நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 9 November 2014

அமானுஷ்ய பரிகாரங்கள் - கடுகு எண்னை




வாழ்க்கைக்கு உதவும் எளிய பரிகாரங்கள்

கடுகு எண்னை கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும்.
கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நில மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணையில் மாதம் ஒரு முறை உடல் முழுதும் தடவி குளிக்க நன்மை பெருகும். மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் இளைஞ்ச இளைஞ்சிகளும் இப்படி செய்யலாம்.


ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணையை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணையை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும். வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும். வாழ்க வளமுடன் அனைவரும் !!

No comments:

Post a Comment