நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 18 June 2014

சொர்ணாகர்ஷண பைரவர்: தபசு மலை

பைரவர் வழிபாடு ஆறு

சொர்ண பைரவர்
.
இதுவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலயம் தான். புதுக்கோட்டையிலிருந்து விராச்சிலை என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் (லெம்பலக்குடி வழி), ‘தபசு மலை’ என்ற சிறு மலை காணப்படுகின்றது. இந்த மலையில் முருகப் பெருமான் தண்டபாணியாகக் காட்சி அளிக்கின்றார்.
இந்த முருகன் முனிவர்களாலும், சித்தர்களாலும் போற்றி வணங்கப்பட்டவர். சப்த ரிஷிகள் தவம் செய்ததால் இந்த மலைக்குத் ‘தபசு மலை’ என்ற பெயர் வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மலை அடிவாரத்தில் சப்தரிஷிகளின் சிலையும், பீடமும் காணப்படுகின்றது. மிகவும் சக்தி வாய்ந்ததாக இந்தப் பீடங்கள் கருதப்படுகின்றன.
சொர்ணாகர்ஷண பைரவர்
இங்கு தான் தனிச் சன்னதியில், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வீற்றிருக்கின்றார். உடன் தேவியானவர் வீற்றிருக்கின்றார். அமர்ந்த திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். ஒரு கையில், பொன் குடமாகிய பூரண கும்பத்தை ஏந்தியுள்ளார். மறு கையால் சக்தியைத் தழுவிய நிலையில் உள்ளார். ஒரு கையில் உடுக்கை, நாகபாசம், சூலம். மறு கை அபய ஹஸ்தம். தேவியானவர் ஒரு கையில் தாமரைப் பூவை வைத்துள்ளார். மறு கையால் இறைவனைத் தழுவிய வண்ணம் உள்ளார்.
நரசிம்மரின் சினம் குறைய, திருமகள் அவர்முன் தோன்றி, மடியில் அமர்ந்தது போல, அவதார நோக்கம் நிறைவேறியும், சினம் குறையாத ஸ்ரீபைரவரை சாந்தப்படுத்த, அன்னை அவர் தம் மடியில் அமர்ந்ததாகக் கூறுகின்றனர்.
சொர்ண பைரவர்
வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பது ஐதீகம். அதானால் தான் சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். இது போன்ற மூர்த்தம் அதிகம் காணப்படுவதில்லை. சிதம்பரத்தில் உள்ள பைரவர் சொர்ண கால பைரவர் என்றும், சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார். ஆனால் அது பெரும்பாலும் கால பைரவரின் தோற்றத்தை ஒத்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அவரை வழிபட்டு வந்த தீஷிதர்கள் இரவில் வைக்கும் செப்புத்தகடானது, தினம் தோறும் காலையில் தங்கமாகக் காட்சி அளித்தது என்பது வரலாறு.
பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு என்கின்ற இடத்தில் ஓர் விநாயகர் ஆலயம் உள்ளது. அங்கு சொர்ணாகர்ஷண பைரவர் தனிச் சன்னதியில் வீற்றிருக்கின்றார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெருமாள் கோவிலிலும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு எனத் தனிச் சன்னதி உள்ளதாகத் தெரிகின்றது

No comments:

Post a Comment