நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 17 May 2014

செல்வ விருத்தி தரும் ஸ்ரீ தனாகர்ஷண லக்ஷ்மி மந்திரம் :-


செல்வ விருத்திக்குக் கீழ்க்கண்ட லக்ஷ்மி மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன் கிழமை அன்று தொடங்கி தொடர்ந்து 90 நாட்கள் தினமும் பிரம்ம முஹுர்த்தத்தில் நெய் விளக்கேற்றி 108 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறைவான செல்வம் கிடைக்கும்.

கேரளா மற்றும் கல்கத்தாவில் உள்ள பிராமணர்களால் இம்முறை பின்பற்றப்படுகிறது.

மேலும் விளக்கேற்றும் நேரத்தில் ஊதுபத்தி ஏற்றி அதை வாசல் வரை கொண்டு வந்து கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் என் இல்லத்தில் எழுந்தருளவேண்டும் என வேண்டியபடி பின்னோக்கி நடந்து வந்து பின்னர் '' கணபதி முதலான அனைத்து சுப தெய்வங்களும் இத்தீபத்தில் எழுந்தருளவேண்டும்'' என வேண்டியபடியே விளக்கு ஏற்ற வேண்டும்.இப்படி ஏற்றி வர காரியத்தடை,பணம் இருப்பின்றி விரயமாதல் இவை நீங்கி ஐஸ்வர்யமான நல்வாழ்வு அமையும் என்று தந்திர சாஸ்திரம் சொல்கிறது.

மந்திரம்:-
ஒம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷினி லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||

வெண்ணிறப் பூக்களால் அர்ச்சித்தாலும் ,ஏலக்காய் வெல்லம் போட்டுக் காய்ச்சிய பால் நைவேத்யம் செய்தாலும் சிறப்பான பலன் கிடைக்கும்.
லக்ஷ்மி யந்திரம் வாங்கி அதைப் பால்,பன்னீர்,துளசி இலை கலந்த நீர் , இவற்றால் கழுவிப் பின்னர் அந்த யந்திரத்தை விளக்கின் முன்புறம் வைத்து பூஜை முடிந்தபின் விளக்கின் கருக்கை யந்திரத்தின் மையத்தில் வைத்து வர யந்திரத்திற்கு சக்தி உண்டாகும்.90 நாட்கள் கழிந்தபின் யந்திரத்தை பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்க குறையாத செல்வம் கிடைக்கும்.யந்திரத்தைப் பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும் போது ஏதேனும் மஞ்சள் பட்டுத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் வைக்கவும்.

வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன்||

No comments:

Post a Comment