சந்தானம்(குழந்தை)இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியானஅரியதொரு மந்திரம்

சந்தான வித்தை -அகத்தியர்
குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால்
பேசப்பட்டு அத்தகையோரின்உள்ளத்தை வாடச்செய்கின்றனர்,


குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொருதிருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள் குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின்
அவல நிலையைக்காட்டுகின்றது.

பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை விடவும்துணிகின்றனர்.
அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில்
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை)இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி
இன்றைய பதிவில் பார்ப்போம்.

சந்தான கரணி இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங்கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.
பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
– அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும்
மந்திரத்தை செபிக்கவும்.

பூசை முறை
கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,குங்குமம், பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப் பார்த்தவாரே 

“ஓம் ரீங் அங்வங்” என்ற மந்திரத்தை 108 உரு
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கானசமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி
குழந்தை பிறக்கும்.
அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள்
அவளுக்கு கெற்பம் உண்டாகும்
. இது குழந்தை செல்வத்தை தரும்
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும்
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில்
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின்
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார்
அகத்தியர்.


---நன்றி http://aanmikam.blogspot.in/

Sunday, 9 November 2014

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அகத்தியர் கோயில்கள் பற்றிய விபரம் தேவை
******************************************************


ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ,
மானாமதுரை ஸ்ரீ மஹாபஞ்சமுக ப்ரதியங்கிரா கோவிலில் இருந்து சித்தர்கள் வழிபட்ட,நிர்மாணித்த ஆலயங்களில் ஆராதனை,வழிபாடு ,அன்னதானம் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

உங்கள் ஊரில் சித்தர்கள் நிர்மாணித்த கோயில்கள்,சித்தர் கோயில்கள் ,இருந்தால் எங்களுக்கு தெரியபடுத்தவும் .
அங்கும் வழிபட பக்தர்கள் வருவார்கள் .அன்னதானம் நடக்கும் .

முதற்கட்டமாக அகத்தியர் நிர்மானித்த கோயில்கள் ,அகத்தியர் இருக்கும் கோயில்கள்
அகத்தியர் வழி பட்ட கோயில்கள் தெரியப்படுத்தவும் .

ஊர் பெயர் :
கோயில் பெயர்
இறைவன் பெயர்
இறைவி பெயர்
கோயிலுக்கு வழி :

உங்களது தொலை பேசி எண்
கோயில் தொலைபேசி /குருக்கள் எண்
இந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தொடர்புக்கு :
சுந்தர்: 98659 93238,98428 58236
அண்ணாமலை -94425 59844
Email: prathyangiradevi33@gmail.com
annamalaitpr@gmail.com
srisandi2013@gmail.com

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி
 10.11.2014 திங்கள்கிழமை  சங்கடஹர சதுர்த்தி



ஒவ்வொரு மாதமும் வரும் 'சங்கடஹர சதுர்த்தி' நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடையின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். 'ஹர'' என்ற சொல்லுக்கு அழுத்தல் என்று பொருள்.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.


விரதம் இருப்பது எப்படி?
 
சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும்.

அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபாவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,


'ஓம் தத் புருஷாய வித் மஹே வக்ர 
துண்டாய தீமஹி தன்னோ 
தந்தி ப்ரசோ தயாத்''
எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வணங்கினால் எல்லாவகையான செல்வங்களும் சேரும்.



ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி 

ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான்.
வேறு எங்கும் காணமுடியாதபடி ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் எட்டு மண்டபம் மூன்று பிரகாரங்கள் மதில்சுவர் விமானம் போன்றவற்றுடன் கூடிய தனிக் கோவில் 
அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 
கலியுகத்தில் கணபதியைப் பற்றி போதிக்க முக்தல மகரிஷியை தென்னாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமை இந்த விநாயகருக்கு உண்டு. எனவே இங்குள்ள விநாயகர் மந்திரமாகர்ணம் என்ற விதிப்படி காட்சி தருகிறார். கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பிஉச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். பிஉச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், பிமூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார். பிள்ளையாருடன் வீற்றிருக்கும் அம்பாள், "ஸ்ரீநீலாவாணி'' என்று அழைக்கப்படுகிறார். 

மும்மூர்த்திகளைவிட முதன்மையான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் இருக்கும் அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாக கருதப்படுகிறார். 

