நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 2 May 2014

சித்திரைமாதத்தில் சித்திரகுப்தர் பூஜை


(Chitragupta Puja)

 

 பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். கயஷ்தாஇனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜா விளங்குகின்றார்.


தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள்உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஷித்ரகுப்தர், யமன், ப்ரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம்

கோடாங்கிபட்டியில் இவருக்குசித்திர புத்திர நாயனார்என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

 

  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று எண்ணெய் தேய்த்து குளித்தால், அவர்களது பாவங்களை குறைப்பார் என்பதும் ஒரு நம்பிக்கை.
  • சித்ரா பவுர்ணமி தினத்தன்று பெண்கள் விரதமிருந்து உப்பில்லாத உணவு உண்டு இவரை வேண்டிக் கொண்டால் அவர்களுடைய வாழ்க்கைக் காலம் அதிகமாகும் என்பது நம்பிக்கை.
  •  

    சித்திரகுப்த மகாராஜா வருக ! வாழ்வில்அனைத்து வளங்கள் தருக!! என்று ஒரு பலகைள் எழுதி சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜை அறையல் வைத்து வழிபடல் மிக நன்று .

     இதுபோல செய்தால் நம் பாவ புனிய கணக்கு எல்லாம் சரியாய் இருக்கும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment