நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Friday, 11 July 2014

உத்தம குருவை

நாம் ஒரு உத்தம குருவை அடைந்து, அவரிடமிருந்து மந்திர ஜபத்தை உபதேசமாகப் பெற்று அதை சிரத்தையுடன் ஜபம் செய்து வருவோமானால், நமது குரு ஸ்தூல சரீரத்தை விட்டு மறைந்துவிட்ட நிலையிலும், நமது மனமே குருவின் நிலைக்கு உயர்ந்து நம்மை வழிநடத்திச் செல்லும். ஒருவர், அப்படித்தான் உத்தம குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெற்று தினமும் அதை சிரத்தையுடன் ஜபம் செய்து வந்தார். அவர் குரு மறைந்துவிட்டார். ஒரு நாள் அந்த ஜபம் செய்பவர் பேருந்தில் ஏறினார். பேருந்தில் ஏறிய சிறிது நேரத்துக்கெல்லாம் அவருடைய உள் உணர்வு அவரை, கீழே இறங்கு, கீழே இறங்கு என்று உணர்த்திக்கொண்டே இருந்தது. அவர் அதை நம்முடைய மனதின் கற்பனை என்று அலட்சியம் செய்து பார்த்தார். ஆனால், முடியவில்லை. ஏதோ சாக்குபோக்கு சொல்லி, அந்தப் பேருந்தை நிறுத்தச் சொல்லி இறங்கிவிட்டார். அவர் எந்தப் பேருந்தில் இருந்து இறங்கினாரோ அந்தப் பேருந்து ஒரு விபத்தில் சிக்கியது என்றும், அதில் பயணித்த பலர் இறந்தனர் என்றும் மாலை நேரத்தில் தலைப்புச் செய்தியாக வெளியாகியது. உங்கள் குரு தற்போது உடலுடன் இல்லாவிட்டாலும்கூட, தன் பக்தர்களின் உள்ளுணர்வில் இருந்து எப்போதும் வழிநடத்துவார்.

No comments:

Post a Comment