யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ள பொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால் தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே கொடுக்கிறோம். கடவுளும் நமது பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா
யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.
நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை பூர்ணாஹுதிஆகி போடும் யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு. யாகம் நடத்தும் பொழுது எழும் புகை உடலுக்கு மிகவும் நல்லது என்பது உண்மைதான். யாகத்தில் பலவகையான மூலிகைப் பொருட்களை மந்திரம் சொல்லி இடம் பொழுது அதன் புகைக்கு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு மட்டும் இல்லை. மனதிற்கும் நல்லது.


No comments:
Post a Comment