நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Monday, 3 November 2014

தோஷங்கள் உண்டாகும் காரணம்


தோஷங்கள் உண்டாகும் காரணம்

மனிதனுடைய பாவ கர்மங்கள் மூன்று வகைப்படும் . அவை 1.சஞ்சித கர்மம் ,2.பிராப்த கர்மம் , 3.ஆகாமிய கர்மம் ஆகும் . அவைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம் .

1.சஞ்சித கர்மம் :
முன்னோர்கள் செய்த பவபுணியங்களின் பலனால் நமக்கு வரும் வினை பதிவு ஆகும் . இதில் நன்மையும் இருக்கும் , தீமையும் இருக்கும். இதில் வரும் நன்மையும், தீமையும் நாம் அனுபவித்தே தீரவேண்டும் இதில் யாருமக்கும் விதிவிலக்கு இல்லை. இந்த கர்மத்தால் வரும் கெடுபலனை நீக்கும் பரிகாரம் எதுவும் கிடையாது.


2.பிராப்த கர்மம் :
இப்பிறவியில் நாம் நம் தொழில் மூலமாகவும் , அதிகாரத்தின் மூலமாகவும் நாம் செய்யும் நன்மை, தீமை. இதனையும் நாம் இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டும். இந்த கர்மத்தை நாம் பரிகாரம் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.

3. ஆகாமிய கர்மம்
மனிதன் புற இச்சையில் மயங்கி மனதாலும் , பேச்சாலும் ,தன் நடவடிக்கைகளாலும் திரும்ப திரும்ப செய்யும் நன்மை தீமைகளின் வினை பதிவு ஆகும். இதில் நன்மையை செய்தல் நன்மையும் , தீமையை செய்தால் கேடுபலனும் உடனே நம்மை வந்தடையும். இந்த கர்ம பலனை நீக்க சில பரிகாரம் உண்டு. ஆயினும் நம் செயல்களிலும் மற்றம் வேண்டும்.

''கருவமைப்பின் வழி வந்த வினைபதிவு சஞ்சிதமாம்
உருவெடுத்தபின் கொண்ட வினைபதிவு பிராப்தம்
இருவகையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம்
ஒரு வினையும் வீண் போகா உள்ளடங்கிப் பின் விளைவம் ''

என்கிறார் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. நாம் நம் கர்ம வினைகளுக்கு உண்டான பரிகாரங்களை செய்துகொண்டு, நாம் செய்யும் செயல்களையும் நல்லதாக மாற்றிக் கொண்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றிதானே.

No comments:

Post a Comment