இவரது பெயரில் பிஸ்ரீ' என்பது லட்சுமியையும், பிநீலா' என்பது துர்க்கையையும் குறிக்கிறது. கலைவாணியை கூறும் வகையில் பிவாணி' என்ற பெயரும் இந்த அம்மனுடன் இணைந்துள்ளது. இங்கு ஜோடியாக வீற்றிருக்கும் பிஉச்சிஷ்ட விநாயகரை' வழிபட்டால், தம்பதி ஒற்றுமை பலப்படும். தாம்பத்திய உறவு மேம்படும் என்கிறார்கள். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதிகள், இங்கு வந்து விநாயகரை வணங்கினால், வீட்டில் மழலை தவழும் யோகம் விரைவில் கூடி வரும் என்பது ஐதீகம். அதோடு, செல்வம் பெருகுவதற்கு கொழுக்கட்டையும், குழந்தை வரத்திற்கு சர்க்கரை பொங்கலையும், நோய்கள் தீர வேண்டும் என்றால் கரும்புச்சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள். 



பிள்ளையார் சக்தியோடு உள்ள சிற்பங்களுல் சில வித்யாசமான சிற்பங்களும் கோவில்களில் இருப்பதை பார்த்திருப்பீர்கள், வெற்றியிலும், செல்வத்திலும் செழித்து நின்ற மூன்றாம் குலோத்துங்க சோழன் போன்ற மன்னர்கள் கட்டிய ஆலயங்களில் கட்டாயம் இந்த சிலைகள் இருக்கும். சக்தித் தலங்களிலும் உள்ள சக்தியுடன் உள்ள கணபதியை வழிபட்டால் வெற்றிகள் குவியும், செல்வம் செழிக்கும்.உச்சிஷ்டகணபதி என்றும் போக கணபதி என்றும் சொல்பவர்கள் உண்டு. திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ள 

 ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி வணங்கினால் எல்லாவகையான செல்வங்களும் சேரும்
திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில், பைபாஸ் சாலையை கடந்து சென்றால் இக்கோவிலை சென்றடையலாம். மிக பழமையான இந்த கோவில் பல 100 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாமல் அதன் பெருமைகளை இழந்து காணப்படுகிறது. இக்கோவிலை புனர் அமைத்து ஜிர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் செய்ய இறையருள் பாலித்துள்ளது. 

மேலும் தகவல்கள்களுக்கு:9842078733

,சங்கட ஹர சதுர்த்தி




10-11-14,சங்கட ஹர சதுர்த்தி ......விநாயகர் வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டியது கிடைக்கும் ,தடைகள் அகலும் ....

அன்று[10-11-14] அந்தி சாயும் பொழுதில் வழிபடுவது சிறப்பு ...வானில் சந்திரன் ,உங்கள் மனதில் விநாயகர் ........சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று 
ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். 
காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.சிவச்சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் .இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் அறவே குறையும் .செவ்வாய் தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.அருகம்புல் அர்ச்சனையால் ஞானம்,கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறு ஓம்......
"விநாயகர் அகவல்" ,விநாயகர் "காரிய சித்தி மாலை" படியுங்கள்.....
விநாயகரின் வினோதப் பெயர்கள்

திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்

திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்

கொட்டையூர் - கோடி விநாயகர்

திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்

திருவிழிமலை - படிக்காசு விநாயகர்

நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்

திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்

ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்

குன்றக்குடி - தோகையடி விநாயகர்

ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்

பழநி - கோசல விநாயகர்

சிவகங்கை - கௌரி விநாயகர்

மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்

தென்காசி - அணுக்கை பிள்ளையார்

செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்

திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்

திருவாதவூர் - கபில விநாயகர்

வயலூர் - கீழைப் பிள்ளையார்

சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்

வடசேரி - ஆகசாலை விநாயகர்

இலந்தையடிவிளை[கன்னியாகுமரி அருகில் ]--சுகபிரசவ விநாயகர்[இவர் இலந்தையடிவிளை முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ளார் ]...........

.
""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' [அருணகிரிநாதர்]......அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே விநாயக பெருமானே தங்கள் எண்ணப்படி ....அன்பன்...சிவ .அ.விஜய் பெரியசுவாமி .......

