நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 1 May 2014

கொங்கண சித்தரின் பீடம்

ஊதியூர் வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த ஊராகும் ..இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .இம்மலையின் பழைய பெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும் ..
இம்மலையானது பதினெட்டு சித்தர்களில் ஒருவரான வல்லண்மை பொருந்திய கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்து ஒளி ஐக்கியம் பொருத்திய...இவரின் பரிபூரண கிருபை பொருந்திய தலமாகும் ..
இங்குள்ள பழமை வாய்ந்த கோவிலில் உத்தண்டவர் எனும் திருநாமத்தில் அருள் பாலிக்கிறார் முருகப்பெருமான் ..இங்குள்ள உத்தண்டவர் கொங்கண சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் ..இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் ..
இங்கு கொங்கண சித்தர் தவம் செய்து சொர்ண ஆகார்ஸன பைரவ பெருமான் காட்சி தந்து பொன்னை செய்யும் கலையை கைவரப்பெற்றவர் .இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது ..அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது ..பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார் சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை மறைத்து தவத்தில் இருந்தார் .கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வய்த்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்று அருகில் உள்ள நீரூற்றில் ஜல சமாதியானார் ..
கொங்கணர் ஒளி ஐக்கியம் பெற்ற பீடம் .....

கொங்கணர் சித்தர் தஞ்சையில் 13 பற்களை கொண்ட நந்தியை பாடி பரவி யோகநிஷ்டையில் அமர்ந்த போது எதிர்பட்ட சிவபெருமானை தனது சடையில் கட்டி யோகத்தில் ஆழ்ந்தார் ...சிவனை காக்க புலியாய் வந்த இந்திரனை காலால் மிதிக்க சிவம் சடை முடியில் இருந்து வெளிப்பட்டார் .சடையில் தான் கட்டியது சிவம் என்பதை அப்போது தான் உணர்கிறார் கொங்கணர் ...சிவனால் ஆட்கொள்ளப்பட்ட கோலத்தில் இன்றும் உள்ளது தஞ்சை கோவிலில் மேற்கு புறத்தில் கொங்கநேஷ்வரர் ஆலயம் ...காலில் புலியோடு காட்சிதருகிறார் ...
கொங்கணர் சித்தர் சொர்ண பைரவரின் அருளை பரிபூரணமாக பெற்றவர் திருமலை திருப்பதி கருவறையில் பெருமாளுக்கு பாதத்தின் கீழ் ஜீவசமாதி பெற்றவர் அவரது ஒளிசொருபம் பொருந்திய உருவம் வெகு காலமாக திருமலை பெருமாளின் உள்சுற்று பாதையில் பக்தி சிரத்தையோடு ஆராதிக்கப் பட்டும் மக்களின் தரிசனத்திற்காகவும் அனுமதிக்கபட்டது ...N T ராமாராவ் முதல்வராக இருந்த போது கொங்கணரின் அருள் கடாச்சியம் எங்கும் போய்விட கூடாது என பொதுமக்கள் தரிசனம் மறைக்கப் பட்டது .அது முதல் அவரின் ஆட்சி,ஆயுள் முடிவுக்கு வந்தது ...இப்போதும் அங்கே வெகு ஜோராக பூஜை நடைபெறுகிறது ..யாருக்கும் அனுமதி இல்லை ..சுற்று பாதையில் சித்தர் சமாதி என எழுதபட்டிருக்கும் பாருங்கள் ..
மலை ஏறும் பொது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி ..அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம் ...அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது...அமாவாசை,பௌர்ணமி தினங்களில் மட்டுமே கொங்கணர் கோவில் தரிசனம் செய்ய முடியும் ..அன்னதானம் நடை பெறுகிறது ..கொங்கணர் பிறந்த உத்திராடம் நட்சத்திரம் அன்று குரு பூஜை நடைபெறுகிறது ...அருமையான பார்க்க வேண்டிய புண்ணிய தலம் ஒரு முறை சென்று வாருங்கள்

No comments:

Post a Comment