நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 30 July 2015

வீட்டில் செல்வச் செழிப்பு அதிகரிக்க





நீங்கள் வாடகை அல்லது சொந்த வீட்டுக்கு குடியேறும்போது,அந்த வீட்டுக்குள் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை மகாலட்சுமியின் அம்சமாகிய உப்பு,அம்மனின் அம்சமாகிய மஞ்சள் பொடி அல்லது மஞ்சள் கிழங்கு,ஒரு நிறை குடம் தண்ணீர்,உங்களின் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்தின் படம் இவைகளைக் கொண்டு செல்ல வேண்டும்.

வீட்டில் பண வரவு அதிகரிக்க,வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும்,மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும்,இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.இப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர,செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.
கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.


எந்த வீட்டினுள் நுழைந்ததும்,துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ,நறுமணம் கமழுகிறதோ,அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.


எந்த வீட்டில் அழுக்குத் துணிகள் வீடெல்லாம் இறைந்து கிடக்காமலிருக்கின்றதோ,வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் தண்ணீரால் அலசி விடப்படுகிறதோ,பொருட்கள் எல்லாம் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்குமோ,அங்கெல்லாம் செல்வம் குவியும்.


எங்கெல்லாம் நெகடிவ்வான வார்த்தைகள் பேசப்படாமலிருக்குமோ,எங்கெல்லாம் விட்டுக்கொடுத்தலும்,இனிய வார்த்தைகள் பேசப்படுமோ அங்கெல்லாம் செல்வச் செழிப்பு அதிகரிக்கும்.

சப்தகன்னியர்


சப்தகன்னியர்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.

சக்தி அம்சத்தில் சிறப்பிடம் பெறும் சப்தகன்னியர் வழிபாடு அம்பிகை வழிபாட்டின் அங்கமாக சக்திமிக்க வழிபாடாகத் திகழ்கிறது ..
அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் பிராம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, கௌமாரி, சாமுண்டி என்பது அவர்களது திருப்பெயர்கள்.

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.

சப்த கன்னியர் அருள்பாலிக்கும் திருச்சி – அன்பில் பேருந்து சாலையில் லால்குடியில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மணக்கால் ஆலயம் பற்றிய வரலாறு வியப்பளிக்கிறது …..

மணக்கால் அருகே ஆலய திருக்குளத்தில் நீராடிக் கொண்டிருந்த சப்த மாதர்கள். ஏழு பேரிடமும் … மஞ்சள் வியாபாரியான மலையாள மந்திரவாதி கரையோரம் நின்று ‘‘மஞ்சள் வேண்டுமா?’’ என்று அவர்களிடம் கேட்க ‘‘வேண்டாம்’’ என்றனர் சப்தமாதர்கள்.

அந்தப் பெண்களை மிரட்டியாவது மஞ்சள் வாங்க வைக்க வேண்டும் என்று எண்ணிஅவர்கள் கரையில் கழற்றி வைத்திருந்த ஆபரணங்களையும் ஆடைகளையும் எடுத்ததைப் பார்த்த சப்த கன்னியர் பதறிப் போயினர்.

உடனே, முருகனின் சக்தி என்று போற்றப்படும் கௌமாரி வியாபாரியை அழைத்தாள். ‘‘எனக்கு மஞ்சள் வேண்டும்’’ என்றாள் …

சிவனாலும் சக்தியாலும் அழிக்க முடியாத தீய சக்திகளை அழிப்பதற்கு அவதாரம் எடுத்த சூரனை வென்ற சக்திவேலனின் அம்சமாகத் தோன்றிய கௌமாரி தன் தலையிலிருந்த ஒரு மலரைத் தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசி இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு போ’’ என்றாள் …

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
கௌமாரி
அலட்சியமாக அந்த மலரை எடுத்து தராசின் ஒரு தட்டில் வைத்து மறு தட்டில் மஞ்சளைப் போட்டார்.

பூ இருந்த தட்டு கீழே இறங்கியது.

மறுபடியும் மஞ்சளைப் போட்டார்.

தட்டு மேலும் கீழே இறங்கியது.

வியந்த மஞ்சள் வியாபாரி தான் கொண்டு வந்த ஒரு மூட்டை மஞ்சளையும் தட்டில் வைத்தார்.

பூ இருந்த தட்டு கீழேயே இருந்தது.

வெளிநாட்டு வியாபாரத்திற்காக கப்பலில் ஏற்றி வைத்திருந்த மஞ்சள் மூட்டைகளை எடையில் ஏற்றினார்.
பூத்தட்டு மேலே வரவேயில்லை.

அப்போதுதான் மஞ்சள் வியாபாரி இந்தப் பெண்கள் சாதாரணப் பெண்கள் அல்ல; தெய்வப் பெண்கள் என உண்மை உணர்ந்ததும் அவர்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட இடமே மணக்கால்.
அங்கு சப்தமாதர்களுக்கு ஒரு அற்புதமான ஆலயம் அமைந்துள்ளது.

சப்தகன்னிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தலங்களில்
மக்கள் குறைகளை தீர்த்து அருள்பாலித்து வருகிறார்கள்.

எழுவரில் முதன்மையானவளாக கௌமாரி கருதப்பட்டு,
நங்கையர் அம்மன் என்ற திருநாமத்துடன், தன் பெயரில்
உள்ள அந்த ஆலயத்தில் மற்ற ஆறு மாதர்களுடன் அருள்பாலிக்கிறாள்.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சப்தமாதர்கள்
ஆலயம் வடக்குத் திசை நோக்கியே அமைந்திருக்கும். ஆனால்
இங்கு ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.

ஆலயத்தின் உள்ளே மதுரை வீரன் சந்நதி அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலது புறம் மஞ்சள் வியாபாரி திருமேனி உள்ளது.

அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறங்களிலும் வரவேற்கும் பிரமாண்டமான துவார பாலகிகள் மிகப் பெரிய அளவிலான இத்திருமேனிகள் பொதுவாக வேறு எந்தக் கோயிலிலும் காணக்கிடைக்காதவை.

கருவறையில் சப்தமாதர்களின்
திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன.

பிராகாரத்தின் தென் திசையில் பெரிய அளவிலான யானை சிலை மீது ஐயனாரும் குதிரை சிலை மீது கருப்பண்ணசாமியும் சுதை வடிவில் அருள்கின்றனர். இந்த கருப்பண்ணசாமி கடன் வசூல் செய்வதில் அசகாய சூரர்.

வராத கடன்கள் திரும்பி வர கருப்பண்ணசாமிக்கும் அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் போதும். விரைவாக அந்தக் கடன்கள் வசூலாகிவிடும் என்கின்றனர் பக்தர்கள்.

குடும்ப பிரச்னைகள் தீர, திருமணம் தடையின்றி நடந்தேற கருப்பண்ணசாமிக்கு மாலை போட்டு பிரார்த்தனை செய்து பலன் காண்கின்றனர்.

தெற்கு பிராகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்திருக்கும் நருவளி மரம் உள்ளது. இந்த மரம் பூப்பதில்லை. காய்ப்பதில்லை.

ஆனால், பெண்கள் உரிய வயதில் பூப்பெய்துவதற்கும் திருமணமான பெண்கள் குழந்தைப் பேறு அடைவதற்கும் நருவளி மரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ….

சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது.

மாசி மாதம் அமாவாசையைத் தொடர்ந்து நடைபெறும் கரகத் திருவிழா இங்கு வெகு பிரசித்தம்.

நவராத்திரி 10 நாட்களும் இங்கு இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 10ம் நாள் இங்கு நடைபெறும் தயிர் பாவாடை எனும் விழா எங்கும் காணமுடியாத அதிசயத் திருவிழாவாகும்.

அர்த்த மண்டபம் முழுவதும் சாதத்தை வடித்து, தயிரைக் கலந்து தயிர்சாதமாகக் கொட்டி வைத்து நிரவி விடுவார்கள். பார்க்கும்போது அர்த்த மண்டபம் வெள்ளை வெளேர் என மல்லிகை மலர்களால் மறைக்கப்பட்டது போல் இருக்கும் அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.

ஆடி, தை, மாத வெள்ளிக்கிழமைகளில்
மாவிளக்கு பூஜை கோலாகலமாக நடைபெறும்.

சித்திரை மாதப் பிறப்பு, விஜயதசமி ஆகிய நாட்களில் அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வருவாள். இந்த ஆலயத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடந்தாலும் ஆலயம் பகல் நேரம் முழுவதும் திறந்திருப்பதை பக்தர்கள் அனைவரும் பாராட்டி மகிழ்கிறார்கள்.

அகந்தையுடன் வந்த செட்டியப்பரின் கொட்டத்தை அடக்கிய கௌமாரியும் பிற மாதர்களும் தம்மை வணங்கும் பக்தர்களின் அகந்தையை, அவர்களுடைய எதிரிகளை அழித்து, பக்தர்களை மகிழ்வோடு வாழ வைப்பது நிஜம் என்பது இத்தல பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவிலில் ஆதி கோனியம்மன் வீற்றிருக்கும் தனிக்கோவிலில் சப்த கன்னியர்கள் வீற்றிருக்கிறார்கள்.

