நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 26 March 2015

கருவுற (மகப்பேரியல்)



அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்


கருவுற (மகப்பேரியல்)

தப்பாமல் தாய் கருவாம் சாரணை வெண் குன்றிவேர்
திப்பிலி பூண்டு மிளகு .- ------குறள்

விளக்கம் :

சாரணை வேர் ,வெள்ளைகுன்றிமணி வேர் ,திப்பிலி ,பூண்டு ,மிளகு இவை ஐந்தும் சமமாக நீர் விட்டரைத்துப் பழமளவு நீராடியபின் மூன்று நாளும் உண்டு வர கண்டிப்பாக கருத்தரிக்கும்



Wednesday, 25 March 2015

பூவனூர் அகஸ்தியருக்கும்சண்டி யாகம் அபிஷகம்,ஆராதனை,அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
மன்னார்குடி வழி நீடாமங்களம் இருந்து
9 கிலோமிட்டர் அருகில் உள்ள பூவனூர் அமைந்து உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் சமேத ஸ்ரீகற்பகவல்லி ,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ,ஸ்ரீசாமுண்டேஸ்வரி உடன் கூடிய சொரூபமான ஸ்ரீ அகஸ்தியருக்கும் ,அருபமான ஸ்ரீ போகர்க்கும்,ஸ்ரீ புலிப்பாணி ஸ்ரீசுதிஸ்சனருக்கும் 31.03.2015 பங்குனி மாத செவ்வாய்கிழமை ஆயில்யம் நட்சத்திரம தினத்தன்று காலை 6.00மணிலிருத்து 12.00வரை

சண்டி யாகம்




அபிஷகம்,ஆராதனை,அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் .

மேலும் தகவல்கள்களுக்கு: 98428 58236

பூவனூர் தியாகராஜன்: 94436 55399

நாரயணசாமி :93443 02923


மூட்டுவலி நீங்க

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மூட்டுவலி நீங்க



மூட்டழல் வாத முழுநோய் அகற்றுமுக்,
கூட்டெண்ணெய் ஒற்றட்ங் கொள்.------குறள்

விளக்கம் :
மூட்டுவலி முற்றிலுமாக நீங்க முக்கூட்டு எண்ணெய்யாகிய நல்லணெணெய், வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றுடன் சம அளவு அமுக்கரா,எருக்கம்பூ சூடேற்றி ஒற்றட்ங் கொடுக்கவும் .
எண்ணெய் சம அளவு,



அத்திரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறுச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்திரி மலையில்
ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்திரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 31-03-2015 பங்குனி மாத செவ்வாய் கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்திரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்


கலந்து கொள்ள வீரும்பும் பக்தர்கள் காலை 8.00மணிக்குள் கடனா நதி அனையில் இருக்க வேண்டும்

மேலும் தகவல்கள்களுக்கு
cell :918122725779

919171122091//9843016651


Sunday, 15 March 2015

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்

மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமாவாசை யாகம்






அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

அமாவாசை யாகம் 
பங்குனி  மாதம் வியாழன் கிழமை 
19-03-2015 
**************************************************************************************
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்
அமாவாசை யாகம் மாதம்தோறும் நடைபெறுகிறது உலக மக்கள் துன்பத்திலிருந்து விடுபட்டு வாழ்கையில் அணைத்து செல்வகளை பெற்று பேரானந்தத்துடன் வாழவேண்டிவரும்


பங்குனி  மாதம் வியாழன் கிழமை 19-03-2015 அன்று நடைபெறுகிறது

அமாவசையன்று பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எவ்வித தடையுமின்றி நேரிடைத் தொடர்பு உண்டு என்பதால் அன்றைய தினம் இந்த யாகத்தை தஞ்சை குருஜி

