நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 30 May 2014

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி

உங்கள் கஷ்டங்கள் தீர ஒரு சுலப வழி

கடனுக்கு வட்டி கட்ட முடியாமை, வருமானம் நிரந்திரமில்லாத நிலை, எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாத நிலை,தேவையில்லாத பிரச்னைகளில் சிக்கி வழக்கமான வாழ்க்கை பாதிக்கப்படுதல், திடீர் நோய்,திடீர் அவமானம்,மருத்துவச் செலவு கட்டுக்கடங்காமல் செல்லுதல் இது போன்ற பிரச்னைகளைத் தீர்க்க ஒரு சுலபமான பரிகாரம் இருக்கிறது.
பசுவுக்கு வெள்ளி கிழமை அன்று அகத்திக்கீரை வழங்கினாலே இந்தப்பிரச்னைகள் படி படியாக  தீர்ந்துவிடும்.பசுவை இன்று கிராமங்களில் பார்க்கலாம்.அல்லது பால் பண்ணைகள்,மாட்டுப் பண்ணைகள்,பசு மடங்கள்,பெரிய கோவில்களில் உள்ள பசு மடங்களில் இவ்வாறு அகத்திக்கீரையை வழங்கலாம்.அல்லது வாழைப்பழங்களையும் தானமாக வழங்கலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள்ளேயே உட்பிரகாரத்தில் பசுமடம் அமைந்திருக்கிறது.அந்த பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரைக் கட்டு ஒன்று ரூ.10/-க்கு விற்பனை செய்கிறார்கள்.நாம் அதை வாங்கி உள்ளே இருக்கும் பசுக்களுக்கு வழங்குவது மாபெரும் புண்ணியம்.
.சாதாரணமாக நமது ஊரில் தெருவில் இருக்கும் பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் வழங்கினாலே செய்த பாவங்கள் தீர்ந்துவிடும். இதைவிட பழமையான கோயில்களில் செய்தால் மிக மிக சிறப்பு!!!

Tuesday, 27 May 2014

திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்...

திருச்செந்தூர் முருகக்கடவுளே குலதெய்வம்..........

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு, 
மானாமதுரை-630606
செல் : 98428 58236    

Monday, 26 May 2014

ஆறுபடை முருகனை தரிசிப்பதன் பயன்



1. திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை வழிபட்டால் திருமணம் நடைபெறும். 

2. திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை கடலில் நீராடி பின் வழிபடுதல் நல்லது. விடயாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும். 

3. திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை (பழனிì ஆண்டவரை) வழிபட்டால் தெளிந்த ஞானம் கிடைக்கும். 

4. சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை இங்கு வழிபட்டால் ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

5. திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை (செருத்தணி முருகன்) முருகனை வழிபட்டால் மனதிலிருக்கும் கோபம் (சினம்) முழுமையாக நீங்கும்.

6. பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனை (சிறு அருவி)யில் நீராடுதல் மிகவும் சிறப்பு.
வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பீர்களா 

நம் வீட்டுக்கு வந்த விருந்தினரை, ஓரிரவு பட்டினி போட்டால் போதும். வந்தவரின் பாவத்தில் பாதி நம்மைச் சேர்ந்து விடும். அது மட்டுமல்ல! மீளா நரக வாழ்வும் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். இதோ! உபசரிப்புக்கு ஒரு கதை!

மழைகாலத்தில் காட்டிற்கு சென்ற வேடன் கையில், குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த பெண்புறா சிக்கியது. ஆண்புறா அதைக் காணாமல் வருத்தத்துடன் இருந்தது. ""என் அன்பு மனைவியே! நீ காணாமல் போன பின், எனக்கு இவ்வுலகில் வாழ விருப்பமில்லை. நான் சாகிறேன்,'' என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில், அது அமர்ந்திருந்த மரத்தடியில் வேடன் ஒதுங்கினான். தன் துணையின் புலம்பல் கேட்ட பெண்புறா, ""அன்பரே! நான் விதிவசத்தால் இந்த வேடனிடம் சிக்கிவிட்டேன். இதோ! இந்த வேடன் நம் இடத்தைத் தேடி வந்துள்ளான். நம் இருப்பிடம் வருபவர் எதிரியே ஆயினும் நமக்கு விருந்தினரே! சாஸ்திரப்படி, நாம் அவரை உபசரிக்க வேண்டும்,'' என்றது.

ஆண்புறா அதை ஏற்று, சுள்ளிகளைப் பொறுக்கி வந்து நெருப்பு பற்ற வைத்தது. பின், வேடனிடம், ""பசித்திருக்கும் உமக்கு கொடுக்க என்னிடத்தில் ஏதுமில்லை. நான் இந்த நெருப்பில் விழுகிறேன், என் இறைச்சியை சாப்பிடும்,'' என்று சொல்லி அதன்படியே செய்தது. இதைக்கண்ட பெண் புறாவும் நெருப்பில் விழுந்து உயிர்விட்டது. வேடன் மனம் திருந்தி வேட்டைத்தொழிலைக் கைவிட்டு, தவமிருக்க ஆரம்பித்து விட்டான்.

இனியேனும், வீடு தேடி வந்தவர்களை உபசரிப்பீர்களா!

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள் அது ஏன் என்று தெரியுமா?

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,...

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

கோயில்களில் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது சரியா?


