சித்தராஜ சுவாமிகள் தவமிருந்த அத்ரி மலை


பாம்பாட்டிச் சித்தரின் சீடர் சிவப் பிரபாகர சித்தயோகியின் வழித் தோன்றல்களில் மிக முக்கியமானவர் பிரம்மஸ்ரீ சித்தராஜ சுவாமிகள். இவரும் இந்த அத்ரி தபோவனத்தில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்துள்ளார். இவர் காலத்தில் கூட கோயில் சரியாக கட்டப்படாம லேயே இருந்தது. புதர்களும் மரத்தில் இருந்து விழுந்த இலைகளும் குவியல் குவியலாக கிடக்கும். காட்டுக் கோழிகளெல்லாம் இலைச் சருகுக்குள் நுழைந்து காணாமல் போய்விடும். அதைப் பிடிக்க சருகுகளுக்குள் தேடினால் வேறொரு சருகுக் குவியல்களின் வழியாக வெளியேறிவிடும்.
அந்த அளவுக்கு இலைச் ச ருகுகள் அம்பாரமாகக் குவிந்திருக்கும். அத்ரி தபோ வனத்தில் தற்போது அத்ரி மகரிஷிக்கு பூஜை நடைபெறும் மரமே ஒரு குடைபோல் இருக்கிறது. இது வெயிலாலோ மழையாலோ தவத் திற்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாதபடி பாதுகாப்பாக அமைகிறது. தற்போது இந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. தவசீலர் சித்தராஜ சுவாமிகள்தான் இந்த மலையைப் பற்றியும், அத்ரி மகரிஷியின் தபோவனத்தின் சிறப்பு களையும் மலையாளத் தில் நூலாக எழுதினார்.
அந்த நூலை தமிழில் ராமானுஜம் சுவாமிகள் எழுதியுள்ளார். இந்த நூல்தான் அத்ரி தபோவனத்தினைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூலாகும். அதன் பிறகு இந்தக் கோயிலுக்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இவர்கள்தான் வள்ளி-தெய்வானை சமேத முருகனை பிரதிஷ்டை செய்தவர்கள். அதோடு, வைகாசி விசாகத் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்கள். காவடி, பால்குடம் எடுத்துச் செ ல்லுதல், அலகு குத்துதல் போன்ற நிகழ்வுகளை இங்கு உருவாக்கியவர்களே பாம்பாட்டிச் சித்தரின் சீடர்கள்தான்.
பாம்பாட்டிச் சித்த ருக்கு மருத மலை, துவாரகை, விருத்தா சலம் போன்ற மூன்று தலங்களில் ஜீவசமாதி இருப்பதாகக் கூறுகி றார்கள். அதே போல் சங்கரன் கோயிலுக்கு அருகே புளியங்குடி பாதையிலும் ஒரு ஜீவ சமாதி உண்டு. அதாவது, அத்ரி மலையில் பதினாறு வருடங்கள் தவமிருந்த பின்னர், சித்தியான இடமும் இந்த இடத்தில்தான் உள்ளது. சித்தர் ஒரே சமயத்தில் பல பகுதிகளில் தம் இருப்பைக் காட்ட வல்லவர்கள் என்ற அடிப்படையில் இப்படி ஜீவசமாதிகள் அமைந்திருக்கலாம் என்கிறார்கள்.
அத்ரியில் தவமிருந்த போதுதான் சங்கரன்கோவிலில் பாம்பாட்டிச் சித்தர் பீடத்தினை கட்ட வேண்டும் என்று உத்தரவாகியுள்ளது. அதன்படியே அந்தப் பீடத்தினை பெரிதாக கட்டியுள்ளார்கள். இதில் கல்யாணிபுரம் மாரிவேல் என்னும் பெரியவர் தற்போது பாம்பாட்டிச் சித்தரின் வாரிசுகளோடு அத்ரி மலைக்கு வந்து செல்கிறார். கோயில் பிரபலம் ஆவதற்கு முன்னாலிருந்தே அவர்கள் இப்படி வருவது வழக்கம். மலையில் கிருத்திகை, அஷ்டமி காலங்களில் முருகனுக்கு பூஜை செய்வார்கள்.
அவர்கள் இரவு வரை தங்கியிருந்து பூஜை செய்வார்கள். பின்பு, இங்கிருந்து மலை மீது சற்று தூரமுள்ள கருப்பசாமி கோயிலுக்கும் சென்று பூஜை நடத்துவார்கள். இரவு வேளையில் பக்தர்கள் மூலிகை காபியை குடித்துக் கொண்டும், முருகப் பெருமானை தரிசித்தபடியும் நோய்கள் குணமாக வேண்டிக் கொள்வார்கள். திருமணம் ஆகாதோர் சந்தன அபிஷேகம் செய்து, அந்தச் சந்தனத்தினை முருகப் பெருமானின் மார்பில் வைத்து விடிய விடிய பூஜித்து மறுநாள் காலையில் அதை பிரசாதமாக எடுத்துச் செல்வார்கள்.