திரு கணபதிசுப்ரமணிய சாஸ்திரிகள் மற்றும்அவர்கள் சீடர்களால்

ஸ்ரீ மஹ பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு யாகம் நடத்துகின்றார்கள். செய்யப்படுகின்ற இடமோ-பல யுகமாக தெய்வீக புனீதர்கள் யாகம் செய்த இடம். புனித நீர் கலசங்களை வைத்து நடத்தபடுகிற
ப்ரத்யங்கிர யாகத்தின்போது யாககுன்டத்தில் மனித தோல் அமைப்புடன்,ஏழு அடுக்கு தோல் போன்ற விசித்தரா அமைப்பு கொண்ட பள்ளங்கல் .கட்டங்கள் கொண்ட மிளகே பெருமளவில் ஆகுதி செய்யப்படுகிறது விலை உயர்ந்த பட்டுப்புடைவைகள்,மூலிகை பொருட்கள் ,மிளகு,திரவிய பொருட்கள்,பூமாலைகள் பழவகைகள் இடப்படுகிறது.

அதை தொடர்ந்து வனதுர்கை யாகம் நடைப்பெறுகிறது பின்னர் பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெறுகிறது தொடர்ந்து யாகசாலையிலிருந்து புனிதநீர் கலசத்தை மேலதாளத்துடன் எடுத்துச் செல்லபட்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவிக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெறும். அன்று அம்பாளுக்கு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் தீபாரதனை நடைபெறும்

இங்கு கணபதி. லக்ஷ்மி கணபதியாக தம்பதி சமேதராக இருந்து அருள் பாலிக்கிறார் மற்றும் வைரவர் இங்கு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்ராக இருந்துஅருள் பாலிக்கிறார். அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களில் தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்

யாக புகை நம்மீது படுவதாலும் ,ஜுவாலையை நாம் பார்ப்பதாலும்-தெய்வீக உருமாற்றம் ,சாந்த நிலையிலேயே நடந்துவிடுகிறது அமாவசை யாகத்தின் மூலமாக தனிமனிதன் பிரச்சனைகள் ,புரியாத வியாதிகள் போன்றவைகளுக்கு தீர்வு அமைவதோடு ஏவல் ,பில்லி ,சூனியம் போன்ற தீய சக்திகள் செயலற்றுப் போகிறது என்பது பல ஆண்டுகால அனுபவ உண்மை.இந்த மண்ணை மிதித்து

புனித சேஷ்திரமகிமை
***********************************
இந்த அம்பாளை தரிசித்து அன்னதானம் சாப்பிட்டாலே சூர்யனை கண்ட பனிபோல் நம் குறைகள் பினிகள் அனைத்தும் பறந்து விடுகின்றன அப்பெற்பட்ட புனித சேஷ்திரம் இது .

.அணைவரும் இந்த அமாவசை யாகத்தில் கலந்து கொண்டு

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிர தேவி திருவருள்ஆசிர்வாதம் பெற்று ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று மானாமதுரை

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:

ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்

பஞ்சபூதேஸ்வரம் ,வேதியரேந்தல் விளக்கு,

மானாமதுரை-630606

cell : +91 98428 58236

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்

சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம்


                                 எடுத்த காரியங்களில் எல்லாம் தோல்வி கண்டு வருபவர்கள் இம்மந்திரத்தைத்  தினமும்  கிழக்கு முகமாக அமர்ந்து 108 தடவை ஜெபித்து வரக் காரியத்தடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

ஏதேனும் காரியம் தொடங்கும் முன் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ விநாயகரை வணங்கி எந்தக் காரியம் செய்யவிருக்கிறோமோ  அதைக் குறிப்பிட்டுச் சங்கல்பம் செய்து கொண்டு இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்த பின் துவங்க அதில் வெற்றி உண்டாகும்.