ஆயிரம் வருஷங்களுக்கு முன், ஐந்நூறு வருஷங்களுக்கு முன், நூறு வருஷங்களுக்கு முன், ஐம்பது வருஷங்களுக்கு முன் என்று காலப்போக்கில் நமது வாழ்க்கை முறையில் எத்தனையோ மாறுபாடுகளைச் சந்தித்துக் கொண்டே வந்திருக்கிறோம்.

அவற்றை எல்லாம் தேவையோ, இல்லையா என்று சிந்திக்காமலேயே ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பொட்டணப் (பாக்கெட்) பால் என்பது கிராமங்களில் வராது. நகரங்களில்தான் வரும். நகரங்களில் பொட்டணப் பாலை அன்றாட வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதால், தப்பி எதுவும் வராது. 

இதுவே கிராமம் என்றால், வீட்டில் மாட்டையும் வைத்துக் கொண்டு எங்கோ போய் பால் பொட்டணத்தை வாங்கிக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால்தான் தப்பு!
தெய்வம் நின்று கொல்லும் என்பதன் காரணம் 

இறைவனின் பரமகருணையே இதற்குக்காரணம். எப்படியும் ஒருவன் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பது தான் இறைவனின் திருவுள்ளம். இரணியனைக் கூட, நரசிம்மப்பெருமான், இருகூறாக்குவதற்கு முன், துவேஷ உணர்வு உதட்டளவில் இருந்தால் விட்டு விடலாம்.

உள்ளத்து அளவில் இருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று எண்ணினாராம். தீர்ப்பு நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் திருந்துவதற்கு தரும் வாய்ப்பு தான் காலம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களே! 

அதுபோல, காலம் உள்ளபோதே நல்வழியை நாடி வரவேண்டும் என்பது தான் இறைவன் திருவுள்ளம். அதனால் தான், தெய்வம் நின்று கொல்கிறது.

இறைவன் ஏன் கோபத்தை படைத்தான்?



வேண்டாத குணம் என்று கோபத்தைச் சொல்கிறோம். தீ போன்ற கோபம் நம்மிடம் மறைந்து போகட்டும் என்ற பொருளில், அவ்வை ஆறுவது சினம் என்று நமக்கு வழிகாட்டுகிறாள். ஆனால், அக்கோபத்தையும் துதிக்கிறது ரிக்வேதம். கோபத்தை தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சூக்தத்தில், பலசாலிகள் எல்லாரையும் விட மிகுந்த பலசாலியான கோபமே! இங்கு வருவாயாக! 

நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக. எல்லா எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே! எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும் என்கிறது. மற்றொரு சூக்தம், எல்லாவற்றையும் வெல்லும் கோபமே! தீயைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்களுடைய எதிரிகளைக் கொன்று வீழ்த்த வேண்டும்.

அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக. உன்னுடைய வலிமையால் எங்களின் எதிரிகளை விரட்ட வேண்டும், என கோபத்தைப் துதிக்கிறது. கடவுள் ஏன் கோபத்தை தந்திருக்கிறான் தெரியுமா? எந்த உணர்வும் நன்மைக்குப் பயன்படுமானால், அது அருளின் வடிவமே!

அதனால் தான் கோப தேவதையிடம் நல்லவர்கள் வாழவும், தீயவர்கள் அழியவும் ரிக் வேதம் வேண்டுகிறது. பிறர் நன்மைக்காக கோபப்பட்டால் அதில் தவறில்லை

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். 

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே



ஒரு அரசனை நாடி புலவர் ஒருவர் வந்தார். அன்றைய புலவர்கள், அரசனின் பெருமைகளைப் புகழ்ந்து பாடுவதும், அதற்கு அவர்கள் பரிசு கொடுப்பதும் வழக்கம். 
இந்தப் புலவர் கடவுளை மட்டுமே அதுவரை பாடியவர். ஆனால், கோயிலில் குடும்பத்தைக் காப்பாற்றுமளவு போதுமான சம்பளம் கிடைக்காததால், அரசனைப் புகழ்ந்து பாட வந்துவிட்டார். அவனைப் புகழ்ந்து பாடினார். அவனும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி ஆட்டி ரசித்தான்.
பாடி முடித்ததும், அமைச்சரை அழைத்து, ""இந்த புலவர் என்னை மகிழ்ச்சிப்படுத்தியதற்காக இவருக்கு பத்தாயிரம் பொற்காசுகள் கொடுங்கள்,'' என்று உத்தரவிட்டான்.
புலவர் அமைச்சருடன் சென்றார். அமைச்சரோ,""சரி...போய் வருகிறீர்களா?'' என்றார்.
""அமைச்சரே! அரசன் தரச்சொன்ன பணம் எங்கே? அதைக் கொடுங்கள், புறப்படுகிறேன்,'' என்றார்.
""அதெல்லாம் தர முடியாது, கிளம்பலாம்,'' என்றார்.
அதிர்ந்து போன புலவர், அரசனிடமே திரும்பச்சென்று, அவரது உத்தரவை அமைச்சர் நிறைவேற்ற மறுப்பது பற்றி புகார் செய்தார்.
""புலவரே! நான் பரிசு தருவதாக அறிவித்ததும், உம் மனநிலை எப்படி இருந்தது?'' என்று கேட்டான் அரசன்.
""மிக மகிழ்ச்சியாக இருந்தது,'' என்றார் புலவர்.
""நீர் பாடிய போது நான் மகிழ்ந்தேன். பரிசு அறிவித்த போது, நீர் மகிழ்ந்தீர். ஆக, மகிழ்ச்சிக்கு மகிழ்ச்சி சரியாய் போயிற்று. கிளம்புகிறீரா?'' என்றானே பார்க்கலாம்.
இந்த விசித்திர விளக்கம் கேட்ட புலவர் வெளியேறி விட்டார். இறைவனைப் பாடி, கிடைக்கும் இன்பமே பேரின்பம். மற்றவையெல்லாம் ஏமாற்று வித்தைகளே!
நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும் 

ஒரு ஆஸ்திகனும், நாஸ்திகனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் கடவுளைப் பற்றி வாதம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒருவன் கடவுள் இருக்கிறார் என ஆதாரங்களை எடுத்துக் கூற, இன்னொருவன் எதிர்க்கேள்வி கேட்டு அவனை மடக்குவான்.
ஒருநாள், நாஸ்திக நண்பனை வற்புறுத்தி கோயிலுக்கு அழைத்துச் சென்றான் ஆஸ்திகன். இருவரும் கோயிலுக்குள் சென்று விட்டு, பிரகாரம் வலம் வரும் போது, ஒரு தூணில் இடறி விழுந்தான் ஆஸ்திகன். அவன் காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. சற்று தூரத்தில், ஒரு நூறு ரூபாய் நோட்டு நாஸ்திகன் கண்ணில் பட்டது. அதை அவன் எடுத்துக் கொண்டான்.
நாஸ்திகன் நண்பனைப் பார்த்து சிரித்தான்.
""டேய்! நீ கடவுளை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வந்தாய். உன் பக்திக்குப் பரிசாக, கடவுள் உன் காலை உடைத்து விட்டார். நான், கருவறை பக்கமே தலைகாட்டவில்லை. எனக்கு நூறு ரூபாய் பரிசு கிடைத்தது. இப்போதாவது புரிந்து கொண்டாயா! கடவுளை வணங்கிய உனக்கு தொல்லை தான் மிஞ்சியதென்று!'' என்று கேலி செய்தான்.
ஆஸ்திகனுக்கு மிகுந்த வருத்தம்.அன்றிரவு, கனவில்தோன்றிய கடவுள், ""பக்தா! கவலைப்படாதே! நீ கோயிலுக்கு வராமல், வேறு பணியாக வெளியே போயிருந்தால் விபத்தில் இறந்திருப்பாய். உன் நண்பன், கோயிலுக்கு வராமல், வெளியே இருந்திருந்தால் கோடி ரூபாய் கிடைத்திருக்கும். அவரவர் பூர்வஜென்ம பலாபலன்களையே அனுபவிக்கிறார்கள். புரிகிறதா!'' என்றார்.
நமக்கு வரும் சோதனைகளை இனிய முகத்தோடு ஏற்று, இதோடு போனதே என்று ஆறுதலடைய வேண்டும். சரிதானே

புது ஆடைகளில் மஞ்சள் தடவி அணிவது ஏன்?

மஞ்சள் - தீமைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடிய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும்போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயானால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பார் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப்பார் என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம் உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்துவித தீயவையும் விலகி நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது.

தீ மிதி எதற்காக? ‌

தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா. குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை


உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

சிறுவர்களுக்கான விரதங்கள்!



மகாகவி காளிதாஸர், சரீரம் ஆத்யம் கலு தர்மஸாதனம் (நல்ல காரியங்கள் செய்வதற்கு அடிப்படையான தேவை என்பது நல்ல உடல்நலமே) என்று, நமது உடல்நலத்தின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்துகிறார். ஆதலின், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் மனதுக்குத் தகுந்தாற்போல விரதங்களைக் கடைப்பிடிக்கலாம்.
விரதம் எனில் கட்டுப்பாடு. ஆதலின் குழந்தைகளுக்கு சிறிய அளவில் அவர்களுக்கு இயன்றாற்போல் விரதங்களைப் பழக்கினோமானால், அவர்கள் பெரியவர்களாக வளர்ந்து, வாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இனிமையாக வாழ்வார்கள். பொதுவாக. எட்டு வயது முதற்கொண்டு எண்பது வயது வரையில் விரதங்களை மேற்கொள்ளலாம். எனினும், அவரவர் உடல்நலத்துக்கு ஏற்றவாறு விரதங்களைக் கடைப்பிடிக்கலாம் என்றும் நமது சாஸ்திரங்கள் தெளிவுபடுத்துகின்றன. விரதங்கள் உடல்நலத்துக்கு மட்டுமல்லாமல், மனநலனுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தற்கால சமுதாயத்தில், பல விதங்களில் மனச் சிதறல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் நிலவி வருவதால், சிறுவர் - சிறுமியர்களுக்கு விரதங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடைப்பிடிக்க வைப்பது நலமே

எமக்கு இந்த சரீரத்தை இறைவன் கொடுத்தது ஏன்..!?

 

சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி சீரோடும் சிறப்போடும் இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது.

உடல் என்பது தோலும், எலும்பும், தசையும் இரத்தமும், நாடி நரம்புகளுமாக தோற்றமளிக்கின்ற இந்த தூல உடம்பினை மாத்திரம் குறிப்பதன்று.
இந்த உடம்பினுள் சூக்குமமாய் அமைந்துள்ள மனம் என்ற உட்கருவியையும் உடம்பு என்று அழைக்கப் படுவதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.மனம் முதலிய நுட்ப கருவிகளை உள்ளடக்கிய நூதன இயந்திரத் தொகுதியாகிய இந்த உடம்பினை இறைவன் படைத்து நமக்கு வழங்கி இருக்கின்றான்.இந்த உடம்பினுள் செறிந்து இருக்கின்ற உயிர்தான் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றையும் செயற்படுத்துகின்றது..
உயிரும் உடம்பும் இணைக்கப்பட்டிருக்கின்ற பிரதான நோக்கம் இறைவனை வழிபாடு செய்தற்கேயாகும். இந்த நோக்கத்தை உள்ளபடி உணர்தவர்கள் இறைவனை வழிபாடு செய்கின்றனர். உயர்வு பெறுகின்றனர். உணராதவர்கள் வந்த நோக்கத்தை மறந்து நெறியில்லா நெறியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிவிட்டு மீளாத் துன்பத்தில் வீழ்ந்து அழுகின்றனர். இன்பமும் துன்பமும் நமது தேட்டங்களே. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பங்கள் எம்மை வந்து அணுகாமல் தடுத்துக் கொள்ள முடியும். இந்த அருமையான மனித உடம்பினைத் தந்து இறைவன் எமக்கு உதவியது மலமாகிய அழுக்குக்களையும், அறியாண்மை யாகிய கொடிய இருளையும் நீக்கி ஒளியையும் இன்பத்தையும் பெறும் பொருட்டே என்பது உணரற்பாலது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. இந்த உடம்பின் உதவியுடன் மேலும் மேலும் அழுக்குகள்தான் சேர்கப்படுகின்றன கொடுமைகள் பல புரிந்து பாவ மூட்டைகளின் தொகைகள் பெருக்கப்படுகின்றன. அதன் பயன் துன்பங்கள் துயங்களில் இருந்து மீளமுடியாமல் அல்லல்படுவது தான் முடிவாகின்றது. நன்றாகக் கற்றவர்கள் கூட இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநினியாயங்களில் ஈடுபாடு கொள்வதை பாரக்கும்போது இறைவனின் நோக்கத்தை அறிந்தும் அறியாதவர்கள் போல் ஏனோ நடந்து கொண்டு தீவினைகளைச் சேகரிக்கின்றார்கள் என்று வேதனைப்படவேண்டி உள்ளது.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும். தந்த தலைவன் சிவன் என்று சைவப் பெருமக்கள் கூறுவர். மனம், மொழி, மெய்யினால் இறைவனை வழிபடுவதற்க்காகவே .இந்த மானிட சரீரத்தை எம்மீது அளப்பெரும் கருணை கொண்டு எமக்கு இறைவன் ஈந்துள்ளான். இருள் நீங்கிய இன்பம்பெறுதலே நமது வாழ்வின் குறிக்கோள் என்றால் நாம்வந்த வேலையைப் சரியாக செய்யவேண்டும். தேவையற்ற வேலைகளை எல்லாம் அணைத்து எம்மை பாரம் ஆக்கிக் கொள்ளக்கூடாது.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறென்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர்

எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். என நினைத்து இறைவனை வழிபாடு செய்தலே மேலானது. என எமது சைவக் குரவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஏனென்றால் அந்த எல்லோருக்குள் நாமும் அடைக்கலமாகுகின்றோம் என்பதே அதன் உட்கருவாகும். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலைதானே வந்து எய்தும் பராபரமே" என்ற வாக்கை மனதிற் கொண்டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக

இறையுணர்வு ஆன்ம ஞானம் எம்மிடையே ஏற்பட்டு விட்டால் எம்மைப்போன்றே ஏனைய மனிதர்களும். இருள்நீங்கி இன்பம் பெறுவதின் பெருட்டே இவ்வுலகில் தோன்றி யுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வோம். அப்பொழுது எல்லோர் மீதும் அன்பும, அருளும், கருணையும். இரக்கமும். ஏற்பட்டு விடும். எமது பிராத்தனைகள் யாவும் நாம் வாழ்ந்து இன்பம் பெற்றால் போதும் என்ற சுயநல உணர்வு நீங்கப் பெற்று எல்லோரும் இன்பவாழ்வு எய்த வேண்டுமென்ற ஆன்மஞானம் நிறைந்த வழிபாடாக அமைந்து விடும்.

நெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா?


கோயில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஓர் காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும். இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு சாமவேதம், நடுவிரல் யஜீர் வேதம், மோதிரவிரல் சாமவேதம் ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது. முப்பட்டையிடுவது வேதங்கள் மட்டுமின்றி மேலும் பற்பல அர்த்தங்களையும் குறிப்பதாக உள்ளது. 
அவற்றுள் சில,
1. பிரம்மா, விஷ்ணு, சிவன், 
2. சிவன், சக்தி, ஸ்கந்தர்
3. அறம், பொருள், இன்பம்
4. குரு, லிங்கம், சங்கமம்
5. படைத்தல், காத்தல், அழித்தல்

நாம் பல சாதனை.களைப் புரிகிம்றோ



சிலவற்றுக்காக பாராட்டப்படுகிறோம், பல பாராட்டைப் பெறுவதில்லை. கீதை சொல்கிறது ""கடமையைச் செய், பலனை எதிர்பாராதே'' என்று. ஆனால், பாழும் மனம் என்னவோ புகழைத் தேடி பேயாய் அலைகிறது. பல சாதனைகள் செய்தும் அதற்கான பலனை எதிர்பாராமல் வாழும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் புகழடையா விட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.
ஒரு சினிமா நடிகர் அல்லது நடிகையின் பெயரைச் சொன்னதுமே இவர் இன்னார், இன்ன படத்தில் நடித்துள்ளார், இன்ன காட்சியில் சிறப்பாக நடிப்பார் என்றெல்லாம் பிளந்து கட்டி விடுகிறோம். டாக்டர் ஜோனாஸ் சால்க் என்பவரும் இருந்தார். "யார் அவர்?' என்றால், பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே!