திருமண உறுதி படுத்துதலின் போது சப்த கன்னியம்மனின்
ஆசியை பெற அம்மனிடம் வேண்டுகின்றனர்.

அம்மனின் அருள் கிடைத்தால் அந்த திருமணம் எந்த தடங்கலுமின்றி நடைபெறும். வருங்காலத்தில் தம்பதிகள் மக்கட்பேறு பெற்று சுகமாய் வாழ்வார்கள் என்பது ஐதீகமாக உள்ளது.

உயர்வு தரும் பௌர்ணமி பூஜை


உயர்வு தரும் பௌர்ணமி பூஜை 

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி,மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி ‘ஸ்ரீசந்திரிகா’ என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள்ஆகும்.

ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரேஞ் (Orange ) நிற ஆடையணிவித்து, மந்தாரை,மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்

. புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து,பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.


வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து,அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல்,தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள்,கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து,காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.



விதியென்ற நமது வாழ்க்கை அமைப்பை மதி என்ற சந்திரனின் துணை கொண்டு நாம் மாற்றலாம். அதாவதுவிதியை மதியால் வெல்லாம்.

அகத்தியப் பெருமான் அருளிய விபூதியை பற்றிய தகவல்!


அகத்தியப் பெருமான் அருளிய விபூதியை பற்றிய தகவல்!



நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம்.

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

விபூதி என்றதும் எல்லோருக்கும் சிவபெருமானைத்தான் நினைவுக்கு வரும். சிவனை வழிபடுவோர் அதை தங்களின் அங்கத்தில் அடையாளமாக தரித்துக் கொள்வார்.

விபூதியை பல பெயர்களில் மொழிவார்கள். இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்று பல பெயர். அருகம்புல்லை உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக பெரியோர்களால் கருதப்படுகிறது. இதுவே உத்தமமான திருநீர் என்கிறார் அகத்தியர்.

விபூதியை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாம்.

ஒன்று இடைவெளி இல்லாமல் நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக் கொள்ளும் முறை. இதை உள் தூளனம் என்கிறார். மூன்று விரல்களால், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக விபூதியை ஓன்றிற்கு ஒன்று இணையாக தரித்துக் கொள்ளும் முறையை திரிபுண்டரிகம் என்பர்.

சித்த மார்கத்தில், திருநீரை, செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் பயன்படுத்திய விதத்தை பற்றி அகத்தியப் பெருமான் பல இடங்களில் விளக்குகிறார். விபூதியை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார். அந்த செய்யுளை கீழே தருகிறேன்.

ஆமப்பா சூட்சம் வெகு சூட்சமான
அருமையுள்ள மந்திரத்தைத் தியானம் பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
சங்கையுட நவர்கள் செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.

மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த
மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.

விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குண நலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடும். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை (விபூதியை) பெற வேண்டும் என்கிறார். மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.

இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அது
சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம் றீம் சிம்ராவென்று
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும் போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்து வாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.

சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை/விபூதியை வாங்கும் போது “ரூம் றீம் சிம்ரா” என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார்.

எல்லோரும் மேற்சொன்ன மந்திரத்தை மனப்பாடம் பண்ணி, பெரியவர்கள் அருளாசி பெற்று, சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.


ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.


ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.

நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தைவரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம்.


அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடுகளில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற் சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமே பிரதானம்.

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தது தான். இந்த தகவல் அப்போது பரபரப்பாக வெளி வந்தது.

ஹோமத்தின் போது வெளிப்படும் புகை, காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்தஅழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளைப் போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப்பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப் பேணினர்.

“அந்தப்’ புகை பிடிச்சா தான் உடலுக்கு கேடு. ஹோமப்புகை நமக்கு மட்டுமல்ல! சுற்றுப்புறத்துக்கே நல்லது.

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்


பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம்

பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்றுகூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம்.
சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது

இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது.

இது எப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

பொருளாதாரம் தரும் குபேர விரதம்


பொருளாதாரம் தரும் குபேர விரதம்




பூசம் நட்சத்திரம் வரும் நாட்களிலோ அல்லது நிறைந்த அமாவாசை நாட்களிலோ அசைவம் சேர்க்காமல், விரதம் இருந்து குபேரனை மனதில் தியானித்து குபேரனுக்கு பூ பழங்கள் படைத்து,



ஏதாவது இனிப்பான நிவேதன பொருளை வீட்டில் தயார் செய்து, அதை குபேரனுக்கு படைக்க வேண்டும்.

குபேரனை மனதில் தியானித்து பொருளாதார உயர்வுக்காகவும்,வறுமை நிலை போகவும் மனதால் தியானித்து வரவும். முடிந்தவரை குபேரனின் கீழ்க்கண்ட 108 துதிகளை சொல்லி வரவும். கண்டிப்பாக பொருளாதார பிரச்சினைகள்,வறுமை நிலைகளில் இருந்து குபேரன் உங்களை காப்பார்.

* அழகாபுரி அரசே போற்றி ஆனந்தம் தரும் அருளே போற்றி இன்பவளம் அளிப்பாய் போற்றி ஈடில்லாப் பெருந்தகையே போற்றி உகந்து அளிக்கும் உண்மையே போற்றி ஊக்கம் அளிப்பவனே போற்றி எளியோனுக்கு அருள்பவனே போற்றி ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி ஒன்பது நிதி பெற்றவனே போற்றி ஓங்கார பக்தனே போற்றி கருத்தில் நிறைந்தவனே போற்றி கனகராஜனே போற்றி கனகரத்தினமே போற்றி காசு மாலை அணிந்தவனே போற்றி கிந்நரர்கள் தலைவனே போற்றி கீர்த்தி அளிப்பவனே போற்றி கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி குருவாரப் பிரியனே போற்றி குணம் தரும் குபேரா போற்றி குறை தீர்க்கும் குபேரா போற்றி கும்பத்தில் உறைபவனே போற்றி குண்டலம் அணிந்தவனே போற்றி குபேர லோக நாயகனே போற்றி குன்றாத நிதி அளிப்பாய் போற்றி கேடதனை நீக்கிடுவாய் போற்றி கேட்டவரம் அளிப்பவனே போற்றி கோடி நிதி அளிப்பவனே போற்றி சங்க நிதியைப் பெற்றவனே போற்றி சங்கரர் தோழனே போற்றி சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி சமயத்தில் அருள்பவனே போற்றி சத்திய சொரூபனே போற்றி சாந்த சொரூபனே போற்றி சித்ரலேகா பிரியனே போற்றி சித்ரலேகா மணாளனே போற்றி சிந்தையில் உறைபவனே போற்றி சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி சிவபூஜை பிரியனே போற்றி சிவ பக்த நாயகனே போற்றி சிவ மகா பக்தனே போற்றி சுந்தரர் பிரியனே போற்றி சுந்தர நாயகனே போற்றி சூர்பனகா சகோதரனே போற்றி செந்தாமரைப் பிரியனே போற்றி செல்வ வளம் அளிப்பவனே போற்றி செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி சொர்ணவளம் அளிப்பவனே போற்றி சொக்கநாதர் பிரியனே போற்றி சௌந்தர்ய ராஜனே போற்றி ஞான குபேரனே போற்றி தனம் அளிக்கும் தயாபரா போற்றி தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி திருவிழி அழகனே போற்றி திருவுரு அழகனே போற்றி திருவிளக்கில் உறைவாய் போற்றி திருநீறு அணிபவனே போற்றி தீயவை அகற்றுவாய் போற்றி துன்பம் தீர்த்திடுவாய் போற்றி தூயமனம் படைத்தவனே போற்றி தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி தேவராஜனே போற்றி பதுமநிதி பெற்றவனே போற்றி பரவச நாயகனே போற்றி பச்சை நிறப் பிரியனே போற்றி பவுர்ணமி நாயகனே போற்றி புண்ணிய ஆத்மனே போற்றி புண்ணியம் அளிப்பவனே போற்றி புண்ணிய புத்திரனே போற்றி பொன்னிற முடையோனே போற்றி பொன் நகை அணிபவனே போற்றி புன்னகை அரசே போற்றி பொறுமை கொடுப்பவனே போற்றி போகம்பல அளிப்பவனே போற்றி மங்கல முடையோனே போற்றி மங்களம் அளிப்பவனே போற்றி மங்களத்தில் உறைவாய் போற்றி மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி முத்து மாலை அணிபவனே போற்றி மோகன நாயகனே போற்றி வறுமை தீர்ப்பவனே போற்றி வரம் பல அருள்பவனே போற்றி விஜயம் தரும் விவேகனே போற்றி வேதம் போற்றும் வித்தகா போற்றி வைர மாலை அணிபவனே போற்றி வைகுண்டவாசப் பிரியனே போற்றி நடராஜர் பிரியனே போற்றி நவதான்யம் அளிப்பவனே போற்றி நவரத்தினப் பிரியனே போற்றி நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி வளம் யாவும் தந்திடுவாய் போற்றி ராவணன் சோதரனே போற்றி வடதிசை அதிபதியே போற்றி ரிஷி புத்திரனே போற்றி ருத்திரப் பிரியனே போற்றி இருள் நீக்கும் இன்பனே போற்றி வெண்குதிரை வாகனனே போற்றி கைலாயப் பிரியனே போற்றி மனம் விரும்பும் மன்னவனே போற்றி மணிமகுடம் தரித்தவனே போற்றி மாட்சிப் பொருளோனே போற்றி யந்திரத்தில் உறைந்தவனே போற்றி யௌவன நாயகனே போற்றி வல்லமை பெற்றவனே போற்றி குபேரா போற்றி போற்றி

