நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 17 June 2014

சிக்கல்கள் சங்கடங்கள் தீர்க்கும் ஸ்வர்ண பைரவர்




நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது
கொடுத்த கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?
அல்லது தொழிலில் நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா

அல்லது

உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா?


தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வரவேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைர
க்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரியபொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னி.தியில் வழிபட வேண்டும்வரு

இன்று 22.3.2011 செவ்வாய்க்கிழமை!!

இந்த வாரக்கடைசி நாளான 26.3.2011 சனிக்கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.

பின்வரும் தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர்சன்னிதி இருந்தால் தகவல் தெரிவிக்கவும்)

இந்த சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத்துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.
படப்பை ஸ்ரீஜெயதுர்கா பீடம், காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,
சிதம்பரம் கனகசபை, திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும்
பெரியகடைவீதி, திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,
திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர
ராஜப்பெருமாள் கோவில், தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம்
அருகே,இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள்
ஆலயம்(தாலுகா அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச்செல்லும் கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை.

No comments:

Post a Comment