விரைவிலேயே அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி விடும். இதுபோலவே குழந்தை வரம் வேண்டுவோரும் செய்வார்கள். சங்கரன் கோவில்-புளியங்குடி ரோட்டில் அமைந்துள்ள பாம்பாட்டிச் சித்தருடைய ஜீவசமாதியானது சில வருடங்களுக்கு முன்புதான் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதற்குக் காரணம் அத்ரி மலையில் தவமிருந்த பாம்பாட்டிச் சித்தரின் சீடர்களே ஆவார்கள். சித்தர்கள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை போகர் விளக்குகிறார்.
பாரப்பா விப்படியே சித்தரெல்லாம்
பல விதமா யகண்ட பூமியெல்லாம்
ஆரப்பா வங்குமிங்கு நிறைந்து நின்றா
ரவரவர்கள் பிள்ளைகளு மப்படியே நின்றார்
சீரப்பா சித்தருட மூலங்காணச்
செகத்திலே யெவரறியப் போராரையா
நேரப்பா நாமறிந்த சிறிது சொன்னோம்
நிலைகாட்டாச் சித்தர்களு மறைந்திட்டாரே
(போகர் ஜெனன சாரம் - 324)
இந்த அகண்ட பூமியில் அங்கும், இங்கும், மலைகளிலும், குகைகளிலும் நிறைந்து நிற்கின்றனர் சித்தர்கள். அவர்களுடைய சீடர்களும் நிரம்பியிருக்கின்றனர். சித்தருடைய மூலத்தைக் கண்டறிய இவ்வுலகத்திலே யாருக்கும் சக்தியில்லை. ‘என்னால் என் சக்திக்கு இயன்றவரை சிறிது சொன்னேன். தங்களை வெளிக் காட்டாமல் எல்லாச் சித்தர்களும் மறைந்தே வாழ்கின்றனர்’ என்று போகர் கூறுகிறார். அதனால்தான் அத்ரி தபோவனத்தில் பாம்பாட்டிச் சித்தர் உட்பட பல சீடர்கள் தவம் புரிந்துள்ளார்கள். இப்படி 50 வருடங்களுக்கு முன்புவரை நிகழ்ந்திருக்கிறது.
பாம்பாட்டிச் சித்தரின் வழி தோன்றலில் வந்த சீடரான சித்தராஜ சுவாமிகள் அத்ரி மலையில் தவமிருந்தபோது, உடன் கல்யாணிபுரம் மாரி வேல் இருந்திருக்கிறார். அதாவது, மாரிவேல், தனது பத்து வயதிலிருந்தே சித்தராஜ சுவாமிகளோடு இருந்திருக்கிறார். இதைப் பற்றி மாரிவேல் ஐயா கூறுகிறார்: ‘‘அப்போ சுவாமிகள் தபோவனத்துக்கு வந்து தவமிருக்கும்போது புலி, கரடி, கடுவாய், யானை கூட்டங்களும் மலையிலிருந்து இறங்கி தபோவனத்துல வந்து நிற்கும். இந்த கூட்டங்களோட கூட்டமா சித்தராஜ சுவாமிகள் இருப்பார். ராத்திரியில் தீ மூட்டி தங்குவோம்.
விஷப் பாம்புகள் அலையும். சிலசமயம் பாய்க்கு அடியில கூட கிடக்கும். ஆனா, எந்த தொந்தரவும் பண்ணாது. ஐயா அவங்க ரெண்டு மரங்களுக்கு நடுவுல கயிறு கட்டி தொட்டில்போல் செஞ்சு படுப்பாங்க. மத்தவங்களெல்லாம் அங்கங்க படுத்து உறங்குவாங்க. ஆனா, ராத்திரியில எழுந்து அவரைத் தேடினா இருக்க மாட்டாரு. எங்க போயிருப்பாருன்னு கண்டு பிடிக்கவே முடியாது. தபோவனத்துக்கு மேல இருக்கற கருப்பசாமி கோயிலுக்கும், காளி கோயிலுக்கும் பூஜை பண்ணிட்டு வருவாரு.
ஆனா, காலையில கயிறு ஊஞ்சலில் படுத்து கிடப்பாரு. ஆனையடி தம்பிரான் கோயில் சுவாமிகள், நிர்மானந்தா சுவாமிகளெல்லாம் கூட தபோவனத்துக்கு வருவாங்க. அப்படித்தான் திடீர்னு ஒருநாள் சங்கரன் கோவில்ல பாம்பாட்டிச் சித்தரோட ஜீவ சமாதியை சீரமைத்து வழிபாட்டு தலமாக அமைக்க உத்தரவு வந்ததா சொன்னாரு. அந்த பணியை செய்யப் போறேன்னாரு. எல்லாருக்கும் ஒரே அதிர்ச்சியா இருந்தது. ஏன்னா, பாம்பாட்டிச் சித்தருக்கும் அத்ரிமலைக்குமான தொடர்பு அப்போ பலபேருக்கு தெரியாமயே இருந்தது’’


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறுச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள
ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு
03.08.2016 புதன் ஆயில்யம் நட்சத்திரம் தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார்
ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் கிழ்கண்ட செல் நம்பரை தொடர்பு கொள்ளவும்
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651
மேலும் தகவல்கள்களுக்கு
cell :9842078733
9043942091,
9843016651
No comments:
Post a Comment