நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 29 July 2016

புண்ணியத்தை சேர்க்கும் ஆடி அமாவாசை

புண்ணியத்தை சேர்க்கும் ஆடி அமாவாசை




                            


விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது.

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும்.

அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளை களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும்.

சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீ வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும்.

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர் களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்த மட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள்.

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது.

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம்.

நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விரதம் இருப்பது எப்படி?

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும்.

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும்.

ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

Thursday, 28 July 2016

தாங்க முடியாத துன்பம் துயரம் அகல அமாவாசை குலதெய்வ வழிபாடு

தாங்க முடியாத துன்பம் துயரம் அகல  அமாவாசை  குலதெய்வ வழிபாடு






குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களின்குலதெய்வத்தை மீறி அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிட முடியாது. குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது

அமாவாசை அன்று உங்கள் குல தெய்வம் கோவிலுக்கு சென்று
விளக்கேண்ணெய் ஊற்றி இரண்டு மண்விளக்கு ஏற்றி ஒரு எலுமிச்சபழம்த்தை கோவிலில் உள்ள சூலாயுதத்தில் குத்தி வைத்து உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்தால் நமது நீண்ட நாட்களாக நினைத்து வந்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் 

உங்கள் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இந்த வழிபாடு தொடருந்து செய்து வருவது மிகவும் நல்லது
.
குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் அனுகிரகம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

ஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு

ஆடிப் பெருக்கு சிறப்புப் பதிவு
02.08.2016 செவ்வாய் கிழமை ஆடிப் பெருக்கு










ஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி
நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான்.
ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி என எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்.

ஆடிப்பெருக்கு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அம்மா எனக்கு ஆடி 18க்கு புத்தாடை கட்டாயம் வாங்கி
வைத்திருப்பார். ஆடிப்பெருக்கு அன்று வீட்டுப்பெண்ணிற்கு புத்தாடை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி
சில சமயம் அம்மாவே தைத்துக்கொடுப்பார். வயலட் நிற வெல்வெட் துணியில் அடுக்கடுக்காய் இருக்கும் கவுன் ஒருமுறை
அம்மா தைத்துக்கொடுத்து அதைப் போட்டு வாஷிங் பவுடர் நிர்மா பெண் போல் சுத்தியது கொசுவத்தி சுத்துது.

ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்வாங்க. ஆடிப்பெருக்கும்
அப்படித்தான். அது என்ன ஆடிப் பெருக்கு? ஆடி மாதத்தின்18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. மழைக்காலத்தை
வரவேற்கும் ஒரு நிகழ்ச்சி. இன்று நதிக்கரை,குளக்கரைக்குச் சென்று பூஜித்து படையல் படைத்து, நோன்புக்கயிறு
கட்டிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூல் கட்டுவது இன்று மட்டும் தான்.



இந்த நந்நாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும்
சொல்லலாம். காதோலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும்
கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை.
திருமணமான பெண்ணோ தன் மாங்கல்யம் நிலைத்து நிற்க பூஜை செய்வாள்.

சில இடங்களில் முளைப்பாரி எடுத்துச் சென்று நதி தீரங்களில் அல்லது
குளங்களில் கரைப்பது வழக்கம். எங்கள் புதுகையில் குளத்திற்கு ஒன்றும்
பஞ்சமே இல்லை. பல்லவன் குளம், ஐயர்குளம், ராஜாக்குளம் என
பல குளங்கள். இங்கெல்லாம் குடும்பத்துடன் மக்கள் வந்து பூஜை செய்ததைப்
பார்த்திருக்கிறேன்.

எங்கள் வீட்டில் அம்மா இன்று அன்னைக்கு பூஜை செய்து கலந்த சோறு செய்வார். புத்தாடை அணிந்து இன்று கண்டிப்பாய் பாடம் படிக்கச் சொல்வார்.
ஏதேனும் புதிய வகுப்பில் சேர்வதாக இருந்தால் இன்றைய தினம் மிக விசேஷம். ஆடிப்பெருக்கில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும்
பெருகும் என்பது ஐதீகம்.



ஆடித்தங்கம் கூடும் என நகைக்கடைக்காரர்கள் ஆரம்பித்திருக்கிறாகள்.
ஆடித்தங்கம், அட்சய திருதியைத் தங்கம், தன் த்ரேயஸ் தங்கம் என எல்லா நாளும் தங்க நகை வாங்கிக்கொண்டிருந்தால் அம்பேல்தான்.
நல்ல மனத்தோடு இறைவனை பூஜித்து, நிவேதனம் சமர்ப்பித்து இருப்பதுதான் பண்டிகை. ஆடித்தங்கம் கண்டிப்பாய் வாங்க வேண்டும்
என்றெல்லாம் கொள்கை வைக்காமல் ஆடி 18க்கு அம்மனுக்குபூஜை செய்து மாங்கல்யம் தழைக்க, மங்களவாழ்வு கூட, பிரார்த்திப்பதே சரி. பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்பது போல
ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி சொல்லும் ஒரு நந்நாள்.
மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் மங்கல மங்கை மீனாட்சி.



இயற்கையை பூஜித்து இன்பமான வாழ்வை பெறுவோம்.



இன்றைய தினம் நாகசதுர்த்தியும் கொண்டாடப்படுகிறது. நாகசதுர்த்தி அன்று
தெலுங்கர்கள் தங்கள் மக்கள் செல்வத்திற்காக பூஜை செய்வார்கள்.
ஏழேழு ஜன்மம் எடுத்தாலும் கல்லைப்போல் இருக்காமல் கருப்பையில்
குழந்தையை சுமக்க வேண்டும் எனும் பிரார்த்தித்து அந்த மக்களுக்காக
விரதம் இருந்து பூஜை செய்வார்கள்.