இன்று உலகில் பல மனிதர்கள் ஒழுங்காக நடமாடக் காரணமே இவர் தான். ஆம்...இவரும் இவரது குழுவினரும் தான் போலியோவைக் குணப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்தனர். புளூகாய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் பணியையும் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவரிடம் ஒப்படைத்தது. அந்த மருந்தைக் கண்டுபிடித்து உலகப்புகழ் பெற்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்ற இவர், தனது சாதனைகளுக்காக அமெரிக்க ஜனாதிபதியிடம் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார்.
நம்மூர் காந்திஜிஜையே மறந்து விட்ட நாம், இவரை ஞாபகம் வைத்திருக்க நியாயமில்லை தான்! இனியாவது ஒவ்வொரு போலியோ முகாம் நடக்கும் போதும் இவரை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திசைக்கேற்ற தெய்வ வழிபாடு


* சூரிய திசை நடப்பவர்களுக்கு சிவன் வழிபாடு சிறப்பு தரும். 

* சந்திர திசை நடப்பவர்களுக்கு அம்பிகை வழிபாடு நன்மை தரும். 

* செவ்வாய் திசை நடப்பவர்களுக்கு முருகன் வழிபாடு நன்மை தரும். 

* புதன் திசை நடப்பவர்களுக்கு விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும். 

* வியாழ திசை நடப்பவர்களுக்கு தென்முகக் கடவுள் வழிபாடு திருப்தி தரும்.

* சுக்ர திசை நடப்பவர்களுக்கு சக்தி, அபிராமி வழிபாடு பலன் தரும்.

* சனி திசை நடப்பவர்களுக்கு அனுமன் வழிபாடு மடைபளை அகற்றும்,

*ராகு திசை நடப்பவர்கள் துர்க்கையையும்,

* கேது திசை நடப்பவர்கள் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

சன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்?



ஆலய ஆகம விதிப்படி கர்ப்ப கிரகத்தினுள் இருக்கும் மூலவருக்கும் எதிரில் நந்தி இருக்கும் இடத்திற்கும் இடையில் நின்று வணங்கக் கூடாது. ஆலய சாஸ்திரப்படி மூலவருக்கு முன்னால் உள்ள நந்தியின் மூக்கிலிருந்து விடும் மூச்சுக் காற்றினால்தான், 

கர்ப்பகிரகத்தில் உள்ள மூலவருக்கு உயர்நிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மூலவரின் வயிற்றுப்பகுதியில் உள்ள தொப்புள் பாகத்தை உயர்நிலையாகக் கொண்டு, அந்த இட மட்டத்தின் நேராக நந்தியின் மூக்கு அமையுமாறு கோயில்களில் நந்தி அமைக்கப்படுகிறது. 

இம்மூச்சுக்காற்று தடைபடாமல் செல்வதற்காகவே குறுக்கே போவது கூடாது என்கின்றனர். சன்னதியைவிட்டு அகன்று நின்று வழிபட வேண்டும் என்று சொல்வதும் இதன் விளைவாக வந்தது தான்.
பகவத் கீதையில் கிருஷ்ணரின் வாக்கு!
மகாபார‌த‌த்‌தி‌ல் நடைபெறு‌ம் குருஷே‌த்‌திர‌ப் போ‌ர் தொட‌ங்குவத‌ற்கு
மு‌ன்ன‌ர் எ‌திர‌ணியை பா‌ர்வை‌யி‌ட்ட அ‌ர்ஜூன‌ன், அ‌ங்கே த‌ன்
உற‌வின‌ர்க‌ள் பல‌ர் இரு‌ப்பதை‌க் க‌ண்டு போ‌ரிட மறு‌க்‌கிறா‌ன்.
அ‌ப்போதுஅ‌ர்ஜூனனை சமாதான‌ம் செ‌ய்த ‌அவரது தேரோ‌ட்டியான ‌கிரு‌ஷ‌்ண‌ர்(பா‌ர்‌த்தசார‌தி), நா‌ம் த‌ர்ம‌த்‌தி‌ற்காக போ‌ரிட வ‌ந்து‌ள்ளோ‌ம்.
அ‌ப்போது உறுவு முறைக‌ள் அ‌ங்கே குறு‌க்‌கிட‌க் கூடாது. ‌நீ உ‌ன்
கடைமையை‌ச் செ‌ய்தாக வே‌ண்டு‌ம் எ‌ன்று கூறு‌கிறா‌ர். அ‌ப்போது
‌கிரு‌ஷ‌்ண‌ர் எடு‌த்து‌ச் சொ‌ல்லு‌ம் த‌த்துவ‌ங்களு‌ம், யோக‌ங்களு‌ம்
அட‌ங்‌கிய நூ‌ல் தா‌ன் பகவ‌த் ‌கீதை.
அ‌தி‌ல் ‌கிரு‌ஷ‌்ணபரமா‌த்மா கூறு‌கிறா‌ர், யாரையும் எதையும் வெறுக்காமலிருக்கும் சமநோக்குஅல்லது பிரும்ம உணர்வு என்னும் முடிவை நோக்கிச் செல். இதுதான் வேதங்களும்உபநிடதங்களும் இதிகாச புராணங்களும் எண்ணற்ற பெரியோர்களும் மனிதனுக்குப்புகட்டும் முடிந்த முடிவான படிப்பினை.
எவ‌ன் ஒருவ‌ன் எதனாலு‌ம்ம‌கி‌ழ்வ‌தி‌ல்லையோ, துயர‌ப்படுவ‌தி‌ல்லையோ, எதையு‌ம்,யாரையு‌ம்வெறு‌ப்ப‌தி‌ல்லையோ,எத‌ற்கு‌ம்ஆசை‌ப்படுவ‌தி‌ல்லையோ, ந‌ல்லது கெ‌ட்டதுஇர‌‌ண்டையு‌ம் துற‌ந்த மன‌ம் கொ‌ண்டவனா‌ய் எ‌ன்‌னிட‌த்‌தி‌ல் ப‌க்‌திகொ‌‌ள்‌கிறானோ அவனே என‌க்கு ‌பி‌ரியமானவ‌ன்.
மேலு‌ம் ‌கிருஷ‌்ண‌ர்கூறு‌கிறார‌்,
பகைவனையு‌ம் - ந‌ண்பனையு‌ம், புகழையு‌ம் - ப‌ழியையு‌ம்,
கு‌‌ளிரையு‌ம் - வெ‌ப்ப‌த்தையு‌ம், இ‌ன்ப‌த்தையு‌ம் - து‌ன்ப‌த்தையு‌ம்
சமமாக‌க் கொ‌ள்பவனு‌ம் என‌க்கு ‌பி‌ரியமானவனே!