மானாமதுரை ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி சங்கடஹரசதுர்த்தி அபிசேகம்


 




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு நாளை 10-11-2014 திங்கள் கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும்
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

அஷ்ட கர்ம












மந்திரம் காரிய சித்தி பெற செய்ய வேண்டிய விதிமுறை



காரிய சித்தி

நாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-

மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.
மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.
மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.
பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.
உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.
செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.
ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.
மற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.
மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.
பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.
சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.
12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.
பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.
மந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.
அதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.
மந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.
முதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.
படிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும். அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.
வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.
உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.
கால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.




தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!

மி


அமானுஷ்ய பரிகாரங்கள் - கடுகு எண்னை




வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

கடுகு எண்னை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.
கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் இளைஞ்ச இளைஞ்சிகளும் இப்படி செய்யலாம்.


ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணையை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். வாழ்க வளமுடன் அனைவரும் !!

15. அமானுஷ்ய பரிகாரங்கள் - வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும் எளிமையான பரிகாரங்கள்


 அமானுஷ்ய பரிகாரங்கள் - வாழ்க்கைக்கு வலிமை சேர்க்கும் எளிமையான பரிகாரங்கள்




(1) வேலை தேடி இன்டர்‌வ்யூ செல்லுமுன் ஏதேனும் சிறிதளவு இனிப்புடன் பச்சை ஏலக்காய் சேர்த்து உண்டுவிட்டு ஒரு டம்ப்ளர் மிதமான சூட்டில் நீரை அருந்தி விட்டு செல்ல, காரியம் நிறைவேறும்.

(2) எதையாவது நினைத்து பதட்டமான மன நிலையில் இருந்தால், ஒரு நிமிடம் வலது நாசியை மூடி கொண்டு இடது நாசியால் மூச்சு விட்டு, அதை கவனித்து கொண்டிரிப்பின் பதட்டம் மாறி மனம் தெளிவடையும்.

(3) நவ தானியங்களை தினமும் பறவைகளுக்கு உணவிட வேலை செய்பவர்கள் வேலையில் உயர் பதவி, அதிக சம்பளம், மேலதிகாரிகளுடன் இணக்கம் போன்றவற்றை அடையலாம்.

(4) வியாபாரம் தொழில் செல்வ நிலை மேலோங்க வியாழக்கிழமைகளில் ஊர வைத்த கருப்பு உளுந்தை தொடர்ந்து 11 வாரங்கள் குரங்குகளுக்கு இட்டு வர, செல்வ நிலை உயரும். மலை பாங்கான கோவில்களில் மற்றும் விலங்கு சரணாலயங்களில் குரங்குகளை காணலாம். தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் முடிந்த வியாழக்கிழமைகளில் எல்லாம் செய்து வந்தாலும் பலன் உண்டு.

(5) திருமணம் தாமதம் இல்லாமல் நடக்க, திருமணம் கூடி வரும் வரை, வியாழக்கிழமைகளில் சிறிது ஊறவைத்த நவதானியம்,சிறிது வெல்லம், உருண்டையாக சிறிதளவு மஞ்சள் சேர்த்த ஒரு உருண்டை கோதுமை மாவு பசுக்களுக்கு கொடுத்து வர விரைவில் திருமணம் கூடி வரும்

. அமானுஷ்ய பரிகாரங்கள் - சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள்





வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.

(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.


(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.

பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்பதில் தவறென்ன ?

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்!





Vanni Tree Special ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம்!

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரம் என்று சொன்னாலே விருதாச்சலம் என்றுதான் அனைவருக்கும் ஞாபகம் வரும். விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.

எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர் என்ன செய்வாரென்றால், தினசரி வேலையாட்களுக்கு அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி அந்த வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம். இது வரலாற்றுச் சான்றுகளில் இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகளில் இருக்கிறது. அப்படியொரு சக்தி இந்த வன்னி மரத்திற்கு உண்டு.




இன்றைக்கும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், மனநலம் குன்றியவர்களை அந்தக் கோயிலிற்கு அழைத்துச் செல்லலாம். அங்கு இன்னமும் அந்த பழமையான வன்னி மரம் இருக்கிறது. அதற்குக் கீழே விபசித்தி முனிவருடைய உருவமும் இருக்கிறது. அதை வழிபட்டால் எல்லா வகையிலும் சிறப்புகள் உண்டாகும். இந்த வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை இந்த வன்னிக்கு உண்டு. வன்னி மரக்காற்று பட்டால் கூட மிகவும் நல்லது. அந்தக் காற்றிலேயே தொடர்ந்து இருந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.

வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனையெல்லாம் தீரும். அந்த அளவிற்கு மருத்துவ குணம் அதில் இருக்கிறது. இதேபோல, இந்த வன்னிக்காய் பொடியை சாப்பிட்டால் விந்தணுக்களுடைய நீர்ப்புத் தன்மை திடப்படுத்தும். ஏனென்றால் நல்ல விந்தணு, கருவுறுவதற்கான விந்தணு என்றால், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. நல்ல விதத்தில் இருக்க வேண்டும். நீர்த்துப்போன விந்தணுவில் இதெல்லாம் நல்ல விதத்தில் இருக்காது. மிகக் குறைவாகவும் இருக்கும். இந்தப் பொடியை தொடர்ந்து சாப்பிட்டால் விந்து கட்டும். கருவுறும் தன்மையை அதிகப்படுத்தும்.

திருச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வன்னிய சமுதாய மக்கள் வன்னி மரத்தைப் புனித மரமாகக் கருதுகின்றார்கள். வன்னிய சமுதாய மக்கள் மரணம் அடைந்தபின் வன்னிமரக்கட்டைகளின் மீது பூத உடலை வைத்து எரித்து சாம்பலாக்கும் பழக்கம் இன்றும் காண முடிகிறது.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.

சனி பகவான் கோவிலில் வணங்கப்படும்வன்னி மரம் (PROSOPIS SPICIGERIA LINN) திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் பாடல் :வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர்தூவி நம்பா வென்ன நல்கும் பெருமான் உறைகோயில் கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும் மொய்ம்பார் சோலை வண்டு பாடும் முதுகுன்றே வன்னி மரத்தைப் பற்றி ரிக்வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணத்திலும் கூறப்பட்டிருக்கின்றது. மார்ப்புச் சளியையும் இந்த வன்னிக்காய் பொடி எடுக்கும். இந்த வன்னி இலையை அம்மியில் அரைத்து அப்படியே புண் இருக்கும் இடத்தில் கட்டினால் அப்படியே சரியாகிவிடும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் தொடாது. நெருங்கவே முடியாது. அப்படியென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த மரத்தினுடைய அமைப்பு எவ்வளவு வலிமையானது என்று.

பல ஆலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம்தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால் வன்னி மரம்தான் தலவிருட்சம். இராம பிராண் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போகும் முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். அதேபோல, வள்ளிக் குறத்தியை மணப்பதற்காக முருகன் வன்னி மர வடிவில் காட்சியளித்ததாகவும் ஐதீகம்.

அதேபோல, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக நிராயுதபாணியாக இருக்க வேண்டுமல்லவா, அப்பொழுது அவர்களுடைய ஆடை, அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் ஒரு பெரிய துணியில் வைத்துக் கட்டி, மரஉறி தறித்து கிளம்புவதற்கு முன்பாக, வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அப்படியானால், இது ஒரு பாதுகாப்பிற்கு உரிய மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம் என்ற அதன் தன்மை நமக்குத் தெரிகிறது.

வன்னிமரம் ஜெயதேவதையின் வடிவமாக போற்றப்படுகிறது. அது துர்கை கோயில் கொண்டிருக்கும் இடமாகும்.

உமா தேவி வன்னிமரத்தடியில் வாசம் செய்வதாகவும், தவம் இருந்ததாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

வன்னிமரம் விநாயப்பெருமானுடைய பஞ்சபூத சொரூபத்தை உணர்த்தும் ஐந்து வகையான மரங்களில் அக்னி சொரூபம் ஆகும். பொறையாருக்கு அருகில் உள்ள சாத்தனூர், பாசிகுளம் விநாயகர் சாஸ்தாவுக்கு அக்னி சொரூபமாக வன்னிமர வடிவில் காட்சி கொடுத்ததாக ஸ்தல மகாத்மியம் கூறுகிறது.

வன்னிமர இலையை வட மொழியில் சமிபத்ரம் என்று கூறுவார்கள்.
இது விநாயகருக்கும், சனீஸ்வரனுக்கும் விருப்பத்திற்குரிய இலையாகும்.

