நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Sunday, 17 July 2016

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 14ம் ஆண்டு ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நடைபெறும் 14ம் ஆண்டு
 ஸ்ரீ சகஸ்ர சண்டீ மஹா யக்ஞம்




நிகழ்ச்சி நிரல்
29-07-2016 வெள்ளி கிழமை ஆடி மாதம் 14


மாலை 06-00 மணி முதல்


ஸ்ரீ விக்னேஸ்வரா பூஜை ,பூர்வாங்கம் ,ஸ்ரீ சண்டி தேவி கலச ஸ்தாபன ம்
30-07-2016 சனி கிழமை ஆடி மாதம் 15



காலை 07-00 மணி முதல்
ஸ்ரீ மஹாகணபதி ஹோமம் (எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெற )

ஸ்ரீ நவக்ரக ஹோமம்

ஸ்ரீ மஹா ம்ருத்ஞ்ஜய ஹோமம்,
(ஆயுள் விருத்தி )



ஸ்ரீ சண்டி தேவி ஆவரண பூஜை கலச ஸ்தாபனம்



ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம்


(நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)



முற்பகல்11-30 மணி பூர்ணாஹுதி




மாலை 06-30 மணி முதல்



ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்






(வளங்கள் அணைத்தும் பெற)


ஸ்ரீ சப்த சதி பாராயணம்



இரவு 8-00மணி அர்ச்சனை,தீபாராதனை




31-07-2016,ஞாயிற்று கிழமைஆடி மாதம் 16
காலை 7-00 மணி






ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்,


(செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெற )




ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன ஹோமம்,






(நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )







ஸ்ரீ சாம்ராஜ்ய லக்ஷ்மீ ஹோமம்,


(26 வகையான செல்வம் கிடைக்க )



ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்






(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற )



முற்பகல் 11-30 மணி பூர்ணாஹுதி



மாலை 06-30 மணி முதல்



ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி ஹோமம்


(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)



ஸ்ரீ சதுஷ் ஷஷ்டி பைரவ பலி பூஜை ஹோமம்






(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)



தொடர்ந்து ஸ்ரீ சப்த சதி பாராயணம்






இரவு 8-00மணிக்கு தீபாராதனை




01-08-2016,திங்கட் கிழமை ஆடி மாதம் 17








காலை 07-00 மணிக்கு


ஸ்ரீ ஹேரம்ப கணபதி ஹோமம்


(காரிய சித்தி )












ஸ்ரீ சகஸ்ரசண்டீ ஹோமம்


மாலை 04-00 மணிக்கு




மஹா பூர்ணாஹுதி


மாலை 07-00 மணிக்கு


யக்ஷ கானம் அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்










02-08-2016,செவ்வாய் கிழமை ஆடி மாதம் 18




காலை 07-00 மணிக்கு






ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம்


(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய வண்ணம் கிடைக்க )



08-00மணி


ஸ்ரீ தச மஹா வித்யா பூஜை



ஸ்ரீ காளி (சகல சம்பத்)


ஸ்ரீ தாரா (சத்ரூ ஜெயம் )


ஸ்ரீ வித்யா (சர்வ மங்கள சம்பத்)


ஸ்ரீ புவனேஸ்வரி (ஐஸ்வர்ய ப்ராப்தி )


ஸ்ரீ திரிபுர பைரவி (ருண ரோகாதி வரம்)


ஸ்ரீ தூமாவதி (துர் குண நிவர்த்தி)


ஸ்ரீ சின்ன மஸ்தா (மன நிம்மதி)


ஸ்ரீ பகளாமுகி (ஏதிரிகளை வெல்ல)


ஸ்ரீ ராஜமாதங்கி (வித்யா ப்ராப்தி)


ஸ்ரீ கமலாத்மிகா (அஷ்ட ஐஸ்வர்ய ப்ராப்தி)




ஸ்ரீ வித்யாஹோமம்



முற்பகல் 11-30 மணி







பூர்ணாஹுதி




மாலை 04-00 மணிக்கு




ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா ஹோமம்



இரவு 7-00மணி பூர்ணாஹுதி




இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,
ப்ரஸாதம் ,விநியோகம்,








இரவு09-00 மணிக்கு






யக்ஷ கானம் அம்பாளின் திரு அவதரா நாடகங்கள்




அனைவரும் இந்த ஸ்ரீ சகஸ்ரசண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு



ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.


அனுமதி இலவசம் ,24மணி நேரம் எப்போதும் அன்னதானம்


மேலும் தகவல்கள்களுக்கு


ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
cell : +91 98428 58236



























No comments:

Post a Comment