10-11-14,சங்கட ஹர சதுர்த்தி ......விநாயகர் வழிபாடு செய்தால் நீங்கள் வேண்டியது கிடைக்கும் ,தடைகள் அகலும் ....
அன்று[10-11-14] அந்தி சாயும் பொழுதில் வழிபடுவது சிறப்பு ...வானில் சந்திரன் ,உங்கள் மனதில் விநாயகர் ........சந்திர பகவான் தனது தோஷங்கள் நீங்கவும், தனது தேய்மானம் நீங்கவும் தேய்பிறை சதுர்த்தி தினத்தன்று
ஸ்ரீ விநாயகப் பெருமானை நினைந்து கடும் தவம் செய்ய, சந்திரனின் கலைகள் எனும் பிறைகள் வளர அருள்பாலித்தார்.தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளைத் தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.
சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு."ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பிறகு வரக்கூடிய நான்காவது நாளான சதுர்த்தி (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி ஆகும்.சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும்.
காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.முதன்முதலில் இந்த விரதத்தை அங்காரகன் அனுஷ்டித்து நவக்கிரகங்களில் ஒன்றானார். அதனால் இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கு அங்காரக சதுர்த்தி விரதம் என்றும் பெயர் உண்டு. சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்து ராவணன் இலங்கை மன்னன் ஆனார். பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றனர்.சிவச்சின்னங்களை தரித்துக் கொண்டு விநாயகப் பெருமானை தியானிக்க வேண்டும்.ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் .இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் உண்டாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் அறவே குறையும் .செவ்வாய் தோஷ பாதிப்புகள் நீங்கித் திருமணத் தடைகள் நீங்கும். நல்ல மங்கலமான நல்வாழ்வு அமையும், ஆயுள் அபிவிருத்தி, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.அருகம்புல் அர்ச்சனையால் ஞானம்,கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும். வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே ஈடாகவில்லை என்ற ஒரு புராணக்கதையும் உள்ளது. பாம்பும் கீரியும் பரம எதிரிகள். இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்தால் தாக்கிக் கொல்லாமல் விடா. பாம்பு கடிக்கும் போது விஷத்தைப் போக்குவதற்காக ஒவ்வோரு முறையும் கீரி, அருகம் புல் மீது படுத்துப் புரண்டு சக்தி பெறும் என்பதும் கவனிக்கத்தக்கது. சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறு ஓம்......
"விநாயகர் அகவல்" ,விநாயகர் "காரிய சித்தி மாலை" படியுங்கள்.....
விநாயகரின் வினோதப் பெயர்கள்
திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்
திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்
கொட்டையூர் - கோடி விநாயகர்
திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்
திருவிழிமலை - படிக்காசு விநாயகர்
நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்
திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்
ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
குன்றக்குடி - தோகையடி விநாயகர்
ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்
பழநி - கோசல விநாயகர்
சிவகங்கை - கௌரி விநாயகர்
மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்
தென்காசி - அணுக்கை பிள்ளையார்
செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்
திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்
திருவாதவூர் - கபில விநாயகர்
வயலூர் - கீழைப் பிள்ளையார்
சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்
வடசேரி - ஆகசாலை விநாயகர்
இலந்தையடிவிளை[கன்னியாகுமரி அருகில் ]--சுகபிரசவ விநாயகர்[இவர் இலந்தையடிவிளை முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ளார் ]...........
.
""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' [அருணகிரிநாதர்]......அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே விநாயக பெருமானே தங்கள் எண்ணப்படி ....அன்பன்...சிவ .அ.விஜய் பெரியசுவாமி .......
"விநாயகர் அகவல்" ,விநாயகர் "காரிய சித்தி மாலை" படியுங்கள்.....
விநாயகரின் வினோதப் பெயர்கள்
திருக்கச்சூர் - கருக்கடி விநாயகர்
திருமுருகன்பூண்டி - கூப்பிடுபிள்ளையார்
கொட்டையூர் - கோடி விநாயகர்
திருப்பனையூர் - துணையிருந்த பிள்ளையார்
திருவிழிமலை - படிக்காசு விநாயகர்
நாகப்பட்டினம் - மாவடிப் பிள்ளையார்
திருநெல்வேலி - சந்திப்பிள்ளையார்
ஸ்ரீவைகுண்டம் - தூண்டில் விநாயகர்
குன்றக்குடி - தோகையடி விநாயகர்
ஸ்ரீ பெரும்புதூர் - வழித்துணை விநாயகர்
பழநி - கோசல விநாயகர்
சிவகங்கை - கௌரி விநாயகர்
மயிலாடுதுறை - அகத்திய விநாயகர்
தென்காசி - அணுக்கை பிள்ளையார்
செங்கோட்டை - ஆதிசூர விநாயகர்
திருவிதாங்கோடு - உமை அர்தபாக விநாயகர்
திருவாதவூர் - கபில விநாயகர்
வயலூர் - கீழைப் பிள்ளையார்
சுசீந்திரம் - உதயமார்த்தாண்ட விநாயகர்
வடசேரி - ஆகசாலை விநாயகர்
இலந்தையடிவிளை[கன்னியாகுமரி அருகில் ]--சுகபிரசவ விநாயகர்[இவர் இலந்தையடிவிளை முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ளார் ]...........
.
""அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே'' [அருணகிரிநாதர்]......அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை அக்கண மணமருள் பெருமாளே விநாயக பெருமானே தங்கள் எண்ணப்படி ....அன்பன்...சிவ .அ.விஜய் பெரியசுவாமி .......

No comments:
Post a Comment