ஏற்கனவே ஆரம்பித்துப் பாதியில் நிற்கும் வேலை சிறப்பாக  நடந்து முடிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 6:30 மணிக்குள்  ஒரு  தேங்காய் வாங்கி தலையை  3 தடவை சுற்றி ஆறு அல்லது நீர் நிலையில் போட்டு விடவும்.பின்னர் ஆலயம் சென்று கணபதியை வணங்கி அவர் முன் கிழக்கு முகமாக அமர்ந்து சங்கல்பம் செய்து மந்திரத்தை 108 தடவை ஜெபிக்க வெற்றி கிட்டும்.

எந்தச் செயலைத் துவங்கும் முன்னும் கோயிலில் உள்ள யானைக்குப் பழம், கரும்பு,வெல்லம் கலந்த பச்சரிசி இவற்றில் ஏதாவது கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்வது அதிர்ஷ்டம் தரும்.        



சகல கார்ய சித்தி தரும் ஸ்ரீ கணபதி மந்திரம் 

ஓம் கம் கணபதயே கார்ய சித்தி குரு குரு ஸ்வாஹா ||


                        வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

பணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக விதிகள்







1. யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் வலது கையால் கொடுக்க சொல்லி வலது கையால் வாங்கிக்கொள்ள வேண்டும்.நீங்கள் பிறருக்குக் கொடுத்தாலும் அப்படியே செய்யவும்.

2. பணம் எண்ணும்போதும் ,புத்தகம் அல்லது தொழில் சம்பந்தமான பைல், புத்தகம், நோட்டுகளைப் புரட்டும் போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. குறிப்பாக ஆன்மீக நூல்களை படிக்கும் பொழுது இதைச் செய்யவே  கூடாது.இது தரித்திரத்தை உண்டாக்கும்.  


3.தொழில் சார்ந்த கணக்குப் புத்தகங்களில் (EX.CASH BOOK,EXPENSES BOOK) எழுதத் துவங்கும் முன் நோட்டு / புத்தகத்தின் முதல் பக்கத்தின் மேல் அஷ்டகந்தம் கொண்டு ஸ்ரீ  அல்லது சுபலாபம் என்று எழுதுங்கள் .


4. வெளியில் கிளம்பும் போது பர்ஸ் அல்லது சட்டைப்பையில் பணம் இல்லாமல் செல்லக்கூடாது.ஏன் என்றால் பணம் தான் பணத்தை ஈர்க்கும்.


5.கடை அல்லது அலுவலகத்தின் பணப்பெட்டி வைத்திருக்கும் அறைச்  சுவர் மஞ்சள் அல்லது மஞ்சள் ஷேடு நிறத்தில் இருப்பது பணவரவை அதிகப் படுத்தும்.கருப்பு,சிகப்பு,நீல நிறங்கள் பணவரவைக் குறைக்கும்.


6.பணப்பெட்டியில் பணம் வைக்கும் பொழுதும்,வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

7.பணப்பெட்டி அழுக்கு அடையாமல் சுத்தமாகப் பராமரிக்கப்படவேண்டும்.

8.கடை அல்லது அலுவலகத்திற்கு "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||"  என்ற மந்திரம் ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.இல்லை என்றால் பணப்பெட்டிக்காவது  தினமும் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும்.

9.வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து  "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா ||" என்ற மந்திரம் ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு இவற்றில் தெளிக்கவும். வீட்டில் பணம் வைக்கும் பெட்டி,வீட்டின் முகப்பு இவற்றில் தெளிக்கவும்.     



 வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

கனவில் தீர்வுகள் சொல்லும் ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி மந்திரம்




இதை ஒரு அமாவாசை அன்று ஜெபிக்கத் தொடங்கவும்.ஒரு புது விளக்கு வாங்கி (அகல் விளக்கு அல்லது எந்த விளக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.) அதில் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி இம்மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும். குறைந்தது 108 தடவை அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம் .மந்திர ஜெபத்தின் எண்ணிக்கை கூடக்கூடச் சிறப்பான பலன் கிடைக்கும். 90 நாட்கள் ஜெபித்து வரவும்.ஜெபம் செய்யும் முன் விளக்கின் அருகில் ஒரு செம்பில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் அல்லது ஒரு ஏலக்காய் போட்டு  நீர் வைக்கவும்.ஜபம் முடிந்ததும் அந்த நீரைக் குடித்து விடவும். அவரவரது பூர்வ ஜென்ம புண்ணிய பலனைப் பொருத்துச் சிலருக்கு முன் பின்னாகப் பலிக்கும்.