இந்த போற்றியை விரதம்,பூஜை இல்லாத சாதாரண நாட்களிலும் தொடர்ந்து சொல்லி வந்தாலும் மிகவும் சிறப்பான பலன்களை அளிக்க கூடியதாகும்.எனவே குபேரனுக்கு விரதம் இருந்து பூஜை செய்து நற்பலன்களை பெறுவோமாக
குழந்தைகளின் கல்வித்திறனை அதிகரிக்க செய்யும் பெளர்ணமி விரதம்


பெளர்ணமியன்று அனுஷ்டிக்கும் விரதம் சிறப்பானது. கடவுள் நம்பிக்கை கொண்ட பலரும் பெளர்ணமி விரதம் இருப்பதையும், திருவண்ணாமலை கிரிவலம் செல்வதையும்,

இன்னும் சிலர் தங்கள் ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெளர்ணமி பூஜையில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

பெளர்ணமியன்று சிறு குழந்தைகளை விரதம் இருக்க பழக்கினால் மிகவும் சிறப்பாகும். குழந்தைகள் பெளர்ணமி விரதம் தொடர்ந்து இருந்து வருவதன் மூலம் வளமான வாழ்வை பெறுகிறார்கள்.

தொடர்ந்து அம்பாளை நினைத்து குழந்தைகள் ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து சிவன் கோவில் சென்று சிவன், அம்பாள், சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் குழந்தைகளின் ஞானம், நினைவாற்றல் அதிகரித்து அவர்களின் கல்வி சிறக்கும் என்பது உண்மை.

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி


உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி
கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.வெள்ளி கிழமை (31.07.2105)அன்று கோயில்களில் வளர்க்கப்படும் பசுவிற்கு அகத்திக்கீரை, வாழைபழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.
"ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிக்ஷேசினி பாவனே ஸுரபி ஸ்ரேஷ்டே தேவி துப்யம் நமோஸ்துதே!'' ""

எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன்'' என்பது இதன் பொருள். இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்

குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?


குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?
குரு பூர்ணிமா நாள் 31.07.2015வெள்ளி கிழமை


கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா

நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா

ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!
ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.

ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.

மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.

ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்

Wednesday, 29 July 2015


மாதா-பிதா-குரு-தெய்வம்
குரு பூர்ணிமா நாள் 31.07.2015வெள்ளி கிழமை

மாதா-பிதா-குரு-தெய்வம் இதுதான் முன்னோர்களால் வரிசை

படுத்தபட்டுள்ளது மாதா பிதாவை எல்லோரும் அடைந்திரிக்கிறோம். குரு ஒருவரை பற்றினால்தான் அவர் இறைவனை சுட்டிகாட்ட நாமும் உணர்ந்து தெய்வமாகலாம்.

இதுவரை நாம் பார்த்தது குருவை பற்றி! காரிய குருவைப்பற்றித்தான் "காரியகுருவை விட்டு காரண குருவை கண்டு " என கணபதிதாசன்
நெஞ்சறி விளக்கத்தில் கூறுகிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு குரு உண்டு. இரண்டாவது குருவை பெற்றவன்தான் இறைவனை அடைய முடியும். வேறு வழியே கிடையாது.

முதல்குருவை பற்றியே - காரிய குருவைப் பற்றியே கண்டோம். காரியகுரு மூலம் மெய்பொருள் என்னவென்று அறிந்து சாதனை செய்து வர வர நாம் காரியப்பட்டுக் கொண்டிருபதற்குக் காரணமான ஆத்மாவை பற்றி அறியலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சாதனை தீவிரமாக செய்து முன்னேறுகிறோமோ அவ்வளவு விரைவில் நம் உடலில் உள்ள ஆத்மாவின்
தரிசனம் கிடைக்கும். இத்தூல உடனிலுள் உள்ள சூட்சும வடிவான ஆத்மாவே நமக்கு இரண்டாவதாக காரண குரு ஆகிறார்.

அதன்பிறகு காரணகுரு வழிகாட்ட நாம் ஒவ்வொரு அடியாக முன்னேறுவோம். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்மாவே காரணகுரு ஆகும்.

காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே ஆத்மதரிசனம். இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து
அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.
"சூட்சுமத்தில் இருபது மோட்சம்" என முன்னோர் கூறுவர்.

சூட்சம உடலாகிய ஆத்மாவை அடைந்து அதனால் தான்- அம்மயமாகி தான்
மோட்சம் -பரகதி-மரணமில்ல பெருவாழ்வு அடைய முடியும் என ஞானிகள்
பறைசாற்றி சென்றதை நாம் உணர்வோமாக!

Tuesday, 28 July 2015

குரு பூர்ணிமா


குரு பூர்ணிமா:



குரு பூர்ணிமா ஆடி மாதத்தில் வரும் முதல் ழுழுநிலவு (பௌர்ணமி)
நாள் 31.07.2015வெள்ளி கிழமை  அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.

இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், வேதங்களுக்கு விளக்கங்கள் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

பௌத்தர்களும் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.



குரு பௌர்ணமி பற்றி மேலும் சில விடயங்களை பற்றி அடுத்தடுத்த சில பதிவுகளில் அலசுவோம் .

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா 30.07.2015வியாழகிழமை

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா 30.07.2015 வியாழன் கிழமை


தபசு என்றால் தவம் என பொருள்படும். அம்பாள், சிவ, விஷ்ணுவை சங்கரநாராயணராக வேண்டி தவமிருந்து அவரது காட்சியைப் பெற்ற நாளே ஆடித்தபசு திருநாள். இந்த விழா 12 நாட்கள் நடக்கும். அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார். அதன்பின் சங்கரலிங்க சுவாமி, யானை வாகனத்தில் சென்று அம்பாளுடன் இணைந்து கோயிலுக்குச் செல்வார். அப்போது, விவசாயிகள் விளைபொருட்களை அம்பாளுக்கு காணிக்கையாக அளிப்பர்.

ஆடி மாதத்தில்தான் அன்னை பார்வதி தவம் செய்து ஐயனை மீண்டும் அடைந்தாள். இதனை ஆடித் தபசு என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். சங்கர நாராயணர் கோயிலில் ஆடித் தபசு, பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சங்கரனும் நாராயணரும் ஒன்று என்று காட்டும் இத்தலத்தில், தபசு இருந்து பலன் அடைந்தவள் அம்பிகை. அம்பிகையின் தவம் பலித்ததனால், பக்தர்களும் தங்கள் பிரார்த்தனை நிறைவேற இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள்.

சங்கரன்கோவில் உருவான வரலாறு: 
நாக அரசர்களான சங்கன் சிவன் மீதும், பதுமன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது. தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். இதையடுத்து, இருவரும் சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். நாகராஜாக்கள் இருவரும் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த லிங்கத்தை புற்று மூடி விட்டது. நாகராஜாக்கள் அதனுள்ளேயே இருந்தனர். பக்தர் ஒருவர் இந்த புற்றை இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார். ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார். தகவல், பாண்டிய மன்னனுக்கு சென்றது. லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான். மதுரையில் இருந்து 120 கி.மீ., தூரத்திலுள்ளது சங்கரன்கோவில்.

கோமதி பெயர்க்காரணம்: 
சந்திரன் (மதி) போல பொலிவான முகம் கொண்ட அம்பிகை, இங்கு தவம் புரிய வந்தபோது, தேவலோக மாதர்கள் பசுக்கள் வடிவில் அவளுடன் வந்தனர். எனவே இவள், கோமதி என்று பெயர் பெற்றாள். ஆவுடையாம்பிகை என்றும் இவளுக்கு பெயர் உண்டு. ஆ என்றாலும் பசு தான். பசுக்களாகிய உயிர்களை ஆள்பவள் என்ற பொருளில் இவ்வாறு சொல்வர். திங்கள்கிழமைகளில் இவளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக் கிழமையில் தங்கப்பாவாடை அணிவித்து அலங்காரம் செய்கின்றனர். இங்கு அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ஆக்ஞா சக்கரம் என்கின்றனர். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்தால், நோய் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

சங்கரநாராயணர் சிறப்பு: சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நிதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான். திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாகவடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நிதியில் காலை பூஜையில் துளசிதீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் சங்கரநாராயணர் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது. இச்சந்நிதியில் ஸ்படிக லிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படும். சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆடித்தபசன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியே புறப்பாடாகிறார்.

