தெய்வீக ஆற்றல் கொண்ட தான்றிமரம்
இந்த தான்றிமரத்திற்கும் நளமகாராஜனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உன்டு நளமகாராஜா எல்லாவற்றையும் சனி தோஷத்தால் இழந்து சமையல்காரனாகவும், தேரோட்டியாகவும் இருந்து வந்தார் ஒரு நாள் ராஜாவின் ரதத்தை ஒடி சென்ற பொழுது ராஜாவின் அங்கவஸ்திரமான மேலாடை கீழே விழுந்து விட்டது. அதனை தேடி எடுக்க ரதத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நளமகராஜன் தான்றி மரத்தின் மீது வஸ்திரம் இருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு கிளைகள் செல்வதைக் கண்டார். அதில் ஏறி வஸ்திரம் எடுக்கும்முன்பு மரத்தை ஒருமுறை சுற்றி வணங்கிவிட்டு அதில் ஏறினார். மரத்தில் நான்கு கிளைகளுக்கும் கிளைக்கு ஒன்றாக நான்கு கனிகள் இருந்தன. அதை பறித்து சாப்பிட்டபொழுது ஒவ்வொன்றும் ஒருவித சுவையாக இருந்தது. அவைகளை நளன் பறித்து சாப்பிட்ட பொழுது இனிப்பு சுவையை உடைய கனியைச் சாப்பிட்ட பொழுது அங்கு ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அசரீரியாக சனிபகவான் நளனிடத்தில் இந்த தலத்திற்கு வந்து தான்றி மரத்தை நீ வணங்கியதால் நான் உன்னிடம் விட்டு விலகிக் கொள்கிறேன். நீ குடும்பமாக வந்து திருநள்ளாறில் என்னை வழிபடு என்று அருளினார்.இவ்வளவு சிறப்புப்பெற்ற நளமகாராஜனுக்கே சனி விலக செய்த இந்தத் தான்றி மரம் மானாமதுரை ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்தல விருட்சாமாய் அமைந்து உள்ளது இதன் இலைகள் ஐந்து இலைககளைக் கொண்டது. இது நமக்கு பஞ்சபூத தத்துவத்தை நினைவில் கொண்டு வருகின்றது இலைகள் பழுத்து விழுவதைக்காண இயலாது இந்த மரத்தின் அருகே தெய்வீக அலைகள்,உண்ர்வுகளை உணர முடியும்.

No comments:
Post a Comment