விஜயதசமியின் போது துர்க்காதேவி மகிஷனை அழிக்க வேல் வாங்கும் நிகழ்ச்சி வன்னி மரத்தடியில் நடக்கும். வன்னி வெற்றியை தரும் மரம் என்பதால் அந்த மரம் இருந்தால் அங்கு வேல் வாங்குவது விஷேசம்.
நவக்கிரங்களில் இது சனி பகவான் (SATURN PLANET) தொடர்பு கொண்டது.


பெண் தெய்வம் நீலாதேவிக்குப் படைக்கப்படுகிறது.விருத்தாசலத்திலுள்ள விருதகிரீஸ்வரர் கோவிலிலுள்ள வன்னி மரத்தை பக்தர்கள் 9 முறை சுற்றி வந்து மரத்தின் தண்டில் நூலைக் கட்டி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். இதனால் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சொத்து சுகம் கிடைக்கும் என்றும் நம்புகின்றனர். இம்மரத்தின் பட்டையைத் துண்டு செய்து சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்று நம்புகின்றனர்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே உள்ள விநாயகபுரம் ஒட்டநேரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் வன்னி மரத்திற்கு பூஜை செய்யப்படுகிறது. சனி பகவான், நீலாதேவி பெண்அம்மன், காக வாகனத்தில் கருப்பு நிற ஆடை அணிவித்து எள் தானியத்துடன்,

நவரத்தினத்தில் நீலக்கல் பதித்து, வன்னி மரத்தின் அடியில் மேற்கு திசையை நோக்கி மகரம், கும்ப ராசியில், இந்த ஆலயத்தில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன.


மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்தது. வன்னி மரத்தைச் சுற்றி பூஜை செய்து வந்தால் குழந்தை பிறக்கும
மந்திரங்களில் பேசும் மந்திரம், பேசா மந்திரம் என்றநிலைகள் உண்டு. பேசா மந்திரம் என்னவென்றுதெரிந்தவர்கள் ஞானிகள் என்கின்றனர் சித்தர்கள்.





பேசா மந்திரத்தை மௌனம் என்று குறியீட்டின் மூலம்சித்தர்கள் தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர்.


1882 ல் வெளியிடப்பட்ட சட்டைமுனி நாயனார் முன்ஞானம், பின் ஞானம் என்ற புத்தகத்தில் சட்டைமுனிநாயனார் பின்ஞானம் என்ற பாகத்தில் பேசா மந்திரம்எனப்படும் இந்த மௌன வித்தை பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.






மௌனவித்தை யாருக்கு யார் கொடுத்தார்கள் என்பதைகீழ்க்கண்ட பாடல்கள் விளக்குகின்றன.


“கிட்டினோங் கைலாய பரம்பரையினாலே கேளுமக்களாலாச்சாpயங் கொங்கணா; தான் சென்று,கிட்டினோ மென்று சொல்லியீசானத்தே கெடியானரசமுண்டு சட்டைபோக்கிக், கிட்டினோ மீசானந்துதித்தோ மென்று கெடியாக தவசிருந்து முத்தனாகி,கிட்டினோமென்று சொல்லி தசஷணாமூh;த்தி பதம்பிடித்து பணிந்திட்டாரே”


“தவம் பல செய்து கர்மவினைகளை கழித்து, ஒன்பதுவாசலை அடைத்து பத்தாவது வாசலைத் திறந்து,அமுதத்தை பருகி, கயிலாயம் சென்று தசஷணாமூ;த்திபாதம் பணிந்து, ஞானத்தை அடையக் கூடிய வழியைஎனக்;குக் காட்டுங்கள்” என்று கொங்கணர் வேண்டினார.;






“பணிந்திட்ட கொங்கணரைப் பார்த்து நாயன் பாருலகிற்பிறந்தவனோவிப்படி தானானாய், மணிந்திட்டச் சடம்போக்கிக் கைலாயத் தேகமானதுதான் வெகுகடினமதிகமெத்த, கனிந்திட்ட கனிவாலே வீறத்தாலேகலங்காமற் சமாதியுற்று கயிலாயத்திற், றணிந்திட்ட புத்திகொண்டுயிங்கே வந்தாய் சாதகமாயொருவரைங்கண்டிலேனே”