நாகத்தில் அமர்ந்த சிவன்: சுவாமி பிரகாரத்தில் வன்மீகநாதர் சந்நிதி இருக்கிறது. புற்று வடிவில் அமைந்த இச்சந்நிதியில் சிவன் சுயரூபத்துடன் காட்சி தருகிறார். தலைக்கு மேலே குடை பிடித்தபடி இருக்கும் நாகத்தின் மீது இவர் அமர்ந்திருப்பது அபூர்வ அமைப்பு. புற்றுக்குள் (வன்மீகம் என்றால் புற்று) இருப்பவர் என்பதால் இவருக்கு இப்பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் புற்று மீது மஞ்சள் தூவி வேண்டிக் கொள்கிறார்கள். இச்சந்நிதி எதிரில் பஞ்ச நாக சிலைகள் இருக்கிறது. பக்தர்கள் இச்சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்கிறார்கள்.

தீராத பல்வலிக்கு பிரார்த்தனை: சிவன் சந்நிதி கோஷ்டத்தின் (கருவறை சுற்றுச்சுவர்) பின்புறத்தில் லிங்கோத்பவர் இருப்பார். சில தலங்களில் திருமால் காட்சி தருவார். ஆனால் இங்கு யோக நரசிம்மர் இருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. பல் வலி உள்ளவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.

ஆடித்தபசு என்றால் என்ன?


சென்னை மாங்காடு காமாட்சி, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய திருத்தலங்களில் அன்னை கோமதியை தவக்கோலத்தில் காணலாம். சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா பிரசித்தம். சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு மட்டுமே உண்மை தெய்வங்கள் என அடம் பிடித்தனர். இதுகுறித்து அம்பிகையிடம் முறையிட்டனர். சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில், அன்னை பார்வதிதேவி பூலோகத்திலுள்ள புன்னை வனத்துக்கு வந்தாள். சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தர வேண்டும் என வேண்டி ஒற்றைக்காலில், ஊசிமுனையில் நின்று கடும் தவம் செய்தாள். அவளது இந்த திருக்கோலம் காண தேவர்களெல்லாம் பசுக்களின் வடிவில் வந்து தங்கினர். பசுக்களை ஆ என்றும் கோ என்றும் சொல்வர். ஆக்கள் தரிசித்ததால் இவள் ஆவுடையம்மாள் எனப்பட்டாள். அம்பாளே பூமிக்கு வந்துவிட்டதால், அவளது திருமுகம் மதி (நிலா) போல் பிரகாசித்தது. அமாவாசை எப்போது என்று கூட அறிய இயலாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அவளுக்கு கோமதி என்ற பெயரும் தேவர்களால் சூட்டப் பட்டது. மதி என்றால் புத்தி என்றும் அர்த்தம். ஒரு ஊசியின் மேல் ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமானால், எந்தளவுக்கு புத்திசாலித்தனம் வேண்டும்! இப்படி புத்திசாலித்தனத்தில் கோ (தலைவி) ஆக இருந்ததாலும், இவள் கோமதி எனப்பட்டாள். தவம் என்ற சொல்லை தபஸ் என்று சொல்வர். இதுவே பேச்சுவழக்கில் தபசு, தவசு என்று மாறிவிட்டது.

வீடுகளில் பூச்சித் தொல்லையா?

சங்கரன்கோவில் பாம்புகள் வழிபட்ட கோயில் என்பதால் இங்கு புற்று இருக்கிறது. புற்று மண்தான் பிரதான பிரசாதம். நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். மேலும் வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை.

தலைவருடன் தலைவி: 

இங்குள்ள மூலவர் சங்கரலிங்கத்தை சங்கரநயினார் என்றும் கூறினர். ஒரு காலத்தில் இவ்வூரின் பெயரே சங்கரநயினார்கோவில் என்று தான் இருந்தது. நயினார் என்றால் தலைவர். அம்பாள் பெயரில் கோ இருப்பதால் அவள் தலைவி ஆகிறாள். தலைவன் இருக்குமிடத்தில் தலைவியும் இருப்பது இயற்கை தானே!

இரண்டு நாள் அன்னாபிஷேகம்: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், சங்கரன்கோவிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று அன்னாபிஷேகம் செய்கின்றனர். துவங்கும் புதிய வருடத்தில் உணவிற்கு பஞ்சமில்லாத நிலை இருக்க வேண்டும் என்பதற்காக சித்திரையிலும், ஐப்பசி புண்ணிய கால துவக்கம் என்பதால் அம்மாதத்தின் முதல் நாளிலும் இந்த அபிஷேகத்தை செய்கிறார்கள்.

சங்கரன்கோயில்: திருநெல்வேலி மாவட்டத்தில், சங்கரநயினார் கோயில் என்ற சங்கரன்கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் புகழ்பெற்ற திருவிழா ஆடித்தபசு விழாவாகும். ஒருமுறை உமாதேவியார் பெருமானிடத்தில், ஹரியும் சிவனும் ஒன்று என உணர்த்தும் விதமான திருக்கோலத்தைக் காட்டவேண்டுமென வேண்டிக்கொண்டாள். நீ பொதிகை மலையின் பக்கத்தில் புன்னை வனத்தில் தவமிருந்தால் உன் ஆசை நிறைவேறும். என சிவன் பார்வதியிடம் கூறினார். அதுபோலவே பார்வதி சுழல் நடுவே ஒற்றைக் காலில் ஊசிமுனையில் நின்று தவம்புரிந்தாள். இதுதான் ஆடித்தபசு ஆகும் இது ஆடிப் பவுர்ணமியன்று நடந்தது. தேவியின் தவத்தைக் கண்டு கருணைகொண்டு, அன்று உமாதேவிக்கு இடப்பாகம் தந்து அர்த்தநாரீஸ்வரர் ஆனது போல், இன்று திருமாலுக்கு இடப்பாகம் தந்து சங்கரநாராயணராக காட்சிகொடுத்தார்.

30.07.2015வியாழகிழமை ஆடிப் பவுர்ணமி அன்று காலை 9.00 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறும். பகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதியுலா வந்து, தெற்கு ரத வீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள். மாலை 4.00 மணிக்கு கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவன் சங்கரநாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்துசேர்வார். அங்கிருந்து காட்சிப் பந்தலுக்கு போவார். தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப் பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும். அம்பாள் சுவாமியை மூன்று முறை வலம் வருவாள் சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராக காட்சி தருவார். இது சைவ- வைணவ ஒற்றுமையைக் குறிக்கும் காட்சி. கண்டுமகிழ்ந்த அம்மை, தபசு மண்டபம் அடைவாள். பின் சுவாமி கோயிலுக்குச் செல்வார். இரவு சுவாமி சங்கரலிங்கராக கோயிலிருந்து புறப்பட்டு யானை வாகனத்தில் வீதியுலாவாக வந்து காட்சிப் பந்தல் அடைவார். அப்போது இரவு 12.00 மணியாகிவிடும். அம்பிகை சுவாமி அருகே வந்து காட்சிப் பந்தலில் மகிழ்வுடன் திருக்கண்மாலை மாற்றிக் கொள்வாள். அதன் பிறகு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இந்த விழாக்காட்சிகாண திருநெல்வேலியே திரண்டுவரும். கோமதியம்மன்முன் உள்ள ஸ்ரீசக்கரம் அருகே மாவிளக்கேற்றி வைத்து சக்கரத்தின் மேலமர்ந்து தவம் செய்தால் பிணிகள் அனைத்தும் நீங்கிடும் என்பர்.


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை



ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

சிவமயம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்



ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

அன்புடையீர்
நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி
(29-07-2015)புதன் கிழமை திரயோதசி முலம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10.00மணிக்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்


ஆன்மீகத் தொண்டாற்றும் திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி அவர்களுக்கு ,
ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்

ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்
இங்கனம்
தஞ்சை குருஜி .
குருபத்னி தஞ்சாவூர்


மற்றும்
அம்பாளின் பக்த மஹா ஜனங்கள்
cell :94433 33137 9443417289


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி மற்றும் ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு அன்னதானம்

***********************************************
*ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி மற்றும்      * 
*ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு அன்னதானம்      *
************************************************


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலில் அமைந்து உள்ள
 ஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,
ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு 30-07-2015 வியாழக்கிழமை ஆடி மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால்
அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஉத்தண்டவேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன்


அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236

Friday, 24 July 2015

ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

                                 சிவமயம்

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி துணை

     
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ குரு :சர்வ காரண புதா சக்தி :சத்ய மேவ ஜெயத் !
ஸ்ரீ காந்தோ:மாது லோயஸ்ய:
ஜனனீ சர்வ மங்களா ஜனக:
சங்கரோதேவ :தம் வந்தே .குஞ்ஜரனனம் .


