நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 10 November 2014

பஞ்சமி திதி அன்று வராஹி வழிபாடு

பஞ்சமி திதி அன்று வராஹி வழிபாடு

11-11-14  செவ்வாய் கிழமை  பஞ்சமி திதி

[இரவு நேர வழிபாடு சிறந்தது]:





வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!வராஹி அம்மன் இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி.
சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள்.இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் [99437 98083]ஆகும்.

இவருக்கு கிருத்திவாசர் என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர் எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம். வராகி பூஜித்த தலம். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்). மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே பெற்ற தாயை விட பல மடங்கு ..சதுர்த்தி, சஷ்டி, பஞ்சமி ,அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. ...திருஆனைக்காவின் அம்பாள் ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி } வராஹி ஸ்வரூபமே. வராஹி வழிபாட்டால் எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , வராஹி வழிபாடு எதிரிகளை வெல்லும் .இதனால் தான் வராஹி பக்தனிடம் வாதாடாதே என்பார்கள். வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான



ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்



என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள். வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.




ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.உண்மையாக இருந்தால் உங்களுக்கு வராஹி தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும்.


நம் அடியவர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் , ஸ்ரீ வராஹி உபாசகர். மாதத்தில் , சில குறிப்பிட்ட தினங்களில் - வராஹி அம்மனை , நேரில் தரிசிப்பதாக கூறுகிறார். பல நேரங்களில் , மனம் குழப்பமடைந்து , முடிவெடுக்க தடுமாறும் தருணங்களில், இவரிடம் ஆலோசனை கேட்டு , பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்த அநேகம் பேர் - இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.கடவுள் இல்லை , கடவுளை நம்புபவன் முட்டாள் - என்று இவர்களிடம் சொன்னால், ஏதோ வேற்றுக்கிரக ஜந்துவைப் போல் ஒரு பார்வை பார்க்கிறார்கள். நல்லதுங்க தம்பி., உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்னு சொல்லிவிட்டு , அமைதியாக செல்கிறார்கள்.


இதே வராஹி மந்திரம் ஜெபித்து - வசியம், மாந்திரீகம் என்று ஒரு கூட்டமே பல அமானுஷ்யங்களை நிகழ்த்திக் கொண்டும் இருக்கிறது.கடவுளை பார்த்தால் தான் நம்புவேன் என்று ஆசைப்படும் அன்பர்கள், இந்த மந்திரங்களை ஜெபித்து , உருவேற்றினால் - கன்னிமார்கள் பிரசன்னம் நிச்சயம் உண்டு.
"ஸ்ரீ வராஹி மாலை" என்று - தமிழில் 32 பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் ,

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம். இதை முழு நம்பிக்கையுடன் பாடி , வராஹியை தரிசித்தவர்கள் ஏராளம். ஆனால், இவர்கள் யாரும் இதை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை.. !


நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள்,

வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும்.


நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும்,

கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும்,

குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும்.


"பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி" ஆகிய திருபெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.
---நன்றி அ.விஜய் பெரியசுவாமி .....

No comments:

Post a Comment