கால்களில் வீழ்ந்த கொங்கணரைப் பார்த்து, தசஷணாமூர்த்திமனிதர்கள் வாழக்கூடிய பூவுலகில் பிறந்து தவங்கள் பலசெய்து சித்திகள் பல பெற்று எப்படி இந்த நிலையைஅடைந்தாய். மனிதர்கள் இறந்தால் அவர்கள் தங்கள்உடலை உதிர்த்து விட்டு செய்த தவப் பயனால்; உயிராகத்தான் இந்த கயிலாய மலையை அடைய முடியும்.அத்ததைகய நிலை பெற்றவர்கள் தான் இந்த கயிலாயமலைக்கு அதிகமாக வந்தவர்கள். ஆனால் நீ ஜீவசமாதிஅடைந்த பின்பு உடலை ஜீவசமாதியில் வைத்து விட்டுஉயிராக இந்த கயிலாய மலைக்கு எப்படி வந்தாய், இப்படிவந்த ஒருவரையும் நான் இதுவரை கண்டதில்லை என்றுதசஷணாமூர்த்தி கூறுகிறார்.






”கண்டிலேனாச்சாயங்கமா ரனேபாருங்கலந்தநற்சென்மமிவா; கைலாயமானா;, ஒண்டிபேநாலதுக்கு மகத்து வந்தானென்னவுற்ற சிவ விந்துவின்னிலப்படிதானாச்சு, கன்டிலேனிவரைப் போற்சித்தா;காணேன் காரணமாயிவனுக்கு தீசஷிப் பேனான்,பண்டிலேன் கொங்கணரை மயங்க வேண்டாம்பரம்பரமாய் வந்து தந்த மௌணந்தானே”





இது எவ்வளவு பெரிய ஆச்சரியம . இந்த ஜென்மத்திலேயேகர்மவினைகளை கழித்து கயிலாயம் வந்திருக்கிறார்.கயிலாயம் வர வேண்டுமென்றால், விந்து நாதம, இரண்டுஎட்டு, இடகலை பிங்கலை, ஆகியவற்றின் பொருள் தெரியவேண்டும். மேலும் சிவனின் விந்து என்று சொல்லப்படுவது எது என்ற ரகசியமும் தெரிந்திருக்க வேண்டும்.இவர் கயிலாயம் வர முக்கிய காரணம் சிவ விந்துவின்ரகசியம் தெரிந்து, அதன் வழி நடந்திருப்பதனால் தான்இவர் கயிலாயம் வர முடிந்தது. இவ்வளவு சிறப்புகள்வாய்ந்த கொங்கணரைப் போல ஒரு சித்தரை நான்கண்டதில்லை என்று அவருக்கு ஞானம் அடைவதற்கு உரியவழியை சொல்லி தீட்சை கொடுத்தார். அந்த ரகசியம் தான்பேசா மந்திரம் எனப்படும் மௌன வித்தை எனப்படுகிறது.இந்த மௌன வித்தை சித்தர் பரம்பரை என்றுசொல்லப்படும் குரு சீடன் பரம்பரையாக ஒருவர் மாறிஒருவராக வந்து கொண்டேயிருக்கிறது.






”மௌனவித்தை மூலருக்கு முன்னே சொன்னேன்மருவியவா காலாங்கிக்கதுவே சொன்னா், மௌனவித்தைகாலாங்கி போகருக்கு சொன்னா; மகத்தானபோகருந்தானுனக்குச் சொன்னா; மவுனவித்தையகண்டாதியறிந்து கொள்ளு மற்றொன்று மயக்க மற்றுமௌனத்தாh;க்கு, மௌனவித்தை யெய்தாக் கால்வனேஞானி வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே”






கொங்கணர் பேசா மந்திரம் எனப்படும் மௌனவித்தையைதிருமூலருக்கு சொன்னார. திருமூலர் காலங்கிநாதருக்குசொன்னார்; காலங்கி நாதர் போகருக்கு சொன்னார்; போகர்உனக்குச் சொன்னார் என்று சட்டைமுனி நாயனாரைக்குறிப்பிடுகிறார். மௌன வித்தை என்ன என்பதை கண்டுகொள்ள வேண்டும் மௌன வித்தையைக் கண்டுகொண்டால் மட்டுமே இவ்வுலக மாயையிலிருந்து தப்பிக்கமுடியும். ஞான வழியைக் காட்டுகிறேன் என்று சொல்லும்ஏமாற்று வித்தைக் காரர்களிடமிருந்து விலகி இருக்கமுடியும் மௌன வித்தை என்று சொல்லப் படுகிற பேசாமந்திரத்தை தெரிந்து கொண்டு, அதனை செயல்படுத்துபவனே ஞான நிலையை அடைய முடியும். அவனேஞானி என்று அழைக்கப்படுகிறான்; அகாரம்; உகாரம்; மகாரம்என்று அழைக்கப்படுகிற மூன்றில் பேசா மந்திரம் மகாரம் மஎன்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது என்று கொங்கணர்சொல்கிறார்.