அரசமரத்தை சுற்றிவர விதிமுறைகள்

 

குழந்தையில்லாத பெண்மணிகள் அரசமரத்தை சுற்றிவருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.

1. அரசமரத்தை வலம்வரும்போது வேகமாக நடக்கக் கூடாது. சரியான இடைவெளிவிட்டு மெதுவாக நடக்கவேண்டும்.
2. கைகளை ஆட்டாமல் உடலோடு ஒட்ட வைத்துக் கொண்டோ, வணங்கிக் கொண்டோ சுற்றி வர வேண்டும்.
3. சக பெண்களுடன் பேசிக் கொண்டே சுற்றக் கூடாது. இதற்கு பதிலாக ஏதாவது ஒரு துதிப்பாடலை பாடி வர வேண்டும்.
4. குறைந்தபட்சம் 7 முறை வலம்வர வேண்டும். அதிகபட்சமாக 108 முறை சுற்றிவரலாம்.
5. சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது. சுற்றி முடித்தபின் அரசமரத்தை கட்டிக் கொள்ள வேண்டும். வயிறு மரத்தின்மீது பட்டால் கர்ப்பம் தரிக்கும் என்பது நம்பிக்கை. மலட்டுத்தனத்திற்கு காரணமான பீடைகள் நீங்கிவிடும்.
6. அரசமரத்தை காலை வேளையில்தான் வலம்வர வேண்டும். மதிய வேளையில் நிச்சயமாக வலம்வரக்கூடாது.
7. ஆண்கள் தினமும் 108 முறை வீதம் 3 ஆண்டுகள் தொடர்ந்து வலம்வந்தால் கடன் தொல்லை நீங்கும். பயஉணர்ச்சி அகன்று விடும். தீராத நோய்கள் தீர்ந்துவிடும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.

மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?



ஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா ? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். 

துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்டுமின்றி , அவர்கள் காட்டுக்கு சென்று 12 ஆண்டுகள் யார் கண்ணிலும் படாமல் வாழ வேண்டிய நிலையும் ஏற்பட்டது. தவ முனிவர்களைத் தவிர மற்றவர் கண்ணில் பட்டால், அவர்களின் வனவாசம் மேலும் நீட்டிக்கப்படும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. அர்ஜூனன் தனது வலிமை மிக்க ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தின் புதரில் ஒளித்து வைத்தான்.

காலம் வரும் போது அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என இருந்தனர். அந்த வன்னிமரம் தான் அவர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த ஆயுதங்களைப் பாதுகாக்கும் பெட்டகமாக இருந்தது. அவர்கள் முனிவர்களின் ஆலோசனையின் பேரில், துர்க்கை அல்லது காளியின் இருப்படிமான குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள். அந்த கோயில்களுக்குள் பயந்து போய் யாரும் நுழைவதில்லை. பாண்டவர்களுக்கு இனி வசதியாயிற்று.

அஞ்சாநெஞ்சம் கொண்ட அவர்களைப் பாராட்டி பராசக்தியின் வடிவமான அந்த காளிதேவியே காட்சி கொடுத்தாள். காளியின் காட்சியை மனக்கண்ணால் கண்டால் கூட போதும். அவர்களைத் துன்பம் தொடராது. ஏழ்மை என்பதே இருக்காது. துக்கம், பயம் இதெல்லாம் நெருங்காது.

மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள்

சடாரியை தலையில் வைப்பதன் தத்துவம்!

சடாரியை தலையில் வைப்பதன் தத்துவம்! 

