: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நவராத்திரி விழாதான், தசராவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா 13.10.2015(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்த இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை கடைபிடிக்க தொடங்கினர். மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவையெட்டி தினமும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
தசரா திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு துர்க்கை திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா புறப்பாடு நடக்கிறது.
2–ம் திருநாள் இரவில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலாவும், 3-ம் நாள் இரவில் பார்வதி திருக்கோலத்திலும், 4ம் திருநாளில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும், 5-ம் திருநாளில் நவநீத கிருஷ்ணர் கோலத்திலும், 6-ம் திருநாளில் மகிசாசூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் திருநாளில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் திருநாளில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் திருநாள் இரவில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.10-ம் திருநாளான வருகிற 22ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவில் முன்பாக எழுந்தருளுகிறார். அப்போது, சிகர நிகழ்ச்சியாக மகிசாசூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.
பக்தர்களின் வசதிக்காக திருச்செந்தூர், நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா வின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது.

No comments:
Post a Comment