நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 17 June 2014

சொர்ண பைரவரின் வழிபாட்டு முறை (வீட்டில் செய்யும் சுலப முறை)

பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா?  அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.

தேவையானவை: 
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படம்,கொஞ்சம் சந்தனம்,சந்தன ஊதுபத்தி ஒரு பாக்கெட், தாமரை தண்டுத்திரி, அகல்விளக்கு, கலப்படமில்லாத பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய்(இவற்றை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும்).
இந்த வழிபாடு செய்ய ஒரே ஒரு கட்டுப்பாடுதான் உண்டு.அது இந்தவழிபாடு செய்பவர்கள் அசைவம் சாப்பிடுவதை  நிறுத்த வேண்டும்.
  
 இந்த பதிவிலிருக்கும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு,இந்தபூஜைமுறையைப் பின்பற்றலாம்.

அகல்விளக்கில் நெய்யை நிரப்பி தாமரைநூல் திரியை வைத்து தீபம் ஏற்றிட வேண்டும்.அப்படி ஏற்றிவிட்டு,ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.இந்த தீபம் தினமும் சுமார் 30 நிமிடம் மட்டும் எரிந்தால் போதுமானது. பிறகு,சந்தனத்தை சொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றியிலும்,பைரவியின் நெற்றியிலும் வலது மோதிர விரலால் வைக்க வேண்டும்.அப்படி வைக்கும்போது,சந்தனம் பைரவர்,பைரவியின் கண்களை மறைக்கக் கூடாது;பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதத்தில் இதேபோல்,சந்தனத்தை வைக்க வேண்டும். பிறகு,சந்தன பத்தியால் மூன்றுமுறை ஆராதிக்க வேண்டும். அப்படி ஆராதித்தப்பின்னர், கீழ்க்காணும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூலமந்திரத்தை தினமும் 33 முறை வாசிக்க வேண்டும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ.

No comments:

Post a Comment