ஒரு குழந்தை கருப்பையில் இருந்து வெளியேறும் போது சடம் என்ற வாயு வெளியேறுகிறது. இந்த வாயு உலகமாயை என்னும் குடும்பப் பாச பிணைப்பில் மக்களை தள்ளிவிடும் சக்தி கொண்டது. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் மாயை என்னும் சக்தியை வென்றவராக பிறப்பின் போதே பகவானால் பூமிக்கு தரப்பட்டார். அவரே நம்மாழ்வார். பெருமாளின் பாதங்களுக்கு சமமானவர். எனவே அவரது பாதம் பொறித்த சடாரி என்னும் கலனை தலையில் சார்த்துகிறார்கள். இதனால் பாச பந்தங்களிலிருந்து மனிதன் விலகுவான். சடம் என்ற சொல்லில் இருந்து சடாரி என்ற வார்த்தை பிறந்தது. தினமும் சடாரியை தலையில் சார்த்தி பாச பந்தங்களை அறுத்து, விரைவில் இறைவன் திருவடியை அடையலாம்

Saturday, 24 May 2014

 அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி 
மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் 12வது ஸ்ரீ சத சண்டி மஹா யாகம் வருகிற ஜூலை மாதம் 22-07-2014 முதல் 26-07-2014 வரை ஐந்து நாட்கள் நடைபெறம் . அனைவரும் இந்த ஸ்ரீ சத சண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 
ஸ்ரீ சத சண்டி ஆறு நாட்கள் யாகத்தில் வைக்கப்படும் கலசகள் பக்தர்களுக்கு வழங்கப்படும் அதற்க்கு கோயிலில் முன்பதிவு செய்துகொள்ளவும் பக்தர்கள் வீட்டில் கலசம் இருப்பது அம்பாள் இருப்பதற்கு சமம் . மேலும் யாகத்தில் பட்டுப்புடவைகள் ஆகுதியாக போடுவதற்கும் உண்மையான பட்டுப்புடவைகளை அளிக்கலாம் கோயில் தொடர்புக்கு 9842858236 மற்றும் 9865993238

அமாவாசை யாகம்
 மானாமதுரை ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்  
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள்  துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும் புதன் கிழமை (27-05-2014) அன்று   நடைபெறுகிறது  அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு     உண்டு என்பதால் அன்றைய தினம்  இந்த யாகத்தை தஞ்சை குருஜி 
திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள்  மற்றும்அவர்கள்   சீடர்களால் 
ஸ்ரீ மஹ  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு  யாகம்  நடத்துகின்றார்கள்.          செய்யப்படுகின்ற இடமோ-பல  யுகமாக தெய்வீக புண்ணிர்கள் யாகம் செய்த இடம்.  புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற 
ப்ரத்யங்கிர யாகத்தின்போது  யாககுன்டத்தில்  மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல்  .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி  செய்யப்படுகிறது  விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள்      இடப்படுகிறது. அதை தொடர்ந்து  வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர்   பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை  நடைபெறுகிறது   தொடர்ந்து யாகசாலையிலிருந்து    புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் 
செல்லபட்டு  ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு  புனித நீர் ஊற்றி  அபிஷேகம் நடைபெறும்.  அன்று  அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம்  செய்யப்பட்டு இருக்கும்  தீபாரதனை நடைபெறும் 
இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை
மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்
யாக புகை   நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை   நாம் பார்ப்பதாலும்-தெய்வீஉருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து இந்த அம்பாளை தரிசித்து 
அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை  கண்ட  பனிபோல் நம் குறைகள் 
பினிகள் அனைத்தும் பறந்து  விடுகின்றன அப்பெற்பட்ட புனித 
சேஷ்திரம்  இது .அணைவரும்  இந்த அமாவசை  யாகத்தில் கலந்து  கொண்டு   ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 
மேலும் தகவல்கள்களுக்கு 
cell :+91 98428 58236
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் நான்காம்  ஆண்டு  வருஷாபிஷேகம்   வைகாசி மாதம்  29 தேதி  (12-06-2014) வியாழன்  காலை 7-30 மணிக்கு கணபதி  ஹோமம் தொடருந்து  மஹ்ன்யாச சகித ஏகாதேச ருத்ர ஜெபம் யாகம் அபிஷேகம் நடைபெறும் காலை 10-30 மணிக்கு அம்பாளுக்கு ஏகாதேச திரவிய அபிஷேகம் நடைபெறும் அனைவரும் இந்த  வருஷாபிஷேகதில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 

Friday, 23 May 2014

ஸ்ரீ போகர் மகரிஷி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேஸ்வரர் திருகோவில் அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ போகர் மகரிஷிக்கு  (27-05-2014) செவ்வாய் கிழமை ஜென்ம நட்சத்திரமான பரணி நட்சத்திர தினத்தன்று    அபிஷகம்,
, ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு 
ஸ்ரீ போகர் மகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை 
ஸ்ரீ மஹா  பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்  சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். மேலும் தகவல்கள்களுக்கு:9095102377,9095102695     

யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும், பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தான் ஆன்மீகம் 

யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ள பொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம்.  கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா
யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.


நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை  
பூர்ணாஹுதிஆகி   போடும் யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு.  யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான். யாகத்தில் பலவகையான மூலிகைப் பொருட்களை மந்திரம் சொல்லி இடம் பொழுது அதன் புகைக்கு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு மட்டும் இல்லை. மனதிற்கும் நல்லது.

Thursday, 22 May 2014

12ம் ஆண்டு ஸ்ரீ சத சண்டீ மஹா யக்ஞம்



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்த்தமாய் வாழ வேண்டி
மானாமதுரை ஸ்ரீ மஹா  பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்  நடைபெறும் 12ம்  ஆண்டு ஸ்ரீ சத சண்டீ மஹா யக்ஞம் 
நிகழ்ச்சி நிரல் 

22-07-2014 செவ்வாய்  காலை 7-00 மணி  முதல் 12-00 மணிவரை
ஸ்ரீ விக்னேஷ்வர பூஜை,சங்கல்பம்,கும்ப பிரதிஷ்டை  ஸ்ரீ ஏகாக்ஷர கணபதி 
 ஹோமம்(எல்லா காரியங்களும் தங்குதடையின்றி வெற்றி பெற)
ஸ்ரீ ருண மோசன கணபதி ஹோமம்
(கடன் நோய் கஷ்டகள்  நீங்க)
ஸ்ரீ சரபர் ,ஸ்ரீ சூலினி ,ஸ்ரீதுர்கை ஹோமம் ஸ்ரீ மஹா ம்ருஞ்ஜய  ஹோமம்
(ஆயுள் விருத்தி )
தொடர்ந்து    ஸ்ரீ சப்த சதி பாராயணம் 
மாலை 5-00 மணி முதல் 8-00 மணிவரை  
 ஸ்ரீ சப்த சதீ பாராயணம்  அர்ச்சனை,தீபாராதனை   ,வேதாதி ஸேவை

23-07-2014,புதன் களை 7-00 மணிமுதல் 12.00 மணிவரை   

ஸ்ரீ லக்ஷ்மி கணபதி ஹோமம்(செய்யும் அனைத்து காரியங்களும்  வெற்றி பெற )
ஸ்ரீ நவக்ரக ஹோமம்,ஸ்ரீ லக்ஷ்மீ நாராயண ஹோமம்
(அனைத்து ஐஸ்வரியங்களும் கிடைக்க)
தொடர்ந்து    ஸ்ரீ சப்த சதி பாராயணம் 
மாலை  5-00  முதல் மணி 8-00 மணி வரை  ஸ்ரீ சப்த சதி பாராயணம் அர்ச்சனை,தீபாராதனை,வேதாதி ஸேவை  

24-07-2014 வியாழன் காலை  8-00 மணி முதல் 12-00 மணி வரை 

ஸ்ரீ ஸ்வருர்ண கணபதி ஹோமம்,ஸ்ரீ மஹா புத்ர காமேஷ்டி ஹோமம்
(மகப்பேறு -குழந்தைச்செல்வம் பெற ) ஸ்ரீ மஹா சுதர்ஸ்ன  ஹோமம்
 (நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெற )
ஸ்ரீ மஹா தன்வந்த்ரீ ஹோமம் (நோயற்ற வாழ்வு நீண்டஆயுளை பெற)
ஸ்ரீ சதுஸ் சஷ்டி பைரவ பூஜை ஹோமம்   
(செல்வம் பெருகி பொன்னும் பொருளும் நிலைத்திட)  
தொடர்ந்து    ஸ்ரீ சப்த சதி பாராயணம்
மாலை 5-00 மணி முதல் 8-00 மணி வரை  ஸ்ரீ சப்த சதீ  பாராயணம் அர்ச்சனை,தீபாராதனை,வேதாதி ஸேவை  

25-07-2014 வெள்ளி காலை 7-00 மணி முதல் 12-00 மணி வரை  

ஸ்ரீ வாஞ்ஜா கல்பலதா கணபதி   ஹோமம்
(சகல செளபாக்கியங்கள் வேண்டியவரர்க்கு வேண்டிய  வண்ணம் கிடைக்க )
ஸ்ரீ சாம்ராஜய லக்ஷ்மி   ஹோமம்( 26 வகையான செல்வகங்கள் கிடைக்க )
ஸ்ரீ ஸ்வயம்வரா பார்வதி  ஹோமம்(திருமணத் தடை நீங்கித் திருமணம் நடைபெற)
ஸ்ரீ மஹா வாராகி  ஹோமம்(தொழில் வெற்றி பெற பகையை வெல்ல)
ஸ்ரீ  ராஜா மாதங்கீ  ஹோமம்(கல்வி  கல்வித்துறை வளர்ச்சி கிடைக்க ) 
ஸ்ரீ வனதுர்கா,ஸ்ரீ தக்ஷிண காளி ஹோமம்(வளங்கள் அணைத்தும் பெற)
தொடர்ந்து    ஸ்ரீ சப்த சதி பாராயணம்
மாலை 4-30மணி முதல் 8-00 மணி   ஸ்ரீ சப்த சதீ பாராயணம்  அர்ச்சனை,தீபாராதனை   ,வேதாதி ஸேவை
  
26-07-2014 சனி காலை 7-00 மணி ஸ்ரீ கணபதி ஹோமம்,ஸ்ரீ சண்டீ ஹோமம்  
பிற்பகல் 12-00 மணி  பூர்ணாஹுதி, 
மாலை 5-00 மணிக்கு
 ஸ்ரீ மஹா பஞ்சமுக  ப்ரத்யங்கிரா ஹோமம்  
இரவு 8-00 மணிக்கு கடம் புறப்பாடு,அம்பாளுக்கு பாத சமர்ப்பணம்,ப்ரஸாதம் 
விநியோகம்,   
     
  அனைவரும் இந்த ஸ்ரீ சத சண்டி மஹா யாக பெருவிழாவில் கலந்து கொண்டு 
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள். 
மேலும் தகவல்கள்களுக்கு 
cell :+91 98428 58236