முதல் நாள் பச்சைக் கற்பூரம், தேங்காய்த் துருவல்,ஏலக்காய் போட்டுக் காய்ச்சிய பால், வெற்றிலை,பாக்கு, பழங்கள், பலகாரங்கள் வைத்து ஜெபிக்கவும்.மல்லிகை,பிச்சி அல்லது தாமரை இதழ்களால் மந்திரத்தை 27 தடவை  ஜெபித்து விளக்கின் பாதத்தில் பூவைச் சமர்ப்பிக்கவும்.

அடுத்து வரும் நாட்களில் வாழைப்பழம், கற்கண்டு மட்டுமாவது படைக்கவும்.அசைவம் தவிர்க்கவும்.

முதல் நாளைப் போல் 90 வது நாளும் சிறப்பாக நைவேத்யம் படைத்து பூஜிக்கவும்.



ஸ்ரீ ஸ்வப்ன சக்ரேஸ்வரி தேவி மந்திரம் :-

ஓம் நம ஸ்வப்ன சக்ரேஸ்வரி |
ஸ்வப்னே அவதர அவதர |
கதம் வர்த்தமானம் கதய ஸ்வாஹா ||


                                    வாழ்க வையகம் ! வாழ்கவளமுடன் !

தேர்வில் வெற்றியும் ,அதிக மதிப்பெண்கள் பெறவும் ஸ்ரீ சரஸ்வதி மந்திரம்



இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து  ஜெபிக்கவும்.

எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்   

ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி |
பிரம்மரூபிணி புத்திபத்தினி |
மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||


வாழ்க வையகம்|| வாழ்கவளமுடன் ||

ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்குஅன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
பொன் ஊதிமாமலை,ஊதியூர் (காங்கயம் -தாராபுரம் செல்லும் வழி) ஸ்ரீஉத்தண்ட வேலாயுத சுவாமி .கோவிலின் அருகில் மலைமேல், . அமைந்து உள்ளஸ்ரீஉச்சி பிள்ளையார் ,ஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி, ஸ்ரீ கொங்கணச்சித்தர்க்கு,ஸ்ரீ செட்டிதம்புரான் சித்தர்க்கு,மற்றும் ஸ்ரீமலை கன்னிமார்க்கு 16-03-2015 திங்கட் கிழமை பங்குனி மாத உத்திராட நட்சத்திர தினத்தன்றுகாலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டுஸ்ரீஉத்தண்ட வேலாயுதசுவாமி,திருவருள் ஆசிர்வாதம் மற்றும் ஸ்ரீகொங்கணச்சித்தர் திருவருள் ,ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844, 98428 58236


Sunday, 8 March 2015

ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீ காரைக்கால்அம்மையார்க்கு  10.03.2015 மாசி மாத செவ்வாய் கிழமை சுவாதி நட்சத்திர அன்று அபிஷகம்,ஆராதனைஅன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ காரைக்கால் அம்மையார் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்

மேலும் தகவல்கள்களுக்கு:
திரு.திருநாவுக்கரசு cell :94438 38268,98428 93762




மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு சங்கடஹரசதுர்த்தி

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ லக்ஷ்மீ கணபதிக்கு
09-03-2015 திங்கட் கிழமை சங்கடஹரசதுர்த்தி அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீ கணபதி திருவருள் மற்றும் ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்
சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்
ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் பஞ்சபூதேஸ்வரம் ,
வேதியரேந்தல் விளக்கு,
மானாமதுரை-630606
சிவகங்கை மாவட்டம்
cell :98428 58236