மௌன வித்தையின் சிறப்புகள் பற்றி கீழ்க்கண்ட பாடல்கள்விளக்குகின்றன:






”சித்தாகுஞ் சித்தியுமாமெட்டெட்டு மாடுந் திறமாகநின்றவா;க்;கு மந்திரஞ்சித்தி பத்தாகும் வேதத்தில்மந்திரத்தைப் பாவி பல பலெனப் பேசியவா;சேவிப்பா; கோடி கத்தாதும் நாய் போலே கற்றியென்னகாசிக்கு மாகாது சித்தியில்லை, முத்தான மௌனம்விட்டால் மௌனம் பாழாச்சு மோசமிந்தவேதமெல்லாம் பொய்யென்பாரே”






மௌன வித்தை தெரிந்தவருக்கு மட்டும் தான் மந்திரங்கள்எல்லாம் சித்தியாகும் வேதங்களில் உள்ள மந்திரங்களைஉச்சாடணம் செய்து கோடி முறை உரு ஏற்றினாலும், நாய்போல உலகமெல்லாம் சுற்றினாலும், காசி போன்றபுனிதமான இடங்களுக்குச் சென்றாலும் மந்திரங்கள்சித்தியாகாது. கடவுள் நிலை உணர முடியாது. மௌனவித்தை தெரியாதவருக்கு, வேதங்களில் உள்ள ரகசியங்கள்தெரியாது. வேதங்களில் உள்ள ரகசியங்கள் தெரியாதகாரணத்தினால,; வேதங்களே பொய் என்பர்.






”பொய்யென்று யெண்ணியெண்ணி யுலகங்கெட்டுப்போச்சப்பாவதனாலேயுக பேதமாச்சு, கையென்றுயோகத்தில் மௌனமுட்ட கடுஞ்சித்தியறிவு மட்டுங்கலந்துதாக்கு, கையென்ற நி;த்தமப்பா ஆறிற்காணுஞ்சாதகமாய் மேல்மூலந்தாண்டிக்காணும், மெய்யென்றுபிடித்தாக்காலவனே யோகி விரைந்துயிதையறியாவிட்டால் விருதமாடே”





மௌன வித்தை தெரியாத காரணத்தினால், புராணங்கள்,உபநிஷத்துக்கள் ஆகியவைகளில் உள்ள கருத்துக்களைப்புரிந்து கொள்ள முடியவில்லை. கடவுள் என்றால் என்னஎன்றும,; கடவுளை அடையக் கூடிய வழி எது என்றும்கேட்பவர்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்கமுடியவில்லை. அதனால் கடவுள் உண்டா இல்லையா என்றநிலை உருவாகி, ஆத்திகர,; நாத்திகர் என்ற பிரிவுஉண்டாகி உலகம் இரண்டாகி பிளவு பட்டு நிற்கிறது. மௌனவித்தையை தெரிந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து சென்றுபிரம்மரந்திரத்தில் தன் ஜீவனை இணைப்பவனே யோகி.இதை அறியாவிட்டால் ஒன்றுக்கும் உதவாத மாட்டுக்குச்சமம் என்கிறார் சட்டைமுனி நாயனார்.






”நன்றான மௌனத்திற் கடிகை சேர நல்வினையுந்தீவினையும் நாசமாகும், நன்றான மௌன மென்றுநினைக்க முத்தி நல்லோ;கள் நினைப்பா;கள் மற்றோ;காணா;, நன்றான மௌனமல்லோ ஷிகள் சித்தா;நாலுதிக்குஞ் சொரூபத்தைக் கண்டா; கண்டா, நன்றானமௌனமல்லோ சாத்திரங்கள் தோறும் நலமாகக்கூப்பிடுது கண்டிலாரே”






மௌன வித்தை தெரிந்தவர்கள் மட்டுமே அதைசெயல்படுத்தி கர்ம வினை என்று சொல்லப் படுகிற பாவபுண்ணியங்களை கழிக்க முடியும்; பாவ புண்ணியங்களைக்கழித்தால் மட்டுமே முக்தி அடைய முடியும்; அதனால்மௌன வித்தை தெரிந்தவர்களால் மட்டும் தான் முக்திஅடைய முடியும் என்பதை உணர வேண்டும். மற்றவர்கள்எந்த வழிகளில் முயற்சி செய்தாலும் முக்தி அடையமுடியாது. மௌன வித்தை தெரிந்ததால் தான் சித்தர்கள்அனைத்திலும்; அதாவது துhணிலும், துரும்பிலும்,கடவுளைக் கண்டனர். வேதங்கள், உபநிஷத்துகள் மற்றும்அனைத்து சாத்திரங்களும் கூறுவது, மறை பொருளாகவிளக்குவது, குறியீடுகளாகக் குறிப்பிடுவது இந்த மௌனவித்தையைத் தான் என்பதை யாரும் அறியாமல் இருக்கின்றனர் என்கிறார் சட்டைமுனி நாயனார்.






”கண்டிலா; மௌனத்திலனேக சித்தி காணுமப்பாசொல்கிறே நன்றாய்க் கேளு, மண்டிலா்; மந்திரங்கள்செபிக்கும் போது அப்பனே மௌனமென்ற தீசைஷகேளு, ஒண்டிலாய் வாய் மூடி பேச்சு மற்று ஒருசேரை சமைத்துண்டு ஒரு போதப்பா, விண்டிலாதென்னேரஞ் செபித்தாயானால் விளங்கியதோரேழுலஷமந்திரமுஞ் சித்தே”






மௌனவித்தை தெரிந்து செய்தால் அஷ்டமா சித்தி உட்படபல்வேறு சித்திகளும் கிடைக்கும் என்பதை அறியாமல்இருக்கிறார்கள். மௌனவித்தையின் சிறப்புகளைசொல்லுகிறேன் கேள், நீ மந்திரங்களைச் செபிக்கும் போதுமௌன வித்தை தெரிந்தவர்களிடம,; மௌனவித்தைதீட்சை உனக்கு சொல்லித் தரும்படி கேள். தனியானஅமர்ந்து வார்ததை எதுவும் பேசாமல் வாயை மூடிஅமைதியாக மௌன வித்தையை தொடர்ந்து செய்துகொண்டே இரு.






காலை, மதியம், மாலை, இரவு என்றுநேரம் பார்க்காமல் எந்த நேரமும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பாயேயானால் ஏழு லட்சம் மந்திரம்மட்டுமில்லை, அதற்கு மேலும் மந்திரங்கள் சித்தியாகும்.மந்திரங்கள் சித்தியாக வேண்டுமென்றால் மௌன வித்தைதெரிந்திருக்க வேண்டும் என்கிறார்.









மௌன வித்தை என்பது சித்தர்கள் கலை. அதுதகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்என்பதற்காகவே சித்தர்கள் தங்கள் பாடல்களில் மௌனவித்தையை மறைத்து வைத்திருக்கிறார்கள். மௌனவித்தையின் ரகசியம் தெரிந்து, அதை செய்து வருகிற ஒருசில பேர் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்.


முயற்சி, முன்வினை, ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலமேஒருவர் மௌனவித்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்ளமுடியும்






புழமொழிகளின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே பின்வரும் ஒரு பாடலின்விளக்கத்தை இங்கே தெரிந்து கொள்வோம்.









நாயோட்டு மந்திரம் என்றால் நான் என்னும் அகந்தையைஓட்டும் மந்திரம். நான் என்ற அகந்தையை எந்த மந்திரமும்ஓட்டாது. மௌன வித்தை என்ற பேசா மந்திரம் மட்டும்தான் ஓட்டும். சாதாரண மந்திரங்களால் நமனை அதாவதுஇறப்பை வெல்ல முடியாது.






நான் என்னும் அகந்தையை ஓட்டும் மௌன வித்தைஎன்னும் பேசா மந்திரம் மட்டும் தான் இறப்பை வெல்லும்.மேளன வித்தை என்னும் பேசா மந்திரத்தைசொல்கிறவர்களுக்கு மரணம் இல்லை என்பது தான் இதன்பொருள்.