தாலிக்கொடி பெரிதா? தொப்புள் கொடி பெரிதா என்று பட்டிமன்றம்
வைத்தால் இரண்டுமே பெரிது என்று தான் தீர்ப்பாகும்.
கணவனுக்கும், பிள்ளைக்கும் சேர்த்து வேண்டிக்கொள்ளும் நந்நாள் இன்று.

அனைவரின் வாழ்வும் நலன் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஆடிப் பெருக்கு வழிபாடு

ஆடிப் பெருக்கு வழிபாடு  
02.08.2016 செவ்வாய் கிழமை





ஆடிப்பெருக்கு என்று சொன்ன மாத்திரத்திலேயே ஆடிக்காற்றில் புது வெள்ளத்தை அள்ளிக்கொண்டு வரும் காவிரி தான் சட்டென்று நம் நினைவுக்கு வரும். அன்றைய தினம் காவிரி பாயும் இடங்களில் எல்லாம் ஒரே திருவிழா மயமாகத்தான் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு காவிரியில் சுத்தமாக தண்ணீர் இல்லை. அதை நினைத்தால் வேதனையாகவும் அந்த காலத்தை நினைத்து ஏக்கமாகவும் உள்ளது. என்ன செய்வது….? சரி, ஆடிப்பெருக்கு என்ற பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பெருக்கு என்கிறார்கள்.

அந்த ஆறு பாயும் கரையோர பகுதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக படித்துறைகள் அமைத்திருப்பார்கள். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும். ஆடி மாதம் இந்த 18 படிகளும் மூழ்கிவிடும் அளவுக்கு புது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.

அந்த புது வெள்ளத்தை வரவேற்று ஒரு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற பண்டைய தமிழரின் எண்ணத்தில் உருவானதே ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு. காவிரி நதி உருவானது எப்படி என்பதற்கும் புராணக்கதை ஒன்று உள்ளது. அந்த கதை… சிவனை திருமணம் செய்வதற்காக பார்வதி ஒற்றைக்காலில் தவம் இருந்தபோது கையில் ஒரு மாலையும் வைத்திருந்தாள்.

அந்த மாலையை ஒரு பெண்ணாக்கி அகத்திய முனிவரிடம் வழங்கினாள். அவரும் அந்த பெண்ணை தனது கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார். அகத்தியர் தென்னகம் நோக்கி வரும்போது அவரது கமண்டலத்தில் இருந்து வழிந்த தண்ணீரே காவிரி ஆனது. கமண்டலத்தில் மீதம் இருந்த தண்ணீரை அகத்தியர் எடுத்துச்சென்று தான் வசித்த பொதிகை மலையில் கொண்டுவிட அது தாமிரபரணி ஆனது என்கிறது அந்த கதை.

பொதுவாக ஆடி மாதத்தை அசுப மாதம் என்பார்கள். ஆனால் ஆடிப்பெருக்கு அன்று காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பல்வேறு விதமான வழிபாடுகள் செய்கிறார்கள். சுமங்கலி பூஜையும் நடக்கிறது. வாழை இலையை விரித்து, அதில் விளக்கேற்றி பூஜைக்குரிய பொருட்களை வைத்து புது மஞ்சள், கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி போன்ற மங்கலப்பொருட்களையும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வழிபடுகிறார்கள்.

வயது முதிர்ந்ëத பெண் ஒருவர் சுமங்கலி பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண் தனது வீட்டு சுமங்கலி பெண்களுக்கு புதிய தாலிக்கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பர்.அதை அவர்கள் அணிந்து கொள்வார்ëகள். திருமணம் ஆகாத பெண்களும் தாலிச்சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக்கொள்வார்கள்.

அப்படி செய்வதால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். திருமணத்தன்று மணமக்கள் சூடிய பூமாலைகளை (பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள்) அந்த புதுமணத் தம்பதியரே ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்வதால் அவர்களது இல்லறம் செழிக்கும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.

மொத்தத்தில் ஈரோடு மாவட்டம் பவானியில் காவிரியும், பவானி ஆறும் சங்கமிக்கும் கூடுதுறை முதல் பூம்புகாரில் வங்கக்கடலுடன் காவிரி கலக்கும் இடம் வரையிலும் ஆடிப்பெருக்கு விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் புனித நீராடவும் செய்வார்கள். ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக்கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார்.

அங்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், அன்று மாலை புடவை, திருமாங்கல்யம், வெற்றிலைபாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித்துறைக்கு கொண்டு வருவார்கள். பெருமாள் முன் அந்தச் சீர்வரிசைகளை வைத்து ஆராதனைகள் செய்த பின் அவற்றை காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்’ கிடைக்கும் என்பது ஐதீகம். ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், “அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, `தட்சிண கங்கை’ என்று பெயர்.

அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்” என்று கூறினார். அதன்படி ராமபிரான் காவிரியில் நீராடிய நாள் `ஆடிப்பெருக்கு’ என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும்.

மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர்.

இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் 

ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டு தலங்கள்

ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டு தலங்கள்








ஆகஸ் டு .02.08.2016 ல், ஆடி அமாவாசை வருவதை ஒட்டி, முன்னோர் வழிபாட்டு தலங்கள் இடம் பெற்றுள்ளன.


 ராமேஸ்வரம்: ராவணனை சம்ஹாரம் செய்த பாவம் தீர, ராமர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் ராமேஸ்வரம். இங்கு, ராமன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தை ராமலிங்கம் என்றும், அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை விசுவலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். காசியாத்திரை செல்வோர் இங்கு தீர்த்தங்களில் நீராடி, ராமநாதரை கங்கை நீரால் அபிஷேகம் செய்வர். கோவிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. பிதுர்தர்ப்பணம் செய்வோர் ஆடி அமாவாசையன்று ராமநாதசுவாமியை வழிபடுவர். இருப்பிடம்: மதுரையில் இருந்து 200 கி.மீ.,
தொலைபேசி: 04573- 221 223.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காசிக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது. வைகை ஆற்றின் கரையிலுள்ள பிதுர்தலமான இதற்கு பிதுர் மோட்சபுரம் என்ற பெயருண்டு. அஸ்தி கரைத்தாலும், தர்ப்பணம் செய்தாலும் அவர்கள் நற்கதியாகிய பிறவாநிலை பெறுவர் என்பது ஐதீகம். அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் இங்கு வந்த போது, வைகைக்கரையிலுள்ள மணல் எல்லாம் சிவலிங்கம் போல் காட்சியளித்ததாம். இதனால் ஆற்றில் இறங்க அஞ்சி மறுகரையில் நின்றே வழிபட்டனர். அவர்கள் தரிசனம் பெறும் விதத்தில் நந்தியும் விலகி நின்றது.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 94435 01761, 04575 265 082, 265 084.