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


ஷஷ்டியப்த பூர்த்தி சுபமுகூர்த்தப் பத்திரிகை

அன்புடையீர்
நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 13 ம் தேதி 

(29-07-2015)புதன் கிழமை  திரயோதசி முலம்  நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் உதயாதி நாழிகை 10.00மணிக்கு காலை 9.00மணிக்கு மேல் 10.00மணிக்குள் சிம்ம லக்னத்தில்


ஆன்மீகத் தொண்டாற்றும் திரு .மானாமதுரை சுவாமிகள் ------திருமதி மாதாஜி அவர்களுக்கு ,
ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுபமுகூர்த்த வைபவம் குருவின் திருவருளும்

ஸ்ரீ மஹா சக்தி பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் நிறைவான அருளுடன் ஆன்மீகத் அன்பர்களின் தொண்டு உள்ளங்களின் துணையுடன்
மானாமதுரை, வேதியரேந்தல் விளக்கு,பஞ்சபூதேஸ்வரம் எனும்
வேத தர்ம ஷேத்திரத்தில் நடைபெற இருக்கின்றபடியால் தாங்கள் அனைவரும் வந்து நடத்தி இந்த வைபவத்தில் கலந்து நிறைவூற செய்து மங்களங்களை வேண்டி இறைவியை பிரார்த்திக்குமாறு கேட்டு கொள்கிறோம்
இங்கனம்
தஞ்சை குருஜி .
குருபத்னி தஞ்சாவூர்


மற்றும்
அம்பாளின் பக்த மஹா ஜனங்கள்
cell :94433 33137  9443417289


மேலும் தகவல்கள்களுக்கு :
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்



வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி

வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திரமகரிஷி


விஸ்வாமித்திரமகரிஷி கோவில்










விஜயாபதி என்றால் வெற்றிக்குச் சொந்தமான இடம் என்று பொருள்படும். . ஆனால், இன்று வாழ்க்கையில் வெற்றி என்பது தொடக்கூடிய தூரம் ஆகும்.
இந்த இடத்தில் ரகசியம் உள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் விடும் மூச்சுக் காற்றின் வழியாக என்னை வழி நடத்தும் மானாமதுரை சுவாமிஜி குருவருளாலும் இந்த இடத்தின் ரகசியத்தை அறிந்து கொள்ள முடிந்தது.
வெற்றியின் ரகசியம் விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். கர்மாவை மற்றும் விதியை மாற்றி அமைத்தவர் விஸ்வாமித்திரர். இந்த விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். இங்கிருந்துதான் வெற்றியின் ரகசியம் ஆரம்பமாகிறது.
விஸ்வாமித்திர மகரிஷி இழந்தஅந்த சக்தியை மீண்டும் பெற வேண்டி தேர்ந்து எடுத்த இடம்தான் விஜயாபதி ஆகும்.


இந்த இடம் கூடங்குளம் அணுமின் நிலையம் அருகில் . இருக்கிறது இங்கே வந்து தவம் செய்யும்பொழுது தவத்தைத் கெடுக்கும் வகையில் இருந்த தாடகை என்ற அரக்கியை வதம் செய்ய தசரதசக்கரவர்த்தியின் புதல்வர்களாகிய இராமன், லட்சுமணனை அழைத்துக் கொண்டு விஜயாபதி என்ற இந்த இடத்திற்கு வந்தார்.
இதனை படிக்கும் அன்பர்கள் மறக்காமல் இதனை புரிந்து கொள்ள வேண்டும்
முடியாது என்ற வார்த்தையை மாற்றி நம்மால் எதையும் சாதித்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை தரக்கூடிய இடமே விஜயாபதி
ஆகும். இந்த இடத்தில் தான் விஸ்வாமித்திர மகரிஷி தன்னுடைய இழந்த சக்தியை மீண்டும் பெற்று பிரம்மரிஷிபட்டம் பெற தகுதி பெற்றார் என்ற புராண சிறப்பினை அறிவோம்

. இந்த கோவிலுக்கு வருவ்து மூலம் நம் குடும்பத்தில் இறந்த சிறு கன்னி தெய்வங்களின் ஆத்மா மற்றும் முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடைய வழி கிடைக்கிறது. மாதம்தோறும் அனுஷம் நக்ஷத்திரத்தில் அபிஷேகம் புஸ்பாஞ்சலி அன்னதானம் நடைபெறும்
. தமிழகம் முழுவதும் பக்தர்களால் வழிபட கூடிய சிறந்த பரிகாரஸ்தலமாக விளங்குகிறது.

இக்கோயில் சிறப்புகள்:
இக்கோவிலில் செய்யப்படும் பூஜையின் பயனாக நம்முடைய முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவகர்மாக்கள் மற்றும் நவகிரக தோஷங்கள் நீக்கப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்
1. தீராத கர்ம வியாதிகள், ஆயள் கண்டம்.
2. எதிர்ப்புகள்,கோர்ட், கேஸ் விவகாரங்கள்.
3. குழந்தை பாக்கிய தடை பிரச்சனைகள்.
4. தொழில் முடக்கம், புத்தி மாறாட்டம்
போன்ற பிரச்சனைகள்நிவர்த்தி ஆவதை நான் 100 சதவீதம் பரிபூரணமாக உணர்ந்திருக்கிறேன்
விஜயாபதிக்கு திருநெல்வேலியிலிருந்து வள்ளியூர் சென்று,அங்கிருந்து ராதாபுரம் பயணிக்க வேண்டும்.அங்கிருந்து,பத்துகிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் கடலோரகிராமமே விஜயாபதி ஆகும்.இங்கிருந்து வெறும் ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் கடலோரமாக அமைப்பட்டிருப்பதுதான் கூடங்குளம் அணுமின் நிலையம்!


ஓம் விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது



விஜயாபதியில் அமைந்துள்ள
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.07.2015 ஆடி  மாத ஞாயிற்றுகிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுபூஜை சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
98430 16651
98420 78733

Thursday, 23 July 2015

ஸ்ரீ காரைக்கால்அம்மையார் சுவாதி நட்சத்திர அபிஷகம்,ஆராதனைஅன்னதானம்




அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு 24.07.2015

ஆடி மாத வெள்ளி கிழமை சுவாதி நட்சத்திரதன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள்

ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762

முகப்பரு மறைய



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

முகப்பரு மறைய



முகத்திற் பருக்கள் முழுவதும் மறைய வேண்டுமானால்

புனுகு பூசுவதினால் மறையும் .


துத்தி இலையை பாலில் அரைத்து பற்றாக இட்டால் பருக்கள் மறையும்

பொட்டுக்கடலை மாவும் , ஆவாரம்பூ தூளும் நீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவி விட முகம் பருக்கள் இன்றி பொலிவாகும் .




ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு அனுஷம் நட்சத்திர தினத்தன்று சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை, அன்னதானம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி உள்ளது
அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
விஜயாபதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு
26.07.2015 ஆடி மாத ஞாயிற்று கிழமை அனுஷம் நட்சத்திர தினத்தன்றுபூஜை சிறப்பு அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,
அன்னதானம் நடைபெறும் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
மேலும் தகவல்கள்களுக்கு:
98428 58236
87540 16236
9843016651



Wednesday, 22 July 2015

பூஜை அறை சிறப்பானதாக சுத்தமானதாக இருக்க வேண்டும்


பூஜை  அறை சிறப்பானதாக சுத்தமானதாக இருக்க வேண்டும்



மந்திரங்களை உச்சரிக்கும் இடம் சுத்தமானதாக இருக்க வேண்டும்.  
பூஜைஅறை   சிறப்பானதாக இருக்கும்.  பூஜை றையில் நல்ல நறுமணமுள்ள ஊதுபத்தி பொருத்தி அறை மனதை மயக்கும் நறுமணமுள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான நறுமணம் பிடிக்குமாதலால் அவரவர்கள் தங்களிற்கு பிடித்த நறுமணத்தினை தேர்ந்து எடுத்துக் கொள்வது நல்லது. யட்சிணி, மோகினி போன்ற தேவதைகளிற்கு மல்லிகை மணம் பிடிக்குமாதலால் அவற்றிற்கு மல்லிகை மணமுள்ள ஊதுபத்தி உயோகிப்பது சிறப்பு. அதேபோல் அந்தந்த தெய்வங்களிற்கு, தேவதைகளிற்கு பிடித்த நறுமணத்தினை தெரிந்து உபயோகிக்க வேண்டும். சாம்பிராணிபுகைக்கு தேவதா ஆகர்ஷ்ண சக்தி உள்ளதால் சாம்பிராணி தூபம் உபயோகிப்பது சிறப்பானது

Monday, 20 July 2015

கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?


கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?
கோவிலுக்குள் சட்டை அணியாமல் ஏன் செல்ல வேண்டும்..?கோவிலுக்கு செல்வதால் உடல் ரீதியாக ஏற்படும் நல்ல மாற்றங்கள் என்ன..?
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்று சொல்லலாம்
. சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்! இந்த உயர் காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன.
பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான்.
கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது. கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. நம்முடைய முன்னோர்கள் முட்டாள்கள்
அல்ல என்பதை நாம் உணர வேண்டும்

.ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவேண்டிவைகள்..,

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவேண்டிவைகள்..,

*ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
*முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
*குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
*புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.
*யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
*போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
* தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.
* சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
* பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
*ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
*பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
*முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.
* எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
*பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
* மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.
* ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
*ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.
* பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.
*திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
*கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
* பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
* நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.
*பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
*பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
* பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.
*ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
*சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.
* நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
* கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.
*இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
*ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
* ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட
லக்ஷ்மி  கலசம்.

-----------------------------------------------------------------------------
நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ
இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை கூறி பயன் பெற
வாழ்த்துக்கள.

பூமி பூஜை போடுவது எப்படி ..............

பூமி பூஜை போடுவது எப்படி ..............
பணம் இருந்தால் வீடுகட்டிக் குடியேறி விடலாம். நன்றாக வாழத் தொடங்கலாம் என்று கைநிறைய பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு வாஸ்து பகவான் விழிக்கும் நாளில் குறித்த நேரத்தை விட்டு தொடங்குகின்றனர்.
முதலில் வாஸ்து பகவான் விழித்தெழும் நாளைக்குறித்து வைத்துக்கொண்டு பூஜை பொருட்களை சேகரித்து முதல் நாளே தயாராகிவிட வேண்டும். வாஸ்து பகவான் விழித்தெழும் காலம் காலை 9.30 மணி முதல் 10.32 மணி வரை என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆரம்ப நேரத்தில் விநாயகர் பூஜையைத் தொடங்கிவிட வேண்டும்.
வாஸ்து பூஜைக்கான பொருட்கள்:-
மஞ்சள்தூள், குங்குமம், கலச சொம்பு, கலசநூல், தேங்காய்-4, பூசணிக்காய்-1, எலுமிச்சம் பழம்-5, அவல் பொரி கடலை, நாட்டுச்சக்கரை-100, நுனிவாழை இலை, வெற்றிலை பாக்கு, நெய்-200 கிராம், ஊதுபத்தி, கற்பூரம், நவசமித்துக்கட்டு, நவரத்தினம், பஞ்சலோகம் நவதான்யம்-200
யாகக்கூட்டு பொருட்கள்:-
நெல்பொரி, வாழைப்பழம்-1 டசன், சிவப்பு கலசத்துண்டு செங்கல்-15, காமாட்சி தீபம்-1, குத்து விளக்கு, மணி கற்பூரத் தட்டு, மாஇலை கொத்து, பச்சரிசி, பூ மாலை-1, கதம்பசரம் 10 முழம், வாஸ்து படம்! வாஸ்துக்கு வர லட்சுமி!
முதலில் படத்தில் காட்டியபடி கற்களை ஈசான்யத்தில் 3+3,அளவுள்ள குழிபோட்ட இடத்தில் அமைத்து மூன்று குடங்களில் நீர் வைத்து (நிறை குடம்) கங்காதி தீர்த்தங்களுக்கு வணக்கம், அதில் எல்லா தீர்த்தங்களும் எழுந்தருள வேண்டும் என்று எண்ணி பகங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேங்மின் சன்னிதிம் குரு-என்று கூறுக.
அங்கு பூஜை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளகற்களில் தெளிக்க வேண்டும். விநாயகர் பூஜையை முதலில் செய்து ஓம் ஸ்ரீகஜானனா போற்றி!
யானை முருனே போற்றி செவ்வேள் அண்ணனே போற்றி!
சிவந்த மேனியனே போற்றி இல்லதோஷம் களை வாய் போற்றி!
ஒம் வாஸ்து வஸ்யகணபதியே ஓம் அம்ரிங் அங்கம் கணபதியே நம
என்று பிள்ளையார் வணக்கம் செய்து அடுத்து கலசத்தில் கங்காதி தீர்த்த தேவதைகளே! ஸ்வாசுதம் என்று மும்முறை சொல்லி.
ஓம் வாஸ்து புருஷாய வித்மஹே யோக மூர்த்தியாய தீமகி
தந்நோ: கிருஹராஜ ப்ரசோதயாத்
என்று 3 தடவை சொல்க.
கும்பத்தில் அர்ச்சனை........
ஆதார சக்தியே போற்றி!
ஓம் அனந்த தேவா போற்றி!
ஓம் தர்மதேவா போற்றி!
ஓம் ஞானவா போற்றி!
ஓம் வைராக்ய தேவனே போற்றி!
ஓம் ஐஸ்வர்ய உருவே போற்றி!
ஓம் தாமரை முகமே போற்றி!
ஓம் வாஸ்துக்குஹருபனே போற்றி!
ஓம் வம்ஆம் ஸ்ரீம் வாஸ்துக்குஹலட்சுமிருபா போற்றி!
தூபம் தீபம் நிவேதனம் கற்பூரம் காட்டி கட்டியுள்ள 4 கற்கள் கொண்ட சிறு அக்னி குண்டத்தில் போட்டு நான்கு பக்கங்களிலும் தர்பை போட்டு நெய், நெல் பொரி, ஓமப்பொருளால்
ஓம் வாஸ்தோஷ்பதே சஞ்சதுஷ்பதே இதம்
நம அக்னிம் ப்ரவேசய-ப்ரவேசய
என்று கூறி நெல் பொரி இட்டு அக்னி பூஜை செய்யவும். யக்ஞமாக 10 நிமிடத்துக்குள்
ஓம் வாஸ்து தேவாய ஸ்வாஹா
ஓம் பூமிபுத்ராய ஸ்வாஹா
ஓம் கணராஜாய ஸ்வாஹா,
ஓம் கணாதி ராஜாய ஸ்வாஹா
ஓம் சிவநேசாய ஸ்வாஹா,
ஓம் கிருஷ்ணாங்காய ஸ்வாகா,
ஓம் யோகரூபாய ஸ்வாகா,
ஓம் ஆனந்த நித்ராயஸ்வாஹா
ஓம் சம்பத் ரூபினே ஸ்வாகா
ஓம் சர்வசுவாய ஸ்வாகா,
ஓம் பர்வதபாவனாய ஸ்வாகா
என்று வாஸ்து அக்னி பூஜை செய்தபிறகு
ஓம் இந்திராய சுவாகா,
ஓம் அக்னியே சுவாகா,
ஓம்யமாய சுவாகா,
ஓம் நிருதியே சுவாகா,
ஓம் வருணாய சுவாகா,
ஓம் வாயுவே சுவாகா,
ஓம் குபேராய சுவாகா,
ஓம் ஈசானாய சுவாகா!
ஓம் ஆதித்யாதி நவக்ரக தேவதாயை சுவாகா
என்று நெய் ஓமம் செய்து அக்னிக்கு ஆரத்தி காட்டி வீடு கட்டும் எஜமானர், மனைவி பிரசாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்தபடியாக 5 பெண்களை வைத்துக்கொண்டு வைக்கப்பட்ட முறையில் கற்களை பால் தயிர் விட்டு சுத்தம் செய்து பூ பொட்டுயிட வேண்டும்.
பிறகு வீடு கட்டுமானப்பணி செய்யும் என்ஜினீயர், மேஸ்திரி அந்த கற்களுக்கு வெண்பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து ஆரத்திகாட்ட வேண்டும். அடுத்து அந்தக் கற்களைத்தலைப்பிலிருந்து ஒவ்ஒன்றாக எடுத்து வாஸ்து புருஷன், பூமிதேவி நவக்கிரஹங்களை வணங்கி புரஷசுக்த ஜபம் செய்தபடி குழியில் வைக்கவேண்டும்.
நிறைகுடம் நீரை ஈசான பாகத்திலிருந்து பெண்களை ஊற்றச்செய்தால் நல்லது. நவரத்தினம் பஞ்சலோகங்களை கற்களின் அடியில் பதியச் செய்துவிட்டு நவதான்யங்களை வாஸ்து புருஷன் அருளோடு செல்வச் செழிப்போடு இருக்கவும். வீடு அதிவிரைவில் கட்டவும் குலதெய்வத்தை நினைத்து குழியைச் சுற்றிச்போட வேண்டும்.
கலச நீரை கும்பத்தோடு எடுத்து மாவிலை வழியாக 3 முறை குழியைச்சுற்றி வந்து சிவம்சிவம் என்று கூறியபடி மெதுவாக விட்டு வரவேண்டும். பிறகு வாஸ்து புருஷனுக்கு பூசணிக்காய் எலுமிச்சம்பழம் விடலைத்தேங்காய் உடைத்து வணங்க வேண்டும்.
அடுத்து வந்திருக்கும் 5 சுமங்கலிப்பெண்களுக்கு வீடு கட்டப்போகும் யஜமானி தாம்பூலம் பூவைத்து கொடுத்து ஆசிபெறவேண்டும். அப்போது 7 பெண்கள் வந்தாலும் தாம்பூலம் அளித்தல் நலம் தரும் *a

பயனுள்ள பூஜையறை தகவல்கள் !


