நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Saturday, 12 July 2014

குரு உபதேசம் ஏன் தெரியுமா?

குரு உபதேசம் ஏன் தெரியுமா?

எதற்காக மந்திரங்கள் குரு உபதேசம் பெற்றே ஜபிக்கவேண்டும் என்றால், அக்காலத்தில் வேதங்களெல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி படிக்கவில்லை. வாய் வழியாகவே உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் அதற்கு எழுதாக்கிளவி என்ற பெயரும் உண்டு. மற்ற மந்திரங்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டாலும் அதை எழுதும்போதோ, படிக்கும்போதோ அக்ஷரத்தை தவறாக புரிந்துகொண்டு தவறாக படித்தால் விபரீத பலன் ஏற்பட்டுவிடும்.மந்திரங்களை ஏற்கனவே நன்கு பழகிய ஒருவரிடமிருந்து நாம் கேட்டு தெரிந்து படித்தால் தவறுகள் இன்றி மந்திரத்தை ஜபித்து நாம் வேண்டிய பலனை அடைய முடியும். அதாவது தவறு இன்றி உச்சரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே குருமுக உபதேசம். எளிமையாகச் சொன்னால், தெரிந்துகொள்ள வேண்டும் என்றால. ணைய ஊடகம் மூலமாக மந்திரத்தை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பயன்படுத்தி பயன் பெற வேண்டுமெனில் குருவின் உபதேசம் அவசியம்.

No comments:

Post a Comment