கன்னியாகுமரி: முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் பகவதியம்மன் அருள்புரிகிறாள். பாணாசுரனின் கொடுமையால் வருந்திய தேவர்கள், அன்னை பார்வதியின் உதவியை நாடினர். பிரம்மாவிடம் வரம் பெற்ற பாணாசுரனை அழிக்க அம்பிகையே கன்னியாக வடிவெடுத்து தவத்தில் ஈடுபட்டாள். தவத்தால் பலம் பெற்ற அம்பிகை சக்ராயுதத்தை ஏவி பாணாசுரனை வதம் செய்தாள். வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகாசமுத்திரம் ஆகிய மூன்றும் சங்கமிக்கு இங்கு பிதுர்தர்ப்பணம்
செய்வோருக்கு முன்னோர் ஆசி கிடைக்கும்.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 235 கி.மீ.,
தொலைபேசி: 04652- 246 223.

அழகர்கோவில் நுõபுர கங்கை: திவ்யதேசங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் அருள்பாலிக்கிறார். பதினெட்டாம் படி கருப்பசாமி சக்தி மிக்கவர். அனுமன் தீர்த்தம், கருடதீர்த்தம், சக்கர தீர்த்தம், நுõபுர கங்கை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. திருமால் உலகை மூன்று அடிகளால் அளந்த போது, அவரது சிலம்பு அணிந்த திருவடி வானம் நோக்கி சென்றது. அது கண்ட பிரம்மா தன் கலச நீரால் திருவடிக்கு அபிஷேகம் செய்தார். அந்த நீர் கங்கை போல் ஊற்றெடுத்தது. இதனால், இந்த தீர்த்தம் நுõபுர கங்கை என பெயர் பெற்றது. நுõபுர கங்கையில் நீராடி தர்ப்பணம் செய்வது சிறப்பு.
இருப்பிடம்: மதுரையில் இருந்து 25 கி.மீ.,
தொலைபேசி: 0452- 247 0228, 247 0229.

ஆனைமலை மாசாணி அம்மன்: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாற்றின் கரையில் மன்னன் நன்னனுக்குரிய மாமரம் இருந்தது. அந்த பழங்களை யாரும் பறிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தான். ஒருநாள் ஆற்றில் நீராடிய இளம்பெண் மிதந்து வந்த மாம்பழத்தை சாப்பிட்டாள். அவளுக்கு நன்னன் மரண தண்டனை கொடுத்தான். அவள் மீது ஊரார் இரக்கம் கொண்டனர். அதுவே பக்தியாகி வழிபட்டனர். மயான சயனி என்பதே மாசாணி என மருவியது. உப்பாற்றின் கரையில் அம்மன் 17 அடி நீளத்தில் படுத்த நிலையில் காட்சி தருகிறாள். இவள் நீதி தெ#வமாக விளங்குகிறாள்.
இருப்பிடம்: பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ.,
தொலைபேசி: 04253- 282 337, 283 173.

திருச்செங்கோடு அர்த்தநாரி: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவிலில், சிவன் அம்பிகையை இடபாகத்தில் ஏற்ற நிலையில் அருள்புரிகிறார். இங்குள்ள செங்கோட்டு வேலவன் சன்னிதி சிறப்புமிக்கது. 1200 படிகள் கொண்ட மலைக்கோவிலான இங்கு உள்ள 60வது படி சத்தியப்படி எனப்படுகிறது. அந்தக் காலத்தில் வழக்குகளை இங்கு பேசித் தீர்க்கும் வழக்கம் இருந்தது. அர்த்தநாரீஸ்வரரின் திருவடியில் சுரக்கும் தேவதீர்த்தம் மகிமை மிக்கது. அமாவாசை நாளில் இந்த தீர்த்தத்தைப் பருகினால் உடல் நோய், மன நோய் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் .
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 18 கி.மீ.,
தொலைபேசி: 04369-250 238.

அனுமந்தபுரம் வீரபத்திரர்: தட்சனின் யாகத்தை நிறுத்த, சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். சாகாவரம் பெற்ற தட்சனின் தலையை வீரபத்திரர் வெட்டினார். பிறகு, தன் கோபம் தணிய பூலோகத்தில் உள்ள அனுமந்தபுரம் வெற்றிலை தோட்டத்தில் தங்கி அமைதி பெற்றார். இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோவில் அமைக்கப்பட்டது. செவ்வாய்தோஷம், உடல்நோய் நீங்க ஐந்து அமாவாசை அல்லது ஐந்து பவுர்ணமி நாட்களில், இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடுகின்றனர். இருப்பிடம்: விழுப்புரம்- சென்னை சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 044- 2746 4325.

பண்ணாரி மாரியம்மன்: பண்ணாரி வனப்பகுதியில் மேய்ந்த பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும், அங்குள்ள வேங்கை மரத்தடியில் அடிக்கடி பாலைச் சுரந்தது. இதை அறிந்த மாடு மேய்ப்பவன் அந்த இடத்திலுள்ள புற்றின் அடியில், ஒரு அம்பாள் சிலை இருப்பதைக் கண்டான். விஷயமறிந்த ஊரார் அங்கு வந்த போது, ஒருவருக்கு அருள் வந்தது. பசுமை மிக்க இந்த இடத்தில் மாரியம்மனாக வீற்றிருக்கும் என்னை வழிபட்டால் வேண்டும் வரம் அளிப்பேன், என்று அம்மன் வாக்களித்தாள். அதன்படி கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர். ஆடி செவ்வாய், வெள்ளி, அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு புற்றுமண்ணே பிரசாதம்.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வழியாக 77 கி.மீ.,
தொலைபேசி: 04295- 243 366, 243 442, 243 289.