பயனுள்ள பூஜையறை தகவல்கள் !
கற்பூரத்துடன் மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.
தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகுக்கு உண்டு என்கின்றன ஞான நூல்கள். அதனால், பூஜையறையில் மயிலிறகை வைத்து வழிபடுவது சிறந்தது.
மழை நாட்களில், தீப்பெட்டி தீக்குச்சிகள் நமத்துப் போகும். நான்கு ஐந்து அரிசி மணிகளை உள்ளே போட்டுவைத்தால் தீக்குச்சிகள் நமத்துப் போகாது.
காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5 முதல் 6மணி வரையிலான நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மிக நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.
விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடுவதால், வீட்டில் சர்வ சுபி ட்சங்களும் பெருகும்.

ஆன்மீகத்தில் வரும் தடைகளும் தாண்டும் முறைகளும்

ஆன்மீகத்தில் வரும் தடைகளும் தாண்டும் முறைகளும்...

ஜெபம் நிறைய செய்ய வேண்டுமென்று ஆசை. ஆனால் முடிவதில்லை.
இதற்குக் காரணம் என் கர்மவினைகளா?அல்லது, என் சிரத்தை போதவில்லையா?
நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடும்போது குறிப்பிட்ட நிலையில் நிறையதடைகள் ஏற்படும். ஏனென்றால் அந்தப் பாதையில் பயணம் செய்ய உங்களுக்குத்தகுதி இருக்கிறதா என்று அந்த நெறிக்குரிய தேவதை உங்களை சோதிக்கும்.அதை சோதனை என்று பலரும் உணர மாட்டார்கள். உங்களுக்கொரு சோதனைவைக்கப்படும் போதுதான் அதில் நீங்கள் இன்னும் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
உதாரணமாக, மாலை ஆறு மணிக்கு நீங்கள் ஜெபத்திற்கு அமருகிறீர்கள் என்றுவைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரத்திற்கு உங்களை அமரவிடாமல் சிலவேலைகள் வரும். அல்லது உங்கள் கவனம் சிதறும்படி சில விஷயங்கள்
நடக்கும்.அந்த நேரத்தில் நீங்கள் உறுதியுடன் உங்கள் பயிற்சியை செய்கிறீர்கள்என்றால் அந்தப் பாதைக்கு நீங்கள் தகுதியானவர் என்று பொருள்.
உங்கள் பயிற்சியின் வீரியம் கூடக்கூட,இத்தகைய சோதனைகள் குறையத்
தொடங்கும்.நமக்கு இது வராது போலிருக்கிறதே என்று சிலர் தயங்குவார்கள்.
இது சோம்பல்தானே தவிர வேறொன்றுமில்லை.
அதேநேரம் கர்மவினைதான் காரணமா என்ற கேள்வியே உங்களுக்குத்
தேவையில்லை.எல்லாவற்றுக்கும் கர்மவினை மீது பழியைப்
போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்வது எளிது.உங்களுக்குள் இருக்கும் சோம்பலுக்குக் காரணம்
கர்மவினை என்ற எண்ணம் எழுந்தால் கூடவே இன்னொன்றையும் நீங்கள்
நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் ஆன்மீகத் தேடல் கூட உங்கள்கர்மவினையின் பயன்தான். எனவே இதை மனதில் வைத்துக் கொண்டுஅடுத்த படிநிலை நோக்கி நகர வேண்டும்.திட்டமிட வேண்டும். உறுதியுடன்இடைவிடாமல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆன்மீகத்தில் சிலர் சோம்பேறித்தனத்திற்கு இடம் கொடுத்து விடுவார்கள்.
"குரு இருக்கிறார்! அவர் பார்த்துக் கொள்வார்' என்ற எண்ணம் முழுமையான
சரணாகதியில் வந்தால் அதன் தன்மையே வேறு. மாறாக, குரு பார்த்துக்
கொள்வார் என்று சோம்பலின் அடிப்படையில் விட்டுவிட்டால் நீங்கள்
செய்ய வேண்டிய பயிற்சியை உங்கள் குரு செய்வார் என்று நீங்கள்
எதிர்பார்ப்பதாகப் பொருள்.குருவுக்கோ உங்கள் இஷ்டதெய்வத்துக்கோ
உங்களை முழுமையாக அர்ப்பணித்து அவர்கள் கைகளில் ஒரு கருவியாக
ஒரு பாத்திரமாக நீங்கள் மாறினால் அதன் பெயர்தான் சரணாகதி.
நான் என்னை என் குருவிடம் ஒப்படைத்துவிட்டேன். இனி என் வேலையை
நான் பார்ப்பேன்,அவர் வேலை என்னைப் பார்த்துக் கொள்வது என்பது
சரணாகதியல்ல. அது சோம்பேறித்தனம்.
இப்போது நாம் பார்த்தவை புறத்தில் நமக்குத் தெரிகிற தடைகள்.ஆன்மீகப்
பயிற்சிக்கு இடையூறு வருவது, தள்ளிப்போட நேர்வது என்பவை எல்லாம் புறத்தடைகள்.இது போக சாதகரின் உள்நிலையிலேயே சில தடைகள் இருக்கும்.தங்கள் எண்ணங்களின் போக்கை கூர்ந்து கவனித்து சீர்செய்து கொள்ளவேண்டும்.இல்லையென்றால் அந்தத் தடையிலேயே அந்த சாதகர் பல வருடங்கள் கூட இருப்பார்.
தன் உணர்வுகளை உற்றுப் பார்த்து,இதிலிருந்து விடுபட வேண்டுமென்னும்
தவிப்பு ஒரு சாதகருக்கு வந்து,அந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டால்
அந்த இடத்தில் குருவால் உதவ முடியும்.கைகொடுத்துத் தூக்கிவிட முடியும்.
ஆனால் தடை ஏற்பட்டது கூடத் தெரியாமல் தேங்கிப் போய் விட்டால் அதிலிருந்து மீள நெடுங்காலமாகும். இது எப்படிப்பட்ட நிலையென்றால்,
உங்களுக்கு உருவாகியிருப்பது ஒரு தடை என்றே தெரியாது.அந்தத் தடையை
மிகவும் சௌகரியமாக உணர்வீர்கள். அப்படி உணரும்போது அதைத் தாண்டி
வரத் தோன்றாது.
உதாரணமாக காபி குடிக்கிற பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாகி காபி குடிக்க
மிகவும் பிடித்திருந்தால் அது ஒரு தடை என்றே உணர மாட்டீர்கள்.மிகவும்
சௌகரியமாக உணர்வீர்கள்.அங்கேயே தடைப்பட்டு நின்று விடுவீர்கள்.
தானாக ஒரு பொறி வந்து,ஓர் உந்துதல் வந்து ஒரு முயற்சி வந்து மீண்டால்
உண்டு.இது ஏறக்குறைய கோமாவில் கிடந்து மீள்வதைப் போலத்தான். இத்தனைநாள்என்ன செய்து கொண்டிருந்தோம் என்றே தோன்றாது.
எனவே கர்மவினை மீதுபழிபோடாதீர்கள். இப்போது நீங்கள் செய்யும் செயல்தான் பத்து வருடங்கள்கழித்து,இருபது வருடங்கள் கழித்து நீங்கள் என்னவாக ஆவீர்கள் என்பதைநிர்ணயிக்கும்.எனவே இடைவிடாமல் பயிற்சிகளை செய்வதன் மூலமும் தன்க்குள் நிகழ்வதை உற்று கவனித்து சீர்செய்து கொள்வதன் மூலமும் ஆன்மீகப் பாதையில்தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள்.

அர்ச்சனையின் சிறப்பு


அர்ச்சனையின் சிறப்பு

அர்ச்சனையின் சிறப்பு சுத்தமானவராக ஒருமித்த மனத்துடன் தனது வலது கையால் ஒவ்வொரு புஷ்பங்களாக எடுத்து தெய்வ விக்கிரகத்தில் பாதங்களில் சேர்ப்பதே அர்ச்சனை ஆகும் அதே சமயம் "மத்யமா அநாமிகா மத்யே புஷ்பம் ஸங்க்ருஹ்ய பூஜ்யதே" என்பதாக அர்ச்சனை செய்யும் போது கட்டைவிரல் மற்றும் சுண்டு விரல் படாமல் வலது கையின் நடுவிரலுக்கும் அநாமிகா என்னும் மோதிர விரலுக்கும் நடுவில் புஷ்பங்களை எடுத்து அர்ச்சனை செய்யவேண்டும் அத்துடன் நிர்மால்ய புஷ்பங்களை அகற்றும்போது "அங்குஷ்ட தர்ஜனீப்ஜாம் து நிர்மால்ய மபநோதயேத்" என்பதாக கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் மட்டுமே அகற்ற வேண்டும் இதை நாமும் சற்றே முயற்ச்சி செய்யலாமே

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்!!!


பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்!!!

