குரு பூர்ணிமா:
குரு பூர்ணிமா ஆடி மாதத்தில் வரும் முதல் ழுழுநிலவு (பௌர்ணமி)நாள் 31.07.2015வெள்ளி கிழமை அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள் வியாசபூசை என்றும் வியாச ஜெயந்தி என்றும் அழைப்பர்.
இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், வேதங்களுக்கு விளக்கங்கள் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.
பௌத்தர்களும் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.
குரு பௌர்ணமி பற்றி மேலும் சில விடயங்களை பற்றி அடுத்தடுத்த சில பதிவுகளில் அலசுவோம் .

No comments:
Post a Comment