தேவிபட்டினம் நவபாஷாண கடல்: ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் கடலில், ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவபாஷாணம் என்னும் கற்களால் ஆன நவக்கிரகங்கள் உள்ளன. அமாவாசையன்று இந்தக் கடலில் நீராடி நவக்கிரகங்களை வழிபட்டால் கிரகதோஷம் அகலும் என்பது ஐதீகம். இங்குள்ள சக்கர தீர்த்தம் என்னும் தர்ம புஷ்கரணியில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். வீரசக்தி பீடமாக விளங்கும் இங்கு அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக வீற்றிருக்கிறாள். புகழ் மிக்க மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தால் போற்றப்படும் அம்பிகை இவளே. ராவணனுடன் போரிடும் முன் ராமர், லட்சுமணர், அனுமன் மூவரும் வெற்றி பெற இந்த அம்பிகையை வழிபட்டனர்.
இருப்பிடம்: ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,

பவானி சங்கமேஸ்வரர்: ஈரோடு மாவட்டம் பவானியில், பவானி ஆறு காவிரிஆற்றுடன் கூடுகிறது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் அன்னை வேதாம்பிகை அருள்பாலிக்கிறாள். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு திருநணா என்றும் பெயருண்டு. திருநணா என்பதற்கு பாவம் நெருங்காது என்பது பொருள். அதனால் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்வோருக்கு பாவம் நெருங்குவதில்லை என்பது ஐதீகம். காவிரி, பவானி, அமுதநதி கூடுவதால் பவானியை முக்கூடல் என்று சொல்வர். ஆடி மாதம் முழுவதுமே இங்கு நீராடி, சுவாமியை வழிபடுவது சிறப்பு.
இருப்பிடம்: ஈரோட்டில் இருந்து 15 கி.மீ.,
அலைபேசி: 98432 48588, தொலைபேசி: 04256- 230 192.

செதலபதி முக்தீஸ்வரர்: திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவிலை தில தர்ப்பணபுரி என்று சொல்வர். அமாவாசையன்று செய்யும் தர்ப்பணத்தின் பெயரால் அமைந்த தலம் இது. திலம் என்றால் எள் என்று பொருள். இத்தலத்தில் ராமர் தனது தந்தை தசரதர், ஜடாயு இருவருக்கும் எள்ளால் தர்ப்பணம் செய்ததால் இப்பெயர் ஏற்பட்டது. முக்தி தருபவராக சிவன் இருப்பதால் முக்தீஸ்வரர் எனப்படுகிறார். அம்பிகை சுவர்ணவல்லித் தாயார் செல்வம் தருகிறாள். இங்குள்ள அரசலாற்றிலும், சந்திர தீர்த்தத்தில் நீராடி முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வர்.
இருப்பிடம்: திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் கிராமம். இங்கிருந்து 4 கி.மீ.,
அலைபேசி: 94427 14055, தொலைபேசி: 04366- 238818, 239 700

அய்யாவாடி பிரத்யங்கிரா: அய்யாவாடியில் காளியின் அம்சமான பிரத்யங்கிராதேவி அருள்புரிகிறாள். இலங்கை போரில் வெற்றி பெறுவதற்காக ராமர் யாகம் செய்து இந்த தேவியை வழிபட்டார். சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய இவள் சிங்க முகம், 18 கைகள், சிரித்த முகத்துடன் கரிய நிறத்தில் காட்சி தருகிறாள். எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபட, அமாவாசையன்று அம்மனுக்கு காலை முதல் மதியம் வரை நிகும்பலா யாகம் இங்கு நடக்கிறது. பழம், பட்டு, பூக்கள் என 108 திரவியங்களை சேர்ப்பர். யாக குண்டத்தில் மிளகாய் வத்தலை இட்டாலும் நெடி சிறிதும் இருக்காது.யாகம் நிறைவேறியதும், சரபேஸ்வரர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம் நடக்கும்.
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து 10 கி.மீ.,
தொலைபேசி: 94431 24347, 0435 246 3414.

பாபநாசம் பாபநாசநாதர்: நவகைலாயத் தலங்களில் முதல் தலம் பாபநாசம் பாபநாசநாதர் கோவில். தாமிரபரணியின் கரையில் அமைந்த இங்கு அகத்தியர் சிவபார்வதியின்திருமணக் கோல தரிசனம் பெற்றார். கருவறையின் பின்புறம் உள்ள பிரகாரத்தில் கல்யாண சுந்தரர் என்ற பெயரில் சிவபார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். இங்கு அம்பிகை உலகம்மையாக வீற்றிருக்கிறாள். கங்கை நதி தன்னிடம் சேரும் பாவத்தை ஆண்டுக்கு ஓருமுறை தாமிரபரணிக்கு வந்து நீராடி போக்கிக் கொள்வதாக ஐதீகம். பாபநாசநாதர் லிங்கம் ருத்திராட்சத்தால் ஆனது. ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி முன்னோர் வழிபாடு செய்வது சிறப்பு.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ.,
தொலைபேசி: 04634- 223 268

