நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 1 May 2014

சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி


சென்னிமலை- பிண்ணாக்கீசர் ஜீவசமாதி
> காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற தெய்வீகத் திருத்தலமாக சென்னிமலை அமைத்துள்ளது ..இங்கு முருகப்பெருமான் கருணையே வடிவாய் அருள்பாலிக்கிறார் .
> இக்கோவிலில் தான் சிறப்பாக தெய்வத்திரு பாலதேவராயனால் கந்த சஷ்டி கவசம் எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டது ..மூல கருவறையில் முருக பெருமான் அருள் செய்ய அவர் பின்புறம் தனி சன்னதி கொண்டு வள்ளி தெய்வானை காட்சி தருகிறார்கள் ..
> அதற்கும் சற்று மேலே 18 சித்தர்களின் ஒருவரான பிண்ணாக்கீசர் ஜீவசமாதி கொண்டுள்ளார் இங்கே இவர்க்கு தன்னாசியப்பர் என்ற நாமமும் உள்ளது ..( பிண்ணாக்கீசர்-பின் நாக்கு -பிளவு பட்ட நாக்கு -பிளவு பட்ட நாக்கினால் யோக சித்தி பெற்றவர் )
> இங்கிருத்து பழனி வரை செல்லும் சுரங்க பாதை ஒன்று உள்ளது..காண கண் கோடி வேண்டும் ..ஒரு முறை சென்று வாருங்கள்
இலம்பிகா யோகம் :
> சர்ப்ப யோகமான இலம்பிகா யோகம் இந்த யோகியால் பின்பற்ற பட்டது.சிலருக்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருக்கும் ..சிலர் நாக்கின் அடி பக்கத்தை அறுத்து விட்டுகொள்வர்.பிண்ணாகீசர்க்கு இயற்கையாக நாக்கு பிளவு பட்டதாக இருந்தது பிளவு பட்ட நாக்கில் ஒன்றை தொண்டையின் மேல் பகுதியில் நுழைத்து தலை உச்சி பகுதியில் கொண்டு வந்து வைத்து கொள்வர் ...இதனால் பசி தாகம் இல்லாத சித்து நிலை வரும் ..இது சித்தர்களின் உன்னதமான நிலை ஆகும்.. இவ்வகை யோகிகள் ஒரு நாக்கால் மற்றொரு நாக்கை இழுத்து விட்டு கொண்டு சகச நிலைக்கு திரும்புவார்கள் . நாக்கை நடு நாடியில் செலுத்த கபாலதேன் எனும் அமுது சுரக்கப்படும் ..அதனால் மெய்ஞானம் பிறக்கும்…
நன்றி --படித்த புத்தகம்
சித்தர் களஞ்சியம் .. ஆசிரியர் யோகி கைலாஸ்நாத் அவர்கள்

No comments:

Post a Comment