நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 14 May 2014

ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி



மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட

குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி

முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட

தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே.எல்லா யோகிகளுக்கும் யோக

முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்

என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன மேலும் சில சூபி ஞானியாரின்
பாடல்களும் நூல்களும் இதை ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று கூறுகின்றனர் ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள் உள்ளான் என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டால் பதில் உண்டா நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே வெளிப்படுகின்றது பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து செல்லும் கருணைக்கடல்.இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும் தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய் அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர் களின் தலைவன் முருக பெருமானை வணங்கி வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து, சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும். சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து முக்தியடைய முடியும்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும் ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின் செயல் ரூபமே சக்தி.வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்

Add caption


No comments:

Post a Comment