நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 18 November 2014

காரைக்குடியில் முதியோருக்கு உணவு

       உ
சிவமயம்
தர்மோ ரக்ஷதி ரக்ஷித


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டி

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லா உலகினை உருவாக்குவோம்


காரைக்குடியில் முதியோருக்கு உணவு





ஆன்மீகப் பெரு மக்களே உங்களின் ஆதரவு வேண்டி
காரைக்குடியில் இருக்கும் முதியோர் ,ஆதரவு உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கும் ஒரு சேவை செய்ய ஆதரவு அளிக்க ,மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்ச முக ப்ரதியங்கிரா கோயில் பக்கதர்கள் மானாமதுரை சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி அவர்கள் இருக்கும் இடத்திலேயே பக்குவமாய் சமைத்திட்ட உணவை கொண்டு போய் கொடுத்து பசி ஆற வைக்க முயற்சிக்கிறார்கள்

நகரின் மையப் பகுதியில் ,நல்ல திறமை வாய்ந்த சமையல் ஆள்களைக் கொண்டு சமைத்து பதிவு செய்த முதியோர்களுக்கு தினமும் 3வேளையும்
குறித்த நேரத்தில் உணவை கொண்டு போய் கொடுக்க இருக்கிறார்கள்

வசதி உள்ள முதியவர்கள் கட்டணம் செலுத்தலாம் ,பதிவு செய்து கொண்டு இந்த வசதியை பெறலாம்.
வசதி இல்லாதவர்களுக்கு உறவினர் /தெரிந்தவர் பரிந்துரையின் பேரில் இலவசமாக அளிக்கப்படும் ,இதற்காக அவர்கள் இரண்டு டிப்பன் கேரியர்கள்
வாங்கி எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் ,

காலை,மதியம்,இரவு உணவு உங்கள் இடம் வந்து சேரும் இப்போது இவ் வசதி காரைக்குடியில் அறிமுகம்செய்ய நினைக்கிறார்கள் .
இதற்க்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது ,மாருதி ஓம்னி வேன் தேவைபடுகிறது அதற்கும் ஏற்பாடு நடந்து வருகிறது
சேவை மனப்பான்மையுடன் வேன் ஓட்டுவதற்கு டிரைவர்கள் தேவை தங்கும் இடம்,உணவு கட்டணம் இல்லை .

காரைக்குடி நகரின் மையப் பகுதியில் வீட்டுடன் ,காலி இடமும் இருந்தால் தெரியப்படுத்தவும் ,அதற்குண்டான வாடகையையும் தெரியப்படுத்தவும்
தொடர்புக்கு :
திரு.முத்துராமலிங்கம் ,9443417289
சுந்தர் ;9842858236
நா.நாச்சியப்பன் ;9486651700
அண்ணாமலை ;9840424292,9442559844
சீனிவாசன் :9894087796

No comments:

Post a Comment