நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 7 November 2014

கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்



கார்த்த வீர்யார்ஜுன மந்திரம் : தொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்



வாசக அன்பர்களுக்கு வணக்கம்.இன்று நாம் காண விருக்கிற விஷயம் - பலருக்கும் மிக பயனுள்ள ஒரு விஷயம். அனேகமாக , இதில் நேரடியாக , சொல்லப்படாத மறைமுக விஷயத்தை, தெளிவாக புரிந்து கொண்டால், சில லட்சம் பேருக்காவது உதவியாக இருக்கும்.


புரிந்து கொள்ள முடிந்தால் - நல்லது. இல்லாவிட்டாலும் பரவா இல்லை... !


உங்கள் இழந்து போன உடமைகள் எதுவாக இருந்தாலும், அவற்றை மீட்டு தரவல்ல , அதி அற்புதமான மந்திரம் - இந்த கார்த்த வீர்யார்ஜுன மந்திரம்.


உங்கள் வீட்டில் தொலைந்து போன பொருட்களை ,எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லையே என்று விரக்தியில் - விடு , கிடைக்கிறப்போ, கிடைக்கட்டும் என்று விட்டு விடுவீர்கள். ஆனால், ஒரு சில பொருட்களை - அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்க முடியாதே, திரும்ப திரும்ப தேடிப் பார்த்து - நொந்து நூலாவது தான் மிச்சம். சிலருக்கு பதட்டமும் அதிகமாகி விடும்.

இழப்பு - ரொம்ப கொடுமையான விஷயம். இழப்பின் வலி, தரும் வேதனை - ஆறுதல் மொழிகளால் அடங்குவதில்லை.


நீண்ட , நெடு நாட்களாக உயிருக்குயிராக பழகிய நண்பர், சந்தர்ப்ப சூழ்நிலை / விதி வசத்தால், நீங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல , நீங்கள் இல்லாத ஒரு வாழ்க்கைக்கு பழகி இருக்க கூடும். இன்று அவர் மிக உயர்ந்த நிலையில் இருக்க கூடும். அவருடனான நட்பைப் புதுப்பிப்பதின் மூலம் , உங்களுக்கு நிறைய அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கலாம் / வாழ்வில் மீண்டும் ஒளி கிடைக்கலாம். .


..அவனுக்கே நான் முக்கியம் இல்லை, நான் மட்டும் அவன் கிட்ட பேசணுமா.. னு ஈகோவை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு , அவனா வந்து பேசுனா , ஓகே... அப்படின்னு நினைக்கிறீங்களா..?


( இது பரவா இல்லை )
சரி, நீங்களும் வர வேண்டாம்,,, அவரும் வர வேண்டாம்.. ! எதேச்சையா , தன்னாலே நடக்கற மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துட்டா? அந்த அதிசயம் செய்வது தான் இந்த மந்திரம்..!


கார்த்த வீர்யார்ஜுன நாம ராஜா பாஹூ ஸகஸ்ரவான்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண { ----------}
கதம் நஷ்டம்ச லப்யதே..

{ -----------------} - இந்த இடத்தில் , நீங்கள் சந்திக்க விரும்பும் உங்கள் நண்பர் பெயரை / தொலைந்து போன பொருளை சொல்லவும்.

மேலே சொன்ன மந்திரம் தான் , கார்த்த வீர்யார்ஜுன மந்திரம். விரும்பும் நபரை சந்திக்க வேண்டும் என்று ஆன்மார்த்தமாக மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டு - தினம் 1008 முறை , மேலே சொல்லிய மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். 108 நாட்கள் - தொடர்ந்து ஜெபித்து வர , உங்கள் எண்ணம் நிச்சயம் நிறைவேறும்..


உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொருளின் மதிப்பை , உலகத்தில் உங்களை விட யாராலும் கணிக்க முடியாது.. 108 x 1008 முறை ஜெபம் பண்ணும் அளவுக்கு, அது மதிப்புள்ளதா என்று மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்.. !

நிறைய வளங்களும், அனுகூலங்களும் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்..

No comments:

Post a Comment