சொரிமுத்தையனார் கோவில்: சாஸ்தாவின் முதல் தலம் பொதிகை மலையில் உள்ள சொரிமுத்தையனார் கோவில். பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீற்றிருக்கிறார். பாணதீர்த்தம் கோவிலில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ளது. அம்பில் புறப்பட்ட பாணம் போல நீர் கொட்டுவதால் பாண தீர்த்தம் என பெயர் வந்தது. இந்த அருவியை தூரத்தில் இருந்து தரிசனம் செய்யலாம். (குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது) ஆடி அமாவாசையன்று பக்தர்கள் தாமிரபரணியில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்கின்றனர். அகத்தியர் அருவியிலும் நீராடி தர்ப்பணம் செய்யலாம்.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் சொரிமுத்தையனார் கோவில் 54 கி.மீ.,
தொலைபேசி: 04634- 250 209

சுருளிமலை தீர்த்தம்: சுருளிமலையில் முருகன் குடி கொண்டிருக்கிறார். ஆண்டிகோலத்தில் சுவாமி காட்சியளிப்பதால் சுருளியாண்டி எனப்படுகிறார். இந்த மலையிலுள்ள கைலாச புடவு குகையில் சிவன் கைலாசநாதர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். குகையின் மேல்பகுதியில் முருகன் உள்ளார். சனீஸ்வரரின் பிடியிலிருந்து விடுபட தேவர்கள் இங்கு வந்து தவமிருந்தனர். முருகன் அவர்களை சனியின் பிடியில் இருந்து காத்தார். ஆடி அமாவாசையன்று சுருளிதீர்த்தம் அருவியில் நீராடி பிதுர்
தர்ப்பணம் அளிக்கின்றனர். இங்குள்ள பூதநாராயணப்பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இருப்பிடம்: தேனியிலிருந்து 40 கி.மீ.,
அலைபேசி: 93452 61022.

அச்சிறுபாக்கம் ஆட்சிபுரீஸ்வரர்: திரிபுர அ”ரர்களை அடக்க எண்ணிய சிவன் தேரில் புறப்பட்டார். அப்போது முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும் என்ற நியதியை அவர் பின்பற்றவில்லை. எனவே, விநாயகர் தேரின் அச்சை முறித்தார். தவறை உணர்ந்த சிவன் விநாயகரை மனதில் தியானிக்க தேர் சரியானது. சட்டத்தை தெய்வமும் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வு அமைந்தது. தேரின் அச்சு முறிந்த இடத்தை அச்சு+இறு(முறிந்த)+பாக்கம் என்று அழைத்தனர். இதுவே அச்சிறுபாக்கம் ஆனது. இங்குள்ள சிவன் ஆட்சிபுரீஸ்வரர் எனப்படுகிறார். இவரை அமாவாசையன்று வழிபட புதிய முயற்சி தடையின்றி நிறைவேறும்.
இருப்பிடம்: செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ.
அலைபேசி: 98423 09534, தொலைபேசி: 044 - 2752 3019.

புளியரை தட்சிணாமூர்த்தி அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில், புளியரை, திருநெல்வேலி மாவட்டம்.

புளியரை தட்சிணாமூர்த்தி
அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில், புளியரை, திருநெல்வேலி மாவட்டம்.


.




மூலவர் – சதாசிவமூர்த்தி
உற்சவர் – சதாசிவம்
அம்மன் – சிவகாமி
தல விருட்சம் – புளியமரம்
தீர்த்தம் – சடாமகுடம்
பழமை – 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் – புளியரை
மாவட்டம் – திருநெல்வேலி
மாநிலம் – தமிழ்நாடு

சமண மதம் மேலோங்கிருயிருந்த காலத்தில், சிதம்பரம் நடராஜர் கோயில் அவர்களின் ஆளுகைக்குட்பட்டு இருந்தது. இதனால் சிவபக்தர்கள் நடராஜர் சிலையை எடுத்துக் கொண்டு தெற்கே வந்தனர். திரிகூடாசல மலை எனப்படும் குற்றாலத்தைக் கடந்து, புளியமரங்கள் நிறைந்த வனத்தை அடைந்தனர். சுவாமியை அங்கிருந்த பெரிய புளிய மரப்பொந்து ஒன்றில் மறைத்து வைத்தனர். அம்மரத்தின் உரிமையாளரின் கண்ணில் சிலை பட்டது. அவர் தினமும் நடராஜரை வணங்கி வந்தார். 

பல ஆண்டுகள் கழித்து சிலையை மீட்க சிதம்பரம் பக்தர்கள் புளியமரப் பொந்தை தேடி வந்தனர். சிலையை மீட்டுச்சென்றனர். சுவாமியை பூஜிக்க வந்த மரத்தின் உரிமையாளர் சிலை காணாமல் போனது கண்டு வருந்தினார். சுவாமியை வேண்டினார். அந்த இடத்தில் மீண்டும் எழுந்தருள வேண்டினார். சுவாமி இலிங்க வடிவில் அங்கே சுயம்புவாகத்(தானாக) தோன்றினார். இவரை “சதாசிவம்” என அழைத்தார். இதையறிந்த அப்பகுதி மன்னர் அவ்விடத்தில் கோயில் கட்டினார்.
பொதுவாக தெட்சிணாமூர்த்தி சன்னதி சிவாலயத்தின் தெற்கு பிரகாரத்தில் தெற்கு நோக்கி இருக்கும். ஆனால், இத்தலத்தில் மூலவருக்கும், வாசலில் உள்ள நந்திக்கும் நடுவே உள்ளது. இது வேறெந்த சிவாலயத்திலும் இல்லா சிறப்பு.