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்!!! க்கான பட முடிவு

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்!!!
1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.


2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.

3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .

4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.

5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச் சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.

6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.
வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

வாலி சுக்ரீவன் கதை


வாலி சுக்ரீவன் கதை


்இராமாயணத்தில் ஒரு காட்சி.வாலியும் சுக்ரீவனும் அண்ணன் தம்பிகள்.வாலி கொடியவன். சுக்ரீவன் நல்லவன்.வாலி சுக்ரீவனுடைய நாட்டையும்மட்டுமல்ல அவனதுமனைவியையும் அபகரித்துக்கொண்டான்.சுக்ரீவனால் அவனதுஅண்ணனை எதிர்த்து ஒன்றும்செய்யமுடியாமல் திகைத்துக்கொண்டிருந்தான்.ஸ்ரீ ராமன் காட்டில்வந்துகொண்டிருந்தபோது சுக்ரீவன் ஸ்ரீராமனைச் சந்தித்தான். ஸ்ரீ ராமா அபயம்என்று நமஸ்கரித்தான். ஸ்ரீ ராமனிடம் தன்வரலாற்றைச் சொல்லி தான் இழந்ததுஅனைத்தையும் வாலியிடமிருந்துமீட்டுத்தரும்படி வேண்டினான். ஸ்ரீ ராமனும்அப்படியே ஆகட்டும் என்று வாக்களித்தான்.வாலி மிகுந்த பலசாலி. ஒரே பாணத்தில்ஏழு மரங்களை யாரால்துளைக்கமுடியுமோஅவர்களால் மட்டுமேவாலியிடம் சண்டை போடமுடியும். நீங்கள்அப்படிச் செய்து காட்டுவீர்களா என்றுசுக்ரீவன் ஸ்ரீ ராமனைக் கேட்டான். ஸ்ரீராமனும் ஒரே பாணத்தைவிட்டு ஏழுமரங்களைத் துளைத்துக்காட்டினார்.சுக்ரீவன் மிகவும் மகிழ்ந்தான்.நீ இப்பொழுது வாலியிடம் சண்டை போடு.தக்க சமயத்தில் நான் உனக்குத் துணையாகவருவேன் என்று ஸ்ரீ ராமன் சொன்னான்.இந்த வார்த்தையை நம்பி சுக்ரீவனும்வாலியைச் சண்டைக்கு அழைத்தான்.வாலியும் சண்டைக்கு வந்தான். இருவரும்சண்டை இட்டார்கள். வாலி சுக்ரீவனைநையப் புடைத்து
அனுப்பினான்.பலமாகஅடிபட்டு வந்த சுர்க்ரீவன் ஸ்ரீராமா உன்னைநம்பி அல்லவா நான் அவனிடம் சண்டைக்குச்சென்றேன். இப்படிக் கைவிட்டு விட்டாயே.இது நியாயமா என்று அழுதான். சுக்ரீவநீயும் வாலியும் ஒரே மாதிரி இருந்ததால்யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால்அடையாளம் காண முடியவில்லை. நான்அவன் என்று உன்னைத் தாக்கிவிட்டால் என்னசெய்வது என்றுதான் பேசாமல் இருந்துவிட்டேன். இப்பொழுது நான் ஒரு மாலைதருகிறேன் ,இதைக் கழுத்தில்அணிந்துகொண்டு நீ அவனிடம்சண்டைக்குப் போ. நான் நிச்சயம் உன்னைகாப்பாற்றுவேன் என்று ஸ்ரீராமன் சொல்லிசுக்ரீவனை மீண்டும் வாலியிடம்சண்டைக்கு அனுப்பினான். வாலியிடம்சண்டை போடுவதாய் இருந்தால் அவன்எதிரில் நின்று சண்டைபோடக்கூடாது.அவன் எதிரில் யார்வருகிறார்களோ அவர்கள் பலத்தில்பாதியை வாலி எடுத்துக் கொள்வான்என்று சுக்ரீவன் சொல்லிவிட்டுச்சண்டைக்குப் போனான்.சுக்ரீவன்சொன்னது போல ஸ்ரீ ராமனும் வாலியின்பின்னால் மறைந்து நின்று வாலியின்மீது அம்பு தொடுத்தான். வாலி ஸ்ரீராமனைப் பார்த்து ஸ்ரீ ராமா உனக்கும்எனக்கும் எந்தப் பகையும் இல்லை. நீஎன்னைக் கொல்வது தர்மத்திற்குப்புறம்பானது. எதிரில் நின்று சண்டைபோடுவதே வீரனுக்கு அழகு. நீயோகோழைபோல் மறைந்து நின்று என்மீதுஅம்பு தொடுத்து என்னை சாகஅடிக்கிறாய். வானத்து சந்திரனில் களங்கம்இருப்பதுபோல் காலம் உள்ளளவும் நீ செய்தஇந்தக் களங்கமான செயல் உன் பெயரோடுசேர்த்து இனி உன்னை எல்லோரும்ராமச்சந்திரன் என்று அழைக் கட்டும் .நீராமனல்ல ராமச்சந்திரன் என்று சபித்தான்.ராமாயணத்தில் இந்தச் சம்பவம் என்எழுதப்பட்டது? இதன்மூலம் நமக்கு என்னஅறிவுரை வழங்குகிறார்கள்?வாலியும் சுக்ரீவனும்குரங்குகள்.குரங்கு என்பது நமதுமனம்தான்.வாலி கெட்ட மனம். சுக்ரீவன் நல்லமனம். நல்ல மனதைவிட கெட்ட மனமேஆதிக்கம் செய்யும்.இதை உணர்த்தவே வாலி சுக்ரீவனுடையநாடு முதல் அனைத்தையும்பறித்துக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. ஸ்ரீராமன் என்பது அறிவு. நல்ல மனம் அறிவின்துணையை நாடியது. ஏழு மரங்களை ஒரேபாணத்தால் யாரால் துளைக்க முடியுமோஅவர்கள்தான் வாலியை வெல்ல முடியும்என்றது என்ன வென்றால் , காமம், குரோதம்,லோபம் மோகம் , மதம், மாச்சர்யம்,கொலைஎன்ற ஏழையும் வைராக்கியம் என்ற ஒரேபாணத்தால் யாரால் வெல்ல முடியுமோஅவர்களால்தான் கெட்ட மனதைவெல்லமுடியும் என்பதே. நமக்குள் நல்லமனம் எது ,கெட்ட மனம் எது என்று நம்முடையஅறிவிற்குப் புரியாமல் இருப்பதே ஸ்ரீராமனுக்கு முதலில் வாலி யார் சுக்ரீவன்யார் என்று புரியாமல்போனது.வாலியின் எதிரில் நின்றுசண்டை போடக்கூடாது என்றது ஏன்? கெட்டமனதை நேர் நின்று அடக்க முடியாது,உதாரணத்திற்கு ஒன்று. சிகரெட் பிடிக்கும்பழக்கம் உள்ள ஒருவன் அதை விடவேண்டும்என்றால் சிகரெட்டை தொடக்கூடாதுஎன்று அதையே நினைத்துக்கொண்டிருந்தால் இன்றுமட்டும் ஒன்றேஒன்று பிடிக்கலாம்.நாளையிலிருந்துகட்டாயம் விட்டுவிடலாம் என்றுநினைப்பானாம். அதை விடவேண்டும்என்றால் அந்த நேரத்தில் கோவிலுக்குள்போய்விட்டால் அங்கே சிகரெட்பிடிக்கமுடியாது.அந்தத் தீய பழக்கத்தைமறைமுகமாகத்தான்வெல்லமுடியும்.கெட்ட மனதை எப்படியாவது வென்றேதீரவேண்டும் என்பதே வாலி சுக்ரீவன் கதை.

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி
*



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்

ஸ்ரீ வாராஹீ நவராத்ரி நாளை 17.07.2015 முதல் தொடங்குகிறது


தினமும் காலை 7-11 மணிவரை கணபதி ஹோமம் ,மஹான்யாச ஸஹித ஏகாதச ருத்ராபிஷேகம்


தினமும் மாலை 4.00முதல்6.30மணிவரை


பாராயணம் மற்றும் ,தீபாராதனை நடைபெறும்


17.07.2015 வெள்ளிகிழமை பஞ்சமி பூஜை


18.07.2015 சனி கிழமை தண்டநாத பூஜை


19.07.2015ஞாயிறுகிழமை ஸங்கேதா பூஜை


20.07.2015 திங்கள் கிழமை ஸமயேஸ்வரி பூஜை


21.07.2015 செவ்வாய்கிழமை ஸமயேஸங்கேதா பூஜை


22.07.2015 புதன்கிழமை வாராஹீ பூஜை


23.07.2015 வியாழன்கிழமை போத்ரிணி பூஜை


24.07.2015 வெள்ளிகிழமை சிவா பூஜை


25.07.2015 சனிகிழமை வார்தா மஹாஸோநா பூஜை


மேலும் தகவல்கள்களுக்கு :

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் ,

வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

சிவகங்கை மாவட்டம்

cell :98428 58236