நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 8 November 2014

பண புழக்கத்திற்க்கு தாந்த்ரீக பரிகாரங்கள்



பண புழக்கத்திற்க்கு எளிமையான பரிகாரங்கள்


நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையல் பொருட்கள் மூலம் பல தாந்த்ரீக விஷயங்களை சாதிக்கலாம். இதை அனுபவத்தில் உணரலாம்.

ஏற்கனவே நாம் கொடுத்திருந்த பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் விஷயம் பலருக்கு உடனடி பயன் கொடுத்துள்ளதை காணலாம். ஓரிருவர் பணம் வரவில்லை என்றும் கூறியிருந்தனர். அப்படிப்பட்டவர்கள் மிக குறைவே. கீழே கொடுத்துள்ள முறைகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் முறையே. அனைவரும் பயன் பெற வாழ்த்துகிறேன். 
கீழே கொடுத்திருக்கும் அனைத்தும் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கலாம்.தேடி தெரிந்து கொள்ளவும்.



(1) AllSpice என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.


(2) இலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.



(3) புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.



(4) AlfaAlfa எனப்படும் 'குதிரை மசால்' பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது . கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ உடன் சிறுது எடுத்து செல்லலாம்.


(5) வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

----நன்றி Vamanan Sesshadri

No comments:

Post a Comment