கோயிலுக்குள் நுழைய 27 படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை 27 நட்சத்திரங்களாக கருதப் படுகின்றன. ஜாதகதோஷம் உள்ளவர்கள் இந்தப் படிகளில் ஏறிச் சென்று, சிவனைப் பூஜித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
புளிய மரத்தின் அடியில் சிவன் அருட்காட்சி தந்ததால், புளியரை என்றழைக்கப்படும் இவ்வூர்,சிறிய சிருங்கேரி என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. சிவாலயமாக இருந்தாலும் தெட்சிணாமூர்த்திக்கே மதிப்பு. குருபரிகார ஸ்தலமாக திகழும் இங்கு வியாழக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகளவில் உள்ளது. சதாசிவமூர்த்திக்கு வலப்புறம் அருள்பாலிக்கும் அம்பாள், சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டமையால் சிவகாமி அம்பாள் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறாள்.
சிவனுக்கு வலது பின்திசையில் நவநீதகோபாலர், சுற்றுப்பிரகாரத்தில் சதாசிவமூர்த்தி,சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், சுப்பிரமணியர், பைரவர், நாகர், சந்திரன் மற்றும் சப்தகன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தலவிநாயகர் தெப்பக்குளவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப்பொங்கல் படைக்கின்றனர்.
திருவிழா:
தை மாதம் 10 நாட்கள் பிரதானத்திருவிழா, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மகாசிவராத்திரி,நவராத்திரி, ஆடிப்பூரம்.

பிரார்த்தனை:
திருமணத்தடை நீங்க, குழந்தைபாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, வியாபாரங்களில் சிறக்க,நட்சத்திரம் மற்றும் நாகதோஷங்கள் நீங்கிட வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்:
வேண்டிக்கொண்ட காரியங்கள் நடந்திட சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், விசேஷ அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி பூஜை, குருபகவான், தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை, முல்லைப்பூ மாலை சாத்தி தயிர்சாத நைவேத்யம் படைத்து கோடி தீபம்,சனீஸ்வரருக்கு எள்தீபம் ஏற்றப்படுகிறது.

இருப்பிடம் :
தென்காசியில் இருந்து புளியரை செல்ல பல பஸ்கள் உள்ளன. ஸ்டாப்பில் இறங்கி ஒரு கி.மீ.,தூரத்தில் உள்ள கோயிலை அடையலாம். தென்காசியில் இருந்து தெற்குமேடு செல்லும் பஸ்களில் சென்றால் கோயிலில் இறங்கலாம். திருநெல்வேலியில் இருந்து 78 கி.மீ., குற்றாலத்தில் இருந்து 18கி.மீ., செங்கோட்டையில் இருந்து 8 கி.மீ.,

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

மேலும் தகவல்கள்களுக்கு:9842078733

Wednesday, 27 July 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல புராணம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் ஸதல புராணம்
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


பஞ்சபூதேஸ்வரம்- இராவணனோடு போரிட்ட 
ஸ்ரீ ராமபிரான் இந்த இடத்திற்கு வந்தபோது இது "வானரவீர மதுரை' என்றும்; சிவனின் அருளால் ஆஞ்சனேயர் தன் வானரப் படைகளுடன் தேன் பருகி இளைப்பாறுகை யில் திரேதாயுகத்தில் "கீசான மதுரை' என்றும்; வில்வவனக் காடுகள் சூழ்ந்திருந்ததால் கலியுகத்தில் "வில்வ வனம்' என்றும் கூறப்படுகிறது. 


மகரிஷி அகத்தியரும் அவரது மனைவி லோப முத்திரையும் ஸ்ரீ ராமபிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் உபதேசித்த இடமும், ஆஞ்சனேயர் ராமனுடன் இணைந்து இராவணனுடன் போரிடப் புறப்பட்ட இடமும், ராமன் சக்தியை நோக்கிப் பூஜை செய்த இடமும், பலராமனுக்கு சிவபூஜை பயிற்சி செய்வித்த இடமும் இதுவே ஆகும் என புராணங்களும், சிவவாக்கிய நாடி மற்றும் காகபுஜண்டர் நாடியும் தெரிவிக்கின் றன.



சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு அருகில் வேதியரேந்தல் விளக்கு என்னும் பகுதி யில் உள்ள இந்த பஞ்சபூதேஸ்வரத்தில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி. 

2002-ல் ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருப்பணிகளைத் தொடங்கி, தற்போது ஆகம சிற்ப சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி தெய்வ சங்கற்பமுள்ள கருங்கற்களால் அந்தக் கால மன்னர்கள் அமைத்ததுபோலவே, பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கக் கூடிய கற்கோவிலை இங்கே பிரத்யங்கிரா தேவிக்காக எழுப்பியிருக்கிறார்கள். 


இங்கே எழுந்தருளியிருக்கும் அம்பாளின் திருவுருவம் விஸ்வரூபிணியாக- அதேசமயம் சாந்த சொரூபிணியாக அமைந்திருக்கிறது. இங்கே பீடத்தில் பதினொன்றேகால் அடி உயரத்தில், மலர்ந்த தாமரையில், இருபது கரங்களுடன்- ஒரு கரம் ஆசி கூற, ஏனைய கரங்களில் பல்வேறு தத்துவங்கள் அடங்கிய ஆயுதங்களையும் கொண்டு விளங்குகிறாள் அன்னை. ஏழு தலை நாகம் குடைபிடிக்கும் வண்ணம் காணப்படுகிறது. 

இது மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யிலான மனிதனின் ஏழு சக்கரங்களை விளக்குவது என்பர். அன்னைக்குப் பின்னே நிற்கும் சிங்கத்தின் தலை இடப்புறமும், அதன் வலது கால் சற்று தூக்கிய வண்ணமும் அமையப் பெற்றிருக்கிறது. நவகிரகங்களையும் 27 நட்சத்திரங்களையும் மண்டை ஓட்டு மாலையாக அணிந்து காட்சி தருகிறாள் தேவி. ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்டி குருவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். 
ஸ்ரீ மஹா வல்லப கணபதிக்கும் இங்கு ஆலயம் அமைத்து கடந்த 24-6-2010 அன்று இத்திருக் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடத்தினார்கள். 

தொடர்ந்து 25-ஆம் தேதியிலிருந்து 29-ஆம் தேதி வரை ஸ்ரீ சகஸ்ரசண்டீ மகா யக்ஞமும் நடைபெற்றது. ""இந்த யாகம் மௌரியப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் செய்யப்பட்டது. சீமாற வல்லபன் காலத்திலும் செய்யப்பட்டது. அதன் பிறகு மைசூர் அரசர் காலத்திலும், காஞ்சி, மதுரை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் 1963-ஆம் ஆண்டிலும் நடந்தது. அதற்குப் பிறகு இப்படி ஒரு உயர்வான ஸ்ரீ சகஸ்ர சண்டீ மகா யக்ஞம், செய்முறைப் படி ஐந்து தினங்களும் சாதனையாக நடந்தேறியது இத்தலத்தில்தான். 

மேலும் இக்கோவிலைச் சுற்றிலும் தசமகா வித்யா, ஸ்ரீ விஜய ஆகர் ஷண பைரவர், ஸ்ரீ சப்த மாதர்கள், ஸ்ரீ சப்த ரிஷிகள் மற்றும் 18 சித்தர் களுக்கும் ஆலயங்களை அமைக்க விருக்கிறோம்'' என்றார் இக்கோவிலின் அறங்காவலரான ஸ்ரீ ஞானசேகர ஸ்வாமிகள். 

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட மகா கும்பாபிஷேகத்தின்போது நம்மிடம் பேசிய வித்யா என்பவர், ""இந்தக் கோவிலில் வைத்த பொருள் வைத்த இடத்திலேயே இருக்கும். பிறர் பொருளுக்கு ஆசைப்படு பவர்கள் இங்கே கால் வைக்க முடியாது. அற்புதமான இம்மகா சக்தியின் அருளைப் பெறவே கோவையிலிருந்து வந்திருக்கிறேன்'' என்றார். 





""எல்லாநாட்களிலும் எந்த நேரத்திலும் அன்னதானம் நடக்கும் கோவில் இது. இங்கே ஏழை- பணக்காரன் என்ற பாகுபாடோ சாதி வேறுபாடோ கொஞ்சமும் கிடையாது. தனிமனிதனைத் துதிப்பது, மாலை மரியாதை செய்து பரிவட்டம் கட்டுவது, பாதகாணிக்கை செலுத்துவது போன்ற காரியங்கள் இங்கே அறவே கிடையாது. 




உலக அமைதிக்காக அமாவாசை தோறும் யாகமும் பௌர்ணமி நாட்களில் விளக்குப் பூஜையும் தவறாமல் இங்கு நடக்கிறது'' என்றார். ஸ்ரீ பிரத்யங்கிரா என்பவள் 
ஸ்ரீ மகா பத்திரகாளியேதான். பத்ரம் என்றால் மங்களம். அன்பர்களுக்கு மங்களத்தையே செய்யும் தேவியான இவள் அதர்வண வேதத்தின்படி அதர்வண பத்ரகாளி என்றழைக்கப்படுகிறாள். இத்தேவி பாவங்களை நீக்கக் கூடியவள். ஆங்கிரஸ், ப்ரத்யங்கிரஸ் என்ற மகரிஷிகள் இவளது மந்திரங்களை உணர்ந்து வெளிப்படுத்தியதனாலேயே பிரத்யங்கிரா என்ற பெயரில் பூஜிக்கப்படுகிறாள். 

இராவணனை அழிக்க ஸ்ரீ ராமபிரானே வழிபட்ட சக்தி இவள். இரண்யகசிபுவை வதம் செய்ய, நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணிக்க சரபமூர்த்தியான சிவபெருமானுக்கு உதவியவள். பஞ்சமுகத்துடன் நடனமிடும் சக்தி இவள் என தேவியின் சிறப்புகளைப் பறைசாற்றுகிறது இக்கோவில்.

ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவில் மானமதுரை அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் எந்த தேவி சக்தியால் இவ்வுலகையெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடைய வடிவில் ஒன்று கூடுகின்றனவோ, மும்முர்த்திகளும் , தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ- அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகிண்றோம். அவள் நமக்கு எல்லா நலன்களை அருள்வாள் .

இந்த கோவில மண்ணை மிதித்து அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூரியனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன "எந்தளவு ஏற்றம் மூலம் செழிப்பு வாழ்க்கை கொடுக்க உச்ச தெய்வம் இந்த ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி

அனுமதி இலவசம் ,
24மணி நேரம் எப்போதும் அன்னதானம்

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
cell : +91 98428 58236
Website
website :http://atharvanabathrakalli.org/

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்குஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
















அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள 

ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 3.8.2016 புதன் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்

மன்னார்குடி பூவனூர் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர
அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்







அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து 9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகத்தியமகரிஷி ,அருபமான 
ஸ்ரீ போகர்மகரிஷிக்கும்,
ஸ்ரீ புலிப்பாணிமகரிஷி,ஸ்ரீ சுதிஸ்சனருக்கும் 

03-08-2016 ஆடி (19) மாதம் மாதம் புதன் கிழமை
ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 10.00 மணியிலிருத்து அபிஷகம்,
ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு குருவருள்
மற்றும் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறுமானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236
பூவனூர் தியாகராஜன்: 94436 55399
நாரயணசாமி :85250 56537

Posted by ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி at 8:15 AM No comments:

Monday, 25 July 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம் அழைப்பிதழ்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம் பெருவிழா அழைப்பிதழ்


















ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:

சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்


நிகழ்ச்சி நிரல்
29-07-2016 வெள்ளி கிழமை ஆடி மாதம் 14 மாலை 06-00 மணி முதல்
ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை ,பூர்வாங்கம் ,ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபன ம்

30-07-2016 சனி கிழமை ஆடி மாதம் 15
காலை 07-00 மணி முதல் ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் (எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(ஆயுள் விருத்தி )

ஸ்ரீ சண்டி தேவி ஆவரண பூஜை கலச ஸ்தாபனம்

ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்
(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)

முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி


மாலை 06-30 மணி முதல்

ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்

(வளங்கள் அணைத்தும் பெற)

ஸ்ரீ சப்த சதி பாராயணம்
இரவு 8-00மணி அர்ச்சனை,தீபாராதனை


31-07-2016,ஞாயிற்று கிழமைஆடி மாதம் 16
காலை 7-00 மணி

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,
(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )


ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,

(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )

ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,(26 வகையான செல்வம் கிடைக்க )

ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்

(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )

முற்பகல் 11-30 மணி பூர்ணாஹுதி

மாலை 06-30 மணி முதல்

ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்
(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)

ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்

(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)

தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்

இரவு 8-00மணிக்கு தீபாராதனை


01-08-2016,திங்கட் கிழமை ஆடி மாதம் 17
காலை 07-00 மணிக்கு
ஸ்ரீ ஹேரம்ப கணபதி ஹோமம்
(காரிய சித்தி )

ஸ்ரீ சகஸ்ரசண்டீ ஹோமம்
மாலை 04-00 மணிக்கு
மஹா பூர்ணாஹுதி
மாலை 07-00 மணிக்கு
யக்ஷ கானம் அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்





02-08-2016,செவ்வாய் கிழமை ஆடி மாதம் 18
காலை 07-00 மணிக்கு
ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )
08-00மணி
ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை
ஸ்ரீ காளி (சகல சம்பத்)
ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )
ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)
ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )
ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம் )
ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி )
ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி )
ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல )
ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)
ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி)


ஸ்ரீ வித்யாஹோமம்

முற்பகல் 11-30 மணி
பூர்ணாஹுதி


மாலை 04-00 மணிக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்
இரவு 7-00மணி பூர்ணாஹுதி


இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,
ப்ரஸாதம் ,விநியோகம்,


இரவு09-00 மணிக்கு

யக்ஷ கானம் அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்

அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

அனுமதி இலவசம் ,
24மணி நேரம் எப்போதும் அன்னதானம்
யாக பெருவிழாவில் கலந்து கொண்டு கலசம் வேண்டுவோர் கோவில் அலுவலகத்தில் பதிவு செய்யவும் cell : +91 98428 58236

மேலும் தகவல்கள்களுக்கு
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236

குறிப்பு:
அழைப்பிதழ் கிடைக்க பெறாதவர் இதையே அழைப்பிதழாக ஏற்று யாக பெருவிழாவில் கலந்து கொண்டுஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.

அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு


அரசு வேலைக்கு முயற்சி செய்வோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் - சூரிய வழிபாடு





குருநாதர் சாய்பாபா உபாசகர் என் நண்பருக்கு சொன்ன பரிகாரம்

அரசாங்க வேலைக்கு போகணும்னா அதுக்கு ஜாதகத்துல சூரியன் பலமா இருக்கனும் , அப்படி பலம் இல்லாதவர்கள் முயற்சி செய்யறதாக இருந்தால் சூரியனை வழிபட வேண்டும்

குருநாதர் அருளிய சூரிய வழிபாடு :




ஒவ்வொரு ஞாயிற்று கிழமை
காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்
( 6 am to 7 am ) வீட்டு மாடியில ( மாடி இல்லாதவர்கள் வெட்ட வெளியிலும் )

ஒரு விளக்கு போட்டு சூரியனை நோக்கி சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும் .

விளக்கு போடும் பொது கூடவே நைவேத்தியமாக கல்கண்டு ,மற்றும் எதாவது ஸ்வீட் நைவேத்தியமாக வைக்க வேண்டும் . (கடவுளுக்கு நிவேதனமாக படைத்த எதையும் வீணாக்க கூடாது . அதை நாமே சாப்பிட வேண்டும் )

அப்போது சூரிய காயத்ரி அல்லது சூரியனுக்குரிய ஸ்லோகம் அல்லது ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரம் சொல்லலாம்

இந்த வழிபாட்ட செய்ய அதிக பட்சம் 20 நிமிடம் போதும்

இந்த வழிபாட்ட செஞ்ச கண்டிப்பா அரசு வேலை கிடைக்கும்

மேலும் இந்த வழிபாட்டை செய்ய தகுந்தவர்கள்

( யார் வேண்டுமானாலும் செய்யலாம் )

1) ஜாதகத்துல சூரிய திசை நடப்பவர்கள், சூரியன் நீசமாக இருந்தால் , நீச கிரகத்தோட சேர்ந்து இருந்தால் , பகையாக இருந்தால், மறைந்து இருந்தால்

2) அதிகாரமிக்க பதவியில இருப்பவர்க்கள் , அதற்க்கு முயற்சி செய்பவர்கள்

3) ஆளுமை திறன் வேண்டுவோர் ( அடிமை படுத்தல் அல்ல )

4) தந்தை மகன் உறவு சரியில்லதவர்கள் ( யாரேனும் ஒருத்தர் இந்த வழிபாடு செய்யலாம் )

5) அரசு வேலைக்கு முயற்சி செய்வோர் , அரசு சம்பந்த பட்ட விசயங்களில் இறங்குவோர்

6 ) கண் பார்வை குறைபாடு உடையவர்கள்

அரசு வேலைக்கு கடுமையாக முயற்சி செய்யும், வழிபாட்டில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிபாட்டினை செய்து பார்க்கலாம் .

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்


#மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைந்துள்ளது. தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

#திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சிலை பிரதிஷ்டை செய்து அதற்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகிறது .


#திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

#தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர். ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் பிரதிஷ்டை செய்து அதற்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகிறது .
தேய்பிறை அஷ்டமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறும்


#திருவண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

#அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

#சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

#திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

#திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


#திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


#காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
#பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

#ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

#சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று!!!

தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

தாடிக்கொம்பு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு









.நாளை  செவ்வாய் கிழமை 26.07.2016
தேய்பிறை அஷ்டமி ராகு காலம் மாலை 3.00pm to 4.30PM

-திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் வழியில், சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது தாடிக்கொம்பு. இங்கே சிற்ப நயத்துடன் அழகுறத் திகழ்கிறது ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில். விஜய நகரப் பேரரசு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட, கலை நுட்பத்துடன் கூடிய அற்புதமான கோயில்
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யவும்
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